Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரா. சம்பந்தன் கூட்டமைப்புக்கு ஒரு உணர்வுள்ள தமிழனின் பகிரங்க மடல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரா. சம்பந்தன் கூட்டமைப்புக்கு ஒரு உணர்வுள்ள தமிழனின் பகிரங்க மடல்

அன்பான கூட்டமைப்பினரே,

17ம் திகதி எல்லா ஆலயங்களிலும் பிரார்த்தனை செய்ய முடிவெடுத்துள்ளமைக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால்,மே 18ம் திகதி என்ன செய்ய யோசித்துள்ளீர்கள்?. அன்றைய தினத்தில் 40,000 மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை இப்போது உலகமே ஏற்றுக் கொள்ளுகின்றது. உலகத் தமிழர்கள் அத்தினத்தை முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும், போர்க்குற்ற நாளாகவும் அனுஷ்டிக்கின்றார்கள். ஏகாதிபத்திய சிங்கள அரசு அந்தத் தினத்தை வெற்றி விழாவாகக் கொண்டாடத் தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பினராகிய நீங்கள் இந்த நாளில் என்ன செய்ய யோசித்துள்ளீர்கள்? வீட்டைப் பூட்டி உள்ளேயிருந்து ஒப்பாரி வைக்க யோசித்துள்ளீர்களா? இல்லாவிடில், நீங்களும் அந்நாளைப் புலிகளிடமிருந்து உங்களுக்கு விடுதலை கிடைத்த நாளாகக் கொண்டாடப் போகின்றீர்களா? நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்? முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழருக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட உங்களால் பகிரங்கமாக விட முடியாதா? நீங்கள் உண்மையில் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளா? கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 82 வீதத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் உங்களுக்கு வாக்களிக்காதமையினால் அவர்கள் மீது உங்களுக்குக் கோபமிருக்கலாம். அதற்காக அவர்களைப் பழிவாங்கி விட வேண்டாம். உங்களுக்கு வாக்களித்தவர்களுக்காவது கொஞ்சமாவது மனச்சாட்சியுடன் செயற்படுங்கள்.

போர்க்குற்றவாளியான சிங்கள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நம்பி ஏமாற வேண்டாம். சிறீலங்காவின் அரசியல் யாப்பினைத் திருத்துவதற்கு அவனுக்கு உங்களின் ஆதரவு தேவையில்லை. அவன் விரைவில் எதிர்கட்சியிலுள்ள 6 பேரை மந்திரிப் பதவி கொடுத்து வாங்கிவிடுவான். நீங்கள் இந்தியாவை நம்பிப் பகல் கனவு காண வேண்டாம். கிழக்கில் உருவானது போன்ற இன்னொரு மாகாணசபை வடக்கிலும் உருவாக்கப்படும். அது தான் உங்களுக்குச் சிங்கள அரசு கொடுக்கப் போகும் அதிகாரப் பகிர்வாகவிருக்கும். தமிழ்த் தேசியத்தைத் தலை முழுகியதுக்கு இதுதான் இந்தியா உங்களுக்கு வாங்கிக் கொடுக்கப் போகும் பரிசாகும். இரா. சம்பந்தனின் அஜராகப் போக்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது பிளவுபட்டுக் கிடக்கின்றது. அதனை ஒன்றுபடுத்துவதற்கான எந்தவித முயற்சியும் இதுவரையும் உங்களால் எடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியத்தை ஆதரித்த காரணத்துக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் ஒதுக்கப்பட்டனர். அவர்கள் உங்களுக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தமையினால் ஈழத்தமிழர்கள் தமிழ்த் தேசியத்தைப் புறக்கணித்து விட்டார்களென பிழையாகக் கணக்குப்போட வேண்டாம். உங்களுக்கு 18 வீதத்துக்கும் குறைவான ஈழத்தமிழர்கள் மட்டுமே வாக்களித்தார்கள் என்பதனை மறந்துவிட வேண்டாம். இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும்படி ஈழத்தமிழர்களை யாரும் கேட்கவில்லை. ஆயினும், பெரும்பான்மையானவர்கள் அதனைப் புறக்கணித்தார்கள். சிங்களப் பாராளுமன்றத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையே அதற்குக் காரணமாகும். நீங்கள் அங்கு போடப்பட்டுள்ள நாற்காலிகளைச் சூடாக்கவே போகின்றீர்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

இதுவரை நீங்கள் செய்யத் தவறியவற்றை மன்னித்து மறந்து விடுவோம். வருங்காலத்திலாவது ஈழத்தமிழர்களுக்காக துணிவுடன் ஏதாவது செய்யுங்கள். மே 18ம் திகதியை திகதியைத் துக்கதினமாகப் பிரகடனப்படுத்துங்கள். வடக்கிலும் கிழக்கிலும் ஹர்த்தாலுக்கு ஒழுங்கு செய்யுங்கள். முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழருக்காக 18ம் திகதி ஒரு நிமிடமாவது மெளன அஞ்சலி செலுத்துங்கள். அவர்களின் ஆத்மாவாவது சாந்தியடையட்டும்.

யாரடா, இந்தப் பயல் எங்களுக்கு அறிவுரை சொல்ல எனக் கோபப்பட வேண்டாம். உங்கள் மனச்சாட்சியைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள், அது பதில் சொல்லும்.

நன்றி.

இப்படிக்கு,

ஒரு உணர்வுள்ள தமிழன்,

http://meenakam.com/?p=15843

நவாலியூரான்.

http://meenakam.com/?p=15843

[மே 16, மே 17, மே 18 மூன்று நாட்கள் தொடர்ச்சியாக தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை மீனகம் தளத்தில் நேரலையாக உலகத்தமிழர்கள் காணலாம்]

Edited by விடியல்

கிளிநெகச்சியிலும் தமிழருக்கு எதிரான பேரின் வெற்றியை அரசு கொண்டாடப் போகிறதாம். இவ்வாறு பகிரங்கமாக மமதையுடன் அறிவித்து செயற்படும் அதிகார மையத்தை கூட்டமைப்பினர் என்ன செய்துவிட முடியும்.

எதிர்வரும் மே 17ம் திகதி தாயகத்தில் துக்க தினம் அனுஷ்டிக்கும்படி கூட்டமைப்பு வேண்டுகோள்: சமய வழிபாட்டுத் தலங்களில் அமைதியான முறையில் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அனைத்துத் தமிழ் மக்களும் சமயத் தலைவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உலகத்தமிழர்கள் மே மாதத்தில் 12- 19 வரை பல்வேறு நிகழ்வுகளுடன் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு படுத்தி அனுட்டிக்கின்றனர். ஆகவே தாயகத்திலும் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என புலம்பெயர் மக்கள் மற்றும் ஏனையோரும் கேட்டதற்கு அமைய தாயகத்திலும் வருடாந்தம் மே 17 ஆம் திகதியை துக்கதினமாக கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைக் கோரியுள்ளது. உச்சக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை, இலட்சக் கணக்கானோர் பல்வேறு பாரிய பாதிப்புகளுடன் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டமை போன்றவற்றைச் சுட்டிக்காட்டியே இத் துக்கதின அனுஷ்டிப்பைக் கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கோரியுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எமது மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளினாலும் போரினாலும் பெரும்தொகையானோர் உயிரிழந்துள்ளனர். பலர் வேறு பல பாரிய பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளனர். பெருந்திரளானோர் வீடுகளிலும் இருப்பிடங்களிலும் இருந்து வெளியேற்றப்பட்டு வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

2006 நடுப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் காலப்போக்கில் விரிவடைந்து, வன்னிப் பெருநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று இறுதிக்கட்டமாக கடந்த வருடம் 2009 ஜனவரி மாதம் தொடக்கம் மே 18 ஆம் திகதி வரை உக்கிரமாக நடந்தது.

இந்த உச்சக்கட்டப் போரின் போது தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதுடன் மேலும் இலட்சக்கணக்கானவர்கள் வேறு பல பாரிய பாதிப்புகளுடன் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தப் பேரவலம் உலக சரித்திரத்தில் நடந்த பாரிய இப்பேரவலத்தை நினைவு கூரும் வண்ணமாக வருடா வருடம் துக்கதினமொன்றை கடைப்பிடிக்குமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் வேண்டுகின்றோம். இவ்வருடம் 2010 மே 17 ஆம் திகதி திங்கட்கிழமை காலையில் சமய வழிபாட்டுத் தலங்களில் அமைதியான முறையில் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அனைத்துத் தமிழ் மக்களயும் சமயத் தலைவர்களையும் அன்பாக வேண்டுகின்றோம்.

கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர். இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வராசா,ந.சிவசக்தி, பா.அரியநேத்திரன், விநோ நோகராதலிங்கம், ஈ.சரவணபவன், எஸ்.ஸ்ரீதரன், செல்வம் அடைக்கலநாதன், சி. யோகேஸ்வரன், ம.ஆ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, கே. பியசேன ஆகியோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

http://seithy.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தான் தப்ப கூட்டிக்கொண்டு போய் வெளியல போகவிடாம தடுத்தவங்கள கேளுங்கப்பா .....இறந்த மக்களுக்கு வணக்கத்துடன் அஞ்சலிகள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தான் தப்ப கூட்டிக்கொண்டு போய் வெளியல போகவிடாம தடுத்தவங்கள கேளுங்கப்பா .....இறந்த மக்களுக்கு வணக்கத்துடன் அஞ்சலிகள். :lol:

அட கல்லுக்குள் ஈரமாக்கும். என்னமா நடிக்கிறாங்களப்பா.

இவ்வருடம் 2010 மே 17 ஆம் திகதி திங்கட்கிழமை காலையில் சமய வழிபாட்டுத் தலங்களில் அமைதியான முறையில் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அனைத்துத் தமிழ் மக்களயும் சமயத் தலைவர்களையும் அன்பாக வேண்டுகின்றோம்.

அப்படியே புலம் பெயர் கோவில்காரையும் கேளுங்கோ?

தான் தப்ப கூட்டிக்கொண்டு போய் வெளியல போகவிடாம தடுத்தவங்கள கேளுங்கப்பா .....இறந்த மக்களுக்கு வணக்கத்துடன் அஞ்சலிகள். :lol:

தான் தப்பிறதாக இருந்தால் இவ்வளவுகாலமும் இடிபட்டு இருக்க தேவை இல்லை... டக்கிளசை விட அதிக பணத்துக்கு எல்லாரையும் அடகு வைத்து போட்டு சுகமாய் வாழ்ந்து இருக்கலாம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

"இதுவரை நீங்கள் செய்யத் தவறியவற்றை மன்னித்து மறந்து விடுவோம். வருங்காலத்திலாவது ஈழத்தமிழர்களுக்காக துணிவுடன் ஏதாவது செய்யுங்கள்."

வாத்தியார்

..................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.