Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின அழிப்பின் ஓராண்டுக் கொண்டாட்டங்களில் யாழ் வவுனியாவில் தமிழக சின்னத்திரையினர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழின அழிப்பின் ஓராண்டுக் கொண்டாட்டங்களில் யாழ் வவுனியாவில் தமிழக சின்னத்திரையினர்

கடந்த ஆண்டு வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய இன அழிப்பு நடவடிக்கை நடைபெற்று ஆண்டு ஒன்று நிறைவடைந்து வருகின்ற இந்த மாதத்தில் தமிழகத்தின் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்காக யாழ்ப்பாணம், வவுனியா வருகின்றனர் என்ற செய்தி தாயக மக்களை மிகக் கவலைக்குள் தள்ளியுள்ளது.

வன்னி அழிப்பின் ஓராண்டினை பாரிய விழாக்களாக ஏற்பாடு செய்து சிங்கள அரசு முன்னெடுத்துவருகின்ற நிலையில் அதன் ஒழுங்குபடுத்தலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்படாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இந்திய திரைப்படங்களை உலக கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கோடு நடாத்தப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் (International Indian Film Academy – IIFA Awards) விழாவினையும் இலங்கையில் நடத்த சிங்கள அரசு மேற்கொண்ட முயற்சி கைகூடியுள்ளது.

ஆனாலும் அந்த நிகழ்வினை தமிழ் உணர்வுள்ள தமிழக திரைத்துறையினர் தமது நலனினை தூக்கியெறிந்து புறக்கணித்துள்ளனர். இதேபோன்று தமிழக அரசியல் தலைவர்களும் இந் நிகழ்வினை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

ஆனால் தமிழ் மக்கள் தமது உயிர்களை பல்லாயிரக்கணக்கில் பறிகொடுத்த வடக்கு மண்ணில் அந்த பலி கொடுப்பின் ஓராண்டு நிறைவு நடக்கும் அதே மாதத்தில் சிங்கள அரசு மேற்கொள்ளும் கேளிக்கை நிகழ்வில் பங்குகொள்ள தாய்த் தமிழகத்தில் இருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் படை எடுத்திருப்பது தாயக மக்கள் மனங்களில் வேதனையைத் தோற்றுவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களுக்கும், திரைத்துறையினருக்கும் தெரியாமலேயே இந்தநிகழ்வில் பங்கெடுக்க சின்னத்திரையினர் இலங்கை வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து தமிழகத்தின் தமிழ் உணர்வாளர்களும், திரைத்துறையினரும் தலையிட்டு உடனடியாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள சின்னத்திரையினரை தடுத்து நிறுத்தி ஆவன செய்வதுடன், இலங்கைத் தமிழர்களின் வலி சுமந்த மாதமாக நினைவுகூரவுள்ள மே மாதத்தில் அவர்களின் வேதனையிலும் பங்குகொள்ள முன்வருவார்களா?

vavuniyaa07052010.jpg

http://meenakam.com/?p=15402

இலங்கையிலை பிரச்சினை தீர்ந்து விட்டதாகவும் இராணுவமும் மக்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் எண்ட சின்ன திரை நாடகத்தை எதிரொலி எண்ட நிகழ்ச்சி மூலமாக இண்டைக்கு தீபம் தொலைக்காட்சி போட்டுக்காட்டியது...

உபயம் அனஸ்

சொந்த காசிலை சூனியம் வைச்சுக்கொண்டு அடுத்த நாட்டுக்காறனை திட்டுவது முறையோ...??

Edited by தயா

இதற்கு ஒரே வழி இங்குள்ள நாமும் இந்திய தமிழ் உறவுகளும் இவர்களின் சீரியல்களையும் அதை வழங்கும் தொலைக்காட்சி சனல்களையும் புறக்கணிக்க வேண்டும். செய்வோமா ? ம் கூம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.