Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அதிகளுக்கு அடைக்கலம் வழங்குவதனை அவுஸ்திரேலியா இடைநிறுத்திக் கொண்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து அடைக்கலம் கோருவோருக்கு அரசியல் புகலிடம் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிடப்டுகிறது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த இரு நாடுகளினதும் அகதிகளை ஏற்றுக்கொள்வதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு தொடர்பான அவுஸ்திரேலிய அமைச்சர் கிறிஸ் ஏவன்ஸ் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தலில் ஈடுபட்டு வருவோருக்கு இந்த நடவடிக்கை ஒர் எச்சரிக்கை மணியாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக அரசியல் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலி மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களே அதிகளவில அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

globaltamilnews

:lol::D:D இனி இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா செல்பவர்களுக்கு ஆமி அடிகவும்மாட்டான், புலி பிடிக்கவும்மாட்டுது :rolleyes::wub::lol: சீ சீ அவுஸ்திரேலியா நாடு சரியில்லை.. ஏதேனும் யூரோப்பியன் கன்றீஸுக்கு தான் போக எனக்கு விருப்பம் என்று சிலர் சொல்வது எனக்கு கேட்கின்றது...ஐயோ...... அவரவர் மனதுக்குள் நினைப்பது எனக்கு கேட்கின்றதே..... :D:D:D
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அகதிகள் குறித்த அவுஸ்திரேலியாவின் தீர்மானத்திற்கு சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்

10 April 10 01:53 am (BST)

இலங்கை அகதிகளுக்கு புகலிடம் வழங்குவதில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அண்மைய தீர்மானத்திற்கு சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் சரணாகதி அளிப்பதில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், 1951ம் ஆண்டு ஐ.நா பிரகடனத்திற்கு இந்தத் தீர்மானம் புறம்பானது எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நசுக்கும் முயற்சியில் அவுஸ்திரேலியா ஈடுபட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் சாம் சப்பாரி தெரிவித்துள்ளார்.

நியாயமான முறையில் அடைக்கலம் கோருவோர் சட்டத்திற்கு புறம்பான முறையில் தடுத்து வைக்கப்படக் கூடிய நிலைமை ஏற்படக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் இந்தத் தீர்மானம் ஆசிய பசுபிக் பிராந்திய வலய நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகக் கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் அவுஸ்திரேலியா இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்நாட்டு குடிவரவு குடியகழ்வு அமைச்சர் கிறிஸ் ஏவன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் காலங்களில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானிய விண்ணப்பங்கள் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=22925&cat=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சா.....சைட் பிசினசும் கெடப்போகுது. சைக்கிலோடியெண்டாலும் நிமித்தலாமோ பாருங்கோ! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.