Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காமத்திலிருந்து கடவுளிற்கா? கடவுளிடமிருந்து காமத்திற்கா? குகதாசன் - கனடா

நான் படித்த பின்னரும் சேர்த்து வைத்துக் கொள்ளும் சில புத்தகங்களில் காமத்திலிருந்து கடவுளிற்கு என்ற ரஜனீவ் அவர்களின் நூலும் ஒன்று. எனக்குத் தெரிந்தவரை காமச் சாமியார் என்று 1970 களில் சந்தேகிக்கப்பட்ட “ஓசோ” என்று உலகத்தால் அறியப்பட்ட ரஜனீஜ் அவர்களபை; பற்றிய செய்திகளையோ அன்றில் அவரது கருத்துக்களையோ நான் சிறு வயதிலிருந்தே வாசிப்பதில்லை.

ஆனால் பிற்காலத்தில் ஒரு தடவை “ கிருஸ்ணா என்ற மனிதனும் அவனது தந்துவங்களும் ” என்ற தலைப்பில் ரஜனீஜ் எழுதிய ஒரு புத்தகத்தைக் கண்ட போது அதையும் வாசிக்காமல் விட என்னால் முடியவில்லை. காரணம் கிருஸ்ணா என்பவர் பரமார்த்தா என்று தான் எல்லோரும் சித்தரிப்பது வழக்கம். கிருஸ்னனும் ஒரு மனினே என்று யதார்த்தமாகக் கொடுபட்ட தலைப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது. அது ஒரு சிறிய நூலாகையால் ஒரே மூச்சில் வாசிக்கக் கூடியதாக இருந்தது. தவிர ஏற்கனவே பகவற் கீதை குர்ஆன் பரிசுத்த வேதாகமம் மற்றும் விவேகானந்தரின் ஞான தீபத் தொடரை அவற்றில் அனேகமானவை விளங்காத போதும் வாசித்து முடித்திருந்தமையால் இதைப் புரியக் கூடியதாக இருந்தது.

உண்மையில் அந்தச் சிறிய நூல் அவதாரங்கள் என்று இதிகாசங்கள் பேசியவர்களை இயேசு புத்தர் போன்றவர்களுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட ஒரு சிறு ஆய்வாகும்.

எதுவுமே ஒழுங்கற்ற நிலையில் ஒரு சீர் திருத்த ஒழுங்கை எற்படுத்தல் எனபதையே மதங்கள் பலவும் செய்த பணிகள் என்றால் அங்கே ஒரு வழமை ஏற்பட்டுவிடுகிறது. அனேகமானவர்கள் அந்த வழமையைத் தழுவியே அனைத்தையும் செய்வர். சிந்தித்தல் கற்பனை செய்தல் கனவு காணல் பேச்சு எழுத்து தேடல் ஆய்வு செயல் அனைத்துமே வழமையைத் தழுவியே இருக்கும்.

யாப்பு விதிகளை அறிந்து கொண்டு யாருக்கும் எதற்கும் தீங்கின்றி பலனள்ள புரியக் கூடிய புதுக் கவிதை எழுதுபவன் போல் ஒரு மீறலைச் செய்பவராகவே ரஜனீஜை நான் காண்கிறேன். ஒரு விதத்தில் புத்தரும் இதைத் தான் செய்தார் என நான் நினைக்கிறேன். ரஜனீஜின் மறுபக்கங்களைப் பார்க்கும் பாங்கும் புலப்படாது ஒளிந்திருக்கும் உண்மைகளை தேடி காண்பிப்பதும் என்னை வெகுவாகக் கவர்ந்தன.

அன்பே சிவம் என்றால் அன்பைக் காண வேண்டும். அன்பு என்ற பதம் இங்கு பேரன்பு எனப்படும் பிரபஞ்சம் வரை வியாபித்த பரந்த விரிந்த ஆழ்ந்த அன்பைத் தான் சுட்டுகிறது என்பதால் ஒருவன் தன் குடும்பத்தவரிடம் காட்டும் அன்பை வளர்த்தெடுத்து இந்த மகா அல்லது மெகா அன்பை காட்டும் முயற்சியில் எல்லா உயிர்களிடமும் இருக்கக் கூடிய இயல்பான காமத்தை வ்pதையாக்குவதே ஓசோவின் பாணி. அதனால் அவர் காமம் பற்றி பேச வேண்டியிருந்தது. ஆனால் அங்கே விரசமமோ அல்லது விரத மீறலோ முனைப்பாக இருக்கவில்லை.

உடை எதனையும் அணியாத விலங்குகள் வெளிப்படும் நேரங்களில் மட்டுமே காம உணர்வைக் கொள்கின்றன. ஆனால் உடை போட்டு மறைக்கும் மாந்தர் தான் எல்லா நேரங்களிலும் அதைப் பற்றி சிந்தித்து எல்லை மீறுகிறார்கள் என்பதே ஓசோவின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

எனவே எதையும் மறைக்காத போது அங்கே அனாவசியமாகத் தேட ஒன்றும் இல்லை என்ற அடிப்படையில் சுதந்திரம் கொடுத்து குழந்தைகளை வளர்க்கப்படும் முறை அதீத கட்டுப்பாட்டுடன் வளர்க்கும் முறையை விட ஒப்பீட்டளவில் சிறந்தது என்பதே ஓசோவின் வாதமாக இருக்கிறது. அந்த வகையில் கட்டுப்பாடுகளை சமூகத்தில் போடும் அனைத்துப் பெரிய பழைய மதங்களை எல்லாம் ஓசோ எல்லை மீறிச் சாடுகின்றார். இங்கே நான் எங்கே வர முயல்கிறேன் என்றால் பயம் கோபம் காமம் என்ற அடிப்படை உணர்வுகளிற்கும் கடவுளைத் தேடும் நடவடிக்கைக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை என்பதை குறிப்பிடவே. இறையைத் தேடும் மார்க்கங்கள் பல என்பதைப் போல இதுவும் ஒரு ஆத்மீகப் பெருந் தெருத்தான் என்பதும் ஆனால் அது தாராளமாகத் தவிர்ககப்படக்கூடியது என்பதையுமே ஒழிய காமத்திற்கும் கடவுளிற்கும் உள்ள தொடர்பை மறுக்க இயலாது என்பதையே. சிற்றின்பத்தை விட பேரின்பம் நீண்டதும் நிலையானதும் என்ற உணமையை தெரிவிப்பதனூடாக ரஜனிஜ் ஆத்மீக நிலையினை தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவே துர்ப்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதே இன்றைய நிலையாக நம்பப்படுகிறது. கருணையே அறவே கிடையாத தோற்றங்களைக் கொண்டவர்கள் எல்லாம் நானே கடவுள் அவதாரம் என்கிறார்கள். இந்தப் பொய்யைச் சொல்பவர்களை விட இதை நம்புகிறவர்கள் மீதே நமக்கு கோபம் அதிகம்.

நித்தியானந்தா என்ற இளைஞன் எந்த விதமான அடிப்படை உணர்வுகளிலிருந்தும் விடுபட்டவனாக இருக்க இயலாது. ஏதோ சித்தாந்த விளக்கங்களை அவனால் விளக்க முடிந்ததால் அவன் கடவுளாகி விட முடியாது. அவன் மதத்தின் பெயரால் பல நற்பண்pகளைச் செய்ய முடிந்தமையால் அவனைக் கடவுள் என்று மண்டியிட்டால் அவன் ஒளித்துத் தாணே தன் கருமங்களை ஆற்ற வேண்டும். தவிர அவன் தமிழன் என்பதால் வட இந்தியத் துறவிகள் போட்டி மனப்பான்மையில் அதிகமாக குற்றஞ் சாட்டப்படவும் இடமுண்டு.

எனவே வழக்கு முடிவிற்கு வரும் வரை யாரும் எந்த முடிவிற்கும் வர முடியாது. இங்குள்ள இன்றைய யதார்த்தம் என்னவென்றால் நித்தியானந்தாவை இன்று காப்பது கடவுள் அல்ல என்பதே. அதாவது போலிஸ் காரர்கள் தான் இன்று பொது மக்களின் நையப் புடைத்தலிருந்து சுவாமி நித்தியானந்தாவைக் காக்கிறார்கள். ஆகவே இனி அநேகமாக நித்தியானந்தாவின் ஆச்சிரம் காவல் நிலையமாகவோ அனறில்ச் சிறைச் சாலையாகவோ தான் இருக்கும்.

முடிவாக ரஜனீஜ் காமத்திலிருந்து கடவுனைத் தேட வைத்தார் என்றால் நித்தியானந்தா கடவுளிடமிருந்து காமத்திற்கு இழுத்து வந்தாரா என்பதே கேள்வியாக நீதி மன்றம் முன் இன்று எழுந்து நிற்கிறது. முடிவு வரும் வரை யாருமே நித்தியானந்தாக்களை நாடாதிருப்பது ஆரோக்கியமானது.

திருடர் அதிகம் நகைகள் பத்திரம் நாய் கடிக்கும் கவனம் என்பது போல் (ஆ)சாமிகள் கவனம் என்பதை நினைவ10ட்ட வேண்டியதும் இன்று ஊடகத்தின் ஒரு கடமை தானே.

manithan.com

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகில் மனிதனை தவிர வேறேந்த உயிரினமும் கடவுள் என்பதை இயற்கைக்கு வெளியில் கண்டதும் இல்லை வணங்கியதும் இல்லை. மனிதன் தானே உருவாக்கி தானே தன் இஸ்டத்துக்கு விமர்சிக்கும் ஒரு பொழுதுபோக்கு வடிவமே அவனில் கடவுள் என்ற நிலை இருக்கிறது. இப்போ தானே கடவுளுக்குள் காமத்தையும் செருகிவிட்டு.. தானே கேள்வியும் கேட்டுக்கிறான்.

காக்கா குருவி எப்பவாவது கோவில் சிலுவை பிறை வைச்சு கும்பிட்டிருக்கா. கிடையாது. அதுக்கு உயிர் வாழ முடியல்லையா. இயற்கையை தவிர கடவுள் என்று காட்டப்படும் பிறவெல்லாம் மனிதனால் சிருஷ்டிக்கப்பட்ட கருத்துருவாக்கமே. அதற்குள் தனது காமத்தையும் அடக்கியதும் மனிதனே. இதை வேறு பகுத்து ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க வேணுமாக்கும். இந்த மனுசங்கட கொடுமை தாங்க முடியல்ல. :D:(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் குறுகிய வாழ்விலே ஆனந்தமாக வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.

தன்னுள்ளே ஆனந்தத்தை கண்டுகொண்டால் வாழ்வு ஆனந்தமாக இருக்க முடியும்.

கடவுள் என்று சொன்னாலென்ன கத்தரிக்காய் என்று சொன்னாலென்ன அதனில் ஒரு வித்தியசமுமே இல்லை.

ஆனந்தம்...... துன்பம் கொடுக்காத ஆனந்தம் தான் முக்கியம்.

மிகுதியெல்லாம் வெறும் வேஸ்ற்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.