Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம் வாருங்கள் ஒன்றிணைந்து செயற்படுவோம் ! -சம்பந்தன்

Featured Replies

தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம் வாருங்கள் ஒன்றிணைந்து செயற்படுவோம் ! -சம்பந்தன்

தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் கேட்கிறோம். வடக்குகிழக்கிலுள்ள சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோம் வாருங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரான இரா. சம்பந்தன் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

"வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னர் பேச்சு நடத்தி எம்முடன் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆயினும் எமது முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டன. எமக்கு எதிராக பல்வேறு அரசியற்கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் களத்தில் குதித்திருந்தன. எனினும் எம்மால் வெற்றி பெற முடிந்தது.

எனவே தமிழ் மக்களின் ஒற்றுமையின் பேரால் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து செயற்படth தயங்க மாட்டோம் அந்த வகையில் அவர்களும் சிந்திக்க வேண்டும் என்று மிக வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்ப் பேசும் மக்களின் நலன்கருதி இது அத்தியாவசியமான தேவை என்பதை வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகளின்படி தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகளாக எம்மை தெரிவு செய்திருக்கிறார்கள். நாம் எல்லோரும் தமிழ் பேசும் மக்களின் நன்மை கருதி ஒன்றாக செயற்படுவோம்.

தமிழ்க் கிராமங்களில் குண்டர்களின் அட்டகாசத்தால் தமிழ் மக்கள் சுயாதீனமாக வாக்களிக்க முடியாத நிலை தோன்றியது. சலப்பையாறு, கும்புறுப்பிட்டி, குச்சவெளி, தம்பலகாமம், சாம்பல்தீவு, ஆத்திமோட்டை ஆகிய பகுதிகளிலேயே இச்சம்பவங்கள் அதிகரித்திருந்தன.

கும்புறுப்பிட்டி வாக்களிப்பு நிலையத்தில் மீள வாக்களிப்பை நடத்த திணைக்களம் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது.

கும்புறுப்பிட்டி மட்டுமல்ல வேறுபல இடங்களில் இவ்விதமான முறைகேடுகள் இடம்பெற்றன. குறித்த கிராமத்தில் வாக்குகள் மூலம் பெரிய மாற்றம் எதுவும் நிகழப் போவதில்லை. சுமார் ஆயிரம் வாக்குகளே அங்குள்ளன. இருப்பினும் இதனை நடத்துவதனூடாக முறைகேடு ஆதாரப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

அதேவேளை, முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து எதிர்கால அரசியல் நகர்வுகள் இடம்பெறுமா என்று கேட்ட போது,

"அக்கட்சிகளின் தலைமைகளுடன் விரைவில் கலந்து பேசி இது தொடர்பாக முடிவெடுக்கப்படும். பெரும்பாலும் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான ஒரு கூட்டணியை ஏற்படுத்தும் எண்ணம் இருக்கிறது. இதுபற்றி விரைவில் அவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்" என்றார். ___

http://www.pathivu.com/

  • தொடங்கியவர்

கஜேந்திரகுமார் அணியுடன் இணைந்து செயற்படத் தயார்! சம்பந்தன்.

தமிழ்த் தேசியத்தின் உயிர்நாடியான வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தின் அரசியல் தீர்வு, இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள் குடியேற்றம், அம்மக்களுடைய பொருளாதார அபிவிரித்தி போன்ற விடயங்களுக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட அனைத்து சக்திகளுடனும் இணைந்து வேலை செய்ய தயாராக இருக்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரை தனிநபர் என்பது முக்கியமல்ல. கட்சியும், அதன் உறுதியான கொள்கைகளுமே முக்கியம் என தேர்தலின் பின்னான நிலைமைகள் தொடர்பாக பொங்கு தமிழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகும் வாய்ப்பினைப் பெற்றிருப்பவருமான திரு இரா.சம்பந்தன்.

நேற்றைய தினம் பொங்குதமிழுக்கு வழங்கிய இச் செவ்வியில் திரு சம்பந்தன் மேலும் தெரிவித்திருப்பதாவது:

எமது தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எம்மக்கள் தெரிவு செய்துள்ளார்கள் என்பதையே இவ்வெற்றி தெரிவிக்கின்றது.

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கணிசமான அளவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியடைந்துள்ளது. சில காரணங்களால், குறிப்பாக சிறிலங்கா அரசாங்கத்தின் சில செயல்பாடுகளின் நிமித்தம் எமது வெற்றியின் தரம் ஒரு சிறிய அளவில் குறைவுபட்டிருக்கலாம். ஆனால் அந்த வெற்றியின் பின்னால் உள்ள நியாயத்தை அரசாங்கத்தின் செயல்பாடுகள் மழுங்கடிக்க முடியாது.

இத்தேர்தலில் சில கட்சிகள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட காரணத்தினாலும், இத்தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகளும் - சுயேச்சைக் குழுக்களும் இறக்கி விடப்பட்ட காரணத்தினாலும் தேவையற்ற குழப்பம் எமது மக்களின் சிந்தனையில் ஏற்படுவதற்கு வழிவகுத்தது.

இந்தக் குழப்ப நிலை ஏற்பட்டிருக்காவிட்டால் மக்களின் வாக்களிப்பு எமக்கு சார்பாக மேலும் அதிகரித்து இருக்கலாம். அதன் மூலம் எமது ஆசனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கலாம்.

இன்று இக்கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் மக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் வடக்கு, கிழக்கில் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என நான் வலியுறுத்தி வருகின்றேன். இந்த இடத்தில் ஒன்றை தெளிவாகவும், உறுதியாகவும் குறிப்பிட விரும்புகின்றேன். தமிழ் மக்களின் ஒற்றுமையில்தான் எமது மக்களின் விடிவு இருக்கின்றது.

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா அரசு திட்டமிட்டு பல தமிழ் சுயேட்சைக் குழுக்களை தேர்தல் களத்தில் இறக்கிவிட்டிருந்தது. இதுவும் வாக்குகள் சிதைவடைவதற்கு காரணமாக இருந்தது.

அத்துடன், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களாலும், வேறு சில அரச ஆதரவுக் கட்சிகளாலும் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டிருந்ததோடு, வாக்களிக்காமல் தடுக்கப்பட்டும் இருந்தனர். இந்த அச்சுறுத்தல் காரணமாக பலர் தேர்தலில் வாக்களிக்கச் செல்லவில்லை.

திருமலையில் இரு சிங்கள உறுப்பினர்கள் தெரிவு

சிறிலங்கா அரசாங்கம் திருமலை மாவட்டத்தில் நீண்ட காலமாகவே திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பில் நான் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டி உள்ளதோடு, சர்வதேச சமூகங்களுக்கும் தெரிவித்திருக்கின்றேன்.

இக்குடியேற்றங்கள் இம்மாவட்டத்தில் சிங்கள மக்களின் சனத்தொகையை அதிகரித்துள்ளது. இம்மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு சிங்கள இனத்தைச் சேர்ந்த இரு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதற்கு இது ஒரு முக்கியமான காரணம்.

இம்மாவட்டத்தில் என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு கட்சி தனது வேட்பாளர்களை களம் இறக்கியிருந்தது என்பது மற்றைய காரணம். ஆனால் அவர்களுக்கு எமது மக்கள் நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

இவ்வுளவு நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் தமிழ் கட்சிகளின் சுயநலன்களுக்கும் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றியானது பாரிய வெற்றி என்றே நான் கருதுகின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது எதிர்கால செயல்பாடுகள் குறித்து தெளிவாக விளக்கி இருக்கின்றோம். இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு அரசியல் தீர்வை நிதானமான முறையில் எட்டுவது எமது முக்கியமான கடமை எனக் கருதுகின்றோம். இதனையே எமது மக்களும் எதிர்ப்பார்க்கின்றனர்.

எமது இலட்சக்கணக்கான மக்களின் உடனடியான அடிப்படைத் தேவைகள் குறித்து திருப்திகரமான செயல்பாட்டை மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயம். இவ்விடயங்கள் சம்பந்தமாக திட்டங்கள் தீட்டி ஆக்கபூர்வமான முறையில் நாம் செயல்படுவோம். எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு விரைவில் கூடி இவ்விடயங்கள் சம்பந்தமாக முடிவு எடுக்கவுள்ளது, என தேர்தலுக்குப் பின்னான உடனடித் திட்டங்கள் குறித்து கேட்டபோது தெரிவித்தார் திரு சம்பந்தன்.

இந்தியா பற்றிய நிலைப்பாடு

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் தமிழ் மக்களின் தாயகப் பூமி. இந்நிலையில், வடக்கு, கிழக்கு இணைப்பு இல்லாமல் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது.

தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியா ஒரு முக்கியமான நாடு. அந்நாட்டின் ஆதரவின்றி நாம் எமது மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் எத்தீர்வையும் காணமுடியாது. அவ்வகையில் நாம் அந்நாட்டுடன் நட்பு ரீதியான உறவுகளைப் பேணி வருகின்றோம்.

வரலாறுகளை படிப்பினையாகக் கொண்டு எமது பிச்சினைகளை நாம் அணுக வேண்டும். இவ்வகையில் இந்தியாவைப் பகைத்துக் கொள்வதால் நாம் எத்தகைய பயனையும் அடைய முடியாது. இதனைப் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாம் இந்தியாவின் கைப்பொம்மைகளாக செயற்படவும் இல்லை. எமது கொள்கைகளை கைவிடவும் இல்லை. இத்தேர்தலுக்கு முன்னர் தான் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு முன்னதாக இத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை. இதனை நீங்கள் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இத்தகைய குற்றச்சாட்டுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது முன்வைத்தவர்களுக்கு தமிழ் மக்கள் பதில் கொடுத்திருக்கின்றார்கள்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரை ஒவ்வாரு விடயங்கள் தொடர்பிலும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கலந்துரையாடி அதன் முடிவுகள் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தப்படுவது வழமை. இது இத்தேர்தலுக்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.

எங்கே பிரச்சினை எழுந்ததென்றால் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்களைத் தெரிவு செய்கின்ற நேரத்திலேயே பிரச்சினை எழுகின்றது. இத்தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது நாம் பத்மினி சிதம்பரநாதனுக்கும், கஜேந்திரனுக்கும் வேட்பாளர் பட்டியலில் இடம் கொடுப்பதில்லை என முடிவு செய்திருந்தோம்.

இது நாம் தன்னிச்சையாக எடுத்த முடிவல்ல. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும், மாநகரசபைத் தேர்தலின் போதும் நாம் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்த வேளை அங்குள்ள கல்வியாளர்கள், பல்கலைக்கழக சமூகம், ஆசிரியர் சமூகம், சட்டவாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் இவர்கள் இருவரையும் குறித்து எமக்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர். மக்களின் கருத்துக்கு மதிப்பளித்தே நாம் இம்முடிவை எடுத்திருந்தோம்.

இந்நிலையில், இம்முடிவு குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்முடன் முரண்பட்டார். இதுகுறித்து கலந்துரையாடுவதற்கு அவரை வருமாறு கூட்டமைப்பின் வேட்பாளர்கள் நியமனக் குழு அழைத்த போது கஜேந்திரகுமார் வராது, அவர் தனது சார்பில் ஒரு குழுவொன்றை அனுப்பி வைத்திருந்தார்.

அவர்களிடம் இலங்கைத் தமிழ் காங்கிரசின் சார்பில் கஜேந்திரகுமாருக்கும், அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் வேட்பாளர் பட்டியலில் இடம்கொடுப்பதாகத் தெரிவித்ததுடன், பத்மினி சிதம்பரநாதன் மற்றும் கஜேந்திரனுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கொடுக்க முடியாமைக்கான காரணங்களை தெளிவுபடுத்தினோம்.

எமது கருத்துக்களைக் கேட்ட கஜேந்திரகுமார் அனுப்பிய குழுவினர் மாலை வந்து முடிவு சொல்வதாக தெரிவித்துவிட்டுச் சென்றனர். ஆனால் அவர்கள் பின்னர் வரவில்லை.

பத்மினி சிதம்பரநாதன் மற்றும் கஜேந்திரனுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கொடுக்க வேண்டும் என உங்களைக் கேட்கவில்லை என கஜேந்திரகுமார் கூறியுள்ளாரே? இதனை பத்மினி சிதம்பரநாதனும் மறுத்துள்ளாரே என பொங்குதமிழ் சார்பில் கேட்டோம்.

இதில் உண்மையில்லை. சரி, அவர்கள் சொல்வது போல் எமக்கிடையிலான கொள்கைதான் பிரச்சினை என்றால் அதனை அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தி இத்தேர்தலில் ஒரு ஆசனத்தையாவது கைப்பற்றி இருக்கலாமே. ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும் என்பதை இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன எனப் பதிலளித்தார் திரு சம்பந்தன்.

Source: paranthan

http://www.eelamtimes.com/news/index.php?subaction=showfull&id=1271066661&archive=&start_from=&ucat=6&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா பப்ளிகா கூப்பிடுறார் காரணம் சொல்லியிருக்கிறார் பிற்காலத்தில கூப்புடேல்ல எண்டு சொல்லப்படாது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களது வரலாற்றுக்கடமை தமிழ்த்தேசியமே. அதனை கூறுபோட்ட இந்தியாவடன் சம்பந்தன் ஐயா அவர்கள் கூட்டவைத்திருக்கிறார் இருந்தாலும், எதிர்வரும் காலங்களிலாவது இந்தியாவைத் தவிர்த்து, தமிழீழம் நோக்கிய பயணத்தை முன்னெடுப்பதற்கு தமிழினத்தின் அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றுபடுவதே காலத்தின் கட்டாயம். அது கஜேந்திரகமார் அணியுடன் சம்பந்தன் ஐயா அவர்கள் ஒன்றுபட்டாலுமோ அன்றேல் சம்பந்தன் அணியுடன் கஜேந்திரகுமார் அவர்கள் ஒன்றபட்டாலுமோ அனைத்தும் ஒன்றுதான். ஆகவே எதிர்காலத்திலேற்படும் சவால்களை முறியடிக்க அனைவரும் ஓரணியில் திரள்வதேமேல். கடந்த பாராளுமன்றத்தேர்தல் தமிழர்வாழ்வில் பாரிய மாற்றங்களைத் தராது ஆனால் மாற்றங்களுக்கான புறக்காரணிகளை உருவாக்கும். ஆகவே தனிப்பட்ட விருப்புவெறுப்பினை விடுத்து அனைவரும் ஒன்றுபடுவதே தமிழர் எதிர்காலத்திற்கு நலம்பயிர்க்கும். கஜேந்திரன் அவர்கள் சம்பந்தனின் அழைப்பை ஏற்பார் என நம்புகிறேன். நான் அறிந்தவகையில் கஜேந்திரன் அவர்கள் ஒரு சிறந்த அரசியல் செயற்பாட்டாளருக்குரிய ஏற்ற பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளவர் ஆனால் அவரது இளமை சிலவேளைகளில் விட்டுக்கொடுப்புகள் மற்றம் அரசியல் நெளிவுசுழிவுகளை இனம்கானம் தன்மை போன்றவற்றிற்குத் தடையாகவிருக்கின்றது. சம்பந்தன் ஐயா அவர்கள் மிகச்சிறந்த அரசியல்செயற்பாட்டாளர் ஆனால் ஒருசில உள்ளடிவேலை செய்வோர் தற்போது தமிழ்த்தேசியக்கூட்டணிக்குள் உள்நுழைந்துள்ளனர் குறிப்பாக உதயன் அதிபர் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் பலமாக இருந்தகாலத்திலேயே தான் பயணம்செய்த புலம்பெயர் தேசங்களில் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை அங்குள்ளவர்களுடன் பரிமாறுகிறவர். இவர்ளை காலப்போக்கில் தமிழர் அரசியலில் இருந்து மக்களால் ஓரம்கட்டப்படவேண்டுமாகவிருந்தால் சம்பந்தன் ஐயாவுடன் கஜேந்திரகுமார் அவர்கள் ஒன்றுபடுவது தவிர்க்க முடியாததுஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் நடவடிக்கைகளை பொறுத்திருந்து தான் அறிய முடியும்.

ஈழத்தமிழர்களுக்கு எப்படியான தீர்வை மகிந்தவின் முன்வைக்கின்றார்கள்

என்று பார்ப்பது அவசியம்.

அதே வேளை மகிந்த என்ன தீர்வை முன் மொழிகின்றார் என்பது முக்கியம்.

22 பராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்குப் பின்னால் விடுதலைப்புலிகளும்

இருந்த போதெ இழுத்தடித்த மகிந்த தமிழர்களின் பலம் குறைந்த இந்த நேரத்தில்

தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை முன் வைப்பாரா என்பது சந்தேகத்திற்குரியது.

தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு தீர்வை இந்திய வல்லரசுடன் சேர்ந்து மகிந்த திணிக்க முயன்றால் கூட்டமைப்பு என்ன செய்யும்.

அவ்சரப்படாமல் கூட்டமைப்பின் அடுத்த நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிப்பதே த.தே.மக்கள்

முன்னணிக்கு முன்னால் இருக்கும் ஒரே தெரிவு.

கூட்டமைப்பு உண்மையிலேயே மக்களுக்கு தேவையான ஒரு நல்ல தீர்வை முன் வைத்தால் வெளியில் இருந்து கூட அதை ஆதரிக்கலாம்.

மக்களுக்கு பாதகமான் தீர்வாக இருந்தால் மக்களுடன் சேர்ந்து அதை எதிர்க்கலாம்.

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பது போல தமிழ் மக்களின் மனங்களில்

பல சந்தேகங்களை தேர்தலுக்கு முன்னர் உருவாக்கிய கூட்டமைப்பிற்கு ஒரு கடிவாளம் போடுவது போல தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தனது அரசியல் வியுகங்களை வகுப்பது இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு நன்மைகளையே தரும்.

வாத்தியார்

..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.