Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் ஏன் நாடுகடந்த அரசு தேர்தலில் நிற்கின்றேன்? திருச்சோதி அவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏன் நாடுகடந்த அரசு தேர்தலில் நிற்கின்றேன்? திருச்சோதி அவர்கள்

thirusothit1.jpg

முள்ளிவாய்காலில் எல்லாவற்றையும் முடித்துவிட்டோம் என்று சிங்கள அரசு ஒரு புறமும், உலகநாடுகள் மறுபக்கமும் கூறிக்கொண்டீருந்த நேரத்தில் புலம்பெயர் நாடுகளில் எம்மக்கள் மனத்தளர்வுடன் தாம் செய்த போராட்டங்கள் மூலம் எம் தாய் மண்ணை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலைகளுடன் இருந்த போது அங்கே முகாம்களிலும், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் வாடும் எம்மக்களுக்கு குரலாகவும் அங்கே அழிக்கப்பட்ட அரசை மீண்டும் கட்டியயெழுப்பவும் புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் தமிழீழ தேசியக்கட்டமைப்புகளை உருவாக்கி அதன் முலமாக நாம் வாழும் நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் எமது அரசியல் வேலைத்திட்டங்களை செயல்படுத்தும் முகமாக மே 26ம் திகதி முதல் தமிழீழ மக்கள் பேரவை (La Maison du Tamil Eelam) என்ற அமைப்பை உருவாக்கும் செயற்பாட்டை துவக்கி, இங்கு பிரான்சில் பாரளமன்றம் முன்பாக எமது போராட்டத்தை தொடர்ந்தோம்.

அதே நேரத்தில் பாராளமன்றத்திலும் ஐரோப்பிய பாரளமன்றத்திலும் எமது தேசத்தில் ஒரு மாபெரும் இனப்படுகொலையை செய்த சிறீலங்கா அரசுக்கெதிராக போர்க்குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களை செய்தமைக்காக சட்ட நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல்வாதிகள் கட்சிகளுடாக வலியுறுத்துகின்றேம்.

போர் குற்றங்களுக்காக குற்றப்பத்திரிகை தயாரிக்கும் செயற்திட்டங்களையும் புலம் பெயர்ந்து வாழும் அத்தனை தமிழ் அமைப்புகள் ஊடாக செய்தோம். சிறீலங்காவுக்கெதிரான பொருளாதார தடையை ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறீலங்காவுக்கான பலகோடி வருமானத்தை தேடிக்கொடுக்கும் புளுP+ என்ற விசேட சலுகையை ரத்து செய்ய கோரி ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை ஆணையாளர் ஊடாக் அதற்காக ஆதாரமாக சிறீலங்காவில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கான ஆதாரங்களை சான்றுகளாக கொண்டு சென்று வலியுறுத்தியதுடன் சர்வதேச மக்கள் நிதீமன்றம் டப்லினில் (Dublin) சிறீலங்காவுக்கு எதிராக நடைபெற்ற விசாரணை அமர்வுகளிலும் முழுமையான பங்களிப்பை கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் 2009 யூன் மாதம் உலக்தமிழர்களை ஒன்றிணைக்கும் செயற்திட்டத்தில் பல நாட்டு தமிழ் அமைப்புகளுடன் நாமும் கலந்து பங்கு பற்றினோம். அதன் முதல் அமர்வும் அந்த அமைப்பின் வேலைத்திட்டங்களின் யாப்பு பாரிஸ்ல் ஓகஸ்ட் மாதம் ஐந்து கண்டங்களில் இருந்தும் மலேசியா மொறிசியஸ், அவுஸ்ரேலிய, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா நேர்ர்வே, சுவீடன் கொலன்ட, Nஐர்மனி, பிரான்சு, இத்தாலி, சுவிற்சலாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தமிழ் அமைப்புக்கள் அறிவியல் ஆய்வாளர்களின் முன்னிலையில் உலகத்தமிழர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கவும் அதன் ஆரம்ப உறுப்பினர்களாக நாமும் இருக்கின்றோம.

அந்த உலகத்தமிழர் அமைப்பின் ஊடாக தாயகத்தில் வாழும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் நிவாரணங்களை செய்து வருகின்றோம். இந்த உலகத்தமிழர் பேரவை ஆரம்பமாகி பல செயற்திட்டங்களை கொண்டு சென்ற நாம் அதன் இரண்டாவது அமர்வு பிரித்தானியா பாராளமன்றத்தில் நடாத்தியிருந்தோம்.

அந்த அமர்வில் அமெரிக்கா நோர்வே அரசியலவாதிகள், விசேட பார்வையாளர்களாக வந்தது மட்டுமல்லாது பலநாட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து செய்திகளையும் கூறியிருந்தனர். அதற்கு மேலாக இங்கிலாத்தின் வெளிநாட்டமைச்சமைச்சர் மிலிபிரான்ட் இந்த அமர்வை ஆரம்பித்து வைத்து எமது போராட்டம் நியாயமானது சிறீலங்காவில் தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்படவேண்டும் அங்கே நடைபெற்ற போர்க்குற்றங்களுக் விசாரணை நடைபெறவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அன்று அங்கே பிரித்தானியாவின் அனைத்து கட்சிகளும் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது. முற்றும் பிரான்சு மற்றும் ஏனைய புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழரின் தனித்தமிழீழ என்ற கோரிக்கை மீள்வலியுறுத்து கருத்துக்கணிப்பை தான் வரவேற்பதாகவும் கூறினர்கள்.

அந்த கருத்துக்கணிப்பை நாம் பிரான்சில் 2009 டிசெம்பர் 12 13ம் திகதிகளில் செய்து 32000 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் தனித்தமிழீழம் என்ற கோரியை ஏற்று வாக்களிப்பு மூலம் வலியுத்தினார்கள்.

இந்த கருத்துக்கணிப்பை மக்களின் தீர்ப்பை பிரான்சு நாட்டு அரசும், ஐரோப்பிய பாரளமன்றத்தினரும் ஏற்றுக்கொண்டனர். இன்று நாம் புலம்பெயர் நாடுகளில் பலமான கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில், முள்ளிவாய்க்காலில் எமக்கு ஒரு பேரழிவு ஏற்பட்டதேயொழிய எமது தாயகத்திற்கான போராட்டம் நின்று விடவில்லை. அதனையே நாம் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து பலவழிகளில் செய்து வருகின்றோம்.

இன்று பிரான்சில் ஒரு தேசியக்கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் நாம் இதுவரைகாலமும் செய்த செயற்பாடுகளை நாடுகடந்த அரசாங்கம் மூலமாக சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புகின்றோம.

தமிழீழத்தை நோக்கி பயணத்தை ஒரு தேசிய கடமையாக எடுத்து சென்று கொண்டிக்கும் எம் மேல் நம்பிக்கை கொண்டு எம்மை ஆதரித்து நாடுகடந்த அரசின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யும்படி அனைத்து புலம்பெயர் தமிழ்மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம்.

திருச்சோதி திருக்குலசிங்கம்

நாடுகடந்த தமிழீழ அரசு தேர்தல் வேட்பாளர்

92 - Departement Hauts de Seine

pathivu.com

Edited by nunavilan

அண்ணா உங்களுடைய கடந்தகாலம் என்ன என்பதையும் பற்றி மக்களுக்கு சொல்லவேண்டும். நீங்கள் ஏன் பிரெஞ்சு சிறையில் நீண்ட காலம் இருந்தீர்கள்? பிரெஞ்சு அரசாங்கம் தான்(காவல்துறை?) மக்கள் பேரவையை அமைக்கச் சொன்னது என்று மக்கள் பேரவையினர் கொல்வதன் பின்னணி என்ன? கடந்த காலத்தில் நீங்கள் யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யவில்லையா? இவற்றையும் தயவு செய்து மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்?

அண்ணா உங்களுடைய கடந்தகாலம் என்ன என்பதையும் பற்றி மக்களுக்கு சொல்லவேண்டும். நீங்கள் ஏன் பிரெஞ்சு சிறையில் நீண்ட காலம் இருந்தீர்கள்? பிரெஞ்சு அரசாங்கம் தான்(காவல்துறை?) மக்கள் பேரவையை அமைக்கச் சொன்னது என்று மக்கள் பேரவையினர் கொல்வதன் பின்னணி என்ன? கடந்த காலத்தில் நீங்கள் யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யவில்லையா? இவற்றையும் தயவு செய்து மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்?

அப்படியென்றால், இப்படி நீங்கள் எழுதியதன் நோக்கம்?

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அரசியல் வாழ்வுக்கும் என்ன சம்பந்தம்? அப்படி பார்த்தால் ஒருவரும் நல்ல ஆட்கள் இல்லையே.

அண்ணா கடந்த இரண்டு நாட்களாக எனது இணைய இணைப்பு இயங்கhததனால் உடன் பதிலெழுத முடியவில்லை.தனpப்பட்ட வாழ்க்கையில் நேர்மையாக இருப்பவர்கள் தான் பொது வாழ்க்iகயில் மக்களுக்கு உண்மையாக இருப்பார்கள்.தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் நேர்மையை கொள்கை உறுதியை அப்பழுக்கில்லாத அர்ப்பணிப்பை கடைப்பிடிக்க முடியும் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்கு முன்னுதாரணமாக திகழும் தேசித் தலைவரின் வழி நடக்கும் நாங்கள் பிழைப்பு வாதிகளுக்கு இடங்கொடுக்கலாமா?

தனpப்பட்ட வாழ்க்கையில் நேர்மையாக செயற்படும் எவரும் தமது கடந்த காலத்தை வெளிப்படையாகச் சொல்ல தயங்க மாட்டார்கள்.

பாரீஸ் நகரில் வாழும் காராட்டி சிறீ என்பவரின் கடையில் தான் இவர் தனது பொது வாழ்ககையை ஆரம்பித்தார்.காராட்டடி சிறீயை தெரிந்தவர்கள் அவரை தொடர்பு கொண்டு இவரைப்பற்றி விசாரிக்கலாம். நாங்கள்மாவீரச் செல்வங்களின் கனவை நனவாக்கு உழைக்கின்ற போது அதற்காக உழைக்க முன்வருபவர்கள் சொந்தவாழ்க்கையில் நேர்மையாக இருந்தார்களா என்பதை அறிவது அவசிய மல்லவா? ஒருவர் கடந்த காலத்தில் தவறு செய்திருக்கலாம். அந்தத் தவறை உணர்ந்து தன்னை திருத்தியும் இருக்:கலாம். அப்படிப்பட்வர் அதை மக்களுக்கு மறைக்க மாட்டார்.

Edited by athiyan

தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு நபர் விடும் தவறு ஒரு சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது?

பொது வாழ்க்கையில் ஈடுபடும் ஒரு நபர் விடும் தவறு சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துத்துகின்றது?

புலத்தில் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட தனி நபர்கள் விட்ட தவறின் தாக்கம் எத்தகையது?

புலத்தில் குழுவாக இணைந்து விடப்பட்ட தவறின் தாக்கம் எத்தகையது?

புலத்தில் மே 19 இன் பின்பு குழுவாக இணைந்து செயற்படுவோர் விடும் தவறின் தாக்கம் எத்தகையது?

எந்தத் தவறை மன்னிக்கப்போகின்றோம்?

தமிழீழத் தேசியத்தலைவரின் இலட்சியத்தில் விளையாடும் “அவதூறு என்பது மோசமான பலவீனர்களின் கடைசியும் முதலுமான ஆயுதம்

இன்று புலத்தினில் தமிழ் மக்களிடையே எதிரியை விட கொடுமையான துரோகத்தனப் பூகம்பம் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இது தேசியத்தலைவரின் இலட்சியக்கனவை எரித்துச் சாம்பலாக்கப்போகிறது. இது புரியாதஇ உணர்ச்சியும் துடிப்பும் மிக்க புலம்பெயர்ந்த இளம் சமுதாயம் இதற்குள் பலியாகிக்கொண்டிருக்கிறது.

ஆனாலும் வராலாறு தன் வல்லமையை உரிய காலத்தில் நிகழ்த்திக்காட்டும். இவற்றை எதிர்கொள்வதற்கு நாம் அஞ்சத்தேவையில்லை. நாம் நியாயத்தின் பால் நிற்பவர்கள் நம்முடைய ஒற்றுமையையும்இ மன வலிமையையும் குலைப்பதற்கு எந்த வகையில் யார் முயன்றாலும் நாம் அவற்றை எதிர்கொள்ளுவோம். வெற்றியும் காணுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

எப்போதும் முதுகுக்குப் பின்னால் நின்றால் குத்தமாட்டோம். கூட இருந்தே குழிபறிக்கமாட்டோம். சத்தியம் சாகாது என்ற தலைவனின் தத்துவத்தை சத்தியமாய் கொண்டவர்கள் உண்மையை எங்கும் உரைப்பதற்கு தயங்காததவர்கள். “பிரபாகரனிசம்” என்கின்ற தத்துவத்தில் பிறந்தவர்கள் இன்று அவரை வைத்து வாழ நினைப்பதுவும் அவருடன் இருந்தவர்களையே துரோகிகளாக சித்தரிப்பதுவும் அருவருக்கத்தக்கது. அவமானமானதுஇ கோழைத்தனத்தைவிட கொடியதுஇ இந்தக்கொடுமையை செய்பவர்கள் வேறு யாருமல்ல. அனைத்துலகத்தொடர்பகத்தின் செயற்பாட்டில் இருக்கும் சில வன்மம் கொண்டோர். இவர்களின் உண்மைக்குப புறம்பான செய்திகள் மக்களை வேதனைப்படுத்துவதால் நாம் இந்த துச்சாதனர்களை தோலுரிக்கத்தயங்கமாட்டோம். அதேவேளை அநாகரீகமாகவும் எழுதமாட்டோம்இ

ஆனால்……

நாங்கள் உண்மைசொன்னால்இ உலகு நம்பும்….

காரணம் எமது அடையாளம் நேரிடையானது. எனவே வேண்டாம் இந்த விபரீதம் .இலட்சியத்துக்காக களம் புகுந்தவர்கள் நாங்கள் சாவை சந்தோசமாக ஏற்கத்துணிந்தவர்கள். கூட இருந்தவனாகினும் கொலை பாதகனாகினால் உயிர்கொடுத்து மாவீரரின் இலட்சியக்கனவுகாப்போம்இ என்ன நேரடியாக அனைத்துலகத் தொடர்பகத்தை குற்றம் சாட்டுகிறோம் என்று உங்கள் புருவம் உயர்ந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். தமிழீழ தேசியத்தலைவரின் விரலசைப்பில் வாழ்ந்து அவரால் சர்வதேச உறவுகளுக்கான செயலராய் நியமனம் பெற்ற ஒருவரை அனைத்துலகத்தொடர்பகத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளங்கள் புலிகளின் குரல் உட்பட துரோகி என்று எழுதிய போது உங்கள் எவருக்கும் மனம் உறுத்தவில்லை என்றால் நிச்சயம் எமக்கும் அதே மனௌறுத்தல் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு கொலைவாள் எடுத்துவிடாதீர்கள் முடிந்தால் கொடியவர்களை இனம் கண்டு விடுதலைத்தீ மூட்டுங்கள் அல்லது புலிகளின் உயர்ந்த இலட்சியத்தையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்தி எதிரிக்கு களம் அமைத்துக்கொடுக்காதீர்கள் "குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்". என்று உரியவர்களுக்கு சொல்லி தலைவன் கனவை நனவாக்குங்கள்.

இனி:

நீங்கள் யார்? உங்கள் இலக்கு என்ன? உம்மை அறிந்தா இதைச்செய்கிறீர்?

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று அதிகமாகச் சம்பாதித்திருப்பது நண்பர்களையல்ல- எதிரிகளையும் துரோகிகளையும் தான். முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சின்னாபின்னமாகச் சிதைந்து போயுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எதிர்காலம் மற்றும் அதன் தலைமையின் இருப்புத் தொடர்பாக யதார்த்தத்துக்கு முரணாகச் செயற்படுவோரின் விளைவாகவே இத்தனை சீரழிவு ஏற்பட்டிருக்கிறது.

தாயகத்தில் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான போராளிகள் களத்தில் உயிரைக் கொடுத்தனர். எஞ்சியிருந்த போராளிகள் பலர் பிடிபட்டனர். பலர் சரணடைந்தனர். வேறு சிலர் உயிர்தப்பி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.

ஒரு கொடிய போரின் விளைவாக நடந்த இந்த விளைவுகளை ஏற்க மறுக்கும் தரப்பினர்-கற்பனையானதொரு கோட்டை தமக்குத் தாமே வரைந்து கொள்ள முற்படுவது சுத்த வியாபாரத்தனம்.

தமிழீழ விடுதலைப் போரில் உயிர் கொடுத்த தேசியத் தலைவரின் மரணத்தையே விலைபேசத் துணிந்தவர்கள் இவர்கள். மரணமான போராளிகளைப் கேவலப்படுத்துவது முதற்கொண்டு பிடிபட்டவர்கள் தப்பிச் சென்றவர்களைத் துரோகிகள் என்றும் காட்டிக் கொடுப்போர் என்றும் சுலபமாகவே வெளிநாடுகளில் இருந்து கொண்டு பட்டங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தாயகத்தில் சிங்களப் படைகளுக்கு எதிராக எதையுமே சாதிக்க வக்கற்றவர்களாக இருந்தவர்களே- இன்று புலம்பெயர் தேசங்களில் பாதுகாப்பாக இருந்து கொண்டு மக்களை கற்பனைச் சாலையின் மீது நடக்க வைக்க முனைகிறார்கள்.

தேசியத் தலைவரின் மரணத்தையே மறைத்து இலாபம் சம்பாதிக்கத் துணிந்தவர்களிடத்தில் இருந்து மானத்தையும் இராஜதந்திரத்தையும் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

அறிவுபூர்வமாகச் சிந்திக்கவோ செயற்படவோ திராணியற்றவர்கள் தான் அவர்கள் கூறுவதை இன்னும் நம்பிக் கொண்டிருக்க முடியும்.

மே 19 பிரளயம் நிகழ்ந்து ஒரு வருடமாகப் போகிறது.

இதற்குள் தாயகத்திலும் புலத்திலும் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. எத்தனை பிரிவுகள்பிளவுகள் வேதனைகள் சோதனைகளைத் தமிழினம் சந்தித்திருக்கிறது.

பிரபாகரனுக்குப் பிறகு புலிகள் இயக்கத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து செயற்பட ஆரம்பித்த கே.பியை வசைபாடி அவரை சிங்கள அரசின் பொறிக்குள் சிக்க வைத்தனர். சிங்கள அரசுடன் இணைந்து அவர் செயற்படுவதாக காட்டிக் கொடுப்பதாக வேறு பிரசாரங்கள் செய்தனர். அதை நிரூபிக்க யாரிடமும் எந்த ஆதாரங்களும் இல்லை.

சரி அவர் காட்டிக் கொடுக்கிறார் என்றால் அதை இவர்களிடம் சொன்னது யார் என்ற கேள்வி வருகிறது. அப்படியானால் கே.பியை துரோகி என்று பழிக்கும் தரப்பினருக்கும் சிங்களப் பேரினவாத அரசுக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கிறது?

ஆயுதங்களை மௌனமாக்கும் முடிவை கே.பி மூலம் அறிவிக்கப்பட்டதையே இன்று கேள்வியாக எழுப்புகின்றனர். அந்த முடிவை பிரபாகரன் எடுக்கவில்லை என்று இருவேறு காலங்களுக்கிடையே ஒப்பீடு செய்கின்றனர். ஆயுதங்களை மௌனமாக்கும் முடிவை எடுத்தபோதே கே.பி சொல்வது தவறு என்று அன்றே கூறத் திராணியற்றிருந்தவர்கள் தான் இன்று அவர் சிங்கள அரசின் சிறையில் இருக்கும் போது அப்படிச் சொல்ல முனைகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன?

வீரஞ்செறிந்த விடுதலைப் போர் மண்டியிட நேர்ந்தது என்பதே உண்மை. அதை வரலாற்றில் யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. அந்தக் கொடிய போருக்குள் இருந்தவாறு தேசியத் தலைமை எடுத்த முடிவையே இன்று கேள்வி கேட்கும் துணிவு இவர்களுக்கு எப்படி வந்தது.

அதற்குத் தூண்டுகோலாக இருப்பது யார்?

கே.பியின் வழிகாட்டலில் உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசை அமைக்கும் முயற்சியில் இறங்கினார். இப்போது அவரை அந்த முயற்சியில் இருந்து இறங்க வைக்கும் நோக்கில் பலமுனைகளில் இருந்து அவர் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது.

உருத்திரகுமாரனின் ஆற்றலையும் அறிவையும் கேள்விக்குட்படுத்தும் வகையிலும் அவருக்கு தமிழீழத் தேசிய விடுதலைப் போரை முன்னெடுக்கத் திராணியில்லை என்ற வகையிலும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொண்டாலும் கூட அத்தகைய குற்றச்சாட்டை சுமத்துவதற்கு இவர்களில் யாருக்கு என்ன தகுதி இருக்கிறது? தகைமை இருக்கிறது?

ஆயுதப் போராட்டத்தை தாயகத்தில் அழித்து விடும் முயற்சியில் வெற்றிகண்ட சிங்கள அரசுக்கு ஒரு கலக்கம் இருந்து வந்தது. புலத்தில் தமிழ்மக்கள் பலமாக இருக்கிறார்களே அவர்களை எப்படிச் சமாளிப்பது என்பதே சிங்கள அரசின் அச்சமாக இருந்தது.

இது கடந்த வருடம் இதே காலத்தில் இருந்த அச்ச நிலைமை. ஆனால் இன்று புலத்துத் தமிழர்கள் பற்றி சிங்கள தேசத்துக்கு கொஞ்சமும் அக்கறையோ கலக்கமோ கிடையாது. இதற்குக் காரணம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் சிறுமைப்படுத்தும் வகையில் நமக்குள் நாமே போட்டுக் கொள்ளும் சண்டைதான்.

ஒருபக்கத்தில் நாடுகடந்த அரசு. அடுத்த பக்கத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்து முடிந்து விட்டது.

அதற்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்கும் தெரியாத நிலை. இது ஒரு பக்கத்தின் நிலை. அடுத்த பக்கத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவைக்கான வாக்கெடுப்பு நடக்கப் போகிறது.

இது தான் இப்போது பிரச்சினை.

இந்தத் தேர்தலைக் குழப்பி நாடு கடந்த தமிழீழ அரசு என்ற ஒன்று அமைய விடாமல் செய்யும் முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன. நாடுகடந்த தமிழீழ அரசுக்கு வெளிநாடுகளில் ஏதாவது வாய்ப்புக் கிடைத்து விடுமோ என்ற அங்கலாய்ப்பே அந்த வசைபாடல்களுக்கும் சேற்றை வாரும் முயற்சிகளுக்கும் காரணமாக இருக்கலாம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத் தரப்பினர் இப்போது தாம் யார் என்று வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கான அங்கீகாரம் சர்வதேச அளவில் கிடையாது. இந்தநிலையில் நாடுகடந்த அரசுக்கு வெளிநாடுகள் இடம் கொடுத்து விடக் கூடாது என்பது அந்தத் தரப்பினரின் அச்சமாக இருக்கலாம்.

நாடுகடந்த அரசுக்கான தேர்தலைக் குழப்புவதே அவர்களின் இப்போதைய முக்கிய தேவை. அதைத் தான் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் புலம்பெயர் தமிழர்கள் மறந்து போய்விட்டார்கள். தமிழீழம் என்பது புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கானது அல்ல. அது தாயகத்தில் வாழுகின்ற மக்களுக்கானது.

புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தாமே வழிகாட்டிகள் போன்று செயற்படுவது மிகவும் முட்டாள்தனமானது. யதார்த்தத்துக்கு முரணாக அவர்கள் இயங்கி ஒன்றுக்கு இரண்டு தேர்தல்களின் மூலம் மூக்குடைபட்டிருப்பது தான் மிச்சம்.

ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா என்ற கொடியபாவிக்கு ஆதரவு தெரிவிக்க கூட்டமைப்பு முடிவு செய்தது மிகப் பெரிய தவறு. அதற்குத் துணை நின்றது புலம்பெயர் சமூகத்தின் ஒருபகுதியினர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வோரோடு நசுக்கிய ஒரு பாதகனுக்குத் துணைபோகும் படி தாயகம் வாழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு எமது புலம்பெயர் தேசத்து மக்களில் ஒரு பகுதியினரின் இராஜதந்திரம் மிகவும் கீழ்த்தரமாக இருந்தது.

அத்தோடு விட்டார்களா?

தோற்கிற குதிரையில் பந்தயம் கட்டி தமிழரின் மானத்தை விற்றவர்கள் பொதுத் தேர்தலிலாவது புத்திசாலித்தனத்தைக் கடைப்பிடித்திருக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவை உருவாக்கி - கஜேந்திரகுமார் தலைமையில் புதிய அணியொன்றை உருவாக்கினார்கள். இதற்குப் பின்னணி புலம்பெயர்தேசத்தின் ஒருபகுதியினர் தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இதன் விளைவாக என்ன நடந்தது?

தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியை மக்கள் அடியோடு நிராகரித்தார்கள். ஒரு மாமனிதரின் மகனான கஜேந்திரகுமாரை தலைகுனிந்து தோல்வியடைய வைத்தார்கள்.

கடந்த முறை யாழ்ப்பாணத்தில் அதிக விருப்புவாக்குகளைப் பெற்றவர்களை தாம் எப்படி அதைப் பெற்றோம் என்று நிரூபிக்க வைத்தார்கள். இதுதான் புலம்பெயர் தேசத்தவர்களில் ஒருபகுதியினரின் இராஜதந்திரம்.

இது மட்டுமன்றி கடந்தமுறை 22 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை 14 ஆகக் குறைத்து விட்டிருக்கிறார்கள். டக்ளஸ் வோனந்தாவையும் ஜதேகவையும் யாழ்ப்பாணத்தில் அதிகாரத்தைச் செலுத்த வைத்தது தான் மிச்சம்.

இன்று யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐதேகவும் ஆசனங்களைப் பெற்றிருக்கிறது என்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டியது இந்தப் பிளவுக்குக் காரணமான புலம்பெயர் தேசத்தினர் தான். இப்போது அவர்கள் யாருக்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?

சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உடன்பாடான வகையில் செயற்படுவது போன்ற சந்தேகம் இவர்கள் மீது ஏற்படுகிறது.

இந்தியாவைப் பகை நாடு என்று விரோதித்துக் கொண்டும் தமிழரின் உரிமைகளுக்காக ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் யாதார்த்த நடைமுறையுடன் அணுகுவோரைத் துரோகிகள் என்றும் பட்டம் கட்டுவதைவிட இவர்களால் எதைச் சாதிக்க முடிந்தது?

தாயகத்தில் விடுதலைப் புலிகள் அழிவுக்குப் பிறகு இவர்கள் யாரைத் தான் விட்டு வைத்தார்கள். எல்லோரையுமே துரோகிகளாக்கியது தான் மிச்சம்.ஆக தமிழீழம் என்பது துரோகிகளின் நாடு என்றாகி விட்டது. இது தமிழர்களின் நாடு இல்லை. அப்படித் தான் இருக்கிறது இவர்களின் கதை.

உண்மையைப் பேசுவோரும் துரோகிகள்- அதை எழுதுவோரும் துரோகிகள்- ஆனால் உண்மையை ஏற்க மறுப்போர் ஏற்கவிடாமல் தடுப்போர் தான் இவர்களைப் பொறுத்தவரையில் இன்று தியாகிகள்.

இந்தளவுக்கும் அவர்கள் தாயகத்து மக்களுக்காக புலம்பெயர்நாடுகளில் எதைச் சாதித்திருக்கிறார்கள்?

புலிகளின் அழிவுக்குப் பிறகு ஒன்றுபட்டு உழைத்திருக்க வேண்டிய புலம்பெயர் சமூகத்தைப் பிளவுபடுத்தி இன்று இக்கட்டான நிலைக்கு கொண்டு வந்திருப்பதன் மூலம் இவர்கள் சாதித்திருப்பது எதனை?

இன்று யார் யாரோ எல்லாம்- யார் யாரையோ எல்லாம் கேவலப்படுத்துவதும் துரோகி என்பதும் சர்வசாதாரணமாகி விட்டது.

இருபது முப்பது ஆண்டுகளாக விடுதலைக்காகப் போரிட்டவர்களும் போராட்டத்தை தோளில் சுமந்தவர்களும் கூட இவர்களால் துரோகிகளாக்கப்பட்டு விட்டனர். காரணம் சுயலாபம். அதுமட்டுமன்றி இவர்கள் இப்படி செயற்படுவதன் மூலம் சாதிக்க நினைப்பது தமிழின உரிமைப் போராட்டத்தை வீறுகொள்ள வைப்பதற்கல்ல. இதை அவர்களின் செயற்பாடுகளே உணர்த்துகின்றன.

இவர்களின் செயற்பாடுகள் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று செயற்படுகிறார்களா என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது. புலிகளில் யார் யார் உயிரோடு இருக்கிறார்கள் அவர்கள் யாரைக் காட்டிக் கொடுக்கிறார்கள் என்ற அச்சொட்டான தகவல்களெல்லாம் இவர்களுக்கு வருகிறதென்றால்- அது சிங்கள அரசின் கைக்கூலிகளாக இயங்குவோரால் தான் முடியும் புலம்பெயர் தேசத் தமிழர்களில் ஒருபகுதியினர் இப்படிதான் மாறித் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சீர்குலைக்க முனைகிறார்களோ என்ற சந்தேகம் மக்களிடம் வருவது இயல்பு.

தாயகத்தில் என்ன நடக்கப் போகிறது மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையே சரியாகத் தெரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல் புலம்பெயர்நாடுகளில் இருந்து அவர்களை வழிநடத்த முற்படுவது முட்டாள் தனம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேவேளை அறிவுபூர்வமான ஒரு கட்டமைப்பு தாயகத்தின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்காக உருவாக வேண்டியது காலத்தின் கடடாயம். இதற்கு முட்டுக்கட்டை போடுவதும் சேற்றைவாரி இறைப்பதும் தேசவிடுதலையை நிராகரிப்பவர்களின் செயலாகவே இருக்கும். அதற்கு விரோதமானவர்களாகவே அவர்களைக் கருதநேரிடும். இப்படி இரண்டுபட்டு நின்று நாம் மோதிக் கொண்டிருந்தால் எம்மையாரும் கணக்கில் எடுக்காத நிலை விரைவில் வரும்.

அதைத்தான் சிங்கள அரசு விரும்புகிறது. சிங்கள அரசின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பதே எம்பணியாக இருக்கப் போகிறதா? என்பதை புலம்பெயர்தேசத்து உறவுகள் அனைவரும் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காத்தல் கடமை என்ற தத்துவக் கவிஞனின் வரியை வாழ்வாக்கியவர்கள்இ

வாருங்கள் தமிழர்களே வாழ்வா சாவா துரோகத்தை ஒருகை பார்ப்போம்….

மண்ணை இன்னும் நேசிப்பவன் அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்

தொல்காப்பியன்

வாருங்கள் தமிழர்களே வாழ்வா சாவா துரோகத்தை ஒருகை பார்ப்போம்….

இப்ப இலவசமாக கிடைக்கிற பட்டம் இதுதான்

இது காலத்துக்கு பொருந்தமானது என்பதால் இதில் இணைத்திருக்கிறேன்.கடந்த வருடம் மார்ச் மாதம் நாட்டுக்கு ஆயுதம் தேவை என்று சொல்லி சேர்த்த பணம் எங்கே? அந்த பணத்தில் ஆயுதம் வாங்கப்படவும் இல்லை அந்தப் பணம் நாட்டுக்குப் போகவும் இல்லை. இந்தப்பணம் யாரிடம் உள்ளதோ அவர்கள் தான் இன்றைய குழப்பங்களுக்கு காரணமானவர்கள்

இது காலத்துக்கு பொருந்தமானது என்பதால் இதில் இணைத்திருக்கிறேன்.கடந்த வருடம் மார்ச் மாதம் நாட்டுக்கு ஆயுதம் தேவை என்று சொல்லி சேர்த்த பணம் எங்கே? அந்த பணத்தில் ஆயுதம் வாங்கப்படவும் இல்லை அந்தப் பணம் நாட்டுக்குப் போகவும் இல்லை. இந்தப்பணம் யாரிடம் உள்ளதோ அவர்கள் தான் இன்றைய குழப்பங்களுக்கு காரணமானவர்கள்

இதை எல்லாம் கேட்டிங்கள் எண்டால் நீங்கள் துரோகியள் ஆகிவிடுவியள்

திருச்சோதியை எதிர்த்து இந்தத் தேர்தலில் போடியிடுவது விடுதலைப்போராட்டத்துக்கு காத்திரமான பங்களிப்பை செய்த சுபாஸ் அண்ணா. முதன் முதலாக விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றை எழுதியது அவர்தான்.அவர் எழுதிய விடிவுக்கு முந்திய மரணங்கள் என்ற நூல் தான் ஈழப் போராட்டத்தில் முதல் போர் குறிப்பாகும். ஏறக்குறைய 30 வருடங்களாக தமிழீழ விடுதலையே உயிர் மூச்சாகக் கொண்டு செற்படுபவர்தன்னுடைய குடம்பம் தன்னுடைய வாழ்க்கை என்று குறுகிய வட்டத்துக்குள் நில்லாமல் நாடு பெரிதென்று வாழ்ந்து அந்த விடுதலைக்காக உழைத்து இன்று வறுமையில் வாடுபவர்.அவர் நாட்டுக்காக செய்த விடயங்களை சொல்வதென்றால் குறைந்தது யாழ் களத்தில் 10 பக்கங்களாவது தேவை. கடந்த வருடம் விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்கள் தேசியத் தலைவரை உயிரினும் மேலாக நேசிக்கும் மக்கள் என்று அனைத்துத் தரப்பும் இணைந்து நடத்திய போராட்டங்களை தான் செய்த சாதனைகளாக சுயவிளம்பரப்படுத்தி பதவிக்காக விலை பேசும் திருச்சோதியை சுபாஸ் அண்ணாவுடன் ஒப்பிட்டே பேசமுடியாது.தாயக விடுதலைக்கு சுபாஸ் அண்ணா செய்ததில் பத்தாயிரத்தில் ஏன் இலட்டசத்தில் ஒரு பங்கு கூட திருச்சோதி செய்திருக்க மாட்டார். இப்படிப்பட்ட சுபாஸ் அணணாவை நந்தோர் என்ற இடத்தில் பரப்பரைக்காக சென்ற போது ஒரு சங்கத் தலைவர் இவன் கேபி யின்ரை ஆள் துரோகி இவன் உங்கடை தகவலுகளை அரசாங்கத்துக்கு குடுத்துப் போடுவான் நீங்கள் அவனை வரவிடாதையுங்கோ. சோதிக்குத் தான் உங்கடை வேட்டுகளை போடுங்கோ என்று செல்லியிருக்கிறான். இவனையெல்லாம் என்ன செய்வது. இவனுக்கெல்லாம் மலம் கரைத்து ஊத்த வேண்டாமா?

கடந்த காலத்தில், சுபாஸ் அவர்களை, அவரது எழுத்துக்கள் ஊடாக அறிந்த நாம், இன்று அவரை கே. பி அணி என பெயரிட்டு அழைக்கும் நிலையில், அவருடைய அரசியல் நிலைப்பாடு இருப்பது கவலை தருவதாகவே இருக்கின்றது.

கேபி அணி என்று ஒன்றுகிடையாது. பணத்துக்காக ; விலைபோன அஉதொ அணி என்ற ஒன்று தான் உள்ளது. நீங்கள் மாவீரர் தியாகத்தை மதிப்பவனாக இருந்தால் சுபாஸ் அண்ணாவைப்பற்றி இப்படி சொல்வதை தயவு செய்து நிறுத்துங்கள் தி.......தி அணி டக்களசிடம் விலை போனதுக்கு பொஸ்.. என்பவர் கொடுத்த வாக்குமூலம் உரிய இடத்தில் இருக்கிறது.சுபாஸ் அண்ணா தலைவரின் வழியல் தடம்புரளாமல் இன்றும் நடக்கிறார். நாடுகடந்த அரசை முடக்குவதற்காகவே சிறலங்கா அரசிடம் பணம் வாங்கிக் கொண்டு இந்த சோ அணி இந்தத் தேர்தலில் போட்டியிருகிறது.

நீங்களும் முதலைக் கண்ண்ணீர் வடிப்பதும் எமக்கு கவலையாக இருக்கிறது.

Edited by athiyan

தேர்வாளர்கள் மக்களால் முடிவு செய்யப்படுவதால், பிரான்ஸ் மக்கள் சரியானவர்களைத் தெரிவு செய்வார்களென நினைக்கின்றேன். எத்தனை அங்கத்தவர் பிரான்ஸில் தெரிவு செய்யப்பட வேண்டும்?

நியூசிலாந்தில் இருவர் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டதாக அறிகின்றேன். வரவேற்கப்பட வேண்டியது. பணவிரயமும் இல்லை.

தேர்தலில் போட்டியிடுவோரை, வாழ்த்துவதற்கும், வசைபாடுவதற்கும் ஆட்கள் இருக்கத்தான் செய்வார்கள். அணி இல்லையென்று நீங்கள் சொல்வதை ஏற்கமுடியாது. புலத்தில், மே 19 இன் பின்பு தாக்குதலும், தற்காப்பு யுத்தமுமே இடம்பெற்று வருகின்றது.

நாடு கடந்த அரசுக்குரிய தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

குறிப்பாக நாடு கடந்த அரசு விடுதலைப் புலிகளினால் அறிவிக்கப்பட்ட நாள்

முதல் அதனை எதிர்த்தும் அவதூறு பிரச்சாரங்களும் செய்து வந்த

பேரவை நபர்கள் இன்று நாடு கடந்த அரசுத் தேர்தலில்; குதித்துள்ளனர்.

மேலும் மக்களை தேர்தலிலும் குதித்துள்ளனர்.

இரண்டு தேர்தலில் போட்டியிடுவது மட்டுமல்லாது மக்களை குழப்பியும்

வருகின்றனர்.

இவர்களின் நோக்கம் தெளிவானது :

- நாடு கடந்த அரசை கைப்பற்றி அதனை முடக்கிவி;ட்டு மக்கள் பேரவையை

முன்னெடுப்பது

- எல்லா அதிகாரங்களையும் தங்கள் கையுக்குள் வைத்திருப்பது.

- மக்களை ஏமாற்றுவது.

இவர்களின் தொடர் குழப்பங்களைப் பாருங்கள்

முதலில் நாங்கள் ஏன் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என சங்கதி ஏவல் இணையத்தில்

வெளியிட்டனர்

பின்னர் நான் ஏன் போட்டியிடுகின்றேன் என மாற்றம் செய்தனர்.

அடுத்து நாடு கடந்த அரசுக்கான தேர்தல் விளம்பரத்தில் தாங்கள் ஒரு குழுவாக

இறங்கியிருப்பதை வெளிக்காட்டி அதில் எந்த இடத்திலும் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற

சொல்லாடலை தவிர்த்து விட்டு தமிழீழம் நோக்கிய பயணம் என மக்கள் பேரவையின் சொல்லாடலையும்

இணைத்தனர்.

இதன் நோக்கம் பார்பவர்கள் நாடு கடந்த அரசும் மக்கள் பேரவையும் ஒன்றுதான் என்று

மாயைத் தோற்றத்தை ஏற்படுத்தவது.

மேலும் மக்கள் பேரவை ...மக்கள் பேரவை என்ற நாடு கடந்த தமிழீழ அரசு என்ற உயர்பீடத்துக்கு

ஒப்பானதென பீலா விட்டு விட்டு தேர்தல் நடாத்த முனைந்தவர்கள் இதுவரை வேட்பாளர்கள் பற்றிய அறிமுகமோ

அல்லது அதற்கான விழிப்ப பரப்புரைகளோ செய்யவில்லை.

மேலும் பிரான்ஸ் முழுவதுக்குமாக் (பேரவைக்கு ) 70பேர் தேர்வுசெய்யப்டுகின்ற நிலையில 70 வேட்பாளர்களே

உள்ளனர்

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்களை தேர்தலில் தேர்வானர்கள் என்று

சும்மா கதையளக்க முனைகின்றனர் .

இந்த நிலையில் நாடு கடந்த அரசுக்குள்ளும் களமிறங்கி இவர்கள் படுத்திற பாடும் பர்ற பாடும் கொஞ்ச நஞ்சமல்ல.

தேர்தலில் என்னென்ன விதிமுறை இருக்கோ அதiயெல்லாம் குழுதோண்டி புதைத்துவி;ட்டுள்ளனர்.

ஓரு குழுவாக போட்டியிடக்கூடாது என்ற விதிமுறையை மீறி மக்கள் பேரவை தேர்தலில் என்று

அறிவித்தனர் (நாங்கள் ஏன் போட்டியிடுகிறோம் ) அதற்கு சுவரொட்டியும் அடித்தனர்.

பிராந்திய சங்கங்கள் நடு நிலையாக நின்று சகல வேட்பாளர்களும் வாய்பளிக்க வேண்டும் என்ற

தேர்தல் விதிமுறையை மீறி சங்க இணைப்பாளர் - மக்கள் பேரைவ உருவாக்கிகளில் ஒருவர் - நல்லூர் ஸ்தான்

விளையாட்டு கழக செயலர் - என்று ஆயிரம் பொறுப்புகளிலும் நாடு கடந்த தமிழீழ அரசில் போட்டியிடுகின்றவருமான

பாலா தனது அடவாடி அதிகாரத்தை செய்து சங்கங்களை தனது பேரவை குழுவுக்கு கேட்டுள்ளார்.

கொடுக்கப்பட்ட பணியை பாலா சரியாக செய்யவில்லை என்று எதிர்வேட்ளர் ஊடகவியலாளர் சுதன்ராஜ் முன்வைத்த

குற்றச்சாட்டுக்களுக்கு அரங்கில் அமைதியாக 2நிமிடம் பேசிவிட்டு சென்று பின்னர் மக்கள் தன்னை கேள்வி கேட்க

முனைந்தவுடன் சுதன்ராஜ் மாற்று இயக்கம் போல் கதைக்கிறார் என்று விசமத்தனமான பிரச்சாரத்தை செய்கிறார்.

இதுபோல் திருச்சோதி என அழைக்கப்படும் (போதை...சிறை...பெண்...கடத்தல் இட்டு நிரப்புக...)2007ம் ஆண்டுக்கு பின்னர் தேசியப்பணி ஆற்ற வந்தவர் 30 ஆண்டுகலாமாக விடுதலைக்கான பயணத்தில் களத்தில் போராளியாகவும் புலத்தில் செயல்பாட்டாளனாகவும்

இருக்கும் கவிஞர் பாலகணேசனை (சுபாஸ்) எப்போது வி;டுதலைக்கு உழைத்தீர்கள் என்று மக்கள் மத்தியில்

கேட்டு வாயுடைந்து போயுள்ளார்.

இவ்வாறு பேரவை பொய் பொய்யாய் அடுக்கி நாடு கடந்த அரசினை கைப்பற்றி

அதனை முடக்க முனைந்த்து மட்டுமல்லாது இதுவரை காலமும் அதவாது 25 ஆண்டுகளுக்கு

மேலாக பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் அதன் பிற கட்டமைப்புக்களும் எந்த

வித வேலைத்திட்டங்களையும் செய்யவில்லை மக்கள் பேரவை 2009 உருவாகிய பின்னர்தான மக்கள் எழுர்ச்சி

கொண்டனர் என்று பொய்யுரைக்கின்றார் அல்லாது பொய்யுரைக்கின்றனர்.

இவ்வாறு தொடரும் இவர்களின் அக்கிரமங்கள் ஆக்கிரமிப்புக்கள் குறித்த தொடர்ந்;தும்

அறியத்தரப்படும்

இதனை வாசிக்கின்றனர்கள் இவர்கள் குறித்த விழிப்பாக இருக்கும் படி உறவுகளை

கேட்டுக் கொள்ளுங்கள்

Edited by அகரன்

நாடு கடந்த அரசுக்குரிய தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

குறிப்பாக நாடு கடந்த அரசு விடுதலைப் புலிகளினால் அறிவிக்கப்பட்ட நாள்

முதல் அதனை எதிர்த்தும் அவதூறு பிரச்சாரங்களும் செய்து வந்த

பேரவை நபர்கள் இன்று நாடு கடந்த அரசுத் தேர்தலில்; குதித்துள்ளனர்.

மேலும் மக்களை தேர்தலிலும் குதித்துள்ளனர்.

இரண்டு தேர்தலில் போட்டியிடுவது மட்டுமல்லாது மக்களை குழப்பியும்

வருகின்றனர்.

இவர்களின் நோக்கம் தெளிவானது :

- நாடு கடந்த அரசை கைப்பற்றி அதனை முடக்கிவி;ட்டு மக்கள் பேரவையை

முன்னெடுப்பது

- எல்லா அதிகாரங்களையும் தங்கள் கையுக்குள் வைத்திருப்பது.

- மக்களை ஏமாற்றுவது.

இவர்களின் தொடர் குழப்பங்களைப் பாருங்கள்

முதலில் நாங்கள் ஏன் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என சங்கதி ஏவல் இணையத்தில்

வெளியிட்டனர்

பின்னர் நான் ஏன் போட்டியிடுகின்றேன் என மாற்றம் செய்தனர்.

அடுத்து நாடு கடந்த அரசுக்கான தேர்தல் விளம்பரத்தில் தாங்கள் ஒரு குழுவாக

இறங்கியிருப்பதை வெளிக்காட்டி அதில் எந்த இடத்திலும் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற

சொல்லாடலை தவிர்த்து விட்டு தமிழீழம் நோக்கிய பயணம் என மக்கள் பேரவையின் சொல்லாடலையும்

இணைத்தனர்.

இதன் நோக்கம் பார்பவர்கள் நாடு கடந்த அரசும் மக்கள் பேரவையும் ஒன்றுதான் என்று

மாயைத் தோற்றத்தை ஏற்படுத்தவது.

மேலும் மக்கள் பேரவை ...மக்கள் பேரவை என்ற நாடு கடந்த தமிழீழ அரசு என்ற உயர்பீடத்துக்கு

ஒப்பானதென பீலா விட்டு விட்டு தேர்தல் நடாத்த முனைந்தவர்கள் இதுவரை வேட்பாளர்கள் பற்றிய அறிமுகமோ

அல்லது அதற்கான விழிப்ப பரப்புரைகளோ செய்யவில்லை.

மேலும் பிரான்ஸ் முழுவதுக்குமாக் (பேரவைக்கு ) 70பேர் தேர்வுசெய்யப்டுகின்ற நிலையில 70 வேட்பாளர்களே

உள்ளனர்

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்களை தேர்தலில் தேர்வானர்கள் என்று

சும்மா கதையளக்க முனைகின்றனர் .

இந்த நிலையில் நாடு கடந்த அரசுக்குள்ளும் களமிறங்கி இவர்கள் படுத்திற பாடும் பர்ற பாடும் கொஞ்ச நஞ்சமல்ல.

தேர்தலில் என்னென்ன விதிமுறை இருக்கோ அதiயெல்லாம் குழுதோண்டி புதைத்துவி;ட்டுள்ளனர்.

ஓரு குழுவாக போட்டியிடக்கூடாது என்ற விதிமுறையை மீறி மக்கள் பேரவை தேர்தலில் என்று

அறிவித்தனர் (நாங்கள் ஏன் போட்டியிடுகிறோம் ) அதற்கு சுவரொட்டியும் அடித்தனர்.

பிராந்திய சங்கங்கள் நடு நிலையாக நின்று சகல வேட்பாளர்களும் வாய்பளிக்க வேண்டும் என்ற

தேர்தல் விதிமுறையை மீறி சங்க இணைப்பாளர் - மக்கள் பேரைவ உருவாக்கிகளில் ஒருவர் - நல்லூர் ஸ்தான்

விளையாட்டு கழக செயலர் - என்று ஆயிரம் பொறுப்புகளிலும் நாடு கடந்த தமிழீழ அரசில் போட்டியிடுகின்றவருமான

பாலா தனது அடவாடி அதிகாரத்தை செய்து சங்கங்களை தனது பேரவை குழுவுக்கு கேட்டுள்ளார்.

கொடுக்கப்பட்ட பணியை பாலா சரியாக செய்யவில்லை என்று எதிர்வேட்ளர் ஊடகவியலாளர் சுதன்ராஜ் முன்வைத்த

குற்றச்சாட்டுக்களுக்கு அரங்கில் அமைதியாக 2நிமிடம் பேசிவிட்டு சென்று பின்னர் மக்கள் தன்னை கேள்வி கேட்க

முனைந்தவுடன் சுதன்ராஜ் மாற்று இயக்கம் போல் கதைக்கிறார் என்று விசமத்தனமான பிரச்சாரத்தை செய்கிறார்.

இதுபோல் திருச்சோதி என அழைக்கப்படும் (போதை...சிறை...பெண்...கடத்தல் இட்டு நிரப்புக...)2007ம் ஆண்டுக்கு பின்னர் தேசியப்பணி ஆற்ற வந்தவர் 30 ஆண்டுகலாமாக விடுதலைக்கான பயணத்தில் களத்தில் போராளியாகவும் புலத்தில் செயல்பாட்டாளனாகவும்

இருக்கும் கவிஞர் பாலகணேசனை (சுபாஸ்) எப்போது வி;டுதலைக்கு உழைத்தீர்கள் என்று மக்கள் மத்தியில்

கேட்டு வாயுடைந்து போயுள்ளார்.

இவ்வாறு பேரவை பொய் பொய்யாய் அடுக்கி நாடு கடந்த அரசினை கைப்பற்றி

அதனை முடக்க முனைந்த்து மட்டுமல்லாது இதுவரை காலமும் அதவாது 25 ஆண்டுகளுக்கு

மேலாக பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் அதன் பிற கட்டமைப்புக்களும் எந்த

வித வேலைத்திட்டங்களையும் செய்யவில்லை மக்கள் பேரவை 2009 உருவாகிய பின்னர்தான மக்கள் எழுர்ச்சி

கொண்டனர் என்று பொய்யுரைக்கின்றார் அல்லாது பொய்யுரைக்கின்றனர்.

இவ்வாறு தொடரும் இவர்களின் அக்கிரமங்கள் ஆக்கிரமிப்புக்கள் குறித்த தொடர்ந்;தும்

அறியத்தரப்படும்

இதனை வாசிக்கின்றனர்கள் இவர்கள் குறித்த விழிப்பாக இருக்கும் படி உறவுகளை

கேட்டுக் கொள்ளுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.