Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் முடிவுகள் பாடங்களையே கற்று கொடுத்துள்ளது

Featured Replies

தேர்தல் முடிவுகள் பாடங்களையே கற்று கொடுத்துள்ளது

தமிழீழ நிருபர்

சனிக்கிழமை , ஏப்ரல் 10, 2010

தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன இந்த முடிவுகள் பொதுவான சில முடிவுகளையும் சிறப்பான சில முடிவுகளையும் கூறி நிற்கின்றது. இலங்கை தமிழரசு கட்சி போனஸ் ஆசனம் உட்பட 15 ஆசனங்களை பெற முடியும் ( திருமலை உத்தியோக பூர்வமாக வரவில்லை). இதன்படி இலங்கையின் மூன்றாவது பெரும் கட்சியாகவும் இரண்டாவது எதிர்கட்சியாகவும் மாறியுள்ளது தமிழர் தரப்பு.

ஏனைய கட்சிகளை பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸ் மலையக தமிழ் கட்சிகள் கூட்டணி சேர்ந்ததால் தமது சுயத்தை இழந்துள்ளன. அவர்களுக்கு அமைச்சு பதவிகள் தேவை என்பதனால் சுயம் பற்றி யோசிக்க மாட்டார்கள்.

வடக்கு கிழக்கை பொறுத்தவரை மக்கள் 18-20 வீதமானவர்களே வாக்களித்துள்ளனர். இதன்படி தமிழ் மக்கள் இலங்கை பாராளுமன்றத்திற்கு ஆட்களை அனுப்பி என்ன நடக்க போகுது என்ற அதிருப்தியில் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். ஆகவே இந்த முடிவு சிங்கள அரசாங்கத்தின் மீதான வெறுப்பாகவே உணரத்தோன்றுகின்றது. இதனை பல வெளி நாட்டு ஊடகங்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

வாக்களித்த மக்கள் இலங்கை பாராளுமன்றம் தீர்வினை தரும் என்பதற்காக வாக்களிக்கவில்லை மாறாக அனைத்துலகத்திடம் பேசி அல்லது அயல் நாட்டுடன் பேசி தமக்கான வாழ்வதற்கான பாதுகாப்பை உரிமையினை நிலை நாட்ட முடியுமா என்பதற்கான ஓர் பரிசோதனை முயற்சிக்காகவே தமிழரசு கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதற்காகவே கூட்டமைப்பு போட்டியிட வைக்கப்பட்டு வெற்றிபெற வைக்கப்பட்டனர்.

தவிர கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் கருணா ஆகியோரை மக்கள் நிராகரித்ததன் மூலம் வடக்கையும் கிழக்கையும் பிரிக்க முடியாது என்பதனை ஆணித்தரமாக எடுத்துக் கூறியுள்ளதுடன். பிள்ளையான் கருணாவின் தேச துரோக நடவடிக்கைகளையும் தொடர்ந்தும் பொறுக்க முடியாது என்பதற்கான எதிர்ப்பினையும் காட்டியுள்ளனர்.

ஒட்டு மொத்தமாக வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு வென்றுள்ளது என்பதனை சந்தோசமாக கொண்டாட முடியாது காரணம் என்னவெனில் இந்த தேர்தலில் ஆளும் கட்சி, சிங்கள கட்சிகளுக்கு கிடைத்துள்ள வாக்குகள் கடந்த தேர்தலினை விட அதிகரித்துள்ளதுடன் தமிழரசு கட்சி பெற்ற வாக்குகளிற்கு அண்மித்தே காணப்பட்டது. உதாரணமாக கிழக்கு மாகாணத்தினை கூறமுடியும்.

ஆகவே தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகள் அடுத்த பாராளுமன்ற தேர்தல்களில் தமிழர்களது பிரதினித்துவத்தினை தொடர்ந்தும் காப்பாற்றபட வேண்டிய நிலையிலும் உள்ளனர்.

இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலானது எமக்கு பல விடயங்களை பின்பற்றவும், முடிவெடுக்கவும் செயற்படவும் விட்டு சென்றிருக்கின்றது.

1 சிங்கள பாராளுமன்றத்திடம் தீர்வு இல்லை, வெளியுறவு வளர்ச்சியே எமக்கான பலம்.

2 வடக்கு கிழக்கை பிரிக்க முடியாது.

3 பிரதேசவாதம் பேசி தாயகத்தை சிதைக்க முடியாது.

4 அரசுடன் சேர்ந்தும் அல்லது சிங்கள கட்சிகளை பலப்படுத்தும் செயலை தவிர்த்தல்.

5 ஒற்றுமை பேணப்பட்டு வடக்கு கிழக்கில் தமிழர் பிரதினித்துவம் பேணப்படல்.

6 அரசுடன் சேர்ந்து இயங்கும் குழுக்களை கிழக்கில் நிராகரித்தது போன்று வடக்கிலும் நிராகரிக்க செய்தல்.

7 தமிழர் தாயகத்தில் வாக்கு பலங்களை அதிகரித்தல்

போன்ற விடயங்களை விட்டு சென்றிருக்கின்றது தவிர மக்கள் எமது கொள்கைக்கு வாக்களித்துள்ளனர் என இலகுவாக கூறமுடியாது. அப்படி கூறினால் அது முட்டாள்தனமானது. அவ்வாறு எனின் கடந்த காலங்களில் டக்ளஸ் தேவானந்தா அதிக ஆசனங்களை பெற்றுள்ளார் ஆகவே அவரது கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டனர் என கூற முடியுமா?

ஏன் கிழக்கில் மாகாண சபை தேர்தலில் பிள்ளையானை தெரிவு செய்ததன் மூலம் கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைக்க தேவை இல்லை என்ற கொள்கையினை மக்கள் ஏற்றனர் என கூற முடியுமா?

ஆகவே வடக்கு கிழக்கில் ஆக கூடியது 40 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றிருக்கவேண்டும் அது இடம்பெறவில்லை. அத்துடன் இடம்பெயர்ந்த வாக்காளர் வாக்களிக்க விடப்படவில்லை அதாவது போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவே தேர்தல் முடிவுகள் எதனை சொல்லுகின்றன என்பதனை முழுமையாக சிந்திக்கவேண்டும் சிங்களவன் சொல்வதுபோல சொல்ல கூடாது.

அப்படி பார்த்தால் கிழக்கில் மட்டக்களப்பில்

Ilankai Tamil Arasu Kadchi 66,235 36.67%

United People's Freedom Alliance 62,009 34.33%

United National Party 22,935 12.70%

முறையே வாக்குகளை பெற்றுள்ளன ஆகவே சிங்கள கட்சிகளேகூட்தல் வாக்கினை பெற்றுள்ளன ( 66 235+22935) எனவே மட்டு மக்கள் சிங்கள கட்சிகளின் கொள்கைகளை ஏற்றார்கள் என கூறமுடியுமா? (திருமலை , அம்பாரையினை ஒப்பீடு செய்ய முடியாது)

வன்னியினை பொறுத்தவரை

Ilankai Tamil Arasu Kadchi 41,673 38.96%

United People's Freedom Alliance 37,522 35.07%

United National Party 12,783 11.95%

முறையே வாக்குகள் பெறப்பட்டுள்ளன இங்கும் சிங்கள கட்சிகளே முன்னணியில் உள்ளனர் ஆகவே வன்னி மக்கள் சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் கொள்கைகளுக்கு வாக்களித்தார்களா?

ஆகவே இந்த முறை வாக்களிப்பு தமிழர்களுக்கு ஓர் எச்சரிக்கையினை தருவதாகவே பார்க்கவேண்டும். பிரச்சினை தீரும் வரை இலங்கை பாராளுமன்றம் அவசியம் செல்லவேண்டும் என்றால் அனைத்து தமிழர்களும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும்.

ஒன்று சேர்ந்து பயணிப்பது என்பது தேர்தலில் போட்டியிடுவதனை சொல்லவில்லை மாறாக சில நீண்டகால செயற்பாட்டிலும் இறங்கவேண்டும்.

சிங்களவன் தாயகத்தை அபகரிக்கின்றான் என்றும், விடக்கூடாது என்றும் கத்தி போராடுவதும் ஊடகப்போர் செய்வதும் மட்டும் வேலையல்ல அதே நேரம் உரிமைகளை பெறுவதற்கான கட்டமைப்புக்களை ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு புலம்பெயர் நாடுகளில் நிறுவுதலும் வேலையல்ல தமிழர் தாயகத்தில் உருபடியான நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் எதையாவது செய்யவேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற மக்களும், வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் தென் பகுதியில் இருக்கும் வசதியான தமிழர்கள் கிழக்கில் ஆக குறைந்தது ஒரு ஏக்கர் காணியாவது வாங்கவேண்டும். காணி இல்லா மக்களிற்கு தொழில் வாய்ப்பளித்து அவர்களை குடியமர்த்துங்கள். உங்கள் காணிகளை அறுதியாக கொடுக்க மனம் இல்லாவிட்டால் நீண்டகால குத்தகைக்கு கொடுங்கள் கிழக்கில் 5000 மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் காணி இல்லாமல் இருக்கின்றனர் அல்லவா? இது சாத்தியம் சமாதான காலத்தில் புனர்வாழ்வு கழகம், விடுதலைப்புலிகள் மற்றும் புலம்பெயர் சமூகம் இதனை திட்டமாக செய்து காட்டியுள்ளனர் ( திருமலை நகர், கன்னியா, பாலம்போட்டாறு, அம்பாரை போன்ற பகுதிகள்) இதனால் தமிழீழம் கிடைக்காது ஆனால் இருப்பதும் பறிபோகாமல் ஓரளவு பாதுகாக்க முடியும்.

இனிமேல் அரசாங்கத்தையும் சர்வதேசத்தினையும் நம்பி இருக்காமல் மக்களை மீழ் குடியேற்றல், சுயதொழில் வாய்ப்பு, பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் அவரவர்க்கு இயன்ற வழிகளில் ஈடுபடுங்கள். சுயாதீனமாக ஏறக்குறைய 800 இற்கு மேற்பட்ட அமைப்புக்கள், கோயில்கள் வெளி நாடுகளில் இயங்குகின்றன. இவர்கள் தாமாக திட்டமிட்டு ஏன் இதனை செய்ய கூடாது. பொருளாதார பலத்துடன் கூடிய அரசியல் பலமே நவீன யுகத்தில் நிலைத்து நிற்கும் அதற்கேற்ப தமிழர் தாயகத்தில் வேலைத்திட்டங்களை செய்யவேண்டும். இந்த வேலைத்திட்டம் 50,60,70 களில் சில முற்போக்காளர்களால் செய்யப்பட்டது.

வெளி நாடோ, சிங்களவனோ இதனை செய்வான் என்று யாரும் நினைத்தால் தமிழர்க்கு விடிவு இல்லை என்பதே அர்த்தம்.

இருக்கின்ற பலத்தினையும் அதிகாரத்தினையும் வைத்துக்கொண்டு சிறிது சிறிதாக எவ்வாறு முன்னேறுவது என்பதனை திட்டமிட்டு செய்யவேண்டும். அதே நேரம் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.பி.பதவிகளை எடுத்துள்ள சிலர் தமக்கு காணிகள் பெறுவதனையும். பெற்றோல் பங்கு உரிமை பெறுவதனையும், தமது வியாபாரத்தை பெருக்குவதனையும் நிறுத்துமாறு கேட்கவில்லை செய்யுங்கள் கூடவே மக்களுக்கும் ஒரு துண்டு காணிகளை பெற்று கொடுங்கள்

http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81

Edited by தயா

இவற்றை எல்லாம் சம்பந்தவாதிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏன் இன்னும் ஒருவரையும் காணொம் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவற்றை எல்லாம் சம்பந்தவாதிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏன் இன்னும் ஒருவரையும் காணொம் ?

சம்பந்தவாதிகளுக்கு மட்டுமல்ல கஜேந்திரவாதிகளுக்கும் தான் பாடம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.