Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைச் சிறுத்தைகள் தலைவரால் "கரும்புலி முத்துக்குமார் பாசறை" தொடக்கமாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைச் சிறுத்தைகள் தலைவரால் "கரும்புலி முத்துக்குமார் பாசறை" தொடக்கமாம்

மேலும் படிக்க

http://www.sankathi.com/uploads/images/news/2010/05/03/Arikkai-17-05-2010.pdf

நன்றி - சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைச் சிறுத்தைகள் தலைவரால் "கரும்புலி முத்துக்குமார் பாசறை" தொடக்கமாம்

மேலும் படிக்க

http://www.sankathi.com/uploads/images/news/2010/05/03/Arikkai-17-05-2010.pdf

நன்றி - சங்கதி

முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தை திட்டமிட்டிருந்தபடி சன நடமாட்டமுள்ள புரசைவாக்கம் பகுதியினூடாகக் கொண்டுபோகாமல் தடுத்த காவல்துறையின் பக்கம் நின்று ஊர்வலத்தை திசை திருப்பினார் என்று "காற்றுக்கென்ன வேலி" இயக்குனர் புகழேந்தி ஒரு செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இப்ப என்ன புதிதாக முத்துக்குமாரன் மேல் பாசம்? :o

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன புதிதாக முத்துக்குமாரன் மேல் பாசம்? :o

நம்மட யாழ்கள சாத்திரி முன்பு எழுதிய ஆக்கமான 'திருகுதாளத்திருமாவும் திருந்தாத புலம்பெயர்ந்த தமிழர்களும்' ஞாபகத்துக்கு வருகின்றது.

அடுத்த தேர்தல் வரப்போது அதுதான் இப்பவே அடிப்போடுறார்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனுக்காக ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத ஜெயலலிதா.. கருணாநிதி போன்ற மனித நேயமற்ற மிருகங்களை காட்டிலும் அரசியலோ என்னவோ.. முத்துக்குமாரை நினைவு கூறும் வகையில் செய்யப்படும் இதை அரசியல் என்று மட்டும் நோக்காமல் அதை கடந்தும் பார்க்க வேண்டும்.

நம்மால் தான் என்ன செய்ய முடியும். அவர்கள் வெளவால் கூட்டத்தோடு கவுந்து கிடந்துதான் வாழ்ந்தாகனும் என்ற நிலையில் உள்ளவர்கள். அவர்களிடம் போய் அதிகமாக எதிர்பார்ப்பது தான் நம் முட்டாள் தனம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனுக்காக ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத ஜெயலலிதா.. கருணாநிதி போன்ற மனித நேயமற்ற மிருகங்களை காட்டிலும் அரசியலோ என்னவோ.. முத்துக்குமாரை நினைவு கூறும் வகையில் செய்யப்படும் இதை அரசியல் என்று மட்டும் நோக்காமல் அதை கடந்தும் பார்க்க வேண்டும்.

நம்மால் தான் என்ன செய்ய முடியும். அவர்கள் வெளவால் கூட்டத்தோடு கவுந்து கிடந்துதான் வாழ்ந்தாகனும் என்ற நிலையில் உள்ளவர்கள். அவர்களிடம் போய் அதிகமாக எதிர்பார்ப்பது தான் நம் முட்டாள் தனம்.

இவரை மாதிரி அரசியல்வாதிகளிடம் எதையும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. வந்தவரை லாபம் என்று இருக்கலாம் என்றாலும் சிலவற்றை யோசிக்கவேண்டி இருக்கு.

உதாரணத்துக்கு போனவருடம் ஈழத்தமிழர்பிரச்சினையை இந்திய கம்யூனிஸ்ட் கையில் எடுத்தபோது, கலைஞர் மனித சங்கிலி, கடிதம் போடுகிறேன் என்றெல்லாம் ஆரம்பித்து இறுதியில் நீர்த்துப்போகச் செய்தார்.

இப்போது முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்து ஒரு ஆண்டு பூர்த்தியான இத்தருணத்தில் திருமா இப்படி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். இந்த நாட்களில் தமிழகத்தில் ஏற்படப்போகும் எந்த ஒரு சிறு எழுச்சியையும் நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிபோல் தோன்றுகிறது.

அத்துடன் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தில் இளைய சமுதாயத்தினரை முற்றாக ஈடுபடவிடாது, தன்பக்கமும் இழுக்கும் முயற்சியாகவும் இது இருக்கலாம். அதுதான் இந்த திடீர் கரும்புலிப் பாசம் யோசிக்க வைக்குது..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கிய தமிழினத் துரோகி தொல்.திருமாவளவன் – இராவணன்

[ஆதாரம் இணைப்பு] தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்துகொண்டிருக்கிறது. அவற்றில் சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல்.திருமாவளவன் என்பவரே.

ஈழத்தமிழர்களைக்காக்க சென்னையில் மாநாடு, தஞ்சையில் மாநாடு, அங்கே மாநாடு இங்கே மாநாடு எழும் தமிழீழம் மாநாடு என்று கூறிக்கொண்டு பின்னால் ஈழம் எழாத வகையில் உட்குத்து செய்த பெருமை தொல்.திருமாவளவன் அவர்களையே சாரும். இவர் செய்ததில் மிகக்கொடுமையான காரியம் எதுவென்றால் கூட்டணிக்கட்சித்தலைவர் மு.கருணாநிதிக்கு நன்றிக்கடனாக தோழர் முத்துக்குமரன் அவர்களால் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியை அடக்கி ஒடுக்கியதே.

கடந்த சனவரி 29 வியாழன் அன்று முத்துக்குமரன் தீக்கு தன்னை இரையாக்கி தமிழக மாணவர்களிடம் எழுச்சியை உண்டாக்கிய தொடக்கத்திலிருந்து தொல்.திருமாவளவனின் சகுனித்தனம் அதிகமாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. இம்மாணவர் எழுச்சியை வளரவிட்டால் ஆளும் கட்சியான திமுக அரசு கலைக்கப்படும். இதனால் தனக்கு நட்டம் என்று தொல்.திருமாவளவனின் மூளை வேலை செய்துவிட்டது. ஏனென்றால மாணவர்கள் எழுச்சி என்பது எப்படிப்பட்டது என்பது அனைத்து மக்களும் அறிந்ததே.

முத்துக்குமரனின் கோரிக்கையான “எனது உடலை துருப்புச்சீட்டாக வைத்து போராடுங்கள்” என்று சொன்னதற்கிணங்க மாணவர்கள் அவரின் உடலை மருத்துவமனைக்கு அருகிலேயே பெரிய மைதானம் எதிலாவது அனைத்து மக்களும் பார்வையிடும் வகையில் வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் திமுக வின் கூட்டணி கட்சியினரும் ஆளும் அரசின் காவல்படையுன் இணைந்து முத்துக்குமரனின் வீடு உள்ள கொளத்தூருக்குதான் கொண்டு செல்ல வேண்டும் என்று மாணவர்களை மிரட்டி கொண்டு சென்றனர்.

சென்னையிலிருந்து முத்துக்குமரனின் சொந்த ஊரான தூத்துக்குடி கொழுவைநல்லூருக்கு உடலை கொண்டு சென்று தமிழகம் முழுக்க எழுச்சியை ஏற்படுத்தலாம் என்று மாணவர்கள் முடிவு செய்தனர். ஆனால் “உடல் அழுகிவிடும்” என்றுக்கூறி ஐஸ் பாக்ஸ் இருக்கும் இக்காலத்தில் திமுக அரசின் கூட்டணியிலுள்ள தலைவர் தடுத்துவிட்டார்.

சரி அடக்கத்தினையாவது தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் வரும் வகையில் அடக்கத்தினை ஞாயிறு(பெப் 1) அன்று வைக்கலாம் என்று மாணவர்கள் கூறினார்கள். ஆனால் திமுக அடிவருடி கட்சிகளின் முயற்சியால் சனிக்கிழமை( சனவரி 31) அன்று வைக்க வேண்டும் என்று முடிவாகிவிட்டது.

சனவரி 31 அன்று கொளத்தூரிலிருந்து ஈகி முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. போகும் வழியில் பெரம்பலூரிலிருந்து புரசைவாக்கம் வழியாக சென்றால் இன்னும் அதிகமாக மக்களிடம் எழுச்சி உண்டாகும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவார்கள் என்று மாணவர்கள் வற்புறுத்தி மறியல் செய்தனர். அப்பொழுது வாகனம் ஒன்றில் நின்றுகொண்டு வந்த தொல்.திருமாவளவனின் வழிகாட்டலில் திருமாவளவனின் உடன் இருக்கும் வன்னியரசு என்பவர் சில ஆட்களுடன் ஓடி வந்து மாணவர்களிடம் புரசைவாக்கம் வழி செல்ல இயலாது என்று கூறினார். மாணவர்களும் தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருந்தனர். இதனால் வெகுண்ட திருமாவளவனின் கையாட்கள் அண்ணன் திருமாவின் பேச்சை கேட்க மாட்டீர்களா என்று முதன்முறையாக இரு மாணவர்களை அடித்து மிரட்டினர். அப்பொழுதுதான் திமுக அரசின் கையாளாக மாணவர் எழுச்சியை ஒடுக்க காக்கிச்சட்டை போடாத அரசின் கையாளாக திருமாவளவன் வந்துள்ளார் என்பது மாணவர்களுக்கு தெரியவந்தது.

அந்த மாணவர்களுக்கு அமைப்போ, தலைமையோ ஏதும் கிடையாது. இதனால் தங்களால் இவர்களை எதிர்க்க இயலாது என்று பின்வாங்கிவிட்டனர். பின்னர் திமுக அரசின் எண்ணம் போல் திருமாவளவன் வழிநடத்திச்சென்றார். பின்னர் மயானத்தினை நெருங்கும் வேளையில் இரவு 9.30 மணியளவில் திமுக அரசு முத்துக்குமரனின் தியாகத்தினால் ஏற்பட்ட ஈழ ஆதரவு எழுச்சியை கண்டு பயந்து அதை ஒடுக்க அடுத்த திட்டமாக இரவோடு இரவாக கல்லூரிகளை காலவரையற்று மூட உத்தரவிட்டது.

திமுக அரசின் இவ் அறிக்கையினால் வெகுண்டெழுந்த மாணவர்கள் ஈகி முத்துக்குமரன் கூறியபடி “எமது உடலை துருப்புச்சீட்டாக வைத்து போராடுங்கள்” என்பதற்கிணங்க “திமுக அரசின் உத்தரவினை திரும்பப் பெறாவிடில் முத்துக்குமரனின் சடலத்தினை எரிக்க விடமாட்டோம்” என்று சாலையின் நடுவில் வைத்து மறுபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அனைத்து பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து துணைநின்றனர்.

அப்பொழுது மறுபடியும் திமுக அரசின் கையாளான திருமாவளவனின் கையாள் வன்னியரசு மாணவர்களிடம் வந்து “இந்த உடலை துருப்பு சீட்டாக வைத்து போராடுவது முத்துக்குமாரை அவமானப் படுத்துவதாகும் என்று கூறியுள்ளார். அபொழுதுதான் மாணவர்களுக்கு புரிந்தது முத்துக்குமரனின் கொள்கை என்ன என்பதும் அவரது நோக்கம் என்ன என்பதும் விடுதலைச்சிறுத்தைகள் என்ற கட்சியின் முக்கிய பொறுப்பாளர் வன்னியரசுவுக்கு சுத்தமாக தெரியாது என்பது. அப்பொழுது, திருமாவளவனின் கையாட்கள் இரண்டாவது முறையாக மிகவும் மோசமாக மாணவர்களை தாக்கினர். ஊர்தியின் மேல் அமர்ந்து இருந்த செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து கீழே தள்ளிவிட்டு ஊர்தியை கைப்பற்றி சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். அப்பொழுது வன்னியரசு மாணவர்களை திருமா அண்ணாவின் சொல்லை கேட்காத உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி உடலை எரித்துவிட்டு வந்து உங்களை கவனித்துக்கொள்கிறேன் என்று மிரட்டிவிட்டுச்சென்றார். இவைகள் எல்லாம் தொல்.திருமாவளவனின் பார்வையில்தான் நடைபெற்றது.

உண்மையான உணர்வோடு முத்துக்குமரன் தீக்குளித்ததிலிருந்து இறுதி வரை வந்த அம்மாணவர்கள் இவர்களின் செயல்பாடுகளால் தங்களின் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தங்கள் இரு சக்கர வண்டிகளை நிறுத்தி வைத்திருந்த கொளத்தூருக்கு வேக வேகமாக ஓடிவந்தோம்.

இதைப்பற்றிய செய்தியினை தமிழ் ஊடகங்கள் வெளியிடவில்லை. ஆனால் இந்திய எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளிதழ் மட்டும் வெளியிட்டிருந்தது. செய்தியினை முழுவதும் போடாமல் சிறிதளவு வெளியிட்டிருந்தது. அப்படி முழுவதும் போட்டிருந்தால் அப்பத்திரிக்கை அலுவலகத்தினை குண்டர்கள் எரித்திருப்பார்கள்.

அப்பத்திரிக்கை செய்தியும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

exprss.jpg

அப்பொழுது மட்டும் திருமாவளவன் என்ற நபரும், விடுதலைச்சிறுத்தைகள் என்ற கட்சியும் இல்லாமலிருந்தால் கண்டிப்பாக தமிழகத்தில் மாணவர் பேரெழுச்சி 1983 காலகட்டத்தில் ஏற்பட்டதைப்போல் உண்டாகியிருக்கும் திமுக அரசு கலைந்திருக்கும் அல்லது தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களுக்கு கட்டுப்பட்டிருக்கும். ஈழமக்களின் எதிர்ப்பார்ப்பும் நிறைவேறி இருக்கும்.

ஈழமக்களைப்பற்றி வாயில் மட்டும் பேசி வரும் இப்படிப்பட்ட பச்சைத் துரோகி தொல்.திருமாவளவனை தமிழக மக்களும், தமிழீழ மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்..

தொடரும்….

இராவணன்

http://meenakam.com/?p=4508

அப்பத்திரிக்கை செய்தியும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

கருத்துத்திணிப்பு வன்முறையாளர்கள் – யார்….? மாணவர்களா ..? வி.சி. தலைவர் திருமாவா? வன்னி அரசுக்கு இராவணன் பதில்

தமிழகத்தில் தன்னுயிர் ஈந்து எழுச்சியூட்டிய எழுச்சித்தமிழன் முத்துக்குமரனின் இறுதி ஊர்வலத்தில் விடுதலை சிறுத்தைகளும் அதன் தலைவர் தொல்.திருமாவும் செய்த அக்கிரமங்களை நான் எழுதிய கட்டுரைக்கு வன்னி அரசு மறுப்பாக நீண்ட கட்டுரையை வரைந்துள்ளார். அது விடுதலைச்சிறுத்தைகளின் தேர்தல் பிரச்சார (பரப்புரை) கட்டுரையாக அமைந்துள்ளது.

அதில் அவர் திராவிட அரசியலுக்கு மாற்றான அமைப்பாக வளர்த்து வருவதாக பெருமைப்பட்டுள்ளார். ஈழப்பிரச்சினையில் வி.சி. மட்டுமே 25 ஆண்டுகளாக போராடுகிறது என்றும் கொத்து கொத்தாய் சிறுத்தைகளைப்போல் யார் சிறை சென்றார்கள் என தம்பட்டம் அடித்துள்ளார்.

இறுதியாக எழுச்சித்தமிழன் முத்துக்குமரன் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்னவென்று தெளிவுபடுத்தியுள்ளார். அவர் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் “மாணவர்கள் பெயரில் ரவுடித்தனம் செய்த சில பேர்வழிகள்.” என குறிப்பிடுகின்றார்.

மேலும் “தலைவர் பழ.நெடுமாறன் , வைகோ, வெள்ளையன், நல்லக்கண்ணு ஆகியோரோடு எங்கள் தலைவர் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் காத்திருக்கின்றார். அப்போது “ யாரோ தகராறு செய்கிறார்கள் முத்துக்குமாரை சுமந்து வரும் வண்டி நடு ரோட்டிலேயே நிற்கிறது” என்று சொன்ன போது அண்ணன் வைகோ அவர்களும் எங்கள் தலைவரும் ஒரு சேர “இது தவறானது உடனே போய் வாகனத்தை இழுத்து வாருங்கள் என சொன்ன போது நானும்(வன்னி அரசு) சிலரும் அங்கே போய் சொல்லிப்பார்த்தோம் யாரும் எழுவதாக தெரியவில்லை, இயக்குநர் சேரன், ராம் ஆகியோர் கெஞ்சிப்பார்த்தார்கள் மறியலில் ஈடுபட்டோர் எழவில்லை, கல்லூரிகளை திறந்தால்தான் நாங்கள் எழுவோம் என்றார்கள். அப்பொழுது நான் இப்படி நடுரோட்டில் உட்கார்ந்து அரசியல் பண்ணுவது சரியா..? நாம் எல்லோரும் அமைதியாக முத்துக்குமரனை எரியூட்டிய பின் கோபாலபுரத்தையோ அறிவாலயத்தையோ முற்றுகையிடுவோம் அதற்கு நீங்கள் தயாரா..? என கேட்டேன். ஆனால் யாரும் அதற்கு பதில் சொல்லாமல் “ கல்லூரிகளை உடனே திறந்தால்தான் நாங்கள் எழுந்திருப்போம் என்று மீண்டும் மீண்டும் கத்தி அடம்பிடித்தனர். அரசு எந்திரத்தின் யதார்த்தத்தை கூடப்புரிந்துகொள்ள முடியாத அவர்களிடம் பேசி என்ன பயன்..? ஆகவே வண்டியை மறித்து நின்றவர்களை அப்புறப்படுத்தினேன்” மூலக்கொத்தளத்தில் காத்திருந்த தலைவர்கள் வீரவணக்கம் செலுத்திய பின் முத்துக்குமாரின் வித்துடல் எரியூட்டப்பட்டது……………” என தொடர்கிறார்.

நாம் கேட்கும் கேள்விகள் இதுதான் “ திருமாவிடமும் வைக்கோவிடமும் யாரோ தகராறு செய்கிறார்கள் முத்துக்குமரனை சுமந்து வரும் வண்டி நடுரோட்டில் நிற்கிறது என சொன்னபோது இருவரும் ஒரு சேர இது தவறானது உடனே போய் வாகனத்தினை இழுத்து வாருங்கள் என்று சொன்னதாக குறிப்பிடும் வன்னியரசு அவர்களே உங்கள் தலைவருக்கு தமிழக அரசு கல்லூரி விடுதிகளை காலவரையற்று மூடியதால்தான் மாணவர்கள் போராடுகிறார்கள் என்ற செய்தி தெரியுமா..? தெரியாதா..?

தெரிந்திருந்தால் மாணவர்கள் பக்கம் நின்று போராடாமல் போனது ஏன்..? எழுச்சித்தமிழன் முத்துக்குமார் உடலை எரியூட்டியபின் போராடலாம் என்று மாணவர்களிடம் கூறினேன் என்றீர்களே..

எழுச்சித்தமிழன் முத்துக்குமரனின் மரண சாசனத்தினை படித்துப்பார்த்தீர்களா நீங்கள்……?

“என் உடலை காவல் துறையினர் அடக்கம் செய்துவிட முயலும் விடாதீர்கள் என் பிணத்தைக் கைப்பற்றி அதை புதைக்காமல் ஒரு துருப்புச்சீட்டாக வைத்திருந்து போராட்டத்தை கூர்மைப்படுத்துங்கள்” என்று எழுச்சித்தமிழன் முத்துக்குமரன் இறுதி சாசனத்தில் கூறியுள்ளார்.

இதனைத்தானே மாணவர்களும் பின்பற்றினார்கள் , கல்லூரி விடுதியை திறக்கவும் மாணவர்கள் போராட்டம் தொடரவும் எழுச்சித்தமிழன் முத்துக்குமரன் சொன்ன வழியில் அவரது உடலை துருப்புச்சீட்டாக பயன்படுத்தினார்கள், இதற்கு பொதுமக்களும் ஆதரவு தந்தார்கள்.

அந்தப் போராட்டத்தை உடைத்து அரசு இயந்திரத்துக்கு நன்றி விசுவாசம் காட்டியதைத்தான் துரோகம் என்கிறோம்.

காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும் விடாதீர்கள் என்றார் எழுச்சித்தமிழன் முத்துக்குமரன் நீங்களோ காவல் துறைக்கு பதிலாக தமிழர் விரோத காங்கிரஸ் அரசின் கூலிப்படை போல் எழுச்சித்தமிழனின் உடலை களவாடி தமிழர் எழுச்சியை சீர் குலைத்துவிட்டீர்கள்.

இன்னும் விளக்கமாக கேட்கிறோம் எழுச்சித்தமிழன் முத்துக்குமரன் இறக்கும் தருவாயில் அண்ணன் பிரபாகனிடம் உடனடியாக தகவல் கொடுங்கள், திருமாவளவனுக்கு தகவல் கொடுங்கள் என்று உங்கள் தலைவரை குறிப்பிட்டார் என பெருமைப்படும் தோழர் வன்னி அரசுவே அந்த எழுச்சித்தமிழன் முத்துக்குமரனின் எழுச்சியை உங்கள் தலைவர் நீர்த்துப்போகவைக்க முன் வரிசையில் நிற்கலாமா……………….?

எழுச்சித்தமிழன் முத்துக்குமரன் தனது உடலை சட்டக்கல்லூரி மாணவர்கள் கைப்பற்றி அதை புதைக்காமல் ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்துங்கள் என்றுதானே சொன்னார்.

திருமாவிடம் ஒப்படையுங்கள் என்று சொல்லவில்லையே…… அதை மீறி மாணவர்களிடம் இருந்து விசி யினர் ரவுடித்தனம் செய்து முத்துக்குமரன் உடலை கைப்பற்றினீர்கள்…? இது தமிழர் எழுச்சிக்கு செய்த துரோகம் இல்லையா…? ஊர் நாட்டாண்மை செய்ய திருமாவுக்கு என்ன தகுதியுள்ளது. வைகோவும் சேர்ந்துதான் சொன்னார் என்றால் மதிமுக காரர்கள் மாணவர்களை அடிக்க வரவில்லையே..

வன்னி அரசு அவர்களே வாக்குமூலமாக தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் “அரசு எந்திரத்தின் யதார்த்தத்தினை கூடப்புரிந்துகொள்ள முடியாத அவர்களிடம் பேசி என்ன பயன்..? ஆகவே வண்டியை மறித்து நின்றவர்களை அப்புறப்படுத்தினேன்” என்கிறார்.

மாணவர்களிடமிருந்து எழுச்சித்தமிழன் முத்துக்குமரனின் உடலை கைப்பற்ற சொன்ன சக்தி யார்…….?

எதற்காக வைகோ, ராமராஸ், நெடுமாறன், வெள்ளையன் போன்றவர்கள் அமைதியாக இருந்த பொழுது தனது அடியாட்கள் மூலம் எழுச்சித்தமிழன் முத்துக்குமார் உடலை கைப்பற்ற திருமா துடித்தார்……….?

இப்படிப்பட்ட தமிழ் இனத்துரோகத்தினை சுட்டிக்காட்டினால் எங்கள் திருமா ஊருக்கு வெளியே இருந்த சேரி மக்களை பொதுத்தளத்திற்கு கொண்டுவந்ததோடு பொதுத்தளத்தில் அதிகாரப்பங்கீட்டு யுத்தம் நடத்திவருபவர். என குற்றம் சொல்வதா..? என திசைமாற்றுகின்றார் வன்னி அரசு.

எங்கள் குற்றச்சாட்டின் மற்றொன்று சேரி மக்களை விடுவிக்க திருமா செய்தது என்ன…….? எல்லா பகுதிகளிலும் சேரி மக்கள் விடுதலை பெற்றுவிட்டனரா……..? இன்னும் மலத்தினை வயில் திணிப்பதும், ஊருக்குள் சுவர் கட்டுவதும், பாலியல் வன்முறைகள் என சேரிமக்கள் படும்பாட்டை ஒய்யார வாழ்வை எட்டிய திருமா எப்படி அறிவார்..?

இது ஒரு புறம் இருக்கட்டும்……..

ஈழமக்களையும் தமிழக மீனவர்களையும் கொன்றுக்குவித்த காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று தமிழகம் கொதித்த பொழுது காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்துவிட்டு நாங்கள் காங்கிரசை நாங்கள் புல் பூண்டு இல்லாமல் ஆக்குவோம் என அன்றே பேசினோம் என்று கட்டுரை வரைவது நகைப்பாக உள்ளது.

செயலலிதாவை ஒரு போதும் ஈழ விடுதலைக்கு ஆதரவானவர்கள் என்று மாணவர்கள் ஒரு போதும் கருதியதில்லை ஆனால் காங்கிரசை எதிர்க்கும் போது பலன் அடைபவர்களாக அவர்கள் இருந்தார்கள். நாம் காங்கிரசை ஒழிப்பதில் உள்ள நோக்கத்தினை புரிந்துகொள்ளாமல் அவர்கள் பயனடைகிறார்களே என ஓலமிடுவது அரசியல் வியாபாரமில்லையா……..?

எழுச்சித்தமிழன் முத்துக்குமரன் ஈழமக்களுக்கு குறிப்பிட்டதைப்போல “தாய்த்தமிழகம் உணர்வுப்பூர்வமாக உங்கள் பக்கம்தாம் நிற்கிறது, வேறு ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே” என்றார். விசி கட்சித்தலைவர் திருமாவளவனையும் சேர்த்துத்தான் எழுசித்தமிழன் முத்துக்குமரன் சொல்லியுள்ளார் என்பதை மறந்துவிடாதீர்கள்.

நீங்கள் ரவுடித்தனம் செய்துவிட்டு மாணவர்கள் போர்வையில் ரவுடிகள் என குறிப்பிடுவதா…? மாணவர்கள் போராட்டத்தினை மற்றவர்கள் ஆதரிக்க கூடாதா..?

“இன்றைக்கு திராவிட அரசியலுக்கு மாற்றாய் வளர்த்தெடுக்கபடுகிற அரசியல் தமிழ் தேசிய அரசியல். அந்த அரசியலை முழு வீச்சாய்ப் பரப்பிவருபவர் திருமாவளவன் தான்” என குறிப்பிடுகிறார் வன்னி அரசு.

இது வியப்பாகவும் நகைப்பாகவும் உள்ளது. திராவிட அரசியலுக்கு எதிரான தமிழ் தேசிய அரசியலை முன்னெடுப்பவர் திருமாவா..? சீட்டுக்காக திராவிட கட்சிகளிடம் நக்கிப்பிழைக்கும் இவர் திராவிட கட்சிகளுக்கு மாற்றா….?

இந்திய தேசிய அரசியலில் கரைந்து போன மண்திட்டு (விடுதலைச்சிறுத்தை தலைவர் திருமா) தமிழ் தேசியத்தை வளர்க்க இயலுமா?

கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று நினைக்குமாம் பூனை அதே போல சேரி மக்களையும் தமிழக மக்களையும் தமிழீழ மக்களையும் ஏமாற்றிவிட்டோம் என்று திருமா கனவு காணவேண்டாம்.

தமிழ் இனத் துரோகத்திற்கு மாணவர்படை முடிவு கட்டியே தீரும், திருமா அன்று எங்கிருப்பார்…? இப்பொழுது போல் தில்லியில்தான் இருப்பார்………..

தொடரும்……….

[ மீனகம் தளத்தினருக்கு , கடந்த ஓராண்டாக எங்கள் நெஞ்சில் அடைத்திருந்த உண்மைகளை உங்கள் தளத்தின் வாயிலாக வெளியிட்டமைக்கு மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது முதல் கட்டுரையை வெளியிட்ட உங்கள் தளத்துக்கு பல நெருக்கடிகள் வந்திருக்கும் என்று எண்ணுகிறேன். இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக தமிழக மாணவர்களின் மனதில் இருப்பதை இம்மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன். வாய்ப்பிருந்தால் இக்கட்டுரையை வெளியிடுங்கள். வெளியிடவில்லையென்றாலும் கவலையில்லை.

நன்றி

இராவணன் ]

[வணக்கம் அன்பிற்கினிய உறவுகளே,

ஆரோக்கியமான விவாதங்களுக்கும், ஆதாரபூர்வமான செய்திகளுக்கும் எமது மீனகம் தளத்தில் என்றும் இடமுண்டு.

--- மீனகம் ]

தொடர்புடையவை:

துரோகி தொல்.திருமாவளவன் என்ற இராவணனின் கட்டுரைக்கு வன்னி அரசு மறுப்பு

முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கிய தமிழினத் துரோகி தொல்.திருமாவளவன் – இராவணன்

http://meenakam.com/?p=6340

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவாரி செய்ய குதிரையுமில்ல, திரத்த நாயுமில்ல, சொம்பு தர அக்காளுமில்ல.... போயிட்டு நாளைக்கு வாரன். :lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.