Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

27/04/2009 அன்று முள்ளிவாய்க்கால் பதிவுகள்; கனரக ஆயுத பயன்பாட்டு நிறுத்தத்தினை அன்றை தினமே மீறிய மஹிந்த அரசு

Featured Replies

27/04/2009 அன்று முள்ளிவாய்க்கால் பதிவுகள்; கனரக ஆயுத பயன்பாட்டு நிறுத்தத்தினை அன்றை தினமே மீறிய மஹிந்த அரசு

தமிழீழ நிருபர்

வியாழக்கிழமை, ஏப்ரல் 29, 2010

child lost his leg

கடந்த இரவினை பசியோடும்பட்டிணியோடும், காயமடைந்தவர்களின் முனகலோடும் கொல்லப்பட்ட உறவுகளிற்காக அழும் அலறலோடும் களித்த மக்களில் பெரும்பாலானோர் தூங்கவில்லை. அதே வேளை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன போர் நிறுத்தத்தினை அல்லது தாக்குதல் நிறுத்தத்தினை கோரி நின்றன. கூடவே சிறிலங்கா அரசு கனரக ஆயுதங்கள் பாவிப்பதனை நிறுத்தவேண்டும் எனவும் நேற்று அறிவித்திருந்தன. இந்த நிலையில் மக்களும் இனி தாக்குதல் வேகம் குறைந்து விடும் என அப்பாவித்தனமாக நம்பினர். மேலதிக புகைப்படங்கள்.. http://www.flickr.com/photos/Eelanatham

ஆனால் நடந்தது என்ன?

இரவு முழுவதும் தூங்காமல் பொழுதினை கழித்த மக்கள் களைப்பினால் அதிகாலை அசதியில் இருந்தனர். அதிகாலை 3.45 மணியளவில் மின்னலுடன் கூடிய பெரும் இடிமுழக்கம் போல் இருந்தது. அவ்வளவுதான் மக்கள் கதறிக்கொண்டு ஓட்டம் எடுத்தனர், எங்கும் அழுகுரல், என்ன நடக்கின்றது? எங்கு இருந்து தாக்குதல் நடக்கின்றது? என்ன செய்வது என்று செய்வதறியாமல் பதைத்தனர் மக்கள்.

ஆம் சிங்கள அரசின் முப்படைகளும் ஏற்கனவே திட்டமிட்டபடி போலும் பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றினை மக்கள் கூடி இருந்த பாதுகாப்பு வலையம் மீது அதிகாலை 3.45 மணியளவில் பெரும் தாக்குதல்கள தொடுத்தனர்.

சிங்கள தரப்படையின் ஆட்டிலறி குண்டுகள் புதுக்குடி இருப்பு, பொக்கணை,முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் இருந்து பொழிந்தன. கூடவே குறுந்தூர, நீண்டதூர மோட்டார் எறி குண்டுகளும் சிங்கள படைகளின் தளங்களில் இருந்து பொதுமக்களின் தற்காலிக கூடாரங்களிற்கு ஏவப்பட்டன.

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் கள அலுவலகத்தில் இருந்து அதிகாலை 5 மணியளவில் லோரன்ஸ் கிறிஸ்டி தாக்குதல் அகோரத்தினை தெரியப்படுத்தி கொண்டு இருந்தார். முல்லைத்தீவில் நிறுத்தப்பட்டிருந்த சிங்கள கடற்படையின் கப்பலில் இருந்தும், சுற்றவர இருந்த சிங்களப்படையின் காவலரண்களில் இருந்தும் பீரங்கி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.

காலை 5 மணியளவில் கிபிர் குண்டு வீச்சு விமானம் வானை கிழித்துக்கொண்டு வட்டமிட்டு சிறுபிள்ளைகள் உடபட பொதுமக்களை விரட்டிய வண்ணமும் இடையிடையே குண்டுகளை வீசிய வண்ணமும் இருந்தன.

ஒட்டுமொத்தத்தில் இந்த தாக்குதலானது பாதுகாப்பு வலையத்தில் இருந்து மக்களை முற்றாக கொன்று காயப்படுத்தி,வெளியேற்றவே என மக்களும் அங்கிருந்தவர்களும் ஊகித்துக்கொண்டனர். காரணம் அந்தளவிற்கு தாக்குதல் வேகம் இருந்தது.

எவ்வளவு மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்? எவ்வளவு மக்கள் காயப்பட்டுள்ளனர்? மக்கள் எங்கு மறைந்துள்ளனர்? என்ன நடக்கின்றது என்ற விபரங்களை அறிந்து கொள்ளமுடியாது தாக்குதல் கோரமாக இருந்தது.

இதே வேளை தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் முள்ளீவாய்க்கால் களப்பணிமனை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியோருக்கு SOS அவசர நிலமைக்கான உதவி கோரி சற்றலைற் தொலைத்தொடர்பூடாக செய்தி அனுப்பிய வண்ணம் இருந்தனர். மேலும் தாக்குதல் இந்த வேகத்தில் தொடர்ந்தால் அடுத்த சில நாட்களில் ஆக குறைந்தது 10,000 மக்கள் கொல்லப்படுவார்கள்,இது தமது அனுபவத்தின் ஊடான கள நிலை கணிப்பு என எச்சரித்தும் இருந்தனர். ஆனால் சர்வதேசம் இந்த செய்தியினை அடுத்து தாமும் சில அறிக்கைகளை விட்டபடியேதான் இருந்தனர்.

நேற்றைய தினம் 39 தடவைகள் சிங்கள விமானப்படைகள் பொதுமக்கள் மீது குண்டுகளை வீசியது. இப்போது முள்ளிவaாய்க்காலில் இருந்த மக்கள் யார் இறந்தார்கள் யார் காயமடைந்தார்கள் என விசாரிப்பதோ அக்கறைப்படுவதோ கிடையாது. உயிருடன் இருந்தால் சந்திப்போம் என்ற நிலையிலேயே மக்கள் இருந்தனர்.

இறந்த தமது உடன்பிறப்புக்களை பார்க்கவோ அடக்கம் செய்யவோ நேரமும் இல்லை அதில் அக்கறைபடும் அளவிற்கு நிலமையும் இல்லை என்றே கூறமுடியும்.

27 ஆம் திகதி இன்று காலை 9 மணியில் இருந்து 10.20 வரை 14 தடவைகள் விமானங்கள் குண்டுகளை வீசின 50 இற்கு மேற்பட்ட குண்டுகள் முள்ளிவாய்க்காலில் வீசப்பட்டன.

ஆக கூடியது 1.5 சதுர மைல் பரப்பளவிற்குள் 140,000 அதிகமான மக்கள் இருந்தனர் இந்த பகுதி மீதே ஆயிரக்கணக்கான குண்டுகள் வீசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியின் உண்ணா விரதம்

இன்று கருணா நிதி என்கின்ற அரசியல் கவுண்டமணி, தமிழக முதல்வர் போரை நிறுத்தும்படி உண்ணா நோன்பை அண்ணா சிலை முன்பாக ஆரம்பித்தார். உலகத்திலேயே மிக குறைந்தளவு நேர உண்ணா நோன்பு என்ற பெயரோடு தனது சுய நலத்தை, பிணம் தின்னும் அரசியல் சாக்கடை தன்மையினை வெளிக்காட்டிவிட்டு தன் பரிவாரங்களுடன் வீடு திரும்பினார்.

சில நாட்களின் பின்னரே தெரிய வந்தது இந்த உண்ணா நோன்பு நாடகம் காங்கிரஸ், மஹிந்த அரசு, கருணா நிதி ஆகியோர் செய்த கூட்டு சதி அதாவது காங்கிரஸ், கலைஞர் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஏமாற்று வித்தை என்று.

புலிதேவனின் அறிக்கை

இன்று புலிதேவன் ஏ.எஃப்.பி க்கு வழங்கிய தொலைபேசி உரையாடலில் இலங்கை தாமாக அறிவித்த கனரக ஆயுத பாவனை நிறுத்தத்தினை மீறிவிட்டார்கள் என்றும், இன்று அறிவித்த உடனேயே இரண்டு தடவை விமான குண்டு வீச்சுக்கள் நடந்துள்ளன என கூறினார். கூடவே போர் நிறுத்தத்தினை தாம் அறிவித்தும் கூட அதனை இலங்கை அரசு மதிக்கவில்லை என்றும் ஆகவே தாம் எதிர்த்து நிற்பதனை தவிர வேறு வழி இல்லை என்றும் கூறினார். இந்த அறிக்கை மூலம் சோனியா, கருணா நிதி ஆகியோரின் தேர்தலிற்கான நரித்தன்மை பிரச்சாரமான கலைஞரின் உண்ணா விரத நாடகம் அம்பலப்படுத்தப்பட்டது.

கொழும்பில் ஐ. நா வின் விசேட பிரதி நிதி ஜோன் ஹோம்ஸ்

மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்த ஐக்கிய நாடுகளின் விசேட பிரதி நிதி ஜோன் ஹோம்ஸ் அவர்கள் இன்று கொழும்பில் பத்திரிகையாளரிடம் பேசும் போது அரசாங்கம் கனரக ஆயுத பாவனையினை நிறுத்தத்தினை உறுதியாக க்டைப்பிடிக்க வேண்டும் என கூறினார். கூடவே விடுதலைப்புலிகளையும் மக்களின் பாதுகாப்பு குறித்து அவர்களை வெளிசெல்ல அனுமதிக்குமாறும் கோரினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசனை

இதே வேளை இன்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசின் கனரக ஆயுத பாவனை நிறுத்தத்தினை வரவேற்றது. ஆனால் அது மீறப்பட்டதனை பற்றி எதுவும் கூறவில்லை இன்று நடந்த கனரக பாவனை மீறலினை ஒழி, ஒலி, புகைப்பட வடிவில் வெளியிட்டபோதும் அதுபற்றி ஐரோப்பிய ஒன்றியம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபையின் தயவுடன் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும் திட்டத்தினை முன் மொழிந்தது. ஆனால் அது வெறும் வார்த்தை வடிவிலேயே இருந்தது.

இன்றைய புனர்வாழ்வுக்கழகத்தின் நிலவர அறிக்கை முள்ளீவாய்க்காலில் இருந்து லோரன்ஸ் கிறிஸ்டியால் எழுதப்பட்டது.

18.30 hrs

27 April 2009

Mullivaikal, Mullaitivu

ALL OUT ATTACK ON ‘SAFE ZONE’ - HEAVY WEAPON USAGE CONTINUES DESPITE

At 3:45 am, 27 April 2009 the Sri Lanka Armed Forces commenced their attack on the so called

‘safe zone’ with heavy land based artillery shelling followed by ariel bombardment and shelling

from off-shore ships.

The SL Armed Forces continue to shell and bomb the civilians in the so-called ‘safe zone’ / ‘no

fire zone’ in contradiction of statements to the international media by the Government of Sri

Lanka on 27 April 2009 (today) that they would no longer use ariel bombardment or heavy

artillery.

The fact of the matter is that government spokespersons have been denying that they were

using these weapons for the past one month. How is it that they are stopping the usage of

weapons that they had previously stated there were not using anyway?

So far today there are reports of 500 civilian casualties with approximately 100 of those having

died or are dying due to a lack of treatment. The true numbers are likely to be higher, but due

to the continuous shelling from the direction of Puthukudiyiruppu, Ianaipalai and Oddusuddan

and aerial bombardment by the K-FIR jets, which re-started at 15.00 - 16.00, on two of the

sorties “delay bombs” were dropped in the Rattai Vaikal area, it is difficult for TRO volunteers

and medical staff to collect the injured and dying.

The shells are still raining down on us as these words are being written in a bunker in the so

called ‘safe zone’. The government is keeping the eyes of the world off of the genocide they are

committing here. Will it be too late for the Tamil civilians when the world finally awakes to the

atrocity that they allowed the Government of Sri Lanka to commit in their “war on terror” while

they international community willfully looked the other way. Is this President Obama and

Secretary of State Clinton’s Rwanda or Srebrenica?

We, the civilians in the ‘safe zone, implore the international community and the Tamil Diaspora

to push the government of Sri Lanka to enter into a cease fire. The government has silenced

our voice, we have no voice, you must be our voice.

Laurence Christy

Head of Field Office

‘Safe zone’ / ‘no fire zone’

Mullivaikal, Mullaitivu

http://www.eelanatham.net/story/27042009-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.