Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனியம் வழிகாட்டும்!

Featured Replies

- 2009 மே19ற்குப் பிற்பாட்ட காலத்து ஈழதமிழர் பயணத்தின் அணுகுமுறை பற்றிய பார்வை -

2009 மே-19ற்குப் பிற்பட்ட ஈழத்தமிழர் அரசியலும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் பெரும் குழப்பத்திற்குள்ளும், மயக்கத்திற்குள்ளும் அகப்பட்டுள்ளது. சிங்கள – தமிழ் தேசிய இனங்களுக்கு இடையேயான முரண்பாட்டின் பரிணமத்தில் தோன்றிய ஆயதம்தரித்த விடுதலைப் போர் சிங்கள – பிராந்திய – சர்வதேச நெருக்குவாரங்களிற்குள் அகப்பட்டு தோற்கடிக்கப்பட்ட அல்லது பின்னடைவுக்குட்படுத்தப்பட்டதொரு பின்னணியில் இந்தக்குழப்பத்தினை புரிந்துகொள்ளலாம்.

இந்தக் குழப்பங்கள் - மயக்கங்களினால் எங்கள் தேசம் பலவீனமானதொரு வரலாற்றுச் சந்தியில் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து நாங்கள் பயணிக்கப் போகின்ற வழி எது? - இந்த வரலாற்று முக்கியத்துவமான தேர்வின் வழிகாட்டிக் கோட்பாடுகளாக எவை அமையப்போகின்றன? இவையே இந்த பத்தியின் விவாதப் பொருளாகும்.

----

இன்றுள்ள அகப் புறச்சூழலில் ஈழத்தமிழர்களின் பயணம் பற்றிய தீர்;மானிப்பில் பல்வேறு சக்திகளும் தாக்கம் செலுத்தப் போகின்றன. சிங்கள அரசு, இந்திய அரசு, சர்வதேச சமூகம் என்பன தங்கள் நலன்வழிப்பட்ட அரசியல் நோக்குகளுடன் எங்கள் அரசியல் போக்கினை கையாள்வதற்கு முற்படுவார்கள் என்பது பொதுவாக அனைத்துத்தரப்புகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பார்வையாகும். சிங்கள அரசு மரபுவழிப்பட்ட இனஅழிப்பு – ஒடுக்குமறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அது தமிழர்களின் அடிப்படையான நிலைப்பாடுகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பனவற்றிற்கான ஆதார சக்திகளை சிதைப்பதற்கு முற்படும். பிரபலமான இஸ்ரேலிய அணுகுமுறையான நிலத்தில் உண்மைகளை மாற்றுதல் எனும் வழிமுறை மூலம் எங்கள் இருப்பினை கேள்விக்குரியதாக்க முற்படும். பிராந்திய – உலக சக்திகள் எங்கள் கைகளைப் பிடித்து தத்தமது கண்கள் ஊடாக எங்களைப் பார்க்குமாறு நெருக்குவராத்திற்குட்படுத்தும்.

நாங்கள், ஒரு தேசிய இனமாக, இந்தச் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம் என்பதே எதிர்காலம் பற்றிய எமது பயணத்தினை தீர்;மானிக்கப் போகின்ற பிரதான கேள்வியாகும்.

இந்தக் கேள்விக்கான விடைதேடலில் அகத்து விடயங்களும் புறத்து விடயங்களும் தவிர்க்க முடியாதவாறு செல்வாக்குச் செலுத்தப் போகின்றன. பிரபலமான தமிழ்சிந்தனையாளர் திரு.சத்தியேந்திரா கூறுவது போன்று ஒவ்வொரு அகத்திற்கும் ஒவ்வொரு புறம் உள்ளது, ஒவ்வொரு புறத்திற்கும் ஒவ்வொரு அகமுள்ளது. தமிழர் வாழ்வுக்கான எதிர்காலப் பயணத்திலும் தமிழ் - சிங்கள முரண்பாடுகளை அகமாக வைத்துப் பார்த்தால் பிராந்திய – சர்வதேச தாக்கங்களை புறமாக வைத்துப்பார்க்கலாம். இந்த அகப்புற சமநிலையை சரியாக கையாள்வது முக்கியமானதொரு விடயமாக எங்கள் தேடல்களில் தாக்கம் செலுத்தப் போகின்றது.

--

சமகால வரலாற்றில் பிரபாகரன் என்பது வெறும் பெயர்ச்சொல்லல்ல. அது ஈழத்தமிழர் தேசத்தின் முகம் - முகவரி. 70களின் நடுப்பகுதியில் தமிழர்களின் உரிமைப்போர் சாத்வீக வழிப்போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்டு சிறீலங்கா அரசு என்கின்ற கவசமணிந்த சிங்கள தேசியவாதத்தினை வலுச்சமநிலையை உருவாக்குவதன் மூலமே தோற்கடிக்க முடியும் என்கின்ற புறச்சூழலில் பிரபாகரன் என்கின்ற வரலாறு உருவாகின்றது. தனித்த துப்பாக்கியுடன் மக்களிற்கும் - கொண்ட கொள்கைக்கும் விசுவாசமாகவும், உறுதியாகவும் செயற்படும் தீர்க்கமான சக்தியாக பிரபாகரன் பரிணமம் கொள்கின்றார். சிங்கள் அரசு கட்டுமானங்களை ஆயதப்போர் ஊடாகப் பெறப்பட்ட வலுவழியில் தகர்த்து தமிழர் அரசுவினை நிறுவும் உறுதியுடன் அவரது பயணம் அமைகின்றது. இந்த சமநிலை மாற்றமானது புறச்சூழல்களின் நெருக்குவாரத்திற்குட்படுகின்றது. இந்திய தலையீடு, சர்வதேச அளவில் பனிப்போரிற்குப் பிற்பட்ட காலத்து உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பன பிரபாகரனின் இலக்குநொக்கிய பயணத்தில் தடைக்கற்களாக அமைகின்றன. எனினும், சிங்கள அரசுடனான தனது வலுவழி சமநிலையை அடைந்து தமிழீழ அரசு ஒன்றிற்கான அத்திவாரங்களை அவர் வரைகின்றார். 70கள் தொடக்கம் 2009 மே-18வரைப்பட்ட காலத்தின் ஒவ்வொரு அரசியல் - இராணுவ நகர்வுகளும் பிரபாகரன் பிரதிநிதித்துவப்படுத்திய சிந்தனையின் ஊடாகவே தமிழர் தேசத்தினால் கட்டமைக்கப்படுகின்றன.

இந்தப் பயணத்தில் அவர் சில அடிப்படையான கோட்பாடுகளை வலுவாக பின்பற்றினார். இந்தக் கோட்பாடுகளையும், அணுகுமுறைகளையும் ஒன்றுதிரட்டி விபரிப்பதற்கான சொல்லாடலே பிரபாகரனியம் ஆகும்.

----

பிரபாகரனியம் என்கின்ற வார்த்தையை விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளராகவிருந்த திரு.நடேசன் நீண்டகாலத்திற்கு முன்னொருதடவை பாவித்திருந்தார். பிற்பாடு பிரபல தமிழ்படைப்பாளி, ஊடகர் தாசிசியஸ் அவர்கள் பிரபாகரனியம் என்ற சொல்லாடலை அறிமுகப்படுத்தினார். இன்றுள்ள அகப்புறச் சூழலில் பிரபாகரன் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் - சமூக - இராஐரீக சிந்தனைகளை பிரபாகரனியம் என்கின்ற சொல்லாடல் ஊடாக முன்னிறுத்துவது உயிரோட்டமானதாகவிருக்கும்.

பிரபாகரனியம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை தனித்து – 70களில் கண்டெடுத்த ஆயதப் போராட்டத்தின் கருப்பொருளாகவே பார்க்கவில்லை. சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழர் எதிர்ப்பியக்கத்தின் தொடர்ச்சியாகவே ஆயதப்போரினை அது விபரித்தது. 70களில் விடுதலைப் போராட்டம் ஆயதம்தரித்த போராட்டமாக கருக்கொண்டமையை 40கள் தொட்டு தமிழர் நடத்திவந்த மென்வழி சாத்வீகப் போரின் தொடர்ச்சியாகNவு பிரபாகரனியம்; விபரிக்கின்றது. வரலாறு எனது வழிகாட்டி என்பது பிரபலமான பிரபாகரனிய கூற்றாகும்.

தமிழீழ விடுதலைக்கான பிரதானமான பிரபாகரனிய அணுகுமுறையானது வலுச்சமநிலையை உருவாக்குவதில் அமைந்திருந்தது. தமிழர் தேசமானது தனது வலுவினை அதிகரித்து அதனூடாகவே விடுதலையை அடையமுடியும் என்பதை அது வலுவாக மையப்படுத்தியது. அந்த வலுவானது தாயகத்தில் சிங்கள அரசு இயந்திரங்களுக்கு எதிரான இராணுவ வலுவாகவும், புலத்திலே தமிழர் சிக்கலை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் - சமூக வலுவாகவும் அமைந்தது. இராஐரீக அணுகுமுறைகளில் இந்த இரு கூறுகளையும் பிரபாகரனியம் தொடர்ச்சியாக பிரயோகித்து வந்துள்ளது.

முன்பொருமுறை பிரபலமான பிபிசி செய்தியாளர் கம்சிலி ஹோக்லி தமிழ் சிங்களப் போரினை வர்ணித்த போது அது தலைக்கு தலையெடுக்கும் வீச்சினைக் கொண்டதென்றார். சிங்கள அரசு இயந்திரத்துடன் போரிட்ட தமிழர்தரப்பு வெளிப்படுத்திய வீரமாக இதனை மேம்போக்கான பார்வையில் ஏற்றுக்கொண்டாலும், ஆழத்தே வலுவழிச் சமநிலையை நோக்கி பிரபாகரனியம் தமிழர் தரப்பினை மேம்படுத்தி வந்ததின் குறியீடு அது காணப்படுகின்றது. நீண்டகாலமாக அடிமைப்பட்டு, அரசு இயந்திரங்களின் விசுவாசமான சேவகர்களாக பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் சமூகத்திலிருந்து கட்டுடைத்து கலகம் செய்து அதன் ஊடாக புதிய சமநிலையை பிரசவிப்பதற்கான உச்சபட்ட நிகழ்ச்சித்திட்டத்தில் பிரபாரனியம் இயங்கியது.

மறுபுறத்தே, சிங்கள இயந்திரங்கள் தகர்;க்கப்பட்ட போது அதனை ஈடுசெய்ய தமிழர் அரசுவினை பிரபாகரனியம் பிரசவித்தது. அதுவும் பிரபாகரனியம் பிரதிநிதித்துவப்படுத்திய வலுச்சமநிலை அணுகுமுறையின் வெளிப்பாடாகும். அரசு தகர்க்கப்பட்டு புதிய அரசு நிறுவப்படுவதை வலுச்சமநிலையின் குறியீடாகவே உலகம் பார்த்தது.

பிரபாகரனியத்தின் அடுத்த முக்கிய குறியீடு அது பிரதிநிதித்துவப்படுத்திய சமூகப் பார்வை. சாதிய ஒழிப்பு, வர்க்க எதிர்ப்பு என்பனவற்றினை பிரபாகரனியம் தேசியவிடுதலைப் போரின் பரிமாணத்தில் கையாண்டது. தமிழ்தேசியம் என்கின்ற அடித்தளத்தில் கீறல்களை இந்த வேறுபாடுகள் ஏற்படுத்தக் கூடாது என்பதை ஒருபுறமும், அதேவேளையில் இந்த சமூக ஒடுக்குமறைகளை ஒழிக்க வேண்டும் என்கின்ற நோக்கினை மறுபுறமும் அது கொண்டியங்கியது. நிறுவனமயப்படுத்தலின் ஊடாகவும், புதிய அரசு கட்டுமானங்கள் ஊடாகவும் ஒடுக்கப்பட்ட சமூகதரப்புக்களிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அது சமூக சமத்துவத்திற்கான அத்திவாரங்களை இட்டது.

பிரபாகரனியம் தனிமனித ஒழுக்கம், அர்ப்பணிப்பு என்பனவற்றினை அடையாளங்களாகவே பேணியது.

உலகம் பற்றிய அதன் புரிதல் மிகவும் வெளிப்படையானது. உலகம் நலன்களின் அச்சிலேயே இயங்குகின்றது என்பதை அது வெளிப்படையாகவே விவாதித்தது. இலங்கைத் தீவு சார்ந்து இந்தியா, மேற்குலகம், சீன மற்றும் பிற சக்திகள் நடத்தும் புவிசார் அரசியல் அணுகுமுறையை கணித்து பலவித இராஐரீக அணுகுமுறைக்கான விதைகளை பிரபாகரனியம் விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. அது உலகை கடும் கொள்கைவழிப்பட்ட கண்கள் ஊடாக பார்க்கவில்லை. தமிழர்களின் நலன்கள் அடிப்படையில் எந்தவித சர்வதேச தரப்புக்களுடனும் அது உறவாட தயாராகவிருந்தது. இந்தியாவுடன் மிகவும் சிக்கலான உறவைக் கொண்டிருந்த போதும் இந்தியாவின் பாத்திரத்தினை பிரபாகரனியம் நிராகரிக்கவில்லை. மேற்குலகின் புதிய அணுகுமுறை மக்கள் ஆயதம் தரிப்பதை நிராகரித்த போதும் மேற்குலகுடன் பேசுவதற்கும், தமிழ்மக்கள் தரித்த ஆயதத்தினை நியாயபூர்வமானதாக மாற்றவும் பிரபாகரனியம் முற்பட்டது.

பிரபாகரனியத்தின் மற்றுமொரு முக்கிய கூறு அது உலகளாவிய தமிழ்தேசியத்தினை தன்னுடன் பிணைத்துக் கொணடதாகும். தமிழ் சமூகத்தின் முக்கிய வலுக்காரணிகளில் ஒன்றாக அது உலகளாவிய தமிழர் இருப்பையும், உயிர்ப்பையும் கருதியது. அதனை சாதகமான சக்திகளாக இனங்கண்டு பாராடட்டியது. எதிர்காலத்திற்கான முக்கிய வலுச்சமநிலை கூறாக அதனை அணுகியது.

அடிப்படையில் பிரபாகரனியம் விரிவான – நவீனமான – தனித்துவமான கோட்பாடுகளால் பின்னப்பட்டதாக அமைகின்றது. அது வலுச்சமநிலை மூலமே தமிழர் தமது விடுதலையைப் பெறலாம் என்பதை அடிக்கோடிடுகின்றது. உலகளாவிய தமிழ்தேசியத்தின் ஆற்றலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

----

இன்று தமிழ்சமூகம் சந்திக்கின்ற இன்றைய நெருக்கடிகளுக்கும் பிரபாகரனிய அணுகுமுறைகளே சரியான தீர்வாக அமையமுடியும். இன்று தமிழர்களின் தாயகம் கடும் இராணுவப் பிடிக்குள் - மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட சனநாயக வெளியில் செயற்படுமாறு நெருக்கப்பட்டுள்ளது. மேற்குலகில் வாழும் ஈழத்தமிழ் சமூகம் அந்த மக்களின் குரலாக தங்களை பிரதிநிதித்துவப்படுத்த முற்படுகின்றனர். இதன்வெளிப்பாடாக நாடுகடந்த அரசு என்கின்ற புதிய வடிவம் அரசியல் திட்டமாக பிரசவிக்கப்ட்டுள்ளது.

இங்கே புலம்பெயர்ந்த தமிழ்சமூகம் தனது அரசியலை வெறும்; கோசம் போடுகின்ற - இணைய ஊடகங்களில் தற்திருப்திப்படுகின்ற விவகாரமாகக் கருதது, அதனை அர்த்தமுள்ள அரசு என்கின்ற வடிவத்தினை நோக்கி நகர்கி;ன்ற, மே-18 விட்டுச்சென்ற விழுமியங்களையும் - கோட்பாடுகளையும் முன்னெடுக்கின்ற விவகாரமாக அணுக வேண்டும்.

இந்தப் பின்னணியில், நாடுகடந்த அரசும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர் அரசியல் இயங்குதலும் சிங்கள தரப்புடன் வலுச்சமநிலையை ஏற்படுத்துவதை தமது முக்கிய பொறுப்பாகக் கொள்ளல் வேண்டும்.

(அடுத்த வாரம் இந்த வலுச்சமநிலையை பெருக்குவதற்கான வாய்ப்புக்கள் பற்றிய வாதத்துடன் இந்தக் கட்டுரை விரிவுபெறும்)

நாதன்

பாரிஸ்

12.05.2010

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தில் போராட்டத்துக்குச் சேர்த்த பணம் பற்றி எதுவும் சொல்ல வில்லையே. பிரபாகரன் பணம் தொடர்பாக மிகவும் கட்டுபாட்டுடன் இருபதை வலியுறுத்திய தலைவர் அல்லவா? போராட்டத்துக்காக சேர்த்த இரத்தப் பணத்தில் கொமிசன் சம்பளம் பங்கு பெற்றவர்களும் மீதம் வைத்திருப்பவர்களும் அதனை அல்லல்படும் போராளிகளது பாதுகாப்புக்காகவும் புனர்வாழ்வுக்காகவும் கொடுக்க வேண்டும் என்பதை நாம் எல்லோரும் வலியுறுத்த வேண்டும். அதுவே தர்மம். அல்லது அதர்மம். அதர்மம் தலை முறை தலைமுறையாக அறுக்கும் இருபுறமும் கூருள்ள வாழ்.

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.