Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடத்தப்பட்ட மாணவி தப்பி வந்தார் - மட்டக்களப்பில் சம்பவம்

Featured Replies

கடத்தப்பட்ட மாணவி தப்பி வந்தார் - மட்டக்களப்பில் சம்பவம்

திகதி: 05.05.2010 // தமிழீழம்

இன்றுகாலை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் தப்பிவந்துள்ளார். அவர் தெரிவித்துள்ள தகவல்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

களுதாவளை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்விபயிலும் பா.நிரஞ்சலா என்ற மாணவியை பாடசாலை முன்றலில் கறுப்பு வேனில் வந்த இனந்தெரியாத நபர்கள் இன்று காலை கடத்திச் சென்றுள்ளனர்.

அவரை மறைமுகமான இடமொன்றில் தடுத்து வைக்க முற்பட்ட வேளை, அந்த மாணவி அங்கிருந்து தப்பி, எருவில் கண்ணகி வித்தியாலயத்திற்குச் சென்று பாடசாலை அதிபர் கைலாசபிள்ளையிடம் சம்பவத்தை விபரித்துள்ளார்.

பாடசாலை அதிபர் அந்த மாணவியுடன் சென்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தான் கடத்திச் செல்லப்பட்ட வேளை, தன்னைப் போன்று ஆறு மாணவியர் மயக்கமான நிலையில் அங்கிருந்ததாக அதிர்ச்சி தரும் தகவலை மேற்படி மாணவி வெளியிட்டுள்ளார்.

இந்தத் தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் உறுதிப்படுத்தினார். அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் இதற்கு உரிய தீர்வுகள் காணப்பட வேண்டும் எனவும் பா. அரியநேத்திரன் வலியுறுத்தியுள்ளார்.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8704&cntnt01origid=53&cntnt01returnid=51

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை அதிபர் அந்த மாணவியுடன் சென்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தான் கடத்திச் செல்லப்பட்ட வேளை, தன்னைப் போன்று ஆறு மாணவியர் மயக்கமான நிலையில் அங்கிருந்ததாக அதிர்ச்சி தரும் தகவலை மேற்படி மாணவி வெளியிட்டுள்ளார்.

இந்த மாணவி தப்பி வராவிட்டால், கடத்தப் பட்ட மற்றைய 6 மாணவிகளின் செய்தியும் வெளியே வந்திருக்காது.

இப்படி வெளியே வராமல் கடத்தப் பட்டவர்கள் எத்தனை பேரோ..... :rolleyes:

தமிழ் சிறி உங்களுக்கு எல்லாம் இந்த செய்தி சந்தோசமாக இருக்குமே. தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவாளர்களை பழிவாங்குவதில் உங்களுக்கு சந்தோசமாக இருக்குமே. உங்களுக்கெல்லாம் எங்கே மட்டக்களப்பு மக்களின் தமிழ் உணர்வு தெரியப்போகிறது. நீங்கள் எல்லாம் யாழ்ப்பாண குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு பைத்தியக்கார கூட்ட கஜேந்திரன்

கூட்டத்திற்கு பின்னால் நின்று ஆடுகிற கூட்டமாச்சே . உங்களுக்கெல்லாம் எங்க மட்டக்களப்பு மக்களின் பிரச்சினை தெரியப்போகுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெப்பிடி சங்கதிக்கு உப்புடியான செய்தியள் உடனுக்குடன்போய் சேருது, உவைக்கும் உதுகளுக்கும் சேப்பு இருக்குமொ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்பிடி சங்கதிக்கு உப்புடியான செய்தியள் உடனுக்குடன்போய் சேருது, உவைக்கும் உதுகளுக்கும் சேப்பு இருக்குமொ? :rolleyes:

உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட இயலுமோ? மடியிலை கைய வைச்சிட்டாங்கள் என்று அலுத்துகிறீங்களோ அண்ணை?

  • தொடங்கியவர்

அதெப்பிடி சங்கதிக்கு உப்புடியான செய்தியள் உடனுக்குடன்போய் சேருது, உவைக்கும் உதுகளுக்கும் சேப்பு இருக்குமொ? :rolleyes:

அப்ப அண்ணை சொல்லுறதை பாத்தால் செய்தி பொய் போல கிடக்கே...??

இந்த செய்தி வெளியிலை வந்ததிலை உங்களுக்கு சரியான கடுப்பாய் கிடக்குது போல கிடக்கே...

சிங்கள பயங்கரவாதிகள் இன்னும் கடத்தியவர்களை கைது செய்யாதது ஆச்சர்யம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி உங்களுக்கு எல்லாம் இந்த செய்தி சந்தோசமாக இருக்குமே. தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவாளர்களை பழிவாங்குவதில் உங்களுக்கு சந்தோசமாக இருக்குமே. உங்களுக்கெல்லாம் எங்கே மட்டக்களப்பு மக்களின் தமிழ் உணர்வு தெரியப்போகிறது. நீங்கள் எல்லாம் யாழ்ப்பாண குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு பைத்தியக்கார கூட்ட கஜேந்திரன்

கூட்டத்திற்கு பின்னால் நின்று ஆடுகிற கூட்டமாச்சே . உங்களுக்கெல்லாம் எங்க மட்டக்களப்பு மக்களின் பிரச்சினை தெரியப்போகுது.

டாம், அப்ப தமிழ் கூட்டமைப்பு புத்திசாலித்தனமான வேலைகள் செய்யுது எண்டு கனவு காணுகிறியளோ.......

"இந்தியாவுடன் சிநேக பூர்வமான சந்திப்பு"

"மகிந்த கூட்டமைப்பை சந்திக்க ஆர்வம்"

"இந்திய துணத்தூதகர திறப்பு விழாவில் கூட்டமைப்பும் கலந்து கொண்டது"

மேற் கூறியவை அண்மையில் வந்த செய்திகள்.

தேர்தல் முடிந்து ஒருமாதமாகியும் கூட்டமைப்பின் இந்திய, சிங்கள நெருங்கிய உறவை வைத்து.....

கூட்டமைப்பு அகதிமுகாம் மக்களைப் பற்றியோ, சிறையில் உள்ளவர்களைப் பற்றியோ, வடக்கு, கிழக்கில் ஒட்டுக்குழுக்களால் நடத்தப்படும் களவு,கடத்தல், கொலை போன்றவற்ரை பற்றி வாய் திறக்காதவர்கள் தான் உங்களுக்கு புத்திசாலியாகத் தெரிந்தால்......

உங்களை போல முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது.

அவர்கள் அக்கறை காட்டுவதெல்லாம் இந்தியாவின் செயலுக்கு ஆமாம் போடுவதாகத்தான் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.