Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மையினர் பலமும் முஸ்லிம்களும்

Featured Replies

சிறுபான்மையினர் பலமும் முஸ்லிம்களும்

இலங்கையில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து அரசியலை எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

என்.பீ.எம்.சைஃபுதீன் செவ்வி

சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் அமைக்கப்படும் புதிய அரசாங்கம் சிறுபான்மை மக்களின் பங்களிப்பின்றி அரசியலமைப்பு மாற்றங்களைச் செய்யக்கூடிய நிலை தற்போது உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் ஊக்குவிக்குமானால் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் எதிர்காலம் பலவீனமான நிலைக்கே தள்ளப்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியலறிவுத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என்.பீ.எம்.சைஃபுதீன் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.

சிறுபான்மை சமூகங்கள் ஒற்றுமையாக இணைந்து தேர்தலைகளை எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே தமது விகிதாசாரங்களுக்கு ஏற்ப பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

பல மாவட்டங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கடந்த தடவைகளைவிட இம்முறை குறைந்துள்ளமைக்கு ஒரே கட்சி வேட்பாளர்களுக்கிடையிலான போட்டியும் போட்டி கட்சிகளுக்கிடையில் வாக்குகள் சிதறிப்போனமையுமே காரணம் என சைஃபுதீன் கூறுகிறார்.

முஸ்லிம் மக்கள் வழமையாக பெற்றுவந்த பிரதிநிதித்துவங்கள் குறைந்துவருவதை முஸ்லிம் கட்சிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதும் அவரது கருத்தாக அமைந்துள்ளது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/04/100411_minorityvotes.shtml

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் யார் கவனிக்கப்போகினம். எப்பவுமே எங்கடையாட்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுகிறவையள். முஸ்லீம்களும், மலையகத் தமிழரும் எமது சகோதரர்கள் எனும் மனப்பான்மை எப்போதுவருகின்றதோ அப்போதுதான் எமது கோரிக்கைகள் அங்கீகரிக்கப்படும். ஒரு விடையம் கவனிக்கப்படல்வேண்டும் மலையகத்தில் அவர்ளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி எனக்கூறி இவ்வளவு காலமும் அவர்களைச் சுரண்டிக்கொண்டிருந்தவர்களை அம்மக்கள் இத்தேர்லின்மூலம் தூக்கியெறிந்துவிட்டார்கள். காரணம் நாம் என்னதான் சய்தாலும் ஆளும்கட்சிக்கே எம்மாலஇ தெரிவுசெய்யப்படுபவர்கள் ஆலவட்டம்பிடித்து தம்மை வளப்படுத்திக்கொள்வார்கள் அதிலும்பார்க்க யார் ஆடசியமைக்கும் கட்சியாகச் செயற்படுகின்றதோ அவர்கட்கே வாக்களிப்போம் எனும் மனநிலைக்க வந்துவிட்டார்கள். வடக்குக் கிழக்கிலும் இந்நிலைவரும,; இதற்கு வெகுகாலம் தேவையில்லை. யாழ்பாணத்துக்கு தெலைபேசியபோது எனது மருமகன் கூறுகிறான் டக்ளஸ் பருவாயில்லை என. எனது சகோதரம் கூறுது நான் வாக்களிக்கப் போகவில்லை காரணம் இவ்வளவுகாலமும் போராடி எதையும் சாதிக்கவில்லை, இவ்வளவுகாலம் பாராளுமன்றுக்கு எமது பிரதிநிதிகளை அனுப்பியும் எதையும் சாதிக்கவில்லை இதுக்குமேலும் எனக்கு இந்நாட்டின் அரசியலிலோ போராட்டத்திலோ நம்பிக்கை இல்லை என. இன்னமொரு உடன்பிறப்புச் சொல்லுது போராட்த்துக்கு எனது வீட்டிலிருந்து இரண்டுபேரை கொடுத்தன் அவர்கது வித்துடலைத் தோண்டியெடுத்து, அவர்கள் இறுதியாகப் போட்ட உடைகளை, வன்னியின் தெருக்களில் சிங்களவன் போட்டுமிதிக்கிறான், யாருக்காவது வாக்களிக்கவேணுமெண்டால் எனது விரல்களில் பூசப்படும் மை எனது பிள்ளைகளின் இரத்தம்மாதிரி இருக்கும் அதையும் தாங்கிக்கொண்டு வாக்களிக்க வேண்டுமென நீசொன்னால் பறுவாயில்லை வாக்களிக்கப்போறன் எண்டு அழுகிறார். இதுக்குமேல் ஓடிப்போன என்னால் அவர்கட்கு என்னத்தைச்சொல்லுறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.