Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த தமிழீழ அரசு – விஸ்வநாதன் உருத்திரகுமாரன்

குருபரன் ‐ தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தேக்கத்தை ஒரு பின்னடைவை இன்னும் சொல்லப்போனால் ஒரு தோல்வியைச் சந்தித்திருக்கும் ஒரு நிலையில் நாடுகடந்த அரசின் முக்கியத்துவம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதன் சாத்தியப்பாடு எதாக இருக்கப்போகிறது?

ருத்திரகுமாரன் ‐ இந்த நாடுகடந்த அரசாங்கத்தின் எங்கட அரசியல் முன்னெடுப்பை எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில் இருந்து பார்க்க வேண்டும் என நான் கருதுகின்றேன். 1976 ஆம் ஆண்டு வட்டுக் கோட்டைத் தீர்மானமும் அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றியும் அங்குள்ள தமிழினம் தங்களுடைய அரசின் சுயநிர்ணய உரிமைக்காண முழுமையான செயலுருவம் கொடுப்பதற்காகவும் தமது இறைமையை பிரயோகிப்பதற்கு கொடுக்கப்பட்ட ஒரு அரசியல் ஆணையாக கருதப்பட்டது. அப்ப அன்றைய அரசியல் தலமை அந்த அரசியல் ஆணையை சாத்வீகமான முறையில் நிறைவேற்றுவதற்கு முற்பட்டார்கள். ஆனால் அங்கு அந்த அரசியல் வெளி Political space மட்டுப்படுத்தப்பட்டு இருந்த காரணத்தினால் குறிப்பாக பேரினவாதத்தினாலும் இராணுவ மிலேட்சத்தனங்களினாலும் பின்னர் 6ஆவது அம்சச் சட்டத்தினாலும் அங்கு தமிழ் மக்களுக்கான அரசியல் வெளி மட்டுப்படுத்தப்பட்டு இருந்த காரணத்தினாலும் அங்கு தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையோ அல்லது தங்களுடைய இறைமையையோ பிரயோகிக்கக் கூடிய சூழல் அங்கு ஏற்பட்டு இருக்கவில்லை. அதன்காரணமாகத்தான் அதே நேரத்தில சர்வதேச அளவில் விடுதலைப் போராட்டங்களின் விடுதலைகோரும் இனங்களுடைய விடுதலைக் கோரிக்கையை ஒரு சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலோ சர்வதேச உறவுகளின் அடிப்படையிலோ தீர்த்து வைக்கக்கூடிய சர்வதேசப் பொறிமுறையும் அற்ற காரணத்தினால் தமிழ் மக்களின் சாத்வீகப் போராட்டம் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழ் ஆயதப் போராட்டமாகப் பரிணமித்தது. அந்த ஆயுதப் போராட்டமும் அந்த நிகழ்வின் நிகழ்வுபூர்வமான அரசும் அரசியல் வெளியை ஏற்படுத்தித் தந்தது. Political space ஐ ஏற்படுத்தித் தந்தது. அப்ப அந்த அரசியல் வெளியில தமிழ் மக்கள் தங்களது அரசியல் அபிலாசைகளை முழுமையாகப் பிரதிபலிப்பதற்கும் தங்களது சுயநிர்ணய உரிமைக்கு முழுமையான செயல்வடிவம் கொடுப்பதற்கும் தங்களுடைய இறைமையைப் பிரயோகிப்பதற்குமான அரசியல் வெளி ஏற்பட்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் எங்களுக்குத் தெரியும் பல நாடுகள் பல்வேறு காரணங்களுக்காக சிங்களப் பேரினவாதத்திற்கு துணைபோய் அந்த நிகழ்வுபூர்வமான அரசையும் அழித்து இராணுவ பலத்தையும் பலவீனமாக்கியதனால் அங்குள்ள அரசியல் வெளி அற்றுப் போய்விட்டது.

அப்ப தாயகத்தில் அரசியல் வெளி அற்றுப் போன காரணத்தினால் அந்த அரசியல் வெளியை புலத்திலதான் நாங்கள் நிறுவுவது காலத்தின் கட்டாயம். இது எங்களுடைய முக்கியமான நேரத்தில் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான கட்டம். ஆக நாங்கள் இந்த அரசியல் வெளியை புலத்திலதான் நிறுவவேண்டும். அதுதான் எங்களுடைய நாடுகடந்த அரசாங்கத்தின் முக்கியத்துவம் அதுதான் ஏனென்றால் அந்த அரசியல் வெளி தாயகத்தில இல்லை. இன்றைக்கு நாங்கள் தாயகத்தில ஈழத்தைப் பற்றி சும்மா கதைப்பதற்கும் ஒரு பேச்சுச் சுதந்திரம் கூட அற்றநிலையில்தான் தாயகத்தில அந்த மக்கள் இருக்கின்றார்கள்.

எனவே அரசியல் வெளியைப் புலத்தில நாங்கள் நிறுவவேண்டியதன் காரணத்தினால்தான் நாடுகடந்த அரசாங்கத்தை நிறுவும் அரசியல் முயற்சியை நாங்கள் எடுத்திருக்கிறோம். அடுத்ததாக இது எவ்வளவிற்கு சாத்தியப்பாடு உடையதாக ஒரு வலு மையமாக ஒரு Power சென்றராக வருகின்றதென்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறது. அப்ப ஆரம்பத்தில கடந்த வருடம் யூன்மாதம் 16ஆம் திகதி நாங்கள் இந்தக் கருத்துருவாக்கத்தை மக்கள் மத்தியில் முன்வைத்தோம். அதைத் தொடர்ந்து நாங்கள் இந்த working Progress எனக் கூறலாம் அதனைத் தொடர்ந்து தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு உடனடியாக நாங்கள் மக்களுடன் கருத்துப் பரிமாறி இன்று, அடுத்தவாரம் நாங்கள் தேர்தலையும் சந்திப்பதற்கு அதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் செய்திருக்கின்றோம். அப்ப இந்த மக்களுடைய கருத்துக்களையும் உள்வாங்கி மக்களுடைய ஆதரவுடன் இதனைச் செய்யும்போது இது ஒரு வலுமையமாக ஒரு power center ஆக வரும்பொழுது எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை நாங்கள் எடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கும். இதுதான் ஒரு யதார்த்தபூர்வமான நிலை. இதனை விட எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை கொண்டு செல்ல எங்களிடம் வேறு மார்க்கமில்லை என்றே கருதுகிறேன். இவற்றை எல்லாம் பார்க்கும் போது இது ஒரு முக்கியமானதொரு அரசியல் முன்னெடுப்பு குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் இதுவும் மக்களுடைய ஆதரவுடனும் இது ஒரு வலுமையமாக வரும்பொழுது எங்களுடை விடுதலைப் போராட்ட சூழலை சாத்தியமாக்கலாம் என்றே கருதுகிறேன்.

குருபரன் ‐ ஆம் ருத்ரா நீங்கள் கூறியிருந்தீர்கள் தாயகத்திலே அரசியல் வெளி இல்லாது போய்விட்டது அங்கு பேச்சளவிலே கூட தமிழீழம் என்று பேசுவதற்கு இடமில்லாமல் போய்விட்டது. எனவே புலத்தில்தான் இதனை சாத்தியப்படுத்த முடியும் அதனைவிட வேறு மார்க்கங்கள் இல்லை எனக் கூறியிருந்தீர்கள். உண்மையில் விடுதலைப் புலிகள் ஏக பிரதிநிதிகளாக இருந்த காலம் போய் ஆரம்பத்தில் தமிழ் இயக்கங்கள் எவ்வாறு பிளவுண்டு போயிருந்தனவோ அதேபோல் விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் இயங்கு சக்திகளும் பல நூறு பிரிவுகளாக பிளவுண்டும் சிதைவுற்றும் இருக்கும் இன்றைய நிலையில் நாடு கடந்த அரசு எவ்வாறு சாத்தியப்படப் போகிறது?

ருத்திரகுமாரன் :‐ நடந்து முடிந்த பேரழிவு எமது சமூகத்தில் ஒரு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இது தவிர்க்க முடியாத ஒன்று. பெரும் அழிவு ஒன்று ஏற்படும் பொழுது தொடர்ந்து இப்படியான அதிர்வுகள் ஏற்படுவது வழமை. எனவே இதன் காரணமாக மாறுபட்ட கருத்துக்களும் நம்பிக்கையின்மையும் சமூகத்தில் வருவது இயல்பானது. அதைத்தான் நாங்கள் தற்பொழுது சந்திக்கின்றது. இதில் ஒன்றை நான் கூறுகின்றேன். என்னதான் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் குறிக்கோள் ஒன்றாக இருக்கின்றது என்பதைத்தான் நான் பார்க்கிறன். குறிக்கோள் ஒன்றாக இருக்கின்ற போது approach தான் மாறுபட்டதாக இருக்கின்றது. அதனை ஒரு விதத்தில் நல்லதாக பார்க்கலாம். அதனை ஒரு pluralism ஆக அதாவது பன்மைத்தன்மையாக பார்க்கலாம்.

ஒரு ஜனநாயக முன்னெடுப்புக்கு அந்த பன்மைத்தன்மை ஒரு ஆரோக்கியமானதாக healthy யாக இருக்ககும் என்றுதான் பார்க்கிறம். அப்ப இதில நாடுகடந்த அரசு நாம் இதில் என்னத்தைப் பார்க்கிறம் என்றால் மக்களுடைய கருத்துப் பரிமாறல்களை தொடர்ச்சியாகப் பரிமாற வேண்டும். கடந்த ஒக்டோபர் மாதம் என்று நினைக்கிறேன். நாங்கள் தொடர்ச்சியாக மக்களுடன்; கருத்துப்பரிமாறல்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறம். ஆலோசனைக் குழுவைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட ரீதியிலும் ஆலோசனைக் குழு சார்பாகவும் எனக்குத் தெரிந்த வரையில் ஒவ்வொரு சனி ஞாயிறுகளிலும் 5, 6 கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அப்ப நாங்கள் தொடர்ச்சியாக ஒரு கருத்துப் பரிமாற்றத்தை நடத்த வேண்டும். தேர்தலுக்குப் பிறகு கூட நாங்கள் ஒவ்வொரு மாதமும் ரவுன்கோல் மீற்றிங் என்று மேற்கத்தைய நாடுகளில் வைப்பார்கள். அது மாதிரி கருத்துப் பரிமாற்றல்களை நாங்கள் தொடர்ச்சியாக மக்களிடையே செய்து மக்களுடைய கருத்துக்களை உள்வாங்கி மக்களுக்கு இந்த நாடு கடந்த அரசு தொடர்பில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி அதன் மூலமாக நாங்கள் கொண்டு போகலாம் என்று பார்கிறம். தற்பொழுது இருக்கின்ற இந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் இந்த மக்களின் கருத்துப் பரிமாறல்கள் மூலம் அந்த வேறுபாடுகளை நீக்கி நாங்கள் ஒன்றாக ஒரு எழுச்சியாக சமுதாயமாக நாடு கடந்த அரசின் மூலமாக இதனை விடுதலைப் பயணத்தை தொடர்ந்து செய்யலாம் என்றுதான் நாங்கள் கருதுகின்றோம்.

குருபரன் ‐ ஆம் ருத்ரா நீங்கள் கூறிய இந்த செயற்பாட்டை ஆரோக்கியமான செயற்பாடாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தீர்கள். அதாவது இந்த மே 18இன் முன்னரான சூழ்நிலையிலேயே நீங்கள் சட்ட ஆலோசகர் பேச்சுவார்த்தையில் கூட (நான் கூட அந்த எல்லாப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொண்டேன்.) நீங்கள் வந்திருந்தீர்கள். விடுதலைப்புலிகளுடைய சமாதானப் பேச்சுவார்தகளில் எல்லாவற்றிலுமே. ஆம் ஏகத்துவம் என்ற நிலையிலிருந்து பன்மைத்துவம் pluralism என்ற நிலை ஆரோக்கியமானது என்ற ஒரு நிலைப்பாட்டை நீங்கள் கூறியிருக்கின்றீர்கள். இந்த நிலைப்பாடு மே 18 இன் பின்பு அது பன்மைத்துவம் pluralism என்ற நிலைப்பாட்டுக்கு வருகின்ற பொழுது அது ஆரோக்கியம் என்று கூறுகின்ற பொழுது அந்த முன்பிருந்த சூழலையும் இப்பொழுதிருக்கின்ற பன்மைத்துவத்துவத்தையும் நீங்கள் எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கின்றீர்கள்.

ருத்திரகுமாரன் :‐ முன்பு இருந்தததை நான் கூட என்ன மாதிரி பார்க்கிறன் என்றால் Authentic representative ‐ ஒரு உண்மையான பிரதிநிதிகள். அப்ப சர்வதேச சட்டத்தை எடுத்தால் என்ன சர்வதேச உறவுகளை எடுத்தாலும் இங்கு எடுத்த பொழுது ஐக்கிய நாடுகள் சபையிலே வந்து ஏஎன்சி பேச்சுவார்த்தையை எடுத்தால் என்ன பிஎலஓவின் பேச்சுவார்த்தைகளை எடுத்தால் என்ன ஐக்கிய நாடுகள் சபையே சில தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றது. Authentic representative தான் கதைக்க வேண்டும் என்று. மே 18க்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த Authentic representative ஆக இருந்தார்கள். மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருந்தார்கள். அப்ப அந்த உண்மையான பிரதிநிதிகள் அப்படி ஒரு அமைப்பு ,நிகழ்வு பூர்வமான அமைப்பு இருப்பது சர்வதேச சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. எனவே அன்றை சூழ்நிலையில் அந்த ராணுவ போராட்டத்தில் இருந்த சூழ்நிலையில் அப்படி இருந்தால்தான் நாங்கள் எங்கள் அடுத்தகட்ட ஒரு பேச்சுவார்த்தையை , அரசியல்தீர்வைக் காணக் கூடியதாக இருக்கும். ஆனால் தற்பொழுது நாங்கள் ஜனநாயக ரீதியில் போராட்ட வடிவம் மாறியிருக்கின்றது. தலைவர் சுதுமலைக்கூட்டத்தல் கூறியது போன்று போராட்ட வடிவங்கள் மாறுபடலாம். தற்பொழுது போராட்ட வடிவம் ஜனநாயக வடிவில் மாறியிருக்கின்றது. ஜனநாயக வடிவில் இந்த போராட்ட வடிவத்தை மாற்றுகின்ற பொழுது இந்த பன்மைத்துவமாக கொண்டு போவதுதான் ஆராக்கியமானதாக இருக்கும் என்றுதான் நாம் கருதுகின்றோம்.

குருபரன் ‐ ஆம் அந்த பன்மைத்துவ சூழலிலே இருக்கின்ற பொழுது உலகிலே எங்கும் நடைமுறையில் இல்லாத ஒரு முன்மாதிரி , ஒரு முழுமையான ஜனநாயகப் புரட்சியே நடைபெற்றிராத ஒரு ஆசிய சமூகமான எமக்கு, ஏனென்றால் எம்முடைய ஆசிய சமூகத்திலே முன்மாதிரியான முழுமையான ஜனநாயக புரட்சி ஆசியாவிலோ , தென்னாசியாவிலோ இதுவரைக்கும் நடந்ததாக இல்லை. இவ்வாறானதொரு சூழலிலே இந்த நாடு கடந்த அரசு என்ற ஒரு கோட்பாடு அல்லது ஒரு நடைமுறை என்பது இவ்வளவு தூரத்திற்கு இந்த ஆசிய அல்லது தென்னாசிய சமூகத்திலே அல்லது தென்னாசியாவிலே அந்த பிராந்திய அரசியலிலே சர்வதேச அரசியலிலே சிக்கித் தவிக்கின்ற இந்த இலங்கையிலே , இலங்கையை மையமாக வைத்துக்கொண்டு இந்த நாடு கடந்த அரசு எவ்வாறு சாத்தியப்படும் என நினைக்கிறீர்கள்?

ருத்திரகுமாரன் :‐ இங்கு முதலாவதாக ஜனநாயகம் என்பது கிழக்கு, எங்களுடைய ஆசிய சமூகத்தில் இல்லை என்ற கருத்துடன் எனக்கு அவ்வளவிற்கு உடன்பாடு இல்லை. அமெத்தியாசென் கூறியிருக்கின்றார். அவருடைய கட்டுரையில் எமது ஆசிய சமூகத்தில் ஆரம்ப காலத்திலிருந்து ஜனநாயக அம்சம் ஆசிய சமூகத்திற்கு இருந்திருக்கின்றது. பழைய ஜப்பானியர்களை அதற்குக் காட்டியிருக்கின்றார். எனவே தற்பொழுது நாங்கள் செய்வது என்னவென்றால் இங்கு நாங்கள் self organised democracy ஐ நாங்கள் செய்கின்றோம். இதில வந்து நாங்களே இந்த ஜனநாயகத்தை உருவாக்கிக் கொண்டு போகின்றோம். நாங்கள் உருவாக்கிக் கொண்டு போகும் போது leberal democracy அதாவது தாராண்மைவாத மக்களாட்சியை அகலித்தும் அதனை ஆழமாக்கியும் கொண்டு போகின்றோம். உதாரணத்திற்கு இந்த அரசென்ற வட்டுக்கோட்டை வாக்கெடுப்புச் சரி, இன்றைக்கு நாங்கள் நடத்துகின்ற இந்த தேர்தல் சரி இன்றைக்கு நீங்கள் பார்த்திருப்பீர்கள் பல நாடுகளில் மக்கள் ஆர்வமாக இந்தத் தேர்தலில் ஜனநாயகததில் பங்களிக்கின்றார்கள். எனவே இதன் மூலம் நாங்கள் அந்த leberal democracy ஐ கூட நாங்கள் அகலித்தும் ஆழமாக்கியும் கொண்டு போகின்றம்.

இதில வந்து மக்களுடைய பங்களிப்பு மிகவும் இருக்கின்றது. எனவே இப்படி இதனைக் கொண்டு போகும் பொழுது எம்மைப் பொறுத்தவரை இது எமக்கு அரசியல் ராஜதந்திர உறவுகளையும் சர்வதேச அளவில் அதனை ஏற்படுத்துவதற்கும் உதவுமெனக் கருதுகின்றோம். கடந்த காலத்தில் சர்வதேச சமூகத்தால் கூறப்பட்ட ஒரு காரணம் என்று கூட மதிப்பளித்துக் கூற மாட்டேன், ஒரு சாட்டெனத்தான கூறுவேன். அதாவது இந்தத் தமிழீழக் கோரிக்கையை தேர்தல் மூலம் வந்தவர்கள் முன்வைக்கவில்லை என. ஆனால் அந்த நேரத்தில் நாங்கள் அந்தக் கருத்தை ராஜதந்திரிகளுக்கும் கூறியிருக்கின்றேன், இப்போதும் எங்களுடைய கருத்து வந்து உலக நீதிமன்றம் மேற்கு சகாரா வழக்கில் கூட கூறியது. மேற்கு சகாரா வழக்கில் உலக நீதிமன்றம் கூறியது ஒரு தியாகங்களும் அபாயங்களும் ஒரு விடுதலைப் போராட்டம் உண்மையானதும் உத்தமமானதும் என்று.

அப்படியொரு விடுதலைப் போராட்டம் பெற்ற அந்த ஒரு தீர்மானத்தை சர்வதேச சமுதாயம் தட்டிக் கழித்து விட்டது. அவர்கள் கூறிய அந்த ஜனநாயகம் என்ற சாட்டு. இன்றைக்கு நாங்கள் அந்த மக்கள் ஆட்சியில் ஜனநாயகம் மூலமாக இந்த மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் தமிழீழம்தான் எங்களுடைய அரசியல் தீர்ப்பு என்று கூறும் பொழுது இந்த சர்வதேச சமுதாயம் அந்தச் சாட்டைக் கூற முடியாது. அவர்கள் வேறு பல காரணங்களைக் கூறக் கூடும். ஆனால் ஜனநாயகம் என்ற அந்த சாட்டைக் கொண்டு எங்கள் போராட்டத்தை அவர்கள் மழுங்கடிக்கேலாது. எனவே அந்த விதத்தில் பார்க்கும் பொழுது இது எங்களது போரட்டத்தை தற்போதைய சூழ்நிலையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகத்தான் நான் பார்க்கின்றன். அதிலே கனக்க values உம் இதற்குள் வருகின்றது. அது cosmopolitan, பொது நோக்கங்கள் global citizenship அந்த பல values ஐ நாம் இதற்குள் கொண்டு போகும் பொழுது இது எங்களது இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகின்றது.

அதைவிட எங்களது இந்த முயற்சி இப்பொழுது Nation state என்ற முக்கியத்தையும் குறைக்குது. இப்ப நாங்கள் Trans national ஆகப் போகின்றோம். நாட்டினுடைய எல்லைகளைக் கடந்து கொண்டு போகின்றோம். இப்படிக் கொண்டு போகும் போது அந்த Nation state என்ற எங்களது விடுதலைக் கோரி;க்கைக்கு தந்த எதிர்ப்பை ஓரளவுக்கு எங்களால மழுங்கடிக்கக் கூடியதாகவிருக்கும் என்றுதான் நாங்கள் கருதுகின்றோம்.

குருபரன் ‐ ஓ நீங்கள்; எல்லைகளைக் கடந்து இந்த Nation state அரசைக் கொண்டு போவது என்று கூறினீர்கள். அவ்வாறாக இருந்தால் தேசங்களின் ஆள்புல எல்லைகளைக் கடந்து பொதுத் தேசிய அடையாளத்தினைக் கொண்டிருக்கும் மக்கள் ஜனநாயக ரீதியாக உருவாக்கும் அரசு நாடுகடந்த அரசு என்றும் உங்களுடைய விளக்கங்களில் கூறியிருக்கின்றீர்கள். அவ்வாறென்றால் நீங்கள் குறிப்பிடுகின்ற அந்த பொதுத் தேசிய அடையாளம் என்ன?இந்த நாடு கடந்த அரசிற்கான பொதுத் தேசிய அடையாளம் என்று நீங்கள் எதனை வரையறுக்கின்றீர்கள்.

ருத்திரகுமாரன் :‐ சுருக்கமாகச் சொன்னால் தமிழ்த் தேசத்துடன் தன்னை அடையாளப் படுத்துவதைத்தான் பொதுத் தேசிய அடையாளமாக நாங்கள் கருதுகின்றோம். ஒரு நபர் தமிழ்த் தேசியத்துடன் தமிழ்த் தேசிய உணர்வுடன் தன்னை அடையாளப்படுத்துவது , தன்னை இணைத்துக் கொள்வதுதான் இந்த பொதுத் தேசிய அடையாளமாக நாங்கள் பார்க்கின்றம். அடுத்தது ஒரு ஆளுக்கு தற்போதைய இந்த உலக மயமாக்கலின் கருத்தினை எடுக்கும் பொழுது ஒருவருக்கு பன்முகப்பட்ட அடையாளங்கள் இருக்கும். தமிழ் அடையாளம் இருக்கும், அவர் அந்த நாட்டில் வாழ்கின்ற அந்த நாட்டு அடையாளம் இருக்கும். ஆனால் நாங்கள் எல்லாருக்கும் தமிழ் என்று சொல்லும் போது சில இடங்களில் மொழி அடையாளமாக இருக்கலாம். எல்லாவற்றையும் கடந்து நாங்கள் என்னத்தைப் பார்க்கிறோம் என்றால் இந்தப் புலம்பெயர்ந்த நாடுகளில் இருப்பவர்கள் தமிழ்த் தேசத்துடன் தம்மை இணைத்துக்கொள்வதனைத்தான் நாங்கள் தமிழ் அடையாளமாகக் கருதுகிறோம்.

குருபரன் ‐ ஆம் தமிழ்த் தேசத்துடன் தம்மை இணைத்துக்கொள்வது அதாவது இன்று இருக்கின்ற தலைமுறையினருக்கு தமிழ்த் தேசத்துடன் தம்மை இணைத்துக்கொள்வது என்பது ஓரளவிற்கு சாத்தியப்படுகின்றது அல்லது சாத்தியப்படலாம். ஆனாலும் இந்தத் தலைமுறையினருக்கு அடுத்து வருகின்ற தலைமுறையினர் எங்களுக்கு அடுத்தடுத்து வருகின்ற தலைமுறையினர் அவர்கள் பேசுகின்ற மொழி அந்தந்தப் பிரதேச மொழிகளாக இருக்கின்றன. அந்தந்த நாடுகளின் மொழிகளாக இருக்கின்றன. அவர்களுடைய கலாசாரம் அந்தந்தப் பிரதேசத்தினுடைய அந்தந்த நாடுகளது கலாசாரமாக இருக்கின்றன. ஆக அவர்கள் தங்களை தாங்கள் பிறந்தது இலங்கையில் அல்லது தமிழ்ப் பகுதிகளில் அல்லது தாயகப்பகுதிகளின் தமிழ்ப் பெயர்களைக் கொண்டிருந்தாலும் அடுத்துவருகின்ற தலைமுறையினர் யாவரும் தமது பொதுத் தேசிய அடையாளத்தை எவ்வாறு தேசத்துடன் இணைக்கப் போகிறார்கள்? இந்தத் தலைமுறையினருக்கு அடுத்து வருகின்ற தலைமுறையினர்கள் எல்லோருமே இப்பொழுதே அந்த நாடுகளுடன் இருக்கிற தங்களுடைய உறவுகளுடன் பேசுவதோ அல்லது உறவுகொண்டாடுவதோ அங்கிருக்கிற பிரச்சனைகளை அறிவதோ அல்லது இங்கிருக்கிற சிலர் கூட இந்த நாடுகளிலே பிறந்திருப்பவர்கள் ஆயுதப் போராட்டம் அல்லது ரத்தக்களரியை ஏற்படுத்துகின்ற விடயங்கள் என்று கூறினார்கள். அவர்கள் கூறுகின்றார்கள் இது terrorism என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்திலேயே கூறுகிறார்கள் அதாவது தாங்கள் படிக்கின்ற மொழியிலேயே. இது வன்முறை என்று கூறுகின்றார்கள். இதையெல்லாம் நீங்கள் என்னென்று அங்கீகரிக்கின்றீர்கள் என்று கூட சிறுவர்கள் கேட்கிறார்கள்.அவ்வாறு தங்களுடைய அடையாளங்கள் மாறிக் கொண்டு போகின்ற பொழுது நீங்கள் கூறுகின்ற தேசத்தோடு இணைகின்ற அடையாளம் என்பது சாத்தியப்படும் என நினைக்கிறீர்களா?

ருத்திரகுமாரன் :‐ நிச்சயமாக.. கடந்த வருடம் எடுத்துப் பார்த்தீர்களானால் கடந்த வருடம் இனப்படுகொலை நடந்த சமயம் பெரும்பாலான இளம் சமுதாயத்தினர்தான் நீங்கள் அந்தப் படங்களை எடுத்துப் பார்த்தால் கூட எங்களிடம் உள்ள protest mark குகளில் கூட முன்னுக்கு நிற்பவர்கள். அவர்கள் அங்கு மட்டும் நிற்கவில்லை. தங்கள் நாடுகளில் அந்த நாட்டு அரசியல்வாதிகளுடன் அவர்கள்தான் தொடர்பு கொண்டு அந்தப் பிரச்சனை தொடர்பாக இனப்படுகொலை நிற்க வேண்டும் என கூடியதாக பங்கு கொண்டவர்கள் இளம் சமுதாயத்தினர் என்றுதான் நான் கருதுகின்றேன். அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் பேள் என்ற அமைப்பு ஓரளவு இளம் சமுதாயத்தைக் கொண்ட அமைப்பு. அந்த அமைப்புத்தான் கடந்த வருடம் இந்த இனப்படுகொலை நடந்த பொழுது காங்கிரஸ் என்றாலும் சரி ராஜாங்கத் திணைக்களம் என்றாலும் சரி அவர்கள்தான் கூடியளவு அங்குள்ள உத்தியோகத்தர்களை ராஜதந்திரிகளை சந்தித்து இந்தப் போரை, இனப்படுகொலை நிறுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களுடைய முயற்சியைக் கண்டு தலைவரே 2008ஆம் ஆண்டு மாவீரர் உரையில் புலத்தில் வாழுகின்ற இளம் சமுதாயத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் என்றால் அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் காட்டுகி;ன்ற ஆர்வம். அப்ப நான் அதில் காட்டுகின்ற பொது அடையாளமாக என்னத்தைப் பார்க்கின்றேன் என்றால் நான் முதல் கூறியதன் ஒரு தொடர்சியாகத்தான் பார்க்கின்றேன். ஒன்று தமிழ்த்தேசத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது, அடுத்தது ஒரு உணர்வுத் தோழமை ஒரு tamil political solidarity ஒரு தமிழ் அரசியல் உணர்வுத் தோழமை ஒன்று 2ம் சமுதாயத்திலும் 3ம் சமுதாயத்திலும் இருக்கின்றது. அப்ப மொழி இல்லாமல் போனாலும் தமிழ்த் தேசத்துடன் தம்மை இணைத்துக் கொள்வது அடுத்து அரசியல் உணர்வுத் தோழமை மூலம் எங்கள் வருங்கால சந்ததியினர் தம்மை இணைத்துக் கொள்வார்கள் என்றுதான் நான் கருதுகின்றேன்.

குருபரன் ‐ அவ்வாறு tamil political solidarityஎன்று கூறுகின்ற தமிழ்; தோழமை அடையாளம் அல்லது நீங்கள் கூறிய அடையாளங்களை இந்த ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்த மாதிரியானது என்று கருதுவது தவறானது என்று நினைக்கிறீர்களா?

ருத்திரகுமாரன் :‐ ஓ. அது அடிப்படையில் தவறாக இருக்கும் என்றுதான் நான் பார்க்கின்றேன். ஐரோப்பிய ஒன்றியம் கூடுதலாக ஒரு Nation states . Nation states என்று ஒரு கூட்டமைப்பு. அதில Europian parliament என்று இருந்தாலும் அதிகாரம் உள்ள அமைப்பு Nation states . ஒவ்வொரு நாடுகளும் அதை அரசுகளின் ஒன்றியம். ஆனால் நாங்கள் செய்வது அதல்ல. Nation states என்று இல்லை. அங்கு transnationalஆக கொண்டு போறம். ஐரோப்பிய ஒன்றியத்திலும் பார்க்க நாங்கள் கொண்டு போகின்ற இந்த அரசியல் முன்னெடுப்பு கூடியதொரு ஜனநாயக மயமானது என்றுதான் கருதுகின்றேன்.

ஏனென்றால் இங்கு வந்து இப்ப ஐரோப்பிய யூனியனில் முக்கியமான முடிவுகளை எடுப்பது அந்தந்த நாடுகளால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள். ஆனால் இங்கு நாங்கள் transnational இல் முக்கியமான முடிவு எடுக்கப் போவது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்றபடியால் ஜனநாயகத்து அளவுகோல்களை வைத்துப் பார்க்கும் போது எங்களுடைய நாடு கடந்த அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலும் பார்க்க ஒரு கூடியதொரு ஜனநாயக அமைப்பென்றுதான் நான் கருதுகின்றேன்.

குருபரன் ‐ ஆம் நீங்கள் கூறியதில் இருந்து மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளுடாக அந்தப் பிரதிநிதிகளுடாக எடுக்கப்படுகின்ற முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த நாடு கடந்த அரசு இயங்கப் போவதாக. உங்களுடைய ஆரம்பம் முதல் இன்று வரை நீங்கள் தமிழ்த் தேசியத்தையும் அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தமிழீத் தேசியத்தின் தலைவராக இன்று வரைக்கும் ஏற்றுக் கொள்கிறீர்கள். அவருடைய கருத்துக்களுக்கு மானசீகமாக அதனை உள்வாங்கிக் கொண்டிருந்தருக்கிறீர்கள். நீங்கள் நாடு கடந்த தமிழீழ அரசினுடைய இணைப்பாளராகவும் அதனை உருவாக்குபவர்களிலே founder எனப்படுகின்ற ஆரம்ப கர்த்தாவாகவும் இருக்கின்றீர்கள். எனவே நீங்கள் இவ்வாறு பிரதிநிதிகள் ஊடாக உருவாக்கப்படுகின்ற நாடு கடந்த அரசினுடைய உயர்பீடத்தின் ஆளுமை கட்டுப்பாடு என்பன மக்களிடம் இருக்கப் போகின்றதா அல்லது அல்லது விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு என்றதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கப் போகின்றதா ? அதாவது கூறுவார்கள் remote control தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுடைய கட்டு;ப்பாடு விடுதலைப் புலிகளிடம் இருந்ததது என்று அரசாங்கமும் ஏனையோரும் கூறுவார்கள். remote control அவர்களிடம் இருந்தது என்று. எனவே இந்த நாடு கடந்த தமிழீழ அரசினுடைய கட்டுப்பாடு எங்கிருக்கப் போகின்றது.

ருத்திரகுமாரன் :‐ இது நிச்சயமாக மக்களுடைய கரங்களில்தான் இருக்கப் போகின்றது. அதேநேரம் இன்னொரு கருத்தையும் வலியுறுத்த விரும்புகின்றேன். அடிக்கடி ராஜதந்திரிகளையும் சந்திக்கும் பொழுது இந்தக் கருத்தைக் கூறுவேன். மக்கள் வேறு புலிகள் வேறு அல்ல. மக்கள்தான் புலிகள். புலிகள்தான் மக்கள். புலிகள் மக்களிடம் இருந்துதான் உருவான ஒரு அமைப்பே ஒழிய புலிகள் வேறு ஒரு உலகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல. முதலாவது மக்களையும் புலிகளையும் வேறுபாட்டை நான் காணவில்லை. இதிலிருந்து எங்கள் ஆலோசனைக்குழுவின் அறிக்கையில் நாங்கள் கூறியபடி இதில் மக்களிடமே கொடுக்கப்பட்டிருக்கின்றது. மக்கள்தான் பிரதிநிதிகளை தெரிவு செய்தார்கள். தெரிவு செய்த பிறகு கூட அந்தப் பிரதிநிதிகள் மக்களின் அபிலாசைகளுக்கு முரணாக நடந்தாலோ அல்லது தமிழீழக் கோரிக்கைக்கு முரணாக நடந்தாலோ தமிழர்களின் அரசியல் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணாக சொல்லாலோ செயலாலோ நடந்தாலோ, அப்படி நடப்பதாக கருதினாலே போதும் , நடப்பது என்று நிரூபிக்கவும் தேவையில்லை அப்படிக் கருதினால் கூட அந்தப் பிரதிநிதிகளை மீள அழைக்கும் பொறிமுறை recall mechanism என்று சொல்வார்கள் அமெரிக்காவில் கடந்த 9, 10 வருடங்களுக்கு முன் கலபோர்னிய கவர்னரை மீள அழைத்தது. அவ்வாறு மீள அழைக்கும் பொறிமுறையையும் நாங்கள் அதில் போட்டிருக்கிறம்.

இதில் நாங்கள் மக்களின் கையிலேயே கடிவாளத்தைக் கொடுத்திருக்கின்றோம். தேர்தல் முடிந்தவுடன் மாத்திரம் மக்களின் பங்களிப்பு முடியப் போவதில்லை. அதன் பின்னர் கூட மக்கள்தான இந்த அரசாங்கம் சரியான பாதையில் போகின்றதா எனப் பார்க்க வேண்டும். ஜனநாயகத்தைப் பொறுத்த மட்டில் அமெரிக்க ஜனநாயமாக இருந்தாலும் சரி ஐரோப்பிய ஜனநாயகமாக இருந்தாலும் சரி மக்களின் விழிப்புணர்ச்சிதான் முக்கியம். அப்போது மக்கள் விழிப்பாக தங்களுடைய கையில் கொடுக்கப்பட்ட அந்தக் கடிவாளத்தை சரியாக பயன்படுத்தினால் நாடு கடந்த அரசு சரியாகப் போகும். அவர்கள்தான் எஜமானர்களாக இருப்பார்கள்.

குருபரன் ‐ இதிலே நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். மக்களிடம் இருந்துதான் புலிகள் உருவானார்கள். மக்கள்தான் புலிகள். புலிகள்தான் மக்கள் என்று கூறியிருந்தீர்கள். அதிலே முரண்பாடுகளும் வாதப்பிரதிவாதங்களும் இருக்கின்றன. உதாரணமாக இலங்கையிலே, தாயகத்தை எடுத்துக் கொண்டாலும் சரி ஒவ்வொரு தேர்தல்கள் நடைபெறுகின்ற போதும் சரி வி. புலிகளுக்கு சார்பாக இருக்;கின்ற அமைப்புக்களுக்கு எதிராகப் போட்டியிடுகி;ன்ற அமைப்புக்களும் தங்களுடைய பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்கிறார்கள். அதேபோல் புலம்பெயர் சமுதாயத்தை எடுத்துக் கொண்டாலும் வி. புலிகள் அல்லது வி. புலிகளுக்கு சார்பானவர்கள் என்றதற்கும் அப்பால் பெருமளவான தொகையினர் அவர்களுடைய கருத்துகளுக்கு எதிரானவர்களும் இருக்கின்றார்கள். எனவே மக்கள்தான் புலிகள். புலிகள்தான் மக்கள் என்ற கோட்பாடு உங்களுடை பன்மைத்துவ ஜனநாயகத்திலே அல்லது pluralisim என்கின்ற கோட்பாட்டுக்கும் இவ்வாறான கருத்திற்கும் இடையே நீங்கள் முரண்பாட்டைக் காணவில்லையா அல்லது ஒத்தகருத்தைக் காண்கிறீர்களா?

ருத்திரகுமாரன் :‐ தமிழ்த் தேசியத்தைப் பொறுத்த வரையில் எவருக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இருப்பதாக நான் கருதவில்லை. என்னத்தில் கருத்து வேறுபாடு என்றால் அந்தத் தேசியத்தை அடுத்த கட்டத்தில் அதாவது சுதந்திர தமிழீழத்தை எப்படி அடையப் போகிறோம் என்பதில்தான் கருத்து வேறுபாடு இருக்கிறது. அந்த இடத்தில்தான் பன்மைத்துவத்தை நான் காண்கிறேன். அந்தப் பன்மைத்துவம் ஆரோக்கியமானதென்றே கருதுகின்றேன். ஆனால் எந்தவொரு தமிழ்மகனையும் எடுத்துக் கொண்டாலும் எமது வரலாற்றுப் பின்னணியில் சிங்கள பேரினவாதத்தால் இழைக்கப்பட்ட படுகொலையைப் பார்க்கும் பொழுது குறிப்பாக கடந்த ஆண்டில் இடம்பெற்ற இனப் படுகொலையைப் பார்த்தால் என்னைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியத்தைப் பொறுத்த வரையில் எந்தவொரு தமிழ் மகனுக்கும் கருத்துவேறுபாடுகள் இல்லை என்றே கருதுகின்றேன். எனவே அதில் நாங்கள் ஒன்றுபட்டு , ஆனால் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நாங்கள் அவர்களை ஒதுக்கப் போவதில்லை. எங்களைப் பொறுத்தவரை அதில் மக்கள் அனைவரும் அதில் ஒன்றாக நிற்கிறார்கள். என்னத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு என்றால் எங்களுக்குள் tactic strategic என்பதில்தான் பன்முகத்தன்மையில் கருத்துவேறுபாடு இருக்கு. அது ஜனநாயக வழியில் ஆரோக்கியமானதாகத்தான் நான் கருதுகின்றேன்.

குருபரன் ‐ ஆம் நீங்கள் ஆரம்பத்தில் கூறியிருந்தீர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலிருந்துதான் அதாவது ஆத்மீக ரீதியான போராட்டம் ஆரம்பித்து பின்பு அது ஆயுதப் போராட்டமாக மாறியதென்று. எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கும் நாடு கடந்த தமிழீழ அரசிற்குமிடையிலான வேறுபாடு என்ன? ஏன் அதனைக் கேட்கிறேன் என்றால் இங்கு வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற ஒரு தரப்பினரும் நாடு கடந்த அரசு என்ற ஒரு தரப்பினருமாக இரு தரப்பினர் செயற்படுவதாக மக்கள் நினைக்கிறார்கள். அவர்களுடைய கருத்துக்களும் வேறுபட்டு இருப்பதாக மக்கள் உணருகிறார்கள். அந்தக் கருத்துக்களை பிரதிபலிக்கின்ற ஊடகங்கள் முட்டி மோதுவதாக மக்கள் கருதுகிறார்கள். எனவே இந்த வட்டுக்கோட்டைத் தீர்;மானம் என்ற கோட்பாட்டுக்கும் அல்லது அந்தப் பிரிவினருக்கும் நாடு கடந்த அரசுப் பிரிவு என்ற கோட்பாட்டுக்கும் இடையிலான உடன்பாடு அல்லது முரண்பாடுகள் என்னவென நீங்கள் கருதுகிறீர்கள்.

ருத்திரகுமாரன் :‐ இங்கு முரண்பாடு இருப்பதாக உண்மையிலேயே நான் கருதவில்லை. முதலாவதாக இன்னொரு கருத்தை நான் கூற விரும்புகிறேன். நாங்கள் எங்கள் நாடு கடந்த அரசாங்கத்தின் அடித்தளமாக அமைந்த 2009 ஆண்டு யூன் மாதம் 16ம் திகதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றோம். ஒரு வாக்கெடுப்பை கட்டாயம் நாங்கள் அங்கு வைக்க வேண்டும் என்று. சர்வதேச நிறுவனங்களின் கீழ் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை என்பதை அறிவதற்கு ஒரு வாக்கெடுப்பு வைக்க வேண்டும் என்று நாங்கள் கூறியிருக்கின்றோம். இந்த வாக்கெடுப்பு வைப்;பதில் எந்தவிதமான கருத்துவேறுபாடுகளும் இல்லை. சர்வதேச நிறுவனம் ஒன்றினூடாகத்தான் வைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அடுத்ததாக எங்களுடைய நிலைப்பாடு என்னவென்றும் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அதன் பின்னர் கடந்த 30 ஆண்டுகாலமாக தமிழ் மக்கள் கண்ணீராலும் செந்நீராலும் தங்களுடைய அரசியல் அபிலாசைகளை தெட்டத்தெளிவாக கூறியுள்ளார்கள். எனவே இதுவொரு தொடர்ச்சியான போராட்டம். எனவே ஒரு தொடர்ச்சியான போராட்டமாகத்தான் இதனை நாம் பார்க்கிறோம். உதாரணமாக லண்டனில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் முன்வைக்கப்பட்ட பொழுது அதில் நாடுகடந்த அரசு செயல்குழுவினரும் ஒன்றாக இணைந்து செயற்பட்டு அங்கு மகத்தான ஒரு வெற்றியை நாங்கள் கண்டோம். இரண்டும் வௌ;வேறு வேலைத்திட்டங்கள். இரண்டு தரப்பும் ஒன்றாக வேலை செய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் அங்கு இருக்கிறது. அது இருந்த போது நாடு கடந்த அரசாங்கமும் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அதில் ஒன்றுபட்டு அதனைச் செய்து வெற்றிகரமாக செய்தார்கள். எனவே இதில் முரண்பாடு இருப்பதாக நான் இதைக் காணவில்லை.

குருபரன் ‐ லண்டனில் இவ்வாறு உடன்பாடு காணப்பட்டதாக கூறுகின்ற அதேநேரத்திலே ஏனைய நாடுகளிலும் நீங்கள் இரு தரப்பினரும் இணைந்து செயற்படுகின்ற அல்லது காலப் போக்கில் உங்களது கோட்பாடுகளில் ஒரு ஐக்கியத்தைக் ஏற்படுத்துகின்ற சூழல் அந்த பன்மைத்துவத்துக்குள்ளே ஒரு உடன்பாட்டைக் காண்கின்ற ஒரு சூழல் இருக்கின்றதா?

ருத்திரகுமாரன் :‐ நிச்சயமாக கடந்த ஒரு மாதமாக ஒரு ஒற்றுமை எங்களிடம், தமிழினத்திடம் வந்திருப்பது நாங்கள் அனைவரும் அறிந்த ஒரு விடயம். உதாரணத்திற்கு ஒன்று நான் கூறுவதானால் லண்டனில் இடம்பெற்ற அந்த வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அதன் பின்னர் பிரான்சில் மக்களவைத் தேர்தலும் நாடு கடந்த அரசாங்கத் தேர்தலும் ஒன்றாக ஒரே நேரத்தில் அங்கு ஒற்றுமையுடன் நடத்தப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் கனடாவில் மக்களவை செயற்குழுவும் நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்குழுவும் ஒரு கூட்டறிக்கை விட்டிருந்தார்கள். அதில் இரண்டும் ஒவ்வொன்றையும் ஆதரிப்பதாகவும் நாங்கள் ஒற்றுமையாக இரண்டையும் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர்கள் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். நான் பலமுறை எனது பேச்சுக்களில் கூறியிருக்கிறேன். மக்களவையும் நாடு கடந்த அரசும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என. ஒரே குறிக்கோளை நோக்கி என்று. எனவே எங்களுக்குள் ஒரு ஒத்திசைவு இருக்கின்றது. இதுவொரு வேறுபட்ட வேலைத்திட்டங்கள். வேறுபட்ட வேலைத்திட்டங்களாயினும் குறிக்கோள் ஒன்று. எனவே அந்த அடிப்படையில் இந்த வேலைத்திட்டங்களுக்கிடையில் ஒரு ஒத்திசைவு தற்பொழுது மிக அளவில் வந்து கொண்டிப்பதைத்தான் நாங்கள் காணக் கூடியதாகவிருக்கின்றது.

குருபரன் ‐ ஆம் ருத்ரா. இன்றைய பிராந்திய வல்லாதிக்க அரசியல் சூழலிலே சீனாவும் இந்தியாவும் தமது வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக எல்லா வகையான ஜனநாயக விழுமியங்களையும் தகர்த்துக் கொண்டிருக்கின்றன. தகர்த்த தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலே இந்த சீனாவினுடைய இந்தியாவினுடைய அல்லது அருகாமையிலிருக்கின்ற பாகிஸ்தானுடைய அரசியல் தாக்கங்கள் அதனுடைய நடவடிக்கைகள் எல்லாம் இலங்கை மீது ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற போது இலங்கையில் தமிழ் மக்களுடைய அரசியல் குரலுக்கு சாதகமான சமிக்ஞைகள் சர்வதேச அளவிலேயோ அல்லது பிராந்திய அளவிலேயோ ஏற்படும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

ருத்திரகுமாரன் :‐ நிச்சயமாக நிச்சயமாக உலகம் மாறுகின்றது. உலகம் மாறுகின்ற போது அதனுடன் சேர்ந்து political situation அரசியல் நிலைப்பாடுகள் மாறுகின்றது. தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கின்ற இந்த மாற்றலின் போது அங்கு ஒரு விடியல் எங்களுக்கு வாசல்கதவு திறக்கும் என்றுதான் நாங்கள் அதைப் பார்க்கிறம். குறிப்பாக விளக்கமாகச் சொல்லப் போனால் இன்றைக்கு இந்தியாவும் சீனாவும் ஒரு முரண்பட்ட நிலையில் இருக்கின்றன. அது மட்டுமல்ல இன்றைக்கு சர்வதேச வல்லரசுகளும் பிராந்திய அரசுகளும் தென்னாசியாவில் இலங்கையை மையமாக வைத்துத்தான் முட்டி மோதுகிறார்கள். இலங்கையை மையமாக வைத்து முட்டி மோதும் போது நிச்சயமாக அங்கு ஒரு வெளி ஒன்று கட்டாயம் வருவது அங்கு தவிர்க்க முடியாதது. அப்படி வருகின்ற வெளி ,வந்து எங்களுடைய தமிழீழத்திறான வாசற்கதவு என்றுதான் நாங்கள் கருதுகின்றோம். மாறி வரும் புவிசார் நிலைமைகள் எங்களுய விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு சாதகமானதாக இருக்கும் என்றுதான் நாம் கருதுகின்றோம்.

குருபரன் ‐ ஆம் இதிலே நடைமுறை ரீதியிலே இன்று (28.4.10) நடைபெற்ற ஒரு விடயத்தைக் கூற விரும்புகின்றேன். ஏனென்றால் நீங்கள் கூறிய geo politics உடைய தன்மையை நீங்கள் அல்லது நாங்கள் புரிந்து கொண்டிருக்கின்றோமோ அதனை இலங்கை அரசாங்கமும் புரிந்து கொண்டிருக்கின்றது. ஏனென்றால் உங்களுக்குத் தெரியும் சார்க் மகாநாட்டிலே கலந்து கொண்டிருக்கின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஒரு முக்கியமான உரையை நிகழ்த்தியிருக்கின்றார். அதாவது மேற்கத்தையவர்கள் இந்த சார்க் பிராந்திய நாடுகளிலே அல்லது ஆசிய நாடுகளிலே தங்களுடை தீர்வுத் திட்டங்களை அல்லது தங்களுடைய விருப்பங்களை திணிக்க முற்படுவதனை இந்த நாடுகள் இணைந்து நின்று எதிர்க்க வேண்டும் என்று புதிய ஒரு குரலை வெளிப்படுத்தியிருக்கின்றார். எனவே அவ்வாறானதொரு இணக்கம் ஏனென்றால் இந்த geo politics மாறிவருகின்றது என்று கூறி வருகின்ற அதேவேளை இந்த geo politics என்பது பொருளாதார நலன்களை பொருளாதார வளங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் நாங்கள் மறுக்க முடியாது.

எனவே இந்தியாவின் நலனை அதாவது இந்தியாவிலே தனது நலனை அமெரிக்கா எவ்வாறு விரும்புகின்றதோ அதேபோல் சீனாவின் நலன் என ஒவ்வொன்றோடு ஒவ்வொன்றின் பொருளாதார நலன்கள் பின்னிப் பிணைந்து இருக்கின்றன. எனவே இலங்கையோடு இலங்கைத் தமிழ் மக்களினது பிரச்சினைகளோடு ஒத்து நடக்கின்ற பொழுது இந்திய ராஜதந்திரி ஒருவர் கூறியிருந்தார். அதாவது அமெரிக்காவிலே தங்களுடைய மக்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். அமெரிக்காவிற்கும் இங்கு பெருமளவு பொருளாதார நலன் இருக்கின்றது. எனவே நாங்கள் ஏன் நேரடியாக அவர்களுடன் மோதப் போகிறோம் என தனிப்பட்ட வகையிலே என்னுடன் கதைக்கும் பொழுது கூறியிருந்தார். எனவே இவ்வாறு இந்த பொருளாதார நலன்களை முக்கியத்துவப் படுத்துகின்ற போது நீங்கள் கூறுகின்ற geo politics என்கின்ற விடயம் இலங்கையினுடைய அரசியலிலே செல்வாக்குச் செலுத்தும் என நினைக்கிறீர்களா?

ருத்திரகுமாரன் :‐ இதில் 2காரணிகளை நாங்கள் கருத்தில் எடுக்க வேணும் என நான் நினைக்கிறேன். geo politics இல் ஒன்று வந்து geo politics situation மற்றது globalaisation உலக மயமாக்கல் என்பது. எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்திலும் அது முக்கிய பங்கு வகிக்கின்றது. globalaisation என்று நாங்கள் கதைக்கின்ற பொழுது அது தனிய பிராந்தியத்துள் மட்டும் அதனை நாங்கள் அடக்க ஏலாது. ஸ்ரீலங்கா ஜனாதிபதி கூறுவது போல பிராந்தியத்திற்கும் மட்டும் அடக்கி ளுயஎழல பண்ண ஏலாது. பிராந்தியத்திற்கு அப்பால் இருக்கின்ற நாடுகளையும் நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். அடுத்ததாக உங்களது கேள்வி தனியாக அமெரிக்காவையும் இந்தியாவையும் வைத்துத்தான் கேள்வியை கேட்டிருந்தீர்கள். சீனா என்று ஒன்றிருக்கின்றது. அமெரிக்கப் பத்திரிகைகளை எடுத்துப் பார்த்தால் சீனாவினுடைய ஆதிக்க நலன்கள் பெருகுவது பற்றி அமெரிக்கப் பத்திரிகைகள் கடந்த 2 மாதமாக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. நியூயோர்க் ரைம்ஸ்சை எடுத்துப் பார்த்தால் அது ஒரு முக்கியமான பத்திரிகை. போனகிழமை கூட கடலாதிக்கத்தில் சீனா எந்தளவிற்கு சீனா தனது திக்கத்தை செலுத்தப் பார்க்கின்றது . சீனா இவ்வளவு காலமும் தைவானை மையமாக வைத்துத்தான் தன்னுடைய பாதுகாப்பை தன்னுடைய ராணுவத்தைப் பெருக்கி இருந்தது. இப்ப அதையும் தாண்டி சீனா தனது தனிப்பட்ட ஆதிக்கத்தை செலுத்துவதாக முக்கிய கட்டுரை ஒன்று வெளிவந்திருக்கின்றது. அதற்கு முன்னம் 1 மாதம் என நினைக்கிறேன்.. தென்னாசியாவில் சீனா எந்தளவிற்கு தனது ஆதிக்கத்தை பரப்பி வருகின்றது எனப் பெரியதொரு கட்டுரை. அந்தக் கட்டுரையில் போட்ட படமும் உதாரணமாகக் கூறப்பட்டதும் அம்பாந்தோட்டை துறைமுகம். அங்கு சீனா முக்கிய ஒரு காரணி facter அங்கு.

இங்கு ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இந்தியப் புத்திஜீவிகள் வந்திருந்தார்கள். இந்தியப் புத்திஜீவிகளே இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஸ்ரீலங்கா விசயத்தில் தமிழர் விசயத்தில் தவறிழைத்ததாகத்தான் அவர்களது பேச்சு அமைந்தது. இந்தியப் புத்திஜீவிகள் கூறினார்கள் சீனா இந்தியாவைச் சுற்றி ஒரு முத்துமாலை போட்டுக் கொண்டு வருகின்றது. அதைக் கூட இந்த அந்திய கொள்கை வகுப்பாளர்கள் கருத்தில் கொள்ளவில்லை என. இந்தியப் புத்திஜீவிகளே இன்று இந்திய கொள்கை வகுப்பாளர்களை குற்றம் சாட்டும் நிலையைத்தான் நாம் இன்று பார்க்கிறம். அதுகளைப் பார்க்கும் பொழுது நம்மைப் பொறுத்த மட்டில் பிராந்திய அரசின் நலனும் எங்களுடைய தேசிய விடுதலை நலனும் ஒரே புள்ளியில் சந்திக்கின்ற வாய்ப்பிருப்பதாகத்தான் நாம் கருதுகிறோம்.

குருபரன் ‐ ஆம் நீங்கள் கூறுகின்ற இந்த வாய்ப்பு இருக்கின்ற சூழலிலே ஒரு கேள்வியை அல்லது விமர்சனத்தை பலரும் முன்வைக்கிறார்கள். அதாவது விடுதலைப்புலிகள் இருந்த போது அன்றும் நீங்கள் அவர்களுக்கு சட்ட ஆலோசகர்களில் ஒருவராக இருந்திருக்கின்றீர்கள். அவர்கள் இருந்த போது முன்னெடுக்கப்படாத அதாவது இந்தப் பிராந்திய சர்வதேச மாறிவருகின்ற அரசியல் சூழலை தங்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு சாதகமாகப் பயன்படுத்துகின்ற நீங்கள் கூறுகின்ற அந்தப் பொறிமுறையை ஏற்படுத்தாத அல்லது முன்னெடுக்காத நாடுகடந்த அரசு கூட அதன் பொறிமுறையில் ஒன்று. எனவே அவ்வாறு முன்னெடுக்கப்படாத விடயத்தைப் Post LTTE அல்லது Post confition என்று பலராலும் கட்டுரைகள் வரையப்படும். அந்த விமர்சனங்களோடு ஒத்துப் போவதான ஒரு விடயத்தை பலரும் முன்வைக்கிறார்கள். அது பற்றி என்ன கருதுகிறீர்கள்.

ருத்திரகுமாரன் :‐ நிச்சயமாக இது பற்றி நானும் பத்திரிகைகளில் பார்த்திருக்கிறன். இதில் முக்கியமான விடயத்தைக் கவனிக்கத் தவறுகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். கடந்த மே மாதத்திற்கு முன்னர் அங்கு ஒரு நிகழ்வு பூர்வமான அரசு இருந்தது.. இந்த நிகழ்வு பூர்வமான அரசு அங்கு ஒரு அரசியல் வழியை ஏற்படுத்தியிருந்தது. அதன்மூலமாகத்தான் மக்கள் தங்கள் அரசியல் அபிலாசைகளை முழுமையாகப் பிரதிபலிக்கக்க கூடியதாகிவிருந்தது. எங்களுடைய சுயநிர்ணயத்திற்குக் கூட முழுமையான வடிவம் கொடுக்கக் கூடியதாக இருந்தது. அந்த நேரத்திலும் வெளிநாட்டிலிருந்த சில பேராசிரியர்கள் excile government என்ற அந்த கருத்தை முன்வைத்தார்கள்.

அந்த நேரத்தில் தனிப்பட்ட முறையில் நானும் அதனைப் பெரிதாக விரும்பவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைகளும் அதனை விரும்பவில்லை. காரணம் அங்கு ஒரு நிகழ்வுபூர்வமாக அரசு இருக்கவில்லை. தாயகத்தில் இருந்த அரசியல்வெளி இல்லை. ஆனபடியால்தான் நாங்கள் புலத்தில் இதனை வைக்கிறோம். எனவே விடுதலைப் போராட்டத்தின் ஒரு தொடர்ச்சி. தலைவர் சுதுமலைக் கூட்டத்தில் கூறியது மாதிரி நம் போராட்ட வடிவம் காலத்திற்கேற்றவாறு மாறுகிறது. ஆரம்பத்தில் அங்கு ஒரு நிகழ்வு பூர்வமான அரசு னநகநஉவழளந ளவயவந அங்கு இருந்தது. எனவே நாடு கடந்த அரசாங்கம் தேவையில்லை. ஆனால் இன்று நிகழ்வு பூர்வமாக அரசு இல்லாமல் போனபடியால்தான் இந்த நாடு கடந்த அரசாங்கம் அமைக்க வேண்டியிருக்கின்றது. எனவே இதனை Post LTTE அல்லது Post confition ஆகவோ இதனைப் பார்ப்பது தவறு என்பதுதான் என்னுடைய கருத்தாகும்.

குருபரன் ‐ ஆம் இந்த நிகழ்வு பூர்வமான அரசு என்ற விடயத்திலே தற்பொழது நான் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கின்ற பொழுது எண்ணம் ஒன்று வருகின்றது. இந்த நிகழ்வு பூர்வமான ஒன்று இருக்கின்ற பொழுது அவர்கள் தங்களுடைய எண்ணங்களை முழுமையாகப் பிரதிபலிக்கின்ற ஒரு நிலைப்பாடு இருக்கின்ற பொழுது ஒரு பேரம் பேசுகின்ற சம பலத்துடனான ஒரு நிகழ்வை நீங்கள் கூறுகின்ற இந்த சர்வதேச சமூகம் ஏற்படுத்திக் கொடுத்தது என்று கருதப்படுகின்றது. அதாவது இந்த இணைத் தலைமை நாடுகள் இணைந்து ஒரு சமாதான பேச்சுவார்த்தையை ஏற்படுத்தி இரு தரப்பினரையும் ஒரே மேசையில் உட்கார வைத்து பேசுகின்ற ஒரு சூழல் ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். அந்த சூழல் அற்றுப் போவதற்கு அதாவது அந்த சமபலம் நான் நினைக்கின்றேன் எரிக் சொல்ஹெயிம் தனது திறந்த பேட்டி ஒன்றிலே கூறியிருந்தார். பெருமளவிலான நிலப்பரப்பினையும் பெருமளவிலான வளங்களையும் ஒரு 10 பேப்பரில் எழுதிக் கொடுத்து இவ்வளவும் உங்களுக்கு ,இவ்வளவும் அவர்களுக்கு என்கின்ற ஒரு சூழலை உருவாக்கியிருந்தோம். அந்த சூழல் விடுதலைப் புலிகளாலும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. தோல்வி அடைந்தமைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பும் ஒரு முக்கியமான காரணம் என விமர்சனம் எழுகின்றது. அவ்வாறு விடுதலைப்புலிகள் முக்கிய காரணம் என்று சொன்னால் அதில் ஆலோசகர்களாக இருந்த உங்களுக்கும் பங்கு உள்ளது. நீங்களும் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியிருக்கிறீர்கள். அன்று இருந்த சூழலை அந்தப் பொறிமுறையை ஏன் தவற விட வேண்டி வந்தது அல்லது ஏன் அது தவற விடப்பட்டது.

ருத்திரகுமாரன் :‐ இதில்வந்து நான் மிகுந்த கருத்துவேறுபாடு கொள்கிறேன். தமிழர் தரப்பில் அதாவது விடுதலைப் புலிகள் தரப்பில் பிழை விட்டதாக நான் துப்பரவாக கருதவில்லை. பேச்சுவார்த்தைகளை எடுத்துப் பார்த்தால் நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் முழுக்க பேச்சுவார்த்தையில் ஒரு நெகிழ்வுத் தன்மையை ஆரம்பத்திலிருந்தே காட்டி வந்தார்கள். உதாரணத்திற்கு சொல்லப் போனால் முதலில் இடைக்கால நிர்வாகம் என்றும் அதிலிருந்துதான் பேச்சுவார்த்தை தொடங்குவதாக இருந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதை வைத்துத்தான் பேச்சுவார்ததை தொடங்குவதாக இருந்தது. பேச்சுவார்த்தையின் முதல் கட்டத்தின் போது ரணில் அரசு கூறியது, தன்னால் அதனைச் செய்ய இயலாது. சந்திரிக்காவின் அரசு அதனை விடாது. எனவே தான் அதற்கு போனால் பேச்சுவார்த்தை குழம்பிக் போகும் எனக் கூறியதை அடுத்து பாலா அண்ணாவும் விடுதலைப்புலிகளும் ஒரு நெகிழ்வுத் தன்மையைக் காட்டி எதிரியினுடைய கரத்தைக் கூடப் பலப்படுத்தி ஏனென்றால் நாங்கள் இருவரும் சேர்ந்து அதாவது நாங்கள் partners ஆகத்தான கருதினோம். partners ஆகப் போய் முடிவை எடுப்போம் எனக் கருதியது. இதில் சிங்களப் பேரினவாதம் என்றுமே தமிழர்களுக்கு ஒன்றையும் கொடுக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை என்பது முதலாவது.

என்னைப் பொறுத்த மட்டில் அதிலும் பார்க்க கூடுதலாக சர்வதேச சமூகம்தான் இதில் கூடுதலான மிகப் பெரிய பிழையை விட்டது. இந்த சமபலன் நிலையை நீக்கியது சர்வதேச சமூகம். அதுமட்டுமல்ல சர்வதேச சமுதாயம் உதாரணத்திற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இணைய நாடுகள் இதே நாடுகள் இன்று தென் சூடானில் பிரிந்து போவதற்கான ஒரு உரிமையைக் கொடுத்திருக்கின்றார்கள். இதே நாடுகள் போகன்வில்லாவை எடுத்தாலும் அங்கு மக்கள் பிரிந்து போவதற்கான ஒரு விதிமுறைமையை அங்கு கொடுத்திருக்கின்றார்கள். அயர்லாந்தில் கொடுத்திருக்கின்றார்கள். கொஸவாவில் கொடுத்திருக்கின்றார்கள். முண்டிங்நவாவில் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் எங்களுடைய தமிழர்களுக்கும் சிங்களத்துக்குமான பேச்சுவார்த்தையில் மட்டும் அதனை ஆரம்பத்திலேயே மேசையிலிருந்து அகற்றி விட்டார்கள். அந்த ஒரு option போனவுடன் சிங்களத்திற்கு எந்தவொரு உடன்படிக்கைக்கும் வரவேண்டும் என்ற incentive ஊம் இல்லை.

சாதாரண ஒரு பேச்சுவார்த்தையை ஒரு conflict respect reslution உடன் இருந்து பார்த்தாலும் தமிழ் மக்களுடைய தியாகங்கள் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை விட்டு விட்டு ஒரு pragmatic level இலிலை conflict reslonton work ஐ எடுத்துப் பார்த்தால் கூட சர்வதேச சமுதாயம் மிகப் பெரியதொரு பிழையை விட்டுள்ளது. I disagree with hon. sohim. என்னைப் பொறுத்தமட்டில் இந்தப் பேச்சுவார்த்தை முறிந்தததற்கு முக்கிய காரணம் சர்வதேச சமுதாயம்.

குருபரன் ‐ ஆம் அந்த வகையில் இந்தக் கட்டத்திலிருந்து அடுத்த நடைமுறைக்கட்டத்திற்கு போவோமான இருந்தால் நடந்து முடிந்த இலங்கையினுடைய பொதுத்தேர்தல் குறித்து நீங்கள் இத்தகைய சூழலில் அதாவது நாடு கடந்த அரசு உருவாக்கத்தின் இந்த சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உட்பட பல தரப்புகள் போட்டியிடுகின்றார்கள். இந்தத் தேர்தல் குறித்து உங்களுடைய கருத்தாக்கம் என்னவாகவிருக்கின்றது.

ருத்திரகுமாரன் :‐ இந்தத் தேர்தல் திரும்பவும் எதைக்காட்டியிருக்கிறதெண்டால் சிங்கள மக்கள் இனவாத அடிப்படையில் ஒன்று திரண்டு ஒரு சிங்கள இன ஆட்சியை, பேரினவாதத்தைத்தான் மீண்டும் அங்கு வலியுறுத்தியிருக்கின்றதாகத்தான் நான் பார்க்கின்றேன். இவ்வளவு காலமும் சர்வதேசம் கூறியது சிங்கள அரசியல் தலைவர்கள்தான் பேரினவாதிகள். மக்கள் இல்லை என்று. ஆனால் நடந்து முடிந்த தேர்தல் என்னத்தைக் காட்டுது என்றால் சிங்கள மக்களும் இனவாத அடிப்படையில்தான் முன்னின்று அங்கு ஒரு இனவாத அரசைத்தான் அங்கு உருவாக்கியிருக்கிறார்கள் என்பதனையே.

குருபரன் ‐ இனவாத அரசை அவர்கள் நிர்மாணித்திருக்கின்றார்கள். மக்களும் இனவாதத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று ஒரு நிலை அங்கு உருவாகியிருக்கின்ற அதேவேளை வட கிழக்கிலே வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒரே அரசு 2 கோட்பாடுகள் என்ற விடயங்களை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோல்வியைத் தழுவி இருக்கின்றது. இந்தத் தோல்வி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினுடைய கோட்பாடுகளினுடைய தோல்வி என நீங்கள் கருதுவீர்களா?

ருத்திரகுமாரன் :‐ நிச்சயமாக இல்லை. இது வந்து கோட்பாடுகளின் தோல்வியாக நான் துப்பரவாக கருதவில்லை. இந்தத் தேர்தலின் முடிவுகள் பல காரணிகளால் இதில் impact பண்ணப்பட்டிருக்குது. எனவே இந்தத் தேர்தல் முடிவுகள் ஏன் இவ்வாறு வந்தது என நாம் வடிவாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தமட்டடில் குறிப்பாக இதனைக் கோட்பாடுகளின் தோல்வியாக துப்பரவாக கருதவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் மக்களுடைய ஆழ்மனதில் இன்றும் தமிழீழம்தான் என்ற நினைப்புத்தான், இந்த சுவாலைதான் எரிகிறது என்று நான் கருதுகிறேன். இண்டைக்கு நான் ஐக்கிய நாடுகள் சபையில் போய் ஒரு வாக்கெடுப்பு வைக்கப் போகிறம் என்றால் இந்த அடிப்படையில்தான் நாங்கள் முடிவு எடுக்கப் போகிறம் என்றால் எமக்குள்ள நம்பிக்கை 90 வீதத்திற்கும் மேல் மக்கள் அப்படியானதற்குத்தான் வாக்களிப்பார்கள். ஆனால் தேர்தல்கள் எனும் போது பல காரணிகளை நாம் பார்க்க வேண்டும். ஓன்று வந்து எங்களது ஆரம்ப நிலைப்பாடு அங்கு ஒருpolitical space இல்லை. ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அரசியல்வெளியில் மக்கள் இந்தத் தேர்தலை பெரிதாக எடுத்ததாகவும் கருத முடியாது.

அடுத்தது priority இந்த போர் முடிந்து மக்கள் இருக்க இடமின்றி இருக்கின்ற நிலையில் மக்களுடைய priority உம் ஓரளவுக்கு வேறுபட்டு இருக்கக்கூடும். இதில் பல காரணிகள் இருக்கின்றன. எனவே நான் நினைக்கவில்லை இது எங்களுடைய கோட்பாடுகளுக்குத் தோல்வியாக கருதவில்லை. இன்னொன்றையும் நான் கூற விரும்புகின்றேன். கடந்த நான் நினைக்கிறேன் ஒக்டோபர் அல்லது நொவம்பர் மாதம் என நினைக்கிறேன் அமெரிக்காவிலிருந்து ஒரு மனித உரிமைகள் குழு ( அரச சார்பற்ற நிறுவனங்கள் ) இடம்பெயர்ந்த மக்களை சந்திக்க சென்றது. அதில் ஒரு தமிழரும் சென்றிருந்தார். அவர் போய் விட்டு திரும்பி வந்த பொழுது கூறினார் அங்கு தாயகத்தில் மனிக் பாமில் இருந்த ஒருவர் கூறியதாக ,அதாவது நாடு கடந்த அரசாங்கம் ஒரு விடிவைத் தரும் என தாம் நம்புவதாக. இது மக்களுடைய ஆள்மனதில் இருந்து வந்தது இந்தக் கூற்று. மக்களின் மனதில் அடிமனதில் இந்த தீச்சுவாலை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆகவே நிச்சயமாக கோட்பாடுகளுக்குத் தோல்வியாக இதனை நாம் கருதமுடியாது என கருதுகிறேன்.

குருபரன் ‐ இந்த சூழலிலே அதாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒரு அரசு இரண்டு தேசம் என்ற கோட்பாடுகளையெல்லாம் முன்வைத்துப் போட்டியிட்ட கட்சி தோல்வி அடைந்த சூழலிலே தமிழத் தேசிய முன்னணியின் கோட்பாடுகளுக்கு சற்றேனும் குறைவில்லாத நாடு கடந்த அரசுக் கோட்பாட்டை தாயகத்தில் உள்ள பெருமளவிலான மக்கள் இந்தக் கோட்பாட்டை அங்கீகரிப்பார்கள் என நினைக்கிறீர்களா? ஏனென்றால் புலம்பெயர் சமூகத்திலேயே நாடுகடந்த அரசுக் கோட்பாடு பல்வேறு சவாலை பல்வேறு முரண்பாடுகளை எதிர்கொண்டு வருகிறது. எனவே இந்த புலம்பெயர் சமூகத்திலே கருத்துச் சுதந்திரம் பன்முகப்படுத்தப்பட்ட ஜனநாயகம் புளரலிசம் என்று சொல்லப்படுகின்ற எல்லாவிதமான விடயங்களையும் உள்வாங்குகின்ற இந்த சமூகத்திலே பல சவால்களை எதிர்கொள்கின்ற போது அந்த இலங்கையிலே உண்பதற்கு ஒருநேர உணவும், தூங்குவதற்கு ஒரு துண்டு நிலமும் இல்லாத அல்லது காணாமல் போன, தடுத்துவைக்கப்பட்ட, கொல்லப்பட்ட தமது உறவுகள் பற்றிய ஏக்கத்திலும் தவிப்பிலும் உள்ள நிர்க்கதியான இந்த மக்கள் நாடுகடந்த அரசுபற்றி சிந்திப்பார்கள் என நினைக்கிறீர்களா?

ருத்திரகுமாரன் :‐ நீங்கள் முதலில் புலத்தை எடுத்துக்கொண்டால் நாடுகடந்த அரசுக் கோட்பாடு பற்றியோ அல்லது புலத்தில் எடுக்கப்படும் மற்றைய வேலைத்திட்டங்கள் பற்றியோ வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எடுத்துக்கொண்டாலும் சரி, மக்களவைத் தேர்தலாயினும் சரி அந்தக் குறிக்கோளில் தமிழீழம் என்ற குறிக்கோளைத்தான் நாங்கள் பார்க்கின்றோம். அதாவது கோட்பாடுகளில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. புலத்திலே நிச்சயமாக அந்தக் கருத்து வேறுபாடு இல்லை. அடுத்தது நீங்கள் தாயகம் பற்றியும் நீங்கள் முதல் கேள்வியில் நீங்கள் சொன்னமாதிரி தாயகத்திலே ஒன்று அரசியல் வெளியில்லை. மற்றயது முன்னுரிமையும் சற்று வித்தியாசமாக இருக்கிறது. அதாவது நீங்கள் கூறியதுபோல் உண்ண உணவின்றி படுக்க இடமின்றி மக்கள் இருக்கிறார்கள். அதனால் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதில் அவர்கள் இருக்கிறார்கள். அதை நாங்கள் அப்படித்தான் பார்க்க வேண்டுமே ஒளிய எங்களுடைய அடிப்படைக் கோட்பாடுகளில் எங்களுடைய மக்கள் வேறுபட்டு இருக்கிறார்கள் விலகிவிட்டார்கள் என நான் நினைககவில்லை.

குருபரன் ‐ இறுதியாக செவ்வி முடிவுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது. பல்வேறு நாடுகளுடைய விடுதலைப் போராட்டங்களோ அல்லது நடைமுறையில் சாத்தியப்படக்கூடிய விடயங்களிலோ கோட்பாட்டுக்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளால் பலதோல்விகளை நடைமுறையில் அவதானித்திருக்கிறோம். எனவே இந்தக் கோட்பாடுகளை நீங்கள் இறுகப்பற்றிக்கொண்டு இருக்கும் போது அங்கே தாயகத்திலே மக்களுடைய நிலை மிக மோசமாக இருக்கின்றது. எனவே இந்த நாடுகடந்த அரசு நீங்கள்தான் ஏற்கனவே கூறியிருந்தீர்கள் அதாவது முன்னுரிமை அதனடிப்படையிலே அவர்கள் வாக்களித்திருக்கலாம். இவர்களுக்கு வாக்களிக்காமல் மற்றயவர்களுக்கு வாக்களித்திருக்கலாம் என்று. எனவே அந்த மக்களுடைய முன்னுரிமை என்று சொல்லப்படும் நிலையிலே முதலாவது மக்களுடைய வாழ்வாதாரம் தங்களுடைய பாதுகாப்பு தங்களுடைய இருப்பு என்கின்ற விடயங்களிலே நாடுகடந்த அரசினுடைய சாத்தியப்பாடுகள் என்னவாக இருக்கும்.

ருத்திரகுமாரன் :‐ நிச்சயமாக நாங்கள் எங்களுடைய ஆரம்பத்திலேயே நாங்கள் எங்கள் ஆலோசனைக் குழுவில் போட்டிருக்கிறோம். முதலாவதாக நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்றால் இந்த நாடுகடந்த அரசு தேர்தல் முடிந்தவுடன் தெரிவுசெய்யப்படுபவர்கள் தங்களை அரசியல் நிர்ணய சபையாக மாற்றிக்கொள்வார்கள். பின் அங்கே யாப்பு எழுதுவார்கள். இதுமட்டும் அல்லாது ஒரு நிறைவேற்றுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்காலிகமாக மனிதாபிமான மனித உரிமை தொடர்பான விடயங்களைப் பார்ப்பதற்கு இன்னொரு குழுவும் போடப்பட்டிருக்கிறது. எங்களுடைய ஆலோசனைச் சபை அறிக்கையிலும் இதனை நாங்கள் கூறியிருக்கிறோம். இதற்குத்தான் தற்போது நாங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தற்பொழுது கூட நாடுகடந்த அரசாங்கம் உருவாகுவதற்கு முன்னர் கூட எங்களுடைய இந்த ஆலோசனைக் குழு தனிப்பட்ட ரீதியிலும் ஆலோசனைக் குழு சார்பாகவும் நாங்கள் ராஜதந்திரிகைகளைச் சந்தித்து இந்த விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கும் படி தனிப்பட்ட வகையிலும் ஆலோசனைக் குழு சார்பாகவும் கேட்டிருக்கின்றோம். இவற்றுக்கே முன்னுரிமை கொடுக்கும்படி கேட்டிருக்கிறோம். எமது ஆலோசனைக் குழுவில் இருக்கும் பீற்றசாக் தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர்கள் விடயமாக மிக முக்கிய கவனம் எடுத்து ஒரு வேலைத்திட்டம் எடுத்து வருகின்றார். அவர்களுடைய பெயர்களை எல்லாம் திரட்டி மனித உரிமை அமைப்புக்களுடனும் நாங்களும் சந்திக்கின்ற எல்லா ராஜதந்திரிகளுடனும் நாங்கள் போராளிகளைப பற்றி 12 ஆயிரம் போராளிகள் அவர்களுடைய நிலையைப் பற்றி அவர்கள் இருக்கிறார்களா இல்லையா சித்திரவதைக்குள்ளாகி இருக்கிறார்களா சட்டத்தரணிகள் அவர்களைப் போயப் பார்க்கலாமா ஐசிஆர்சி போன்ற விடயங்களை நாங்கள் இப்பொழுதே கதைத்துக் கொண்டு வருகிறம்.

இப்ப ஓரளவுக்கு சர்வதேச மன்னிப்பு சபை கூட போராளிகள் குறித்த அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார்கள். நிச்சயமாக அடிப்படை உடனடித் தேவைகளுக்கும் நிச்சயமாக நாடு கடந்த அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தும். மற்றது இன்னொன்று நான் கூற விரும்புகின்றேன். இன்றைக்கு நாங்கள் இப்படிச் செய்வதால நாடுகடந்த அரசாங்கம் வந்து தாயகத்திலும் ஒரு அரசியல் வெளியைத் திறக்க ஒரு presure point ஆக அதாவது அமுக்க புள்ளியாக இருக்கும். எனவே அப்பிடித் திறக்கும் போது தாயக மக்களும் நாங்களும் ஒன்றாகப் பயனிக்கக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும் என்றே நான் கருதுகின்றேன். எனவே இதில் வந்து எங்களுடைய நாடுகடந்த அரசாங்கத்தில் வந்து மக்களுடைய உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு உந்துசக்த்தியாக இருக்குமே தவிர இதற்கு ஒரு தடைக்கல்லாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. இன்னொரு கூட்டத்தில் கூட நான் சொல்லியிருக்கிறேன் அரசாங்கம் இந்த நாடுகடந்த அரசாங்கத்தை வீழ்ந்த வேண்டும் என்றால் உடனடியாகச் செய்ய வேண்டியது அங்கு தாயக மக்களுடைய அடிப்படைத் தேவைகளை அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் தாயகத்தில் இருந்து இந்த நாடுகடந்த அரசிற்கு ஒரு ஆதரவின்மையை கொண்டுவர முனையலாம். எனவே அப்படிப் பார்த்தால் கூட இந்த நாடுகடந்த அரசாங்கம் அங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளைச் செய்வதற்கு ஒரு positive ஆன அம்சமாகத்தான் இருக்கும் என நான் அதனைக் கருதுகிறேன்.

குருபரன் ‐ ருத்ரா நீங்கள் நல்லாக களைத்துக்கொண்டு வருகிறீர்கள் இறுதியாக ஒரு கேள்வியைக் கேட்கிறேன் புலத்திலே கோட்பாட்டியலும் தளத்திலே நடைமுறையிலும் இவற்றிலே 90களிற்கு பிறகு நடந்த எல்லாத் தேர்தல்களை எடுத்துக் கொண்டாலும் உங்களுக்குத் தெரியும் மாற்றுக் கருத்துடைய கட்சிகளையும் அதாவது விடுதலைப் புலிகளுக்கு எதிர்க் கட்சிகளாக இருக்கின்ற கட்சிகளையும் மக்கள் நேசிக்கிறார்கள். ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 3 ஆசனங்களை யாழ்ப்பாணத்திலே பெற்றிருக்கிறது அரசாங்கத்தோடு இணைந்து. அதேபோல் ஒவ்வொரு பிரதேசங்களிலும் அதாவது உள்ளுராட்சித் தேர்தல் மாகாணசபைத் தேர்தலிலே வடக்கு கிழக்கிலே விடுதலைப் புலிகளுக்கு எதிர்நிலைக் கருத்துக்களைக் கொண்ட மாற்றுக் கட்சிகள் தங்களுக்கு ஆசனங்களை மக்களுடைய ஆதரவோடு பெற்றிருக்கிறார்கள். அதேபோல் புலம்பெயர் தேசங்களிலும் முன்னாள் விடுதலை இயக்கங்களில் இருந்தவர்களும் பல்வேறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே உங்களுடைய பன்மைத்துவக் கோட்பாடு புளுரலிசம் தற்போது மாறிவருகின்ற சூழலிலே பன்மைத்துவ ஜனநாயக அடிப்படையிலே ஒரு ஆரோக்கியமான சூழலில் போவது அதாவது கருத்து மோதல்களுக்கூடாக போவது நல்லதென நீங்கள் ஆரம்பத்திலே கூறியிருந்தீர்கள் அந்த வகையிலே இவ்வாறு முரண்பட்டு இருக்கின்ற சக்திகளை கருத்தியல் ரீதியான கோட்பாட்டியல் ரீதியான வாதப்பிரதிவாதங்களுடான இணைப்பதற்கான நடவடிக்கைகளிலே நாடுகடந்த அரசின் தற்போதய நடைமுறை என்னவாக இருக்கிறது.

ருத்திரகுமாரன் :‐ இதில் பன்மைத்துவம் எனக் கூறியதிலும் ஒன்றை நான் உறுதியாகக் கூறுகிறேன் இந்த நாடுகடந்த அரசாங்கம் வந்து தமிழ்த் தேசியத்தின் அடையாளங்களை ஆதாரமாகக் கொண்டுதான் நாங்கள் இந்த வேலைத்திட்டங்களை நாங்கள் முன்கொண்டு செல்கிறோம். அதாவது தாயகம் தேசியம் தன்னாட்சி இறைமை இதில் வந்து கருத்து வேறுபாடுகள் இருப்பதாக என்னைப் பொறுத்தவரை நான் கருதவில்லை. இது வந்து இவற்றை ஆதார தளமாக வைத்துக்கொண்டுதான் இந்த நாடுகடந்த அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து முன்னே செல்ல இருக்கின்றது. கருத்து வேறுபாடுகள் எதில் வரக் கூடும் என்றால் இவற்றை நாம் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று. நான் முதலில் கூறியது போன்று நடைமுறைப்படுத்துவதற்கான தந்திரோபாயத்தில்தான் வேறுபடுவோமே தவிர அடிப்படைக் கோட்பாடுகளில் அல்ல. இன்று தமிழினம் ஒன்றுபட்டு நிற்பதாகத்தான் நான் கருதுகின்றேன். எனவே எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை. ஆனால் தந்திரோபாயம் என்பதிலே கருத்துக்கள் என்ற அடிப்படையிலே நாம் மக்களுடன் என்றும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுதான் இருக்கின்றோம். எனவே அவ்வாறு நாங்கள் பரிமாறிக்கொண்டு இருக்கும் போது அதற்கு ஏற்றமாதிரி எந்த வழி உகந்தது என்பதற்கு ஏற்ப நாடுகடந்த அரசாங்கம் அதாவது தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் முடிவெடுத்து அந்த வழியில் அதனைக் கொண்டு போவார்கள்.

அடுத்ததாக இன்னொன்றையும் நாம் கூறவிரும்புவது புலத்தில் இருக்கும் மக்கள் வந்து நாங்களும் இந்த தேசியத்தின் ஒரு அங்கம் இப்ப நாங்கள் புலத்தில் இருக்கும் மக்கள் வந்து தனியாக தாயகமக்களின் குரலை மட்டும் பிரதிபலிப்பதாக நான் கருதவில்லை. நாங்களும் தாயகத்தில் உள்ள மக்களும் தேசத்தின் ஒரு அங்கம் தேசியத்தின் ஓர் அங்கம். நாங்கள் புலத்தில் இருக்கும் பெரும்பாலானோர் அங்கு இடம்பெற்ற இனப்படுகொலையின் காரணமாக பெரும் அழிவின் காரணமாகத்தான் இங்கு வந்தார்கள். எனவே அவர்களுக்கும் இந்த அரசியல் தீர்வு பற்றி பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு முழு உரிமையும் இருப்பதாகத்தான் கருதுகிறோம். அதேநேரத்தில் இன்று தாயகத்தில் இன்று அரசியல் வெளி மட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. தூயகத்தில் உள்ள அரசியல் வெளி மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதனால் அங்குள்ள மக்களுக்கு எமது அரசியல் அபிலாசைகளை எடுத்துச் செல்லக்கூடிய நிலமை அங்கு இல்லை புலத்தில் இருக்கும் நாங்கள் தான் இங்குள்ள சுதந்திரங்களை அனுபவித்து மேற்கத்தேய நாடுகளில் உள்ள நாங்கள் தான் அரசியல் அபிலாசைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் நாங்கள் போகும் போது இது ஒரு அமுக்கப் புள்ளியாக இருக்கும் போது அங்கும் ஒரு அரசியல் வெளி உருவாக்கப்படும். ஆதன்போது இருதரப்பும் ஒன்றாகப் பயனிக்கக்கூடிய சூழல் உருவாகும் என்றே கருதுகிறேன்.

குருபரன் ‐ ஆம் நன்றி உருத்திரகுமாரன். இந்த நீண்ட நேர செவ்வியை வழங்கியமைக்காக எமது வானொலி மற்றும் இணையங்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ருத்திரகுமாரன் :‐ ஆம் இந்த விவாதம் இத்துடன் முடியாமல் எதிர்வரும் காலங்களிலும் இந்தக் கலந்துரையாடல்கள் தொடரவேண்டும். உங்கள் வானொலியில் மக்களுடைய சந்தேகங்களுக்கும் நான் நேரில் பதில் அளிக்கத் தயாராக உள்ளேன். இந்த சந்தர்ப்பத்தை தந்தமைக்காக உங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

உவர் குருபரன் எண்டவர் கேட்ட இறுதிக் கேள்வியில் அவரே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இதர கட்சிகளுக்கும் மக்கள் விரும்பி வாக்களித்துள்ளனர் என்று ஒரு தற்துணிவான கருத்தைச் சொல்லி இருக்கிறார்.

இவர் முதலில் ஒரு உண்மையை விளங்கிக் கொள்ள முன் வர வேண்டும்.. இந்தியப் படைகள் காலத்திலும் சரி சிறீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு காலங்களிலும் சரி மக்கள் தங்கள் சுயாதீன விருப்புக்கு ஏற்ப வாக்களிக்கவில்லை. பல அச்சுறுத்தல்கள் கடத்தல்கள் கொலைகள் கொள்ளைகள் சிவில்நிர்வாகச் சீரழிவுகள் என்று பலவாறான கொடுமைகள் அளிக்கப்பட்டு தேர்தலில் வாக்குகளை செலுத்த நிற்பந்திக்கப்பட்டே வாக்களித்துள்ளனர். மக்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க இருந்த நிலைகளில் எல்லாம் அவர்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை அங்கீகரித்தே அநேகம் வாக்களித்துள்ளனர்.

இப்படியான ஒரு உண்மை அப்பட்டமாக எம் முன் நிற்க.. உந்த குருபரன் என்பவர்.. எப்படி கண்டுபிடித்தார்.. ஈபிடிபிக்கும் மட்டக்களப்பு போன்ற இடங்களில் பிள்ளையான் போன்றவர்களுக்கும் மக்கள் விரும்பியே வாக்களித்துள்ளனர் என்று. இவர் எந்த அடிப்படை ஆதாரத்தோடு அந்த விளக்கத்தை அளித்துள்ளார் என்பதை முதலில் விளக்க வேண்டும்.

குருபரன் இதனை செய்தால் நல்லா இருக்கும்.

எதுஎப்படி இருப்பினும் உருத்திரகுமார் அண்ணனின் பதில்கள் மிகவும் புத்திசாதுரியத்தனமானதாக அனைவரையும் அரவணைக்கும் பாணியில் இருந்தது. பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.