Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பொலிஸாரினால் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பொலிஸாரினால் மீட்பு

வவுனியாவில் கடத்தப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று முன்தினம் வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும்போது, கடத்தப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், வவுனியா அலுவலக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கைதுசெய்யப்பட்ட குறித்த உறுப்பினர் வழங்கிய தகவலையடுத்தே, மேற்படி கடத்தப்பட்டிருந்த நபர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டார்.

tamil.dailymirror.lk

கடத்தல் மாமன்னன் டக்லஸ் கொடிகட்டி பறக்கிறார்!

இந்த கடத்தல், கொலைகார கும்பலுக்கும் கண்ணை மூடிக்கொண்டு வக்காலத்து வாங்க சிலர் இங்கு உள்ளனர்.

இவர்களுன் சித்தார்த்தன் கும்பலும் கடத்தல், கொலை ஜனநாயகத்தில் உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

2ஆம் இணைப்பு‐வவுனியா மருத்துமனையில் தம்பிராசா ஜெயந்தனைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய செல்லக்கிளி என்ற தீபன் பொலிசாரால் கைது – தமது உறுப்பினர் அல்ல என்கிறது EPDP‐

கடந்த 24ஆம் திகதி முற்பகல் 10மணியளவில் வவுனியா பொது மருத்துமனைக்கு மருந்தெடுக்கச் சென்ற நிலையில் தம்பிராசா ஜெயந்தன் என்பவர் கடத்தப்படடதாக ஜீரிஎன் உடனடியாக செய்தி வெளியிட்டிருந்தது. கடத்தப்பட்டவர் கொடிகாமம் கச்சாய் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய தம்பிராசா ஜெயந்தன் எனவும் இவரை விடுவிப்பதற்காக அரசாங்கத்துடன் தொடர்புடைய ஆயுதக்குழுவின் உறுப்பினர் தான் எனத் தெரிவித்த தீபன் என்பவர் உறவினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி பேரம் பேசி வருவதாகவும் ஜீரிஎன் செய்தியாளர் வவுனியாவிலிருந்து தெரிவிதிருந்ததனை குளோபல் தமிழச் செய்திகள் தெரிவித்திருந்தது.

இந்த பணப் பேரம் பேசலை அடிப்படையாகக் கொண்டு பணத்தை வழங்குவதாக கூறி சிவில் உடையில் சென்ற பொலிசார் செல்லக்கிளி என்ற தீபனை வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள ஈ.பீ.டீ.பீ முகாமில் வைத்து கைது செய்தனர். அத்துடன் கடத்தப்பட்ட தம்பிராசா ஜெயந்தனையும் பொலிசார் மீட்டனர்.

இவர் வழங்கிய தகவலினை அடிப்படையாகக் கொண்டு ஈ.பீ.டீ.பீயின் தற்போதய மன்னார் மாவட்ட பொறுப்பாளரர் லிங்கேசை பொலிசார் தேடுவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னர் வவுனியா ஈ.பீ.டீ.பீ முகாமில் முக்கியஸ்த்தராக இருந்த லிங்கேஸ் மன்னார் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் கடத்தல் சம்பவம் இடம்பெற்ற கடந்த 24 ஆம் திகதி வவுனியாவிலேயே இருந்து இந்த கடத்தலுக்கு கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது. இவரே வன்னியில் இருந்து செல்வம் என்ற பெயரில் அவர்களின் வானொலியிலும் செய்தியாளராக குரல் வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லிங்கேஸ் அல்லது செல்வம் என்ற இந்த முக்கியஸ்த்தரின் குழுவில் பிரதானியாக இயங்கும் செல்லக்கிழி என்ற தீபனின் வீடு ஈரப்பெரியகுளத்தில் யோசப் முகாமிற்கு அருகாமையில் உள்ள தம்ரோ தளபாடக் கடைக்கு அருகாமையில் உள்ளது.

இலங்கைப் புலனாய்வுப் பிரிவு அமைப்புகள் குறிப்பாக ரி.ஐ.டீயுடன் இணைந்தும் வேலை செய்த இவர் பல வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்புடையவர் எனக் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லுpங்கேசின் குழுவில் தீபனின் மைத்துணரான சுரேஸ், வட்டக்கச்சி யோகன், நந்தினி முதலானோர் இயங்குவதாகவும் இவர்கள் இலங்கைப் புலனாய்வு அமைப்பான ரீ.ஐ.டீயுடனும் இணைந்து பணியாற்றுவதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கடந்த சில வருடங்களாக வவுனியாவில் பெறப்பட்ட பல கப்பப் பணம் ஈரப்பெரியகுளத்திற்கு அண்மையில் உள்ள ஆலையம் அல்லது கடைகளிலேயே கைமாறப்பட்டதாக பணத்தை கப்பமாக செலுத்தியவர்கள் பலதடவைகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பொலிசாரால் கைதான செல்லக்கிழி என்ற தீபன் தமது உறுப்பினர் அல்ல எனவும் தம்மிடம் பாதுகாப்பு கேட்டு காவற்துறையினர் வருவதற்கு சற்று முன்னரே தம்மிடம் வந்ததாக ஈ.பீ.டீ.பீயின் வவுனியா செயலகம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இளைஞர் கடத்தல் ‐ விடுவிக்க அரசுடன் தொடர்புடைய ஆயுதக்குழு உறுப்பினர் எனப்படுபவரால் பேரம் பேசப்படுகின்றது – வவுனியாவிலிருந்து ஜீரிஎன் செய்தியாளர் :

25 April 10 06:54 am (BST)

வவுனியாவில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். நேற்றைய தினம் முற்பகல் 10மணியளவில் வவுனியா பொது மருத்துமனைக்கு மருந்தெடுக்கச் சென்ற நிலையில் இவர் கடத்தப்பட்டுள்ளதாக ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடத்தப்பட்டவர் கொடிகாமம் கச்சாய் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய தம்பிராசா ஜெயந்தன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமிலிருந்து விடுக்கப்பட்டு தற்பொழுது வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் கடத்தப்பட்டுள்ள நிலையில் இவரை விடுவிப்பதற்காக அரசாங்கத்துடன் தொடர்புடைய ஆயுதக்குழுவின் உறுப்பினர் தான் எனத் தெரிவித்த தீபன் என்பவர் உறவினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி பேரம் பேசி வருவதாகவும் ஜீரிஎன் செய்தியாளர் வவுனியாவிலிருந்து தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=23533&cat=1

இந்திய புலனாய்வுப் பயங்கரவாதிகளிடையே முறுகலா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.