Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் மாணவிகளைக் கடத்த முற்பட்ட வாகனம் வவுனியாவில் கைப்பற்றப்பட்டுள்ளது ‐ விடத்தல்தீவு மாணவன் பொருட்களைக் கடத்துவதற்காகவே கடத்தப்பட்டுள்ளார் ‐GTN செய்தியாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் சுண்ணாகம் பகுதியில் பாடசாலை மாணவிகள் இருவரைக் கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் தொடர்புடைய வாகனம் வவுனியாவில் கைப்பற்றப்பட்டுள்ளது. அண்மையில் சுண்ணாகம் கந்தரோடைப் பகுதியில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகள் இருவரை வெள்ளை வானில் வந்தோர் கடத்த முற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவத்தில் தப்பித்த மாணவிகள் இருவரும் அருகிலுள்ள சட்டத்தரணி ஒருவருக்குத் தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்து குறித்த வாகனத்தில் இலக்கங்கள் கண்டறியப்பட்டு சுண்ணாகம் காவற்துறையினருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து காவற்துறையினர் மேற்கொண்ட தொடர்விசாரணைகளின் பிரகாரம் வவுனியாப் பகுதியில் இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் சுண்ணாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு குறித்த பாடசாலை மாணவிகள் அடையாள அணிவகுப்பிற்குட்படுத்தப்பட்டனர். மாணவிகள் குறித்த சாரதியை அடையாளம் காட்டியதுடன் சம்பவத்தினையும் உறுதிப்படுத்தினர். எனினும் இந்த வாகனத்தை வாடகைக்குப் பெற்று வந்த இருவரே இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர். எனினும் குறித்த கடத்தல் சம்பவத்திற்கும் சாரதிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது சாரதி யாழ் சிறைச்சாலையில் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இதனிடையே விடத்தல்பளையில் 14 வயதுடைய பாடசாலை மாணவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த மாணவன் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு பெறுமதியான சில பொருட்களை கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது. குறித்த 14 வயதுடைய பாடசாலை மாணவனை சீருடையுடன் அழைத்துச் சென்றவர் சில பொதிகளை ஒப்படைத்திருந்ததாகவும் அந்தப் பொதிகளை வவுனியாவைச் சென்று சேர்ந்தடைந்தவுடன் பறித்துக் கொண்டதாகவும் தெரிய வருகின்றது. சுமார் 40 வயதுடைய பெண் ஒருவரே குறித்த பாடசாலை மாணவனைக் கடத்திச் சென்றிருந்தார். குறித்த மாணவனுக்கு இடங்களை சுற்றிப் பார்ப்பதற்கான ஆசை ஊட்டப்பட்டு குறித்த பொருட்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதால் கடத்திச் செல்லப்பட்ட பொருட்கள், சோதனை நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதால் கடத்தப்பட்ட பொருட்கள் என்ன என்பது பல தரப்புகளிடையேயும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

/www.globaltamilnews.net

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீணையோ நங்கூரமோ மெழுகுதிரியோ எண்டு பக்க சேர்க்கை ஒண்டு செய்திருந்தா செய்திக்கு ..... :lol:

சேர்த்தால் என்ன ? நிச்சயமாக சேர்க்க படவேண்டும். வவுனியா நலன்புரி முகாமில் இருந்து சென்ற யுவதி மீது வல்லுறவு வீணைக்கட்சியினரும் அவர்களோடு திரியும் ஊர்காவாலிகளும் தானாம் மேற்கொண்டனர். சாட்சிகள் இருக்கின்றன.

சேர்த்தால் என்ன ? நிச்சயமாக சேர்க்க படவேண்டும். வவுனியா நலன்புரி முகாமில் இருந்து சென்ற யுவதி மீது வல்லுறவு வீணைக்கட்சியினரும் அவர்களோடு திரியும் ஊர்காவாலிகளும் தானாம் மேற்கொண்டனர். சாட்சிகள் இருக்கின்றன.

காவாலி டக்கியின் காவாலிக் குழுக்களின் கைவரிசை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீணையோ நங்கூரமோ மெழுகுதிரியோ எண்டு பக்க சேர்க்கை ஒண்டு செய்திருந்தா செய்திக்கு ..... :lol:

சேர்த்தால் என்ன ? நிச்சயமாக சேர்க்க படவேண்டும். வவுனியா நலன்புரி முகாமில் இருந்து சென்ற யுவதி மீது வல்லுறவு வீணைக்கட்சியினரும் அவர்களோடு திரியும் ஊர்காவாலிகளும் தானாம் மேற்கொண்டனர். சாட்சிகள் இருக்கின்றன.

காவாலி டக்கியின் காவாலிக் குழுக்களின் கைவரிசை.

இனந்தெரியாத நபர்கள இனம்தெரியலாம் எண்டு .... :lol:

மற்றப்பக்க செய்தி என்னதெண்டத மற்ற மற்ற இடங்களுக்கு போய்த்தானே அறியலாம்...

உங்க ஒருத்தரும் புனிதர் இல்ல, செய்துபோட்டு றோ வில குற்றம் சாட்டுறவை என்னமாதிரி இயங்கினவை எண்டு தெரியாமல்...சொல்லுறனே! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.