Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் தீவிரமடைந்து வரும் சிங்களக் குடியேற்ற முயற்சிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரின் முடிவு தமிழருக்குப் பாதகமாக அமைந்து விட்டதால் அரசாங்கம் தமிழரை எல்லா வழிகளிலும் வஞ்சிக்கத் தொடங்கியுள்ளது. சிங்களக் குடியேற்றங்களும் அதன் மூலம் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்களும் இந்த வஞ்சிப்பு நாடகத்தின் ஒரு அங்கமாகவே தெரிகிறது

கடந்த வருடம் போர் முடிவுக்கு வந்தபோது- சிங்களக் குடியேற்றங்கள் வடக்கு கிழக்கில் பரவும் ஆபத்து இருப்பதாகப் பலரும் எதிர்வு கூறியிருந்தனர்.

அப்போது அரசாங்கம் வடக்கு-கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் எண்ணம் ஏதுமில்லை என்றும், முன்னர் குடியிருந்தவர்களை மட்டுமே அங்கு மீளக்குடியமர்த்துவோம் என்றும் பலமுறை வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.ஆனால் இப்போது வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்ற ஆபத்துகள் பல்வேறு வடிவங்களில் தோன்ற ஆரம்பித்துள்ளன.

வவுனியா வடக்கு. மன்னார், மணலாறு என்று வடக்கில் சிங்களக் குடியேற்ற ஆபத்து விரிவடைந்து செல்கிறது.கிழக்கில் ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் வடக்கிலும் இது முனைப்படைய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக புதிய அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் பதவியேற்ற பின்னர் இதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. மணலாற்றுப் பகுதியில் உள்ள கொக்கிளாய் பறவைகள் சரணாலயப் பகுதிக் காடுகள் அழிக்கப்பட்டமை முதலாவது சம்பவம்.

ஆறாயிரம் ஏக்கர் கொண்ட கொக்கிளாய் சரணாலயத்தின் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு காடுகள் புல்டோசர்கள் மூலம் அழிக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன.

இதனால் ஆயிரக்கணக்கான பறவைகளின் தங்குமிடங்கள் அழிக்கப்பட்டு அவை நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டுள்ளன. கொக்கிளாய் தமிழர்கள் பாரம்பரியாமாக வாழ்ந்து வந்த பிரதேசம். இந்தப் பகுதியில் இருந்த தமிழர்கள் ஆயுதபலத்தின் மூலம் வெளியேற்றப்பட்டது கடந்த கால வரலாறு.

இதன் பின்னர் கொக்கிளாய் அடங்கலான மணலாறுப் பிரதேசம் சிங்களக் குடியேற்றங்களால் நிரப்பப்பட்டது. இங்கு மேலும் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு வசதியாகவே கொக்கிளாய் பறவைகள் சரணாலயக் காடுகள் அழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மை நிலை என்னவென்று அரசாங்கம் வாய் திறக்கவேயில்லை. அரசியல்வாதிகளின் பின்புல ஆதரவுடன் தான் இந்த காடு அழிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே அதற்கான முழுப்பொறுப்பும் அரசாங்கத்திற்கே உரியது.

மணலாற்றில் சிங்களக் குடியேற்றங்கள் விஸ்தரிப்பானது அரசாங்கத்தின் வடக்கு-கிழக்கு பிரிப்புக்கு முக்கிய தேவையாக உள்ளது. அரசியல் தீர்வு வடக்கு-கிழக்கு இணைப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது தமிழர் தரப்பின் வேண்டுகோளாக மாறியுள்ளது. இந்தநிலையில் இந்தப் பகுதியில் அதிகரித்து வரும் சிங்களக் குடியேற்றங்கள் தமிழரின் கோரிக்கையை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளாகவே தோன்றுகிறது. இன்னொரு புறத்தில் மன்னார் மாவட்டத்தின் மடுவைச் சுற்றிய பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.

மடு வீதி ரயில் நிலையத்தில் இருந்து கட்டுக்கரைக்குளத்துக்குச் சமாந்தரமாக 5கி.மீ நீளமான பிரதேசத்தில் 250 சிங்களக் குடும்பங்களை குடியமர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவர்கள் கடந்த காலங்களில் புலிகளால் விரட்டப்பட்டவர்கள் என்று அரசாங்கம் கூறுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. மிகிந்தலையில் அசோகபுர என்ற புதிய கிராமம் அமைக்கப்பட்டு குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்களை மடுவில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

இந்தளவுக்கும் அது சிங்கள மக்களின் பாரம்பரிய வாழ்விடமாக இருக்கவில்லை என்பது முக்கியமானது. 1881ம் ஆண்டு நடத்தப்பட்ட முதலாவது சனத்தொகைக் கணக்கெடுப்பில் 142 சிங்களவர்களே மன்னார் மாவட்டம் முழுவதிலும் வசித்தனர். இது மன்னாரின் மொத்த சனத்தொகையில் 0.76 சதவீதமாகும். ஆனால் 1981ம் ஆண்டு இறுதியாக நடத்தப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பில் மன்னார் மாவட்டம் முழுவதிலும் 8710 சிங்களவர்கள் இருந்தனர்.

இது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 8.14 சதவீதமாகும். 1971ம் ஆண்டுக்குப் பின்னரே இங்கு அதிகளவிலான சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டன. மரமுந்திரிகைச் செய்கை என்ற போர்வையில் இங்கு சிங்களக் குடியேற்றங்களை அரசாங்கம் அமைத்தது. இதன் காரணமாக 1971இல் 3568 ஆக இருந்த சிங்களவர்களின் எண்ணிக்கை 1981இல் 8710 ஆக உயர்ந்தது. இப்படித்தான் மன்னாரில் சிங்களவர்களின் சனத்தொகை அதிகரித்ததே தவிர மன்னாரை சொந்த இடமாகக் கொண்ட சிங்களவர்கள் என்று அவர்களைக் கூற முடியாது.

ஏற்கனவே மிகிந்தலையில் இவர்களுக்கென்று தனியான கிராமம் உருவாக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ள நிலையிலும் மன்னாரில் மீளக்குடியேற்ற அரசாங்கம் முனைவது உள்நோக்கம் கொண்ட செயலாகவே தெரிகிறது. அத்துடன் இந்த மடுப் பகுதி மன்னார் அரசஅதிபரின் நிர்வாகத்துக்குட்பட்டதாக உள்ள போதும் இந்த மக்களை குடியமர்த்தும் பணியை அனுராதபுர அரசாங்க அதிபரிடம் அரசாங்கம் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது நிச்சயம் உள்நோக்கம் கொண்ட செயலே- தவிர வேறேதும் இருக்க முடியாது. மடு புனித தேவாலயத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் தமிழரின் ஆதிக்கத்தில் இருந்து கைப்பற்றும் நோக்கிலேயே இந்த முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. அதேவேளை இன்னொரு புறத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் வவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவ அரசாங்கம் தயாராகி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன

மகாவலி ஜி வலயம் கலாவௌ குளத்தை அடிப்படையாகக் கொண்டு அனுராதபுரம், குருநாகல், மாத்தளை மாவட்டங்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டது. அங்கு சுமார் 1 இலட்சம் பேர் குடியேற்றப்பட்டுள்ளனர். அனைவருமே சிங்களவர்கள் தான். இங்கு மூன்றாவது தலைமுறையினருக்கு காணிகளை ஒதுக்க முடியாதிருப்பதால் வவுனியா வடக்கு ஆற்றங்கரையோரங்களில் அவர்களை குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பிரதேசத்தை உள்ளடக்கியது. கனகராயன் ஆறு போன்ற ஆறுகள் நிறைந்த வளமான பிரதேசம் இது. மணலாற்றின் வடக்குப் பகுதியான இந்தப் பகுதியில் புதிய சிங்களக் குடியேற்றங்கள் நிறுவும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. மகாவலி ஜி வலயத்தில் உள்ளவர்களின் மூன்றாவது தலைமுறையினரை காணிகளை வழங்கி குடியேற்ற முனையும் அரசு- ஏற்கனவே இந்தப் பகுதியில் பாரம்பரியமாக வசித்து இடம்பெயர்ந்த மக்களுக்காக எதையும் செய்யவில்லை.

1980 களின் நடுப்பகுதியில் மணலாறு கிராமங்களில் இருந்து துரத்தப்பட்ட தமிழர்களை மீளக்குடியேற்ற எந்த நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை. ஆனால் தமிழர்களின் காணிகளில்- அவர்களிடம் குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்ட பண்ணைகளை மீளப்பெற்று சிங்கள மக்களிடம் ஒப்படைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இவ்வாறாக வடக்கு-கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் ஆபத்தான ஒரு பாதையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டுள்ளன. இதன் விளைவாக வடக்கு-கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் பறிபோவதுடன் அவர்களைச் சொந்த நிலங்களிலேயே சிறுபான்மையினராக்கும் அவலம் தோன்றி வருகிறது.

போரின் முடிவு தமிழருக்குப் பாதகமாக அமைந்து விட்டதால் அரசாங்கம் தமிழரை எல்லா வழிகளிலும் வஞ்சிக்கத் தொடங்கியுள்ளது. சிங்களக் குடியேற்றங்களும் அதன் மூலம் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்களும் இந்த வஞ்சிப்பு நாடகத்தின் ஒரு அங்கமாகவே தெரிகிறது

கட்டுரையாளர் கபில் இன்போ தமிழ் குழுமம்

http://www.infotamil.ch/ta/view.php?2bEEQMe0d8gm40ecKA0W4a4nd4Icd3cYJ3dc2Coc2b434OS3e220Mq20

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.