Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவனும் ஒரு மேடை பேச்சாளன் (சிறுகதை)

Featured Replies

ஊர் இப்ப தோரணங்கள் கொடிகள் சுவரொட்டிகள் உடன் தன்னை அலங்கரித்து தேர்தல் திருவிழாவுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது.இது வழமையான தேர்தல் அல்ல .ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறு என்ன என்ற இறுக்கமான கோசத்துடன் கிளம்பிய தேர்தல் .இதனால் ஊர் சனம் மட்டுமின்றி ஏதோ திருடனை பிடிக்க போகின்றது போல் அவசரத்தில் போலிஸ் ஜீப்பில் அங்கும் இங்கும் திரிகின்ற பொலிஸ்காரமும் கூட உணர்ச்சி பிளம்பில் மிதந்து கொண்டிருந்தனர்.குறிப்பிட்ட அனுமதிக்க பட்ட நேரத்தில் மேடை அமைத்து வீராவசத்துடன் அவர்கள் பேச சனமும் உணர்ச்சி பிளம்பாக தகிப்பார்கள்.உணர்ச்சி பிளம்பாக இரவு வீடு சென்று படுத்து நாடு கிடைத்த கனவில் மூழ்கி விடிய எழும்பி வேதனை தரும் தலைப்பு செய்தியை பத்திரிகைகளில் படிப்பார்கள்.

இவன் ஒருவன் எந்த விதமான மேடை அலங்காரமின்றி பட்ட பகலில் சுடும் வெய்யிலில் புல் தரை முன்பாக உள்ள உயரமான கல் மதில் குத்தி ஒன்றிலிருந்து காட்டமாக பேசி கொண்டிருக்கிறான் . நீண்ட நேரம் பேசி இருப்பான் போலும் . பேசியதை முடித்து விட்டு சில நேரம் அவகாசம் எடுத்து விட்டு புதிய தொனியில் புதிய விசயத்தை சொல்ல தொடங்குகிறான்.

இவ்வளவு நேரமும் எனது அரசியல் ஞானம் கலந்த பேச்சை கேட்டு கண்டுண்டவர் போல மெளனமாக இருக்கும் உங்களின் ஆர்வம் புரிகிறது. எனக்கு எப்படி இந்த அரசியல் சாணக்கியம் கிடைத்தது என்ற கதை சுவராசியமானது.யாருக்கும் சொல்லாதாது இது .இன்று சொல்லுகிறேன் உங்களுக்கு.

இந்த ஊரை தாண்டி இருக்கும் வல்லிபுரக்கோவில் அதன் தொடர்ச்சியாக இருக்கின்ற மணல் திட்டுக்கள் உடன் நீண்ட பாலை வனம் போல இருக்கின்ற பகுதி ,பொட்டல் காடு நீண்ட கால பயிரிடப்படாத வயல்கள் உங்களுக்கு தெரிந்தவை ..இவற்றை தெரியாதவர்கள் இவ்வூர் வாசிகளாக நிச்சயமாக இருக்க மாட்டீர்கள் .,..இந்த பகுதியில் பெரிய ஒரு அரச இராச்சியத்தின் தலை நகரம் இருந்தது என்று தெரியாதவர்கள் ..எழுத்து கூட்டி வாசிக்க முடியாதவர்கள் தான் அப்படி இருப்பீர்கள்..

திருவிழா காலம் அல்லது ஏதும் விசேசமான நாட்களில் தான் அப்பகுதிக்கு சென்று இருப்பீர்கள் , நான் இந்த நாட்கள் தவிர்ந்த நாட்களிலும் உலாவுவதுண்டு .இந்த பிரதேசத்தின் தனிமை அமைதி ஏகாந்தம் நடுநிசி இரவு நேரத்தில் கூட இருக்காது

ஆக்களுடன் வாழும் போது முட்டி மோதலினால் ஏற்படும் மன இறுக்கத்தை தவிர்க்க அடிக்கடி இங்கு செல்வதுண்டு.

அப்பகுதியிலிருந்து ஊரை பார்க்கும் போது ஊர் மூச்சு முட்டி தவித்து கொண்டிருப்பது போல் மாதிரியான உணர்வு ஏற்படும் . தூரத்தில் தெரியும் மணல் திட்டுகளை தாண்டி வானத்தை தொட்டு கொண்டிருக்கின்ற சாடையாக நீலமாக தெரிகின்ற கடல் தெரியும் . காற்றின் வீச்சின் ஏற்ற தாழ்வுக்கு ஏற்ப கடல் அலை எழுப்பும் சத்தம் அப்ப அப்ப கேட்டும் கேட்காமால் போகும் .தூரத்தில் சில கட்டாகாலி மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்.எப்பாவது இருந்து அந்த பிரதேசத்தின் அண்டிய றோட்டில் வான் பஸ் போகும் சத்தம் கேட்கும் சிலவேளை அதுவும் கேட்காது.

அந்த பிரதேசத்தில் உலாவும் போது நானே அவற்றுக்கு எல்லாம் ராஜா மந்திரி என்று நினைத்து கொள்ளும் போது ஒரு நாள் நீண்ட சடை முடி தாடியுடன் அமைந்த சாமியார் போன்ற தோற்றமுடைய ஒருவர் அந்த பொட்டல் காட்டில் உள்ள கொடி செடிகளுடன் பேசிக் கொண்டிருந்தார் .சில வேளை கேள்வி கேட்பவர் மாதிரி இருக்கும் . சிலவேளை பதில் சொல்லுகிறவர் மாதிரி இருக்கும்.ஏதோ பைத்தியமாய் இருக்கும் என்று நினைத்து கொண்டு அவரை தாண்டும் போது மெளனமாக செல்வேன் . அவரும் அத்தருணத்தில் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு செடி கொடியுடன் பேசுவதை நிறுத்தி விட்டு மெளனமாகி விடுவார்.இப்படி மெளனம் அறிமுக பரிமாற்றம் இருவரிடமும் பல காலமாக நடந்தேறியது.

.ஒரு முறை இப்படி இவரை தாண்டி செல்லும் போது மகனே என்று அசரீரி போல் என அழைத்து நிறுத்தி என்னுடன் பேச்சு கொடுக்க தொடங்கினார் . நானும் மிக பயத்துடனும் பவ்வியத்துடனும் அளவிளாவா தயாரானேன்.உன்னை ப்பார்த்தால் படித்தவன் போல் தோன்றுகிறது ...இந்த செடி பற்றி தெரியுமா என கேட்டார் .வாயை கொடுத்து வம்பை வளப்பான் என நினைத்து கொண்டு பதில் கொடுக்க வாயை திறந்த வாயை மறுத்தான் கொடுத்து மூடி கொண்டேன்.என்னிடம் எதுவும் நீண்ட நேரம் பதில் வராத நிலையில் இவ்வளவு காலமும் எனக்கு சொல்ல இருந்ததை மெளனத்துக்குள் வைத்து விட்டு இப்ப எல்லாம் சேர்த்து வைத்தது சொன்ன மாதிரி மடை திறந்த வெள்ளம் போல கொட்ட தொடங்கி விட்டார்.

இந்த செடியை பற்றி யாருக்கும் சொல்லுவதில்லை ..அதை தெரிந்து கொள்ளுவதுக்கு உனக்கு இந்த அதிர்ஸ்டம் கிடைத்திருக்கிறது ..இந்த செடியின் விதை இருக்கிறதே உன்னால் காலத்தை வைத்து கணிக்க முடியாத வயதை உடையது .சில காலங்களில் தான் இது தோன்றும் சில காலங்களில் மண்ணில் அடி யில் உறங்கு நிலையில் இருக்கும் ..இது தோன்றும் பொழுது எனக்கு இருக்கும் அனுமாஷ்ய சக்தியினால் அறிந்து இங்கு வந்து இதனுடன் வந்து பேச்சு கொடுப்பேன் .இதன் தாவர பெயர் இது . இதன் தாவரபெயரின் சூத்திரம் இது என்று அடுக்கி கொண்டு சொல்லிக்கொண்டு போனார் .பைத்தியம் போல் இருக்கும் இந்த சாமியாரிடம் அஞ்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானம் தெரிந்து இருக்கிறதே என்று அதிர்ச்சியுற்றாலும் அவர் கூறிய அந்த செடி காஞ்சோண்டி வகை செடி .அதன் இலையை எடுத்து சிறு வயதில் யாருக்கும் விளையாட்டுக்கு தேய்த்து விடுவதுண்டு . அப்படி தேய்த்ததனால் ஏற்படும் எரிச்சல் கடி அடங்க நீண்ட நேரம் எடுக்கும் ...

அதனால் நம்பிக்கையற்று அவரை முழு பைத்தியமே என்னுள் தீர்மானித்து கொண்டு எவ்வளவு விரைவாக அவ்விடத்தை விட்டு அகல முடியமோ அவ்வளவு விரைவாக அகன்று விட்டேன்.

எப்பவும் போல அப்பப்ப அங்கு உலாவுவேன் .ஆனால் அந்த சாமியரை இப்ப கன காலம் காணவில்லை.எங்கு சென்றார் என்று என்னுள் ஒரு ஏக்கம் இருக்கும்..சிலவேளை அவரின் அசரீரி குரல் அங்கு கேட்பது போல் எனக்கு பிரமை தோன்றும் .சில வேளை திரும்பியே பார்த்து விடுவேன் .ஒன்றுமே இருக்காது அவ் விடத்தில் வெறும் கட்டாக்காலி மாடு கள் தான் மேய்ந்து கொண்டிருக்கும் .அவர் கதைக்கும் அந்த காய்ஞ்சோண்டி மரச்செடியை கூட காணவில்லை .அதை சூழ பல புதர் செடிகள் முளைத்து விட்டன.ஒரு நாள் பெளணர்மி அன்று அவ்விடத்தில் உலாவும் போது அந்த செடி தெரிந்தது .என்னையறியாமால் அதை நோக்கி சென்றேன். அது தீடிரென்று அரையளவுக்கு உயர்ந்தமாதிரி இருந்தது .அதன் இரு பக்கமும் கிளைத்து நிற்க்கும் இலைகள் கைகள் போல மாறி என்னை நோக்கி வா வா என்று அழைப்பது போல் இருந்தது .அதில் ஒரு இலை குத்தன கிளம்பி மேல் பக்கம் அசைந்து தலை போல காட்சி அளித்தது.இலையின் நடுவிலுள்ள காம்பு திறந்து மூடியது வாய் விட்டு சிரிப்பது போல் இருந்தது .நல்ல நிலவு காய்ந்து கொண்டிருந்தது .என்னை அறியாமால் எனக்குள் ஒரு ஆனந்தம் ஏன் என்று தெரியவில்லை .எனக்கு தீடிரென்று தொடவேண்டும் என்று உணர்வு .உடனே அருகில் போய் இலையை வருடினேன்.

அப்போது தீடிரென்று சத்தம் மட்டும் தான் கேட்டது எனது உடல் கால் பகுதியில் தொடங்கி மெல்ல மெல்ல அருவமாக மாறி கொண்டிருந்தது.அதே நேரம் அந்த பிரதேசத்தின் சீதோஸ்ண நிலை மாறியது .தீடிரென்று ஒரு வித மணம் வீசியது .நாங்கள் சொல்லும் நறுமணத்துக்கு மேலான அந்த நேரத்தில் மட்டுமே உணரக்கூடியதான வாழ் நாளில் நான் நுகர்ந்திராத ஆனந்தம் தரக்கூடிய மணமாய் இருந்தது .. கோட்டைகள் கொத்தளங்கள் ,குதிரை தடம் தெரியும் பெரும் வீதிகளுடன் அங்கங்கு நெருப்பு பந்தங்கள் எங்கள் உலகத்து மேர்க்கூரி வெளிச்சத்தின் மேலான வெளிச்ச செலுத்தி கொண்டிருக்கின்ற இடமாக மாறி கொண்டிருந்தது. ..என்னில் எல்லா உணர்ச்சிகளும் இருக்கின்றன ஆனால் ..நானோ அருவமான நிலையில்

அங்கு ஆவி போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன் ..தீடிரென்று ஒரு வித நக்கல் சிரிப்புடன் ஒரு குரல் கேட்டது . மகனே நீ இங்கு வருவாய் எனக்கு தெரியும் என்ற படி ...கேட்ட குரலாக இருக்கிறதே திரும்பி பார்த்தால் அந்த சாமியார் தான். ஆனால் வித்தியாசமாய் இருந்தார் .கொஞ்சம் இளமை ததும்பினதுமாக இருந்தார்

உடை அலங்காரமும் தலை அலங்கராமும் வித்தியாசமாய் இருந்தார் ,சிரிக்கும் போது தெரியும் பற்களின் அமைப்பும் மட்டும மாற வில்லை.

வா மகனே நல்ல நேரத்தில் தான் இங்கு வந்திருக்கிறாய் .. எங்கு நிற்கிறாய் தெரியுமா? நீ காலத்தை கடந்து

இறந்த காலத்துக்கு வந்திருக்கிறாய்

.உன்னுடைய சரித்திர ஆசிரியர்கள் சொல்லி வைத்த இருப்பது போல் இங்கு இருக்கவில்லை என இங்கு இருக்கும் சிறிது நேரத்தில் உணர்வாய் ..

.அவரே பேசி கொண்டு இருந்தார் .

அதோ பார் வெள்ளை இனத்தவரும் கடும் கறுத்த இனத்தவரும் சப்பை மூக்கு உடைய அமைப்புடையோரும் மிக கட்டை இனத்தவரும் அந்த பாய் மரக் கப்பலில் வந்து கரை ஏறி

கொண்டிருக்கிறார்களே ஏன் தெரியுமா?

.இந்த நாட்டின் அரசியல் பொருளாதார விற்பன்னர்கள் சேர்ந்து இன்று மாலை கருத்தரங்கு வைக்கிறார்கள் அதை கேட்க தான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்

அந்த அரசியல் கருத்தரங்கத்தில் அருவமாக நான் . அவர்களின் உரை விளங்குவது கஸ்டமாக இருந்தது. நாம் பேசும் தமிழாக இல்லாமால் கமா ,கேள்விக்குறி முற்று புள்ளியுடன் இருக்கும் எழுத்து தமிழ் போல இருந்தது ..ஆரம்பத்தில் கஸ்டமாக இருந்தது ..பிறகு இலகுவாக எனது மூளை யின் தினுசுக்களுக்களுள் அந்த உரைகள் அத்தியாயங்களாக மாறி நீண்ட பக்கங்களுடன் பெரிய புத்தகமாகவே சேமிக்க பட்டன.எனக்கு என்னவோ இந்த அரசியல் அறிவை எல்லாம் உடனடியாக எனது காலத்துக்கு சென்று பிரயோகிக்கவேண்டும் போல் இருந்தது.

கெஞ்சிய குரலில் கேட்டேன் எப்படி எனது காலத்துக்கு செல்லுவதுக்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று சாமியாரை நோக்கி ...சாமியார் மெல்லிய சிரிப்பை உதிர்த்து விட்டு இயல் நிலையை கடந்து காலம் கடந்து வந்தவர் திரும்பி சென்றது நடந்ததில்லை அது பல சிக்கல்களை தரும் என்பதால்.

எது எப்படியோ நான் அபாயத்தை எதிர் கொண்டு உனக்கு திரும்பி செல்லுகின்ற இரகசியத்தை சொல்லி தருகிறேன் அதன் படி செய் என்றார்.

அதோ குளம் மாதிரி தெரிகிறதே அதன் அருகில் இருக்கும் அருகில் இருக்கும் மரத்தில் பழம் மாதிரி இருக்கிறதை கடித்து துப்பு காலம் கடந்து செல்வாய் என்றார் .அவசரமாய் ஓடி அவர் சொன்னது போல செய்தேன் ..இப்ப அந்த பொட்டல் வெளியில் நான் மெல்ல மெல்ல தலையிலிருந்து காலை நோக்கி அருவத்திலிருந்து உருவமாக மாறி கொண்டு அரை நினைவுடன் மயங்கி இருக்கிறேன் . தூரத்தில் றோட்டில் வான் பஸ் போகும் சத்தம் கேட்கிறது.

இவன் இங்கு நீட்டி முழுங்கி முழு அரசியல்வாதி மாதிரி பேசி கொண்டிருப்பதை பார்த்த றோட்டால் போன இவனது உறவுக்கார வயது போன மனிசி தன்னுக்குள் புலம்பி கொண்டு சென்றது...என்ன படிச்ச பொடியன் இப்படி பைத்தியகாரனாய் மாறி தன் நிலை தெரியாமால் பேசி கொண்டு திரியுது .என்ன இருந்தாலும் அவரவர் விதியை மார்த்த முடியுமே என்றபடி

இவன் இப்பவும் தொடர்ந்து பேசி கொண்டிருக்கிறான் .ஆனால் ஒரு வித்தியாசம். இவன் பேசி கொண்டிருக்கும் கல் அத்திவார மேடைக்கு முன்னுள்ள புல் வெளியில் இவ்வளவு நேரமும் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் சிதறி வேறு பக்கம் பார்த்து கொண்டு மேய்ந்து கொண்டிருக்கின்றன.

http://mithuvin.blogspot.com/2010/04/blog-post.html

யாழில பல கதைகள் அண்மைக்காலமாய் எழுதி இருக்கறீங்கள், இன்றுதான் உங்க முதல் கதையை வாசிக்கிறன் என்று நினைக்கிறன், இது வித்தியாசமான கதை, மிக நன்றாய் எழுதி இருக்கறீங்கள். இதை வாசிச்சபோது... சரத்குமார் நடிச்ச ஓர் படம் நினைவுக்கு வருகிது, அதில கதாநாயகனாய் வருகிறவன் உடம்பு தெரியாமல் போகிறான். அது சினிமா. ஆனால் உங்க கதை கிட்டத்தட்ட நிஜம் போல பிரமிப்பை ஏற்படுத்துகிது, தொடர்ந்து எழுதுங்கோ, பாராட்டுக்கள்~!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதைகள் எல்லாம் வித்தியாசமானவை...பகிர்ந்தமைக்கு நன்றீ.

  • தொடங்கியவர்

யாழில பல கதைகள் அண்மைக்காலமாய் எழுதி இருக்கறீங்கள், இன்றுதான் உங்க முதல் கதையை வாசிக்கிறன் என்று நினைக்கிறன், இது வித்தியாசமான கதை, மிக நன்றாய் எழுதி இருக்கறீங்கள். இதை வாசிச்சபோது... சரத்குமார் நடிச்ச ஓர் படம் நினைவுக்கு வருகிது, அதில கதாநாயகனாய் வருகிறவன் உடம்பு தெரியாமல் போகிறான். அது சினிமா. ஆனால் உங்க கதை கிட்டத்தட்ட நிஜம் போல பிரமிப்பை ஏற்படுத்துகிது, தொடர்ந்து எழுதுங்கோ, பாராட்டுக்கள்~!

மச்சான் ... இந்த சொல்லை சொல்லும் போதே பொதுவாக சந்தோசம் எல்லோருக்கும் இருக்கும் தானே,,,கறாரானா நடுநிலயான விமர்சகர்களில் ஒருவர் நீங்கள்..இந்த கதையை வாசித்து உற்சாகபடுத்தி இருக்கிறீர்கள் ..மிக்க சந்தோசம் .ஏன் சொல்லுகிறேன் என்றால் நான் இணைத்த கதைகள் மற்ற தளங்களில் அநேகம் பொதுவாக வரவேற்பு பெற்றிருந்தது . இந்த கதை மட்டும் ஏனோ மற்ற தளங்களில் கண்டு கொள்ள படவுமில்லை வரவேற்பு பெறவுமில்லை ....இணையத்தில் நன்கு அறியப்பட்ட நீங்கள ,ரதி போன்றோர் இந்த கதையை பாராட்டி இருக்கிறீர்கள் அந்த மட்டில் சந்தோசம் :lol:

உங்கள் கதைகள் எல்லாம் வித்தியாசமானவை...பகிர்ந்தமைக்கு நன்றீ.

ரதி ....கதையை வாசித்து கருத்துக்கு சொன்னமைக்கு மிக்க நன்றி

Edited by நாகேஷ்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதைகளை தொடாந்து வாசிப்பவினல் நானும் ஒருவன்.இந்தக்கதை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.தொடருங்கள்.வாழ்த்துக்கள். :blink:

  • தொடங்கியவர்

உங்கள் கதைகளை தொடாந்து வாசிப்பவினல் நானும் ஒருவன்.இந்தக்கதை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.தொடருங்கள்.வாழ்த்துக்கள். :blink:

உங்கள் கதைகளை தொடாந்து வாசிப்பவினல் நானும் ஒருவன்

சகீவன்..நன்றி நண்பரே :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.