Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைவரும் பார்க்கவேண்டிய படம் "3 Idiots" - திரைவிமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் பார்க்கவேண்டிய படம் "3 Idiots" - திரைவிமர்சனம்

படத்தின் பெயரை பார்த்ததும் சரி! எதோ மூன்று பேர் முட்டாள்தனமா காமெடி என்கிற பெயரில் எதோ செய்வார்கள் கடைசியில் பப்பரப்பேன்னு முடித்து விடுவாங்க என்று நினைத்து சென்றால் யோவ்! உன் நினைப்பை தூக்கி உடப்புல போடு! ன்னு சொல்லாம படத்தை முடித்து நச்சுனு கொட்டு வைத்துட்டாங்க! எப்போதும் எனக்கு அமீர் மீது மதிப்புண்டு வழக்கமான ஹிந்தி மசாலாக்கலில் இருந்து வித்யாசமான படங்களில் நடிக்கிறார் என்று.. அது இதில் தாறுமாறாக உறுதியாகி இருக்கிறது.

படத்தின் கதை என்னவென்றால் மூன்று நண்பர்கள் கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்கிறார்கள், அவர்கள் முறையே அமீர், (நம்ம)மாதவன், ஷர்மின். இதில் அமீர் மிகப்பெரிய பணக்காரர் மகன், மாதவன் நடுத்தர குடும்பம், ஷர்மின் ரொம்ப கஷ்டப்படும் குடும்பம்.

இதில் அமீர் இயல்பிலேயே நல்ல அறிவுள்ளவர் எதையும் மக்கப் செய்யாமல் புரிந்து படிப்பவர், எதையும் செய்யலாம் மனமிருந்தால் என்று நம்புவர், மாதவனுக்கு போட்டோக்ராபி மேல் காதல் ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலால் வேறு வழியில்லாமல் பிடிக்காமலே இன்ஜினியரிங் படிப்பவர், ஷர்மினுக்கு இன்ஜினியரிங் ல் விருப்பம் இருந்தாலும் குடும்ப சூழ்நிலை எதிர்கால பயம் என்ற வழக்கமான குடும்ப மன அழுத்தத்தால் படிக்க முடியாத சூழல். இப்படிப்பட்டவர்கள் என்னவாகிறார்கள் என்பதை கொஞ்சம் கூட அலுப்பில்லாமல் கூறி இருக்கிறார்கள்.

கதை என்னவென்று சுருக்கமாக கூற வேண்டும் என்றால் மாணவர்களை அவர்களின் மனதிற்கு பிடித்த படிப்பை படிக்க வையுங்கள், பெற்றோர் தங்கள் விருப்பத்தை (நீ டாக்டருக்குத்தான் படிக்க வேண்டும் என்று) திணிக்காதீர்கள். கல்லூரியில் படிப்பை எந்திரமாக சொல்லிக்கொடுக்காதீர்கள் என்பது தான்.

படத்தில் சில

கஜினியில் சும்மா கும்முன்னு உடம்பை ஏற்றி அலறவைத்த அமீர் இதில் கல்லூரி மாணவர் கதாப்பாத்திரத்திற்கு உடம்பை குறைத்து அட்டகாசமாக கொஞ்சம் கூட பிசிறில்லாமல் பொருந்துகிறார் என்று நான் கூறினால் நீங்கள் நம்பித்தான் ஆகணும் (இல்லைனா நீங்களே படம் பார்த்து முடிவு செய்துக்குங்க)

அமீர் கல்லூரியில் நுழையும் போதே ஹாஸ்டலில் ராக்கிங் நடைபெற்று கொண்டு இருக்கிறது நம்ம மாதவன் உட்பட அனைவரும் ஜட்டியுடன் இருக்கிறார்கள் :-) அமீரையும் இதில் கலந்து கொள்ள சீனியர் அழைக்க அவருக்கு அமீர் கொடுக்கும் "ஷாக்" செம சிரிப்பு

இவர்கள் கல்லூரி பேராசிரியர் போமன் இராணி மிகவும் கண்டிப்பானவர் கண்டிப்புனா கண்டிப்பு அப்படி ஒரு கண்டிப்பு! சட்டம் என்றால் சட்டம் தான் அதை மீறி கொஞ்சம் கூட கருணை காட்டாதவர். 2 மணிக்கு இந்த வேலை என்றால் அந்த நேரத்தில் வந்து நிற்பவர், சுருக்கமாக இயந்திரத்தனமாக இருப்பவர், Viru Sahastrabudhhe என்பது இவர் பெயர் ஆனால் மாணவர்கள் அழைப்பது ViruS :-)

இவரின் மகள் கரீனா, இது போதும் என்று நினைக்கிறேன் அமீருக்கு ஜோடி யார் என்று தெரிய! ;-) அதற்காக வழக்கமான காதலா படம் முழுவதும் இருக்கும் என்று எண்ண வேண்டாம்..கொஞ்சமே கொஞ்சம். கரீனா படம் அதிகம் பார்த்தது இல்லை, குறை ஒன்றும் தெரியவில்லை எனக்கு. இவர் சரக்கை போட்டுட்டு அமீரை கலாயிக்கும் இடம் கலக்கல். அதற்கு இவர் கொடுக்கும் வாய்ஸ் மாடுலேஷன் ரசிக்கும்படி இருக்கும்.

நம்ம மாதவன் வழக்கம்போல நடித்துள்ளார் இன்னும் கொஞ்சம் அமீரை மாதிரி உடம்பை குறைத்து இருக்கலாம், சிறப்பாக இருந்து இருக்கும். இவர் அறிமுக காட்சியே செம குசும்பாக உள்ளது. மாதவன் தன் விருப்பத்தை ஆசையை தந்தையிடம் விளக்கும் போதும் அதற்க்கு அவர் தந்தையின் செய்கையும் மனதை தொடும் காட்சிகள்.

ஷர்மின் இது தான் முதல் முறை பார்க்கிறேன் இவரும் ஓகே. ஷர்மின் ரொம்ப கஷ்டப்படும் குடும்பமாக காட்டப்படுகிறது ஆனால் இவர் அணிந்து இருக்கும் உடைகளை பார்த்தால் எவரும் இவர் ஏழை என்று நம்பமாட்டார்கள்.

அதே போல ஒரு காட்சியில் மூவரும் இரவில் சரக்கடித்து கல்லூரி வகுப்பிலே மட்டையாகி விடுவார்கள், காலையில் வகுப்பு துவங்கும் போது தான் தாங்கள் இங்கே இருக்கிறோம் என்றே அவர்களுக்கு தெரியும். எழுந்தவுடன் ஷர்மின் மப்பு தெளியாமல் உளறிக்கொண்டு இருப்பார். எனக்கு தெரிந்து சரக்கடித்து மட்டையானால் காலையில் எழுந்தால் தலை தான் வலிக்கும் மப்பு இருக்காது எல்லாம் தெளிந்து இருக்கும்.... இவர் அப்போது தான் மறுபடியும் குடித்தது போல அலப்பறை செய்வார். ஒருவேளை எனக்கு அனுபவம் (என் நண்பர்கள் சிலர் அனுபவமும் சேர்த்து) பத்தவில்லையோ என்னவோ! :-))

இவர்கள் கல்லூரியில் புத்தகப்புழுவா ஓம் வைத்யா நடித்து இருப்பார், எதை கொடுத்தாலும் அப்படியே மக்கப் செய்து ஒப்பிப்பார். இவரை இவர்கள் மூவரும் ஏடாகூடமா காலாயித்து விட அதனால் இன்னும் 10 வருடம் கழித்து யார் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று சவால் விடுக்கிறார். சொன்னது போலவே இவர் நிரூபித்து அதை கூற மூவரையும் அழைக்கும் போது தான் அமீரை மட்டும் காணாமல் தேட அதில் இருந்து கதை துவங்குகிறது. இவரை அனைவரும் "சைலன்சர்" என்ற பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள் ;-)

இதில் அமீர் பற்றிய ட்விஸ்ட் ஒன்று உள்ளது அதை கூறினால் படத்தின் சுவாராசியம் போய் விடும் என்பதால் கூறாமல் விடுகிறேன் ஆனால் அதில் கொஞ்சம் கூட லாஜிக் இல்லை என்பதை மட்டும் கூறுகிறேன், ஆனால் திரைக்கதை சுவாராசியமாக இருப்பதால் அது பெரிய குறையாக யாருக்கும் தெரியவில்லை.

முன்னாபாய் MBBS ல் கட்டிப்புடி வைத்தியம் போல இதில் All izz (is) Well என்று அமீர் கூறுவார், படம் முழுவதும் இது வரும்.

கரீனாவின் சகோதரிக்கு பிரவச வலி ஏற்படும் ஆனால் அப்போது மழை பெய்து கொண்டு இருப்பதால் போக்குவரத்து காரணமாக ஆம்புலன்ஸ் வர முடியாது. பிறகு அமீர் மற்றும் அவரது நண்பர்கள் வெப் கேமரா மூலமா கரீனாவின் (இவர் ஒரு மருத்துவர் என்று அறிக) உதவி மூலம் குழந்தையை எடுப்பார்கள்.. ரொம்ப ரொம்ப உணர்ச்சி பூர்வமான காட்சி. படத்தில் அந்த காட்சிகளில் அனைவரும் சிறப்பான நடிப்பு... கண் கலங்கி விட்டது எனக்கு.

கரீனாவை திருமணம் செய்துகொள்ளபோகிறவராக வருபவர் ஒவ்வொன்றுக்கும் விலை மதிப்பிடுவது நல்ல காமெடி.. எடுத்துக்காட்டாக இந்த சட்டை எவ்வளோ தெரியுமா! இந்த ஷூ விலை என்ன தெரியுமா! இதன் மதிப்பு தெரியாம இப்படி செய்கிறீர்களே என்று மனிதரை விட பொருட்களின் விலைக்கு அதிகம் மதிப்பு கொடுப்பவராக காண்பித்து இருக்கிறார்கள், நமக்கும் பல விசயங்களை புரிய வைக்கிறது.

இந்தப்படத்தில் கூறியுள்ளது போல குழந்தைகளின் விருப்பங்களுக்கு தடையாக பெற்றோர்கள் இருக்கக்கூடாது, மாணவர்களை இயந்திரம் போல நடத்தக்கூடாது என்பது நல்ல விசயமாக இருந்தாலும் இது அனைத்து குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பொருந்துமா! என்று தெரியவில்லை குறிப்பாக இந்தியாவில். ஒரு சிலர் பெற்றோரின் வழிகாட்டுதலாலே நல்ல நிலைக்கு வந்து இருக்கிறார்கள், ஒரு சிலர் தன் விருப்பமாக செய்வதாக நினைத்து ஒன்றுமில்லாமல் போய் இருக்கிறார்கள். ஏதாகினும் படம் கூறும் செய்தி ரொம்ப அருமை.

எப்போதுமே கடைசியாக படம் முடியும் போது ரசிக்கும் படி இருந்தால் வெளியே வரும் போது படம் எவ்வளவு தான் முதலில் மொக்கையாக இருந்தாலும் அதன் பாதிப்பை இது குறைத்து இருக்கும், ஆனால் படமும் சூப்பராக இருந்து முடியும் போதும் இப்படி காமெடியாக முடிந்தால்...படம் பட்டாசு தானே! என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ. படம் முடிந்து வெளியே வரும் போது அனைவரின் முகத்திலும் ஒரு திருப்தி பரவி இருந்தது அப்பட்டமாக தெரிந்தது.

இந்த படத்தை நம்ம ஊரிலையும் எடுக்கலாம் நன்றாக இருக்கும் ஆனால் அங்கே மாதிரி மூன்று கதாநாயகர்கள் ஒன்றாக நடிப்பார்களா என்பது சந்தேகம்! ;-) அமீர் ஹிந்தி படவுலகிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றே கூறுவேன். சிறப்பான கதைகளாக பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார், பொறாமையாகக்கூட உள்ளது. மூன்று நாளில் 100 கோடி வசூலாம்! அதற்க்கு தகுதியான படம் தான் என்பதில் சந்தேகமில்லை.

கடைசியா.. எனக்கு ஹிந்தி நகி மாலும்..அப்புறம்... ஆங்கில சப்டைட்டில் போட்டார்கள். இந்தப்படத்தை மொழி பாகுபாடு இன்றி அனைவரும் பார்க்க பரிந்துரைக்கிறேன் குறிப்பாக பெற்றோர்கள்.

Directed by :Rajkumar Hirani

Produced by :Vidhu Vinod Chopra

Written by Screenplay : Abhijat Joshi, Rajkumar Hirani

Novel : Chetan Bhagat

Starring :Aamir Khan, R. Madhavan, Sharman , Kareena Kapoor, Boman Irani

Cinematography :Muraleetharana

Music :Shantanu Moitra

Release date :25 December 2009 (India)

Running time :164 minutes

Language :Hindi

Budget :$ 7.5 Million

http://www.giriblog.com/2010/01/3-idiots-film-review.html

3 இடியட்ஸ்,மை நேம் இஸ் கான் இரண்டும் தியேட்டரில் பார்த்தேன்.எனக்கு 3 இடியட்ஸ் தான் பிடித்தது.அமீர் கான் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக பிரயோசனமான படம் நடிக்கின்றார். இந்த படத்தில் ஓம் வைத்தியாவின் நடிப்புத்தான் பெஸ்ட்.படம் எடுத்த லொகேசனும் கண்ணுக்கு மிக குளிர்ச்சியாக இருந்தது.

அனைவரும் பார்க்கவேண்டிய படம் "3 Idiots" - திரைவிமர்சனம்

நுனா,

நான் இந்த படத்தை ஏற்கனவே பார்த்து இருந்தாலும்,

உங்கள் விமர்சனம் என்னை மீண்டும் அப்படத்தை பார்க்க வைத்தது.

இவ்வளவு பொறுமையாய் ஒரு வேற்று மொழி படத்தை பார்த்து விமர்சனம் எழுதும் உங்களை பார்த்து வியக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.