Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டம் வன்னிக்காட்டிலிருந்து வெடிக்காது; ஆனால்..! எச்சரிக்கும் சிங்கள எம்பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தயா என்றுமே டக்ளஸ் கூட்டணியில் இருந்ததில்லை. எனினும் KP ஐ நம்பி ஏமாந்தவர்களில் ஒருவர். தற்போது தமிழ்த் தேசியத்தை முகவர் அரசியல் மூலம் கட்டியெழுப்பி தமிழீழத்தை அடையலாம் என்று சொல்லும் அரூபமான முகவர்களை நம்புகின்றார் போலும்.

உயிரைக் காப்பாற்றவோ, அல்லது பஞ்சம் பிழைக்கவோ ஓடிவந்து பணம் சம்பாதித்த தமிழர்களின் பணத்தை மட்டும் கறக்க மகிந்த அரசும், தமிழ் தேசிய வீரர்களும் முயல்வது போலத்தான் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் கூட்டணியில் இருந்ததாக அர்த்தப்படுத்தவில்லை. கடந்த தேர்தல் காலத்தில் டக்ளஸ் மீது மகிந்த அழுத்தம் கொடுத்து, தன் கட்சியின் கீழ் போட்டியிட வைக்க முயன்றபோது, டக்ளஸ் விட்ட அறிக்கைகள் சிலவற்றை நம்பிக் கருத்துப் பகிர்ந்ததால் தான் சொல்கின்றேன்.

ஒரு போராளியோ, பொதுமகனோ கொல்லப்பட்டால் யாரால் தட்டிக் கேட்க முடிகின்றது? நாயை விடக் கேவமாகத் தமிழனின் உயிர் இருக்கின்றது. அவர்களைக் காக்க எதுவுமே எங்களால் செய்ய முடியவில்லை. அதைப் பற்றிய ஆதங்கத்தை வேதனைகளைக் கதைப்பது தப்பு என்றால் வாயை மூடிக் கொண்டு போகின்றேன். அது எனக்குக் கடினமான வேலை அல்ல...

  • தொடங்கியவர்

தயா என்றுமே டக்ளஸ் கூட்டணியில் இருந்ததில்லை. எனினும் KP ஐ நம்பி ஏமாந்தவர்களில் ஒருவர். தற்போது தமிழ்த் தேசியத்தை முகவர் அரசியல் மூலம் கட்டியெழுப்பி தமிழீழத்தை அடையலாம் என்று சொல்லும் அரூபமான முகவர்களை நம்புகின்றார் போலும்.

நான் KP யை நம்பியது என்னவோ உண்மைதான்... அது 2002 க்கு முன்னர் தெரிந்து கொண்டதின் அடிப்பயையிலானது அது... அதுக்கு பிறகு நிறையவே மாறிவிட்டார் என்பது எனக்கு தெரியவில்லை... ஆனால் கடந்த வருடம் இறுதியில் அதை நேரின் பார்த்து அனுபவித்த போதுதான் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை அறிய முடிந்தது..

சரி KP கதையை இப்போ விடுவம்...

நீங்கள் சொல்லுங்கள் எந்த வகையில் தமிழீழம் அடையலாம்...?? உங்களிடம் இருக்கும் மாற்று திட்டம் தான் என்ன...?? இன்னும் 5 வருசம் பொறுத்து பார்த்து யாராவது வந்தால் அவருக்கு பின்னாலை எல்லா பொறுப்பையும் குடுத்து போட்டு பாத்து கொண்டு இருக்கிறதோ...??

உயிரைக் காப்பாற்றவோ, அல்லது பஞ்சம் பிழைக்கவோ ஓடிவந்து பணம் சம்பாதித்த தமிழர்களின் பணத்தை மட்டும் கறக்க மகிந்த அரசும், தமிழ் தேசிய வீரர்களும் முயல்வது போலத்தான் தெரிகின்றது.

அண்ணை உங்களிடம் ஒரு கேள்வி கட்டாயம் நீங்கள் பதில் சொல்ல வேணும்...

தமிழ் மக்களிடம் காசு வாங்காமல் உங்களால் எதாவது செய்து தர முடியுமா...??? உண்மையாக தான் கேக்கிறன்.... அதை ஒருக்கா விளக்கமாக சொல்வீர்கள் எண்டால் நீங்கள் சொல்வதை கேட்டு செய்ய நான் தயார்...

ஆனால் நிலைமை எப்படி இருக்கு எண்டால் மோகன் அண்ணா சொந்த காசு போட்டு தர நாங்கள் அவரை மொட்டை அடிக்கிறம் எண்டதை எப்பவாவது நினைச்சு பாத்து இருக்கிறீர்களா...??

அப்படி யாராவது வைத்து இருக்கும் கட்டமைப்புக்களை நாங்கள் பாவிக்காமல் சொந்தமாக ஏதும் செய்ய முடியுமோ...??

டக்ளஸ் கூட்டணியில் இருந்ததாக அர்த்தப்படுத்தவில்லை. கடந்த தேர்தல் காலத்தில் டக்ளஸ் மீது மகிந்த அழுத்தம் கொடுத்து, தன் கட்சியின் கீழ் போட்டியிட வைக்க முயன்றபோது, டக்ளஸ் விட்ட அறிக்கைகள் சிலவற்றை நம்பிக் கருத்துப் பகிர்ந்ததால் தான் சொல்கின்றேன்.

பொய் மேலை பொய்களையும் புரட்டுகளையும் அவிள்த்து விடுகிறதை இன்னும் நீர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறீர்...

அப்படி டக்கிளசை நான் நம்பி எழுதியவைகளை உம்மால் ஆதாரப்படுத்த முடியுமா....??

இல்லை புரட்டுகளையும் புரளிகளையும் செய்வதோடை சரியோ...??

  • தொடங்கியவர்

ஏதோ சேறு வாரி எறிந்ததாக கதை முடிகின்றீர்கள். உங்களின் வாதத்திறமையை என்னிடம் வேண்டாமே! முதன்மை எதிரி மேலே நடந்து கொண்ட செயற்பாட்டின் அளவில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்துவதில் எவ்வித தவறுமில்லை.

இதில் எஸ்கேப் ஆகுவதற்கு ஒன்றுமே இல்லை. தேவை எனில் சம்பந்தப்பட்டவர்கள் கூடவே கதைத்துக் கொள்ளலாமே தவிர, உங்களின் கூட இதைப் பற்றி விவாதிப்பதில் எனக்கு எவ்வித பலனுமில்லை.

அப்போ அவர்களை பற்றி நீர் சேறு வாரி அடிக்க வில்லையா...??

கருத்து இலக்கம் 8 அதில் நாடுகடந்த அரசின் உருத்திர குமார் அவர்களுக்கும் செயலகத்துக்காறருக்கும் பிரச்சினை எண்டு உமது சேறடிப்பு...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71677&st=0&p=586334&fromsearch=1&#entry586334

கருத்து இலக்கம் 16 இங்கு யார் மீது குற்றம் சாட்டுகிறீர்...?? இதை போண் அடித்து அவர்களிடமே பேசி இருக்கலாமே.... எதுக்காக யாழுக்கை எழுதுறீர்...??

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72421&st=0&p=591323&fromsearch=1&#entry591323

சம்பந்த பட்டவர்களுடம் கதைப்பதாக இருந்தால் அவர்களை திட்டி எந்த கருத்தும் இங்கை எழுதி இருக்க கூடாது.... அப்படி எழுதி வாதம் எண்டு வந்தவுடம் நான் அவர்களுடம் கதைக்கிரேன் எண்டு ஓடுவதுதான் உமது பதிலோ...??

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுங்கள் எந்த வகையில் தமிழீழம் அடையலாம்...?? உங்களிடம் இருக்கும் மாற்று திட்டம் தான் என்ன...?? இன்னும் 5 வருசம் பொறுத்து பார்த்து யாராவது வந்தால் அவருக்கு பின்னாலை எல்லா பொறுப்பையும் குடுத்து போட்டு பாத்து கொண்டு இருக்கிறதோ...??

அண்ணை உங்களிடம் ஒரு கேள்வி கட்டாயம் நீங்கள் பதில் சொல்ல வேணும்...

தமிழ் மக்களிடம் காசு வாங்காமல் உங்களால் எதாவது செய்து தர முடியுமா...??? உண்மையாக தான் கேக்கிறன்.... அதை ஒருக்கா விளக்கமாக சொல்வீர்கள் எண்டால் நீங்கள் சொல்வதை கேட்டு செய்ய நான் தயார்...

தமிழீழம் அடைவதற்கு ஆயுதப் போராட்டம் இனிமேல் சரிப்படாது என்பதை உண்ர்ந்தால்தான் அடுத்த வழிகளைப் பார்க்கலாம். புலிகளின் தலைமைப் பீடம் கடைசி நேரத்தில் ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்றது நிரந்தரமான மெளனிப்பைத்தான். ஆனால் அதனை ஒரு தற்காலிக மெளனிப்பாகப் பிரச்சாரப்படுத்தி மீண்டும் ஆயுதப் போராட்டம் மூலம் தமிழீழம் அடையலாம் என்ற நம்பிக்கையை விதைப்பது தமிழீழத்தை அடையக்கூடிய வேறு வழிகளையும் அடைப்பதாகத்தான் முடியும்.

சிங்கள அரசு தமிழரை அடிமையான இனமாகத் தொடர்ந்தும் வைத்திருக்கின்றது என்பதை ஓயாமல் உலகுக்கு உணர்த்தப் பலவழிகள் உள்ளன. அவற்றினைச் சளைக்காது தொடர்ந்து முன்னெடுப்பதை விடுத்து நமக்குள்ளேயே அடிபட்டுக்கொண்டிருப்பதனால் நாமே எமது விடிவுக்கு ஆப்பு வைக்கின்றோம். எனவே நாம் எங்கே தவறு விட்டோம் என்பதனை ஆராய்ந்து, அதனது படிப்பினைகளை உணர்ந்து, விவேகமான முறையில் சிந்தித்து செயற்படவேண்டும். ஆனால் நடப்பது என்ன? தோல்வியடைந்த வழிமுறைகளைத்தான் மீண்டும் திணிக்க தேசிய வீரர்கள் முனைகின்றனர்.

காசு வாங்குவது பற்றி..

இரகசியமாகக் காசு வாங்கத் தேவையில்லை. transparency இல்லாத அமைப்புக்களை இல்லாமல் செய்து ஜனநாயக அமைப்புக்களை நிறுவி, தமிழரின் மனிதவுரிமைகளைப் பாதுகாக்க நேரடியாகவே மக்களிடம் தேவையான உதவிகளைக் கேட்கலாம். தொகை பெரிதாக இருக்காது. அத்துடன் தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கு நேரடியாகப் பணியாற்றக்கூடிய அமைப்புக்களை ஐ.நா. ஊடாக செயற்படுத்த முனையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் அடைவதற்கு ஆயுதப் போராட்டம் இனிமேல் சரிப்படாது என்பதை உண்ர்ந்தால்தான் அடுத்த வழிகளைப் பார்க்கலாம். புலிகளின் தலைமைப் பீடம் கடைசி நேரத்தில் ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்றது நிரந்தரமான மெளனிப்பைத்தான்.

இது போனவருட நிலை

ஆனால் இன்று தாயக மக்களின் நிலை வேறு

நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பது சிங்களத்திடமே உள்ளது என்பது எனது தாழ்மையான கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

இது போனவருட நிலை

ஆனால் இன்று தாயக மக்களின் நிலை வேறு

நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பது சிங்களத்திடமே உள்ளது என்பது எனது தாழ்மையான கருத்து

நாம் என்ன செய்யவேண்டும் என்பதை சிங்களம் தீர்மானிக்கக்கூடாது. நாம்தான் தீர்மானிக்கவேண்டும்.

தமிழர்களை சரிசமமாக நடாத்த சிங்கள அரசு முனைப்பு எதுவும் காட்டவில்லை. இதை உணர்ந்துகொண்டுள்ள மேற்கு நாடுகளும் இந்தியாவும் தமது நலன்சார்ந்த தீர்வு ஒன்றை தமிழ் மக்களுக்கு மீண்டும் கொடுக்க முனைகின்றார்கள். தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தமிழர்களுக்கிடையே குழப்பம் நிலவுவதால், தாயகம், தேசியம், தன்னாட்சி என்பனவற்றில் விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய தமிழர்களின் ஜனநாயக வழியிலான தலைமைகளுக்கு நிறைய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுவருகின்றன. ஐக்கியமற்ற தமிழர்களும் அழுத்தங்களுக்கு அடிபணியவேண்டிய நிலையில்தான் உள்ளனர்.

  • தொடங்கியவர்

தமிழீழம் அடைவதற்கு ஆயுதப் போராட்டம் இனிமேல் சரிப்படாது என்பதை உண்ர்ந்தால்தான் அடுத்த வழிகளைப் பார்க்கலாம். புலிகளின் தலைமைப் பீடம் கடைசி நேரத்தில் ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்றது நிரந்தரமான மெளனிப்பைத்தான். ஆனால் அதனை ஒரு தற்காலிக மெளனிப்பாகப் பிரச்சாரப்படுத்தி மீண்டும் ஆயுதப் போராட்டம் மூலம் தமிழீழம் அடையலாம் என்ற நம்பிக்கையை விதைப்பது தமிழீழத்தை அடையக்கூடிய வேறு வழிகளையும் அடைப்பதாகத்தான் முடியும்.

சிங்கள அரசு தமிழரை அடிமையான இனமாகத் தொடர்ந்தும் வைத்திருக்கின்றது என்பதை ஓயாமல் உலகுக்கு உணர்த்தப் பலவழிகள் உள்ளன. அவற்றினைச் சளைக்காது தொடர்ந்து முன்னெடுப்பதை விடுத்து நமக்குள்ளேயே அடிபட்டுக்கொண்டிருப்பதனால் நாமே எமது விடிவுக்கு ஆப்பு வைக்கின்றோம். எனவே நாம் எங்கே தவறு விட்டோம் என்பதனை ஆராய்ந்து, அதனது படிப்பினைகளை உணர்ந்து, விவேகமான முறையில் சிந்தித்து செயற்படவேண்டும். ஆனால் நடப்பது என்ன? தோல்வியடைந்த வழிமுறைகளைத்தான் மீண்டும் திணிக்க தேசிய வீரர்கள் முனைகின்றனர்.

காசு வாங்குவது பற்றி..

இரகசியமாகக் காசு வாங்கத் தேவையில்லை. transparency இல்லாத அமைப்புக்களை இல்லாமல் செய்து ஜனநாயக அமைப்புக்களை நிறுவி, தமிழரின் மனிதவுரிமைகளைப் பாதுகாக்க நேரடியாகவே மக்களிடம் தேவையான உதவிகளைக் கேட்கலாம். தொகை பெரிதாக இருக்காது. அத்துடன் தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கு நேரடியாகப் பணியாற்றக்கூடிய அமைப்புக்களை ஐ.நா. ஊடாக செயற்படுத்த முனையலாம்.

சரி தமிழீழத்தில் இருந்து போராட யாராவது புறப்பட்டால் காட்டிக்குடுப்பதா.? இல்லை அவர்களை ஆதரிப்பதா...?? அவர்களுக்கு என்ன செய்வதாக உத்தேசம்....??

சரி என்ன கொள்கை திட்டம்...?? சிங்களம் செய்யும் படுகொலைகளை சொல்ல ஏற்கனவே இருக்கும் அமைப்புக்கள் எல்லாம் புலிகளின் முகவர்கள் எண்டு நீங்கள் குறிப்பிடுபவர்களால் நடாத்த படுகிறது... ஆகவே அவர்களை விலக்கி வைத்து விடலாம்...

நாங்கள் என்ன செய்யலாம்... ?? நாடு நாடாக ஆதரவு கேட்க்கலாம்... ! ஆனால் இந்த ஆதரவை ஈழமாக மாற்ற உங்களுக்கு வேண்டிய தளம் ஒண்று ஈழத்தில் வேண்டுமே அதுக்கு என்ன செய்வதாக திட்டம்....?? . கூட்டமைப்பை ஆதரிப்பதா...?? ஆனால் நீங்கள் கூட்டமைப்பையும் ஆதரிக்க வில்லையே...?? வாக்கெடுப்பை சர்வதேசத்தின் உதவியுடன் கோருவதாக இருந்தால் கூட பலஸ்தீனத்தில் ஹமாஸ் போலவோ PLO போலவோ ஒரு பலமான சக்தி தாயகத்தில் தேவை என்பது உண்டு... அதுக்கு என்ன செய்வதாக உத்தேசம் கொண்டு இருக்கிறீர்கள் எண்டதையும் ஒருக்கா விளங்கப்படுத்துங்கோ....?? இல்லை அப்படி ஒரு சக்தியும் தேவை இல்லையோ...??

அனேகமாக பழைய புளட்காறர்களிடம் அரசியல் படிக்கிறீர்கள் போல உள்ளது... ! ஆக்களை சேர்த்து வைத்துக்கொண்டு காசாக வாங்கி சமைக்காமல் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து விதைக்காமல் சோத்து பாசலாகவே வாங்கி காரியம் சாதிக்கலாம் எண்டு சொல்லுறீயள் போல கிடக்கு... இதை இன்னும் விளக்கமாக எனக்கு சொன்னால் நல்லது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சரி தமிழீழத்தில் இருந்து போராட யாராவது புறப்பட்டால் காட்டிக்குடுப்பதால் இல்லை அவர்களை ஆதரிப்பதா...?? அவர்களுக்கு என்ன செய்வதாக உத்தேசம்....??

என்ன வகையான போராட்டம்? ஆயுதப் போராட்டமா???

ஆயுதப் போராட்டம், வன்முறைப் போராட்டம் எல்லாம் இனியும் சரிவராது. எனவே காட்டியும் கொடுக்கத் தேவையில்லை. ஆதரிக்கவும் தேவையில்லை. அவர்களைத் தன்பாட்டில் விட்டால் தங்கள் வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்.. vision இல்லாமல் mission தொடங்க முடியாது.

சரி என்ன கொள்கை திட்டம்...?? நாடு நாடாக ஆதரவு கேட்க்கலாம்... ஆனால் இந்த ஆதரவை ஈழமாக மாற்ற உங்களுக்கு வேண்டிய தளம் ஒண்று ஈழத்தில் வேண்டுமே அதுக்கு என்ன செய்வதாக திட்டம்..... கூட்டமைப்பை ஆதரிப்பதா...?? ஆனால் நீங்கள் கூட்டமைப்பையும் ஆதரிக்க வில்லையே...?? வாக்கெடுப்பை சர்வதேசத்தின் உதவியுடன் கோருவதாக இருந்தால் கூட பலஸ்தீனத்தில் ஹமாஸ் போலவோ PLO போலவோ ஒரு பலமான சக்தி தாயகத்தில் தேவை என்பது அதுக்கு என்ன செய்வதாக உத்தேசம் கொண்டு இருக்கிறீர்கள் எண்டதையும் ஒருக்கா விளங்கப்படுத்துங்கோ....??

தற்போது தலைமை தாங்குவோருக்கு / தாங்க முயல்வோருக்கு என்ன கொள்கைத் திட்டம் உள்ளது? நாடு கடந்த அரசின் தேர்தலில் நின்றவர்கள்/வென்றவர்கள் தங்கள் எதிர்காலத் திட்டங்களை முன்மொழிந்தா வாக்குக் கேட்டார்கள்? அநேகமாக எல்லோருமே தமது முன்னைய தேசியச் செயற்பாடுகளை தூக்கிப்பிடித்துத்தான் வாக்குக் கேட்டார்கள். நாங்களும் மந்தைகள்போலத் தெரிந்தவர்கள்/அறிந்தவர்கள் என்று வாக்குப் போட்டு அனுப்பினோம்.

தாயகத்தில் உள்ளவர்களும், புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் ஒரே சிந்தனையில் தமக்கு எத்தகைய தீர்வு வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவேண்டும். அது தமிழீழமாக இருக்கலாம் அல்லது அதற்குக் குறைவானதாகவும் இருக்கலாம், ஆனால் மக்களின் விருப்பமாக இருக்கவேண்டும். அதாவது திணிப்புக்கள் இருக்கக்கூடாது.

புலம்பெயர் நாடுகளில் வாக்கெடுப்பு நடாத்தியபோது வாக்களித்த பெருமக்கள் தமிழீழத்தை ஆதரித்துள்ளனர். வாக்களிக்காமல் இருந்தவர்களில் பலரும் தமிழீழத்தை ஆதரிக்கக்கூடும். அதைப் போலவே தாயகத்தில் உள்ளவர்களும், ஏன் தமிழ்நாட்டில் உள்ளவர்களும் (கலைஞர் உட்பட) தமிழீழம் கிடைத்தால் சந்தோசப்படுவார்கள்தான். எனினும் தமிழீழத்தை அடையக் கூடிய வழிகளில் சென்று போராடப் பலர் வரமாட்டார்கள். வெறும் பார்வையாளர்களாகத்தான் இருக்கவே பலர் விரும்புகின்றனர். அவர்களை வெறுக்காது, அவர்கள் ஏன் அப்படி உள்ளனர் என்று சிந்திக்கவேண்டும். பொறுமையாக அரசியல் செய்யவேண்டும். இதை விட்டுவிட்டு மக்களுக்கு அவலங்களையும், உபத்திரவங்களையும் கொடுத்துத்தான் அல்லது அதற்குரிய ஏதுக்களை உருவாக்கித்தான் அவர்களை தமிழீழப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தால், பழையபடி கட்டாய ஆள்பிடிப்பில்தான் வந்துமுடியும்.

எனவே முதலில் ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடவேண்டும். தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்பவேண்டும். குழுநிலைவாதங்களை இல்லாமல் செய்ய முயற்சிக்கவேண்டும். இதற்கெல்லாம் நிறையப் பொறுமை தேவை. முப்பது வருடங்கள் கூடப் போதாமல் இருக்கலாம்.

அனேகமாக பழைய புளட்காறர்களிடம் அரசியல் படிக்கிறீர்கள் போல உள்ளது... ! ஆக்களை சேர்த்து வைத்துக்கொண்டு காசாக வாங்கி சமைக்காமல் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து விதைக்காமல் சோத்து பாசலாகவே வாங்கி காரியம் சாதிக்கலாம் எண்டு சொல்லுறீயள் போல கிடக்கு... இன்னும் இதை எல்லாருக்கும் விளக்கமாக சொன்னால் நல்லது...

:D அறிவுள்ளவர்கள் எவராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து கற்பதில் தப்பில்லை. மூளைச் சலவைக்கு உட்படாமல் சொந்தப் புத்தியில் சிந்தித்தால் சரி, பிழைகள் தெரியும். தனியக் கதைத்துக் கொண்டிருந்தாலும் ஒரு அலுவலும் நடக்காது. செயற்பாட்டிலும் இறங்கவேண்டத்தான் வேண்டும். அதற்காக என்ன செய்வதென்று தெரியாமல் எதையாவது செய்யப் புறப்பட்டு "உள்ளதையும் கெடுத்தான் நொள்ளைக் கண்ணன்" என்று ஆகிவிடக்கூடாது.

அண்ணை/தம்பிங்களா! ... நாங்கள் எங்களுக்குள் பிடுங்குப்படுவது நல்லது, அடி படுவது நல்லது! ... இது எம்மை சரியான வழிக்கு இட்டுச் செல்ல உதவும்!!!!!! .... எம்மில் உள்ள சரி/பிழைகளை எடைபோட உதவும் ... சரியான பாதையில் பயணிக்கவும் உதவும்!! ... ஆனால் ....

.... எம் பொது எதிரியை நாம் மறத்தல் ஆகாது! ... அவனில் சூழ்ச்சியில் விழுதல் ஆகாது! ....

  • தொடங்கியவர்

என்ன வகையான போராட்டம்? ஆயுதப் போராட்டமா???

ஆயுதப் போராட்டம், வன்முறைப் போராட்டம் எல்லாம் இனியும் சரிவராது. எனவே காட்டியும் கொடுக்கத் தேவையில்லை. ஆதரிக்கவும் தேவையில்லை. அவர்களைத் தன்பாட்டில் விட்டால் தங்கள் வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்.. vision இல்லாமல் mission தொடங்க முடியாது.

ஆயுத போராட்டம் சரி வராது என்பது சரியாக ஒருவேளை இருக்கலாம்... ஆனால் கடந்த Hardtalk கேட்டீர்கள் எண்றால் ஒடுக்க படும் மக்கள் கடைசியாக தேர்ந்து எடுக்க முலும் ஆயுதம் தான் ஆயுத போர் எண்று சொல்ல வருகிறார்கள்... முதலாவது அங்கத்தில் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பிய போராளி எண்று ஒருவரிடம் இருந்து பேட்டி எடுக்க படுகிறது... அவர் சொல்ல முயல்வதும் அது தான்... மக்கள் இண்று அமைதியை விரும்புகிறார்கள் ஆனால் அதே மக்களே ஆயுதங்களை எடுக்கும் காலம் வரும்... அது இந்த தலைமுறையாக இல்லாமல் கூட இருக்கலாம்...

ஆயுதம் தூக்கி யாரும் போராட புறப்படமாட்டார்கள் எண்று நீங்கள் உறுதியாக சொல்லும் காரணம் தான் என்ன...?? விடுதலை நோக்கி போராடிய எல்லா இனங்களுக்குள்ளும் ஆயுதம் ஒரு அங்கமாக தான் இருக்கிறது.... அது காந்தி காலத்து சுபாஸ் சந்திர போசாகத்தான் இருந்தாலும்...

அப்படி இல்லை அரசியல் மட்டும் போதும் என்பதுக்கு உங்களிடம் இருக்கும் வலுவான காரணங்கள் தான் என்ன...?

தற்போது தலைமை தாங்குவோருக்கு / தாங்க முயல்வோருக்கு என்ன கொள்கைத் திட்டம் உள்ளது? நாடு கடந்த அரசின் தேர்தலில் நின்றவர்கள்/வென்றவர்கள் தங்கள் எதிர்காலத் திட்டங்களை முன்மொழிந்தா வாக்குக் கேட்டார்கள்? அநேகமாக எல்லோருமே தமது முன்னைய தேசியச் செயற்பாடுகளை தூக்கிப்பிடித்துத்தான் வாக்குக் கேட்டார்கள். நாங்களும் மந்தைகள்போலத் தெரிந்தவர்கள்/அறிந்தவர்கள் என்று வாக்குப் போட்டு அனுப்பினோம்..

இங்கை ஆயுத போர் என்பது மட்டும் தான் உறங்கு நிலைக்கு போய் இருக்கிறதே அண்றி மற்றயவை எதுவும் இங்கு புதிதாக இல்லை.... அதில் இன்னும் ஒரு சேர்க்கையாக நாடுகடந்த அரசும் சேர்ந்து இருக்கின்றது....

இங்கிலாந்தின் படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு, தமிழர் பேரவை என்பன போர் நடந்த காலத்திலேயே தோற்றுவிக்க பட்டன... ! இவைகள் உங்களுக்கு அலர்ச்சியை தருவனவாக இருந்தாலும் நீங்கள் சொல்லும் வேலைத்திட்டங்கள் அவர்களால் செய்ய படவில்லை எண்று உங்களால் நிறுவப்பட முடியாது... அவர்களுடன் உங்களுக்கு இணைய விருப்பம் இல்லை என்பது வேறு விடயமாக இருந்தாலும் அவர்கள் ஏதும் செய்ய இல்லை என்பது பொய்யானது...

C4 நிகள்ச்சியில் ஆதாரம் கொடுத்த சிங்கள தளபதியிடம் யார் வேண்டுமானாலும் விசாரிக்கலாம் எண்றும் அவர் ஆதாரம் தருவார் எண்று படுகொலைக்கான தமிழர் அமைப்பு அறிவுத்து இருக்கிறது... இதை பொய் எண்று சொல்ல போகிறீர்களா...??

தாயகத்தில் உள்ளவர்களும், புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் ஒரே சிந்தனையில் தமக்கு எத்தகைய தீர்வு வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவேண்டும். அது தமிழீழமாக இருக்கலாம் அல்லது அதற்குக் குறைவானதாகவும் இருக்கலாம், ஆனால் மக்களின் விருப்பமாக இருக்கவேண்டும். அதாவது திணிப்புக்கள் இருக்கக்கூடாது.

இதை வேண்டுமானால் நான் கண்ணை மூடி கொண்டு ஏற்றுக்கொள்கின்றேன்... ஆனால் திணிப்புக்களும் அவதூறுகளும் வேண்டாம்... பொய்யாக அவர்கள் காசு கொள்ளை அடித்தார்கள், KPயை சிங்களவனுக்கு காட்டி கொடுத்தார்கள் , நாடுகடந்த அரசை எதிர்க்கிறார்கள் எனும் சேறடிப்புக்கள் இல்லாமல் உண்மையான உங்களின் கருத்துக்களை சொல்லி ஆதரவு தேட வேண்டும்...

புலம்பெயர் நாடுகளில் வாக்கெடுப்பு நடாத்தியபோது வாக்களித்த பெருமக்கள் தமிழீழத்தை ஆதரித்துள்ளனர். வாக்களிக்காமல் இருந்தவர்களில் பலரும் தமிழீழத்தை ஆதரிக்கக்கூடும். அதைப் போலவே தாயகத்தில் உள்ளவர்களும், ஏன் தமிழ்நாட்டில் உள்ளவர்களும் (கலைஞர் உட்பட) தமிழீழம் கிடைத்தால் சந்தோசப்படுவார்கள்தான். எனினும் தமிழீழத்தை அடையக் கூடிய வழிகளில் சென்று போராடப் பலர் வரமாட்டார்கள். வெறும் பார்வையாளர்களாகத்தான் இருக்கவே பலர் விரும்புகின்றனர். அவர்களை வெறுக்காது, அவர்கள் ஏன் அப்படி உள்ளனர் என்று சிந்திக்கவேண்டும். பொறுமையாக அரசியல் செய்யவேண்டும். இதை விட்டுவிட்டு மக்களுக்கு அவலங்களையும், உபத்திரவங்களையும் கொடுத்துத்தான் அல்லது அதற்குரிய ஏதுக்களை உருவாக்கித்தான் அவர்களை தமிழீழப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தால், பழையபடி கட்டாய ஆள்பிடிப்பில்தான் வந்துமுடியும்.

தமிழீழ வாக்கெடுப்பதை மக்கள் வெறுத்ததாக சொல்லப்பட்டது மிகவும் தவறு.... KP யின் தலைமையை ஏற்று கொள்ள வில்ல, தலைவரின் வீரச்சாவை ஏற்று கொள்ள இல்லை எண்றதும் தொடங்கிய சேறடிப்புக்கள் இண்று வரை நிண்ட பாடு இல்லை...

இப்படியான குழப்பங்கள் தெளிவு அடையும் வரைக்கும் யாருக்கு யாரையும் ஆதரிக்க போவது இல்லை... அது நீங்களாக இருந்தால் கூட...

எங்களுக்குள் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே குழப்ப வாதிகள் தான்... ! உள்ளை இருக்கும் பிரச்சினையின் அளவும் தெரியாமல் எதையாவது நினைத்து கொள்வது... உங்களுக்கு எதிரானவர்களையும் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டு பாருங்கள்....

:D அறிவுள்ளவர்கள் எவராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து கற்பதில் தப்பில்லை. மூளைச் சலவைக்கு உட்படாமல் சொந்தப் புத்தியில் சிந்தித்தால் சரி, பிழைகள் தெரியும். தனியக் கதைத்துக் கொண்டிருந்தாலும் ஒரு அலுவலும் நடக்காது. செயற்பாட்டிலும் இறங்கவேண்டத்தான் வேண்டும். அதற்காக என்ன செய்வதென்று தெரியாமல் எதையாவது செய்யப் புறப்பட்டு "உள்ளதையும் கெடுத்தான் நொள்ளைக் கண்ணன்" என்று ஆகிவிடக்கூடாது.

இருக்கும் அமைப்புக்களை கெடுக்க முடியும் என்பதை செயலில் சொல்லி கொண்டு சிங்களவனுக்கு வசதி செய்து கொடுத்து பிரச்சாரத்துக்கு துணை போனவர்களை மதிக்க வேண்டும் எண்று சொல்கிறீர்களா...?

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத போராட்டம் சரி வராது என்பது சரியாக ஒருவேளை இருக்கலாம்... ஆனால் கடந்த Hardtalk கேட்டீர்கள் எண்றால் ஒடுக்க படும் மக்கள் கடைசியாக தேர்ந்து எடுக்க முலும் ஆயுதம் தான் ஆயுத போர் எண்று சொல்ல வருகிறார்கள்... முதலாவது அங்கத்தில் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பிய போராளி எண்று ஒருவரிடம் இருந்து பேட்டி எடுக்க படுகிறது... அவர் சொல்ல முயல்வதும் அது தான்... மக்கள் இண்று அமைதியை விரும்புகிறார்கள் ஆனால் அதே மக்களே ஆயுதங்களை எடுக்கும் காலம் வரும்... அது இந்த தலைமுறையாக இல்லாமல் கூட இருக்கலாம்...

ஆயுதம் தூக்கி யாரும் போராட புறப்படமாட்டார்கள் எண்று நீங்கள் உறுதியாக சொல்லும் காரணம் தான் என்ன...?? விடுதலை நோக்கி போராடிய எல்லா இனங்களுக்குள்ளும் ஆயுதம் ஒரு அங்கமாக தான் இருக்கிறது.... அது காந்தி காலத்து சுபாஸ் சந்திர போசாகத்தான் இருந்தாலும்...

அப்படி இல்லை அரசியல் மட்டும் போதும் என்பதுக்கு உங்களிடம் இருக்கும் வலுவான காரணங்கள் தான் என்ன...?

இந்தியாவின் உதவியுடன் தான் ஆயுதப்போர் ஆரம்பத்தில் சாத்தியமாக இருந்தது. அதன் பின்னர் சொந்தக் காலில் நிற்க முயன்றபோது மேற்கு நாடுகளுடன் சேர்ந்து சகல நாடுகளுமே தமிழரின் ஆயுதப் போராட்டத்தை நசுக்க ஒத்துழைத்தது. ஐ.நா.வைக் கொண்டு இறுதி யுத்தத்தில் நடந்த போர்க் குற்றங்களை ஒரு நீதியான விசாரணை செய்யமுடியாத நாதியற்ற நிலையில் இருந்து கொண்டு மீண்டும் ஆயுதப் போர் நடாத்த முடியும் என்று வாயால் மாத்திரம்தான் செய்யமுடியும். 2010 இல் உள்ள உலக ஓட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் மீண்டும் வன்முறைப் போராட்டத்தில் இறங்குபவர்கள் குப்புற விழுத்தி குழியும் பறித்த குதிரைக்கு ஒப்பானவர்கள். தாயகத்தில் உள்ள சிலர் தொடங்கினாலும், புலத்திலுள்ள சிலர் உதவிகள் புரிந்தாலும் ஒரு வலுவான போராட்டமாக மாற சர்வதேசம் இடங்கொடுக்காது. எனவே வெறும் சலசலப்பை மட்டுமே உண்டாக்கமுடியும். இதனால் என்ன பயன்?

தமிழர் தங்கள் உரிமையைப் பெற்றுக் கொள்ள ராஜதந்திர/சாணக்கிய அரசியல் செய்யவேண்டும். புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உலக அறிவைப் பெற்ற இளையோர் இத்தகைய அரசியல் போராட்டங்களை தாயகத்தில் உள்ளவர்களுடன் ஒன்றிணைந்து முன்னெடுக்கவேண்டும். அதைத் தவிர வேறு மார்க்கங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

இங்கை ஆயுத போர் என்பது மட்டும் தான் உறங்கு நிலைக்கு போய் இருக்கிறதே அண்றி மற்றயவை எதுவும் இங்கு புதிதாக இல்லை.... அதில் இன்னும் ஒரு சேர்க்கையாக நாடுகடந்த அரசும் சேர்ந்து இருக்கின்றது....

இங்கிலாந்தின் படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு, தமிழர் பேரவை என்பன போர் நடந்த காலத்திலேயே தோற்றுவிக்க பட்டன... ! இவைகள் உங்களுக்கு அலர்ச்சியை தருவனவாக இருந்தாலும் நீங்கள் சொல்லும் வேலைத்திட்டங்கள் அவர்களால் செய்ய படவில்லை எண்று உங்களால் நிறுவப்பட முடியாது... அவர்களுடன் உங்களுக்கு இணைய விருப்பம் இல்லை என்பது வேறு விடயமாக இருந்தாலும் அவர்கள் ஏதும் செய்ய இல்லை என்பது பொய்யானது...

C4 நிகள்ச்சியில் ஆதாரம் கொடுத்த சிங்கள தளபதியிடம் யார் வேண்டுமானாலும் விசாரிக்கலாம் எண்றும் அவர் ஆதாரம் தருவார் எண்று படுகொலைக்கான தமிழர் அமைப்பு அறிவுத்து இருக்கிறது... இதை பொய் எண்று சொல்ல போகிறீர்களா...??

பல அமைப்புக்கள் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ சில நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்பதை மறுக்கவில்லை. எனினும் ஒரு குடையின் கீழ் நின்று காத்திரமான நடவடிக்கைகளை இன்னமும் எடுக்கவில்லை. இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியான அழுத்தங்களைக் கொடுக்கமளவிற்கு தமிழர் அமைப்புக்கள் வலுவுடன் இல்லை. இதற்கு மாறாக இங்குள்ள தமிழர் அமைப்புக்கள் தமது அதிதீவிரவாதப் போக்கில் இருந்து இறங்கி சமரச அரசியல் செய்ய வரவேண்டும் என்று அழுத்தங்கள் வருகின்றன. அத்துடன் பொருளாதார ரீதியான அழுத்தங்களை சில நாடுகள் தமது நலன் சார்ந்து எடுக்கும்போது அப்படியான நடவடிக்கைகளுக்கு தாமும் காரணம் என்று இங்குள்ளவர்களால் சொல்லமுடியாது.

தமிழீழ வாக்கெடுப்பதை மக்கள் வெறுத்ததாக சொல்லப்பட்டது மிகவும் தவறு.... KP யின் தலைமையை ஏற்று கொள்ள வில்ல, தலைவரின் வீரச்சாவை ஏற்று கொள்ள இல்லை எண்றதும் தொடங்கிய சேறடிப்புக்கள் இண்று வரை நிண்ட பாடு இல்லை...

இப்படியான குழப்பங்கள் தெளிவு அடையும் வரைக்கும் யாருக்கு யாரையும் ஆதரிக்க போவது இல்லை... அது நீங்களாக இருந்தால் கூட...

எங்களுக்குள் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே குழப்ப வாதிகள் தான்... ! உள்ளை இருக்கும் பிரச்சினையின் அளவும் தெரியாமல் எதையாவது நினைத்து கொள்வது... உங்களுக்கு எதிரானவர்களையும் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டு பாருங்கள்....

மக்கள் வாக்கெடுப்பை வெறுத்ததாக நான் சொல்லவில்லை. வாக்கெடுப்புக்களில் பங்குபற்ற விடாமல் எதிர் எதிர் தரப்பினர் விசமனத்தனமான பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர். வாக்கெடுப்புக்குப் போகின்றவர்களின் விபரங்களைச் சேகரிப்பதால் அவர்கள் இலங்கை போகும்போது அல்லது இலங்கையில் இருக்கும் அவர்களின் உறவினர்களுக்கு ஆபத்துக்கள் வரலாம் என்றுகூட வதந்திகள் பரப்பப்பட்டது. எனவே வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்களை வெறுக்காமல் அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கவேண்டும்.

குழப்பவாதிகள் வெற்றிபெறுவதற்குக் காரணம் தமிழருக்கு தலைமைதாங்க முற்படுபவர்களின் பலவீனம்தான். சுதந்திரமான பேற்கு நாடுகளில் அரசியல் கருத்தரங்குகளை வைத்து (ஆரம்ப காலங்களில் ஊருக்கு ஊர் சென்று அரசியல் கூட்டங்கள் நடாத்திய மாதிரி) அல்லது ஊடங்கள், தொலைக்காட்சி, வானொலி மூலம் கொள்கைகளைத் தெளிவாக்கலாம். இப்படியான அரசியல் செயற்பாடுகளில் வெகுமக்களையும் பங்குபெற வைத்து அவர்களின் விருப்பங்கள்/அபிலாசைகளை அறியாமல், தமது விருப்பங்களைத் திணிக்கும் "மேய்ப்போர்" அரசியலே தமிழர் தலைமைகளால் விரும்பப்படுகின்றது. நியாயமான கேள்விகள்/சந்தேகங்கள் உள்ளோரைக் கூட முத்திரை குற்றி அடக்கத்தான் முனைகின்றார்களே தவிர, விளக்கங்கள் கொடுக்கமுனைவதில்லை.

இருக்கும் அமைப்புக்களை கெடுக்க முடியும் என்பதை செயலில் சொல்லி கொண்டு சிங்களவனுக்கு வசதி செய்து கொடுத்து பிரச்சாரத்துக்கு துணை போனவர்களை மதிக்க வேண்டும் எண்று சொல்கிறீர்களா...?

மதிக்க ஒன்றும் தேவையில்லை. முன்னுரிமையும், நாற்காலியும் கொடுக்கத் தேவையில்லை. அவர்கள் சொல்லும் கருத்துக்களில் நியாயமானவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்தாலே போதும்.

  • தொடங்கியவர்

இந்தியாவின் உதவியுடன் தான் ஆயுதப்போர் ஆரம்பத்தில் சாத்தியமாக இருந்தது. அதன் பின்னர் சொந்தக் காலில் நிற்க முயன்றபோது மேற்கு நாடுகளுடன் சேர்ந்து சகல நாடுகளுமே தமிழரின் ஆயுதப் போராட்டத்தை நசுக்க ஒத்துழைத்தது. ஐ.நா.வைக் கொண்டு இறுதி யுத்தத்தில் நடந்த போர்க் குற்றங்களை ஒரு நீதியான விசாரணை செய்யமுடியாத நாதியற்ற நிலையில் இருந்து கொண்டு மீண்டும் ஆயுதப் போர் நடாத்த முடியும் என்று வாயால் மாத்திரம்தான் செய்யமுடியும். 2010 இல் உள்ள உலக ஓட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் மீண்டும் வன்முறைப் போராட்டத்தில் இறங்குபவர்கள் குப்புற விழுத்தி குழியும் பறித்த குதிரைக்கு ஒப்பானவர்கள். தாயகத்தில் உள்ள சிலர் தொடங்கினாலும், புலத்திலுள்ள சிலர் உதவிகள் புரிந்தாலும் ஒரு வலுவான போராட்டமாக மாற சர்வதேசம் இடங்கொடுக்காது. எனவே வெறும் சலசலப்பை மட்டுமே உண்டாக்கமுடியும். இதனால் என்ன பயன்?

எங்கள் போராட்டம் வலு இழந்து போனதுக்கு நீங்கள் சொல்லும் காரணமும் நான் சொல்லும் காரணமும் வேறு வேறானவை... நாங்கள் எங்களின் அங்கீகாரத்துக்காக கெஞ்சுவது போண்ற நிலை எடுத்தோம்... ஆனால் பரிதாபமானவர்களை உலகம் எண்றுமே ஆதரித்தது இல்லை என்பதை புரிந்து கொள்ள தவறி இருந்தோம்... ஆயுத போராட்டம் எண்று வந்த பின் எங்களின் நோக்கு தமிழ் மக்களின் நலனை பற்றியதாக மட்டுமே இருந்து இருக்க வேண்டும்... சிங்களவருக்காக இந்தியருக்காக எல்லாம் பரிதாபப்பட்டது தவறு...

இது இரண்டையும் தவிர்த்து கடுமையான வளிகளை பேணியவர்களை தான் இண்று உலகம் சமரசம் செய்ய முன் வருகிறது... மற்றவர்களை ஒடுக்கி வைத்து இருக்கிறது... அதில், எரித்திரியர்களும், கிழக்கு திமோரும் நல்லதொரு உதாரணம்...!

ஒடுக்கப்பட்டு விடுதலைக்காக ஏங்கும் பரிதாபிகளில் அதில் பலஸ்தீனர்களும், பொஸ்னியர்கள் தான் தமிழர்களுக்கு நிகராக இருக்கிறார்கள்...!

தமிழர் தங்கள் உரிமையைப் பெற்றுக் கொள்ள ராஜதந்திர/சாணக்கிய அரசியல் செய்யவேண்டும். புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உலக அறிவைப் பெற்ற இளையோர் இத்தகைய அரசியல் போராட்டங்களை தாயகத்தில் உள்ளவர்களுடன் ஒன்றிணைந்து முன்னெடுக்கவேண்டும். அதைத் தவிர வேறு மார்க்கங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

அரசியல் வேண்டும் சரி... அதை சொல்லும் நல்லதொரு பலமான நிலையில் நீங்கள் இருக்க வேண்டும்... உங்களால் ஏது நலனும் அவர்களுக்கு இல்லாத போது அவர்கள் உங்களுக்காக எதை எதுக்காக செய்ய வேண்டும்...??

எங்களுக்கு நன்மை கிட்டாமல் நாங்கள் கூட யாருக்கும் எதையும் சும்மா செய்ய போவது இல்லை... நாங்கள் பரிதாபமானவர்களாக வாழ்வது மட்டும் தான் எங்களின் முக்கிய எதிரியே....! தனது வெற்றிக்காக எதையும் செய்ய துணிந்த சிங்களவன் அவர்களை பொறுத்து பறவாய் இல்லை...

இந்த உண்மைகளை புரிந்து கொள்ளுங்கள்...

பல அமைப்புக்கள் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ சில நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்பதை மறுக்கவில்லை. எனினும் ஒரு குடையின் கீழ் நின்று காத்திரமான நடவடிக்கைகளை இன்னமும் எடுக்கவில்லை. இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியான அழுத்தங்களைக் கொடுக்கமளவிற்கு தமிழர் அமைப்புக்கள் வலுவுடன் இல்லை. இதற்கு மாறாக இங்குள்ள தமிழர் அமைப்புக்கள் தமது அதிதீவிரவாதப் போக்கில் இருந்து இறங்கி சமரச அரசியல் செய்ய வரவேண்டும் என்று அழுத்தங்கள் வருகின்றன. அத்துடன் பொருளாதார ரீதியான அழுத்தங்களை சில நாடுகள் தமது நலன் சார்ந்து எடுக்கும்போது அப்படியான நடவடிக்கைகளுக்கு தாமும் காரணம் என்று இங்குள்ளவர்களால் சொல்லமுடியாது.

ஒருங்கிணைக்க படவில்லை என்பதும் தவறு... ஒருங்கிணைக்க பட்டவர்கள் உங்களால் புலிச்சாயம் பூசப்ப்பட்டு உள்ளார்கள் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வது கேவலமாக நினைக்கிறீர்கள்... அல்லது உங்களின் நட்பு வட்டத்தில் தவறாக பேசுவார்கள் எண்று பயப்பிடுகிறீர்கள் எண்று ஒரு தடவை நினைத்து பாருங்கள்...

இருக்கும் அமைப்பை மாற்றி அமைக்காமல் அதுக்குள் புகுந்து வேலை செய்து அதன் தன்மையையும் ஒழுங்கமைப்பையும் மாற்றும் செயற்திறன் இல்லாதவர்கள் செய்வது தான் இந்த குறை கூறல்கள்...

மக்கள் வாக்கெடுப்பை வெறுத்ததாக நான் சொல்லவில்லை. வாக்கெடுப்புக்களில் பங்குபற்ற விடாமல் எதிர் எதிர் தரப்பினர் விசமனத்தனமான பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர். வாக்கெடுப்புக்குப் போகின்றவர்களின் விபரங்களைச் சேகரிப்பதால் அவர்கள் இலங்கை போகும்போது அல்லது இலங்கையில் இருக்கும் அவர்களின் உறவினர்களுக்கு ஆபத்துக்கள் வரலாம் என்றுகூட வதந்திகள் பரப்பப்பட்டது. எனவே வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவர்களை வெறுக்காமல் அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கவேண்டும்.

வாக்கெடுக்ப்பில் கலந்து கொள்ளாது யாரால் வதந்திகள் பரப்ப பட்டன என்பதை எப்போதாவது நினைத்து பார்த்து இருக்கிறீர்களா...?? இல்லை குறைந்தது யாருக்கு அப்படியான தேவை இருக்கிறது எண்று...??

நாங்கள் இண்டைக்கும் சிங்களவனின் நிகழ்ச்சி நிரலுக்குள் தான் நிக்கின்றோம் எண்டதை புரியாத வரைக்கு விடிவு தூரம் தான்...

குழப்பவாதிகள் வெற்றிபெறுவதற்குக் காரணம் தமிழருக்கு தலைமைதாங்க முற்படுபவர்களின் பலவீனம்தான். சுதந்திரமான பேற்கு நாடுகளில் அரசியல் கருத்தரங்குகளை வைத்து (ஆரம்ப காலங்களில் ஊருக்கு ஊர் சென்று அரசியல் கூட்டங்கள் நடாத்திய மாதிரி) அல்லது ஊடங்கள், தொலைக்காட்சி, வானொலி மூலம் கொள்கைகளைத் தெளிவாக்கலாம். இப்படியான அரசியல் செயற்பாடுகளில் வெகுமக்களையும் பங்குபெற வைத்து அவர்களின் விருப்பங்கள்/அபிலாசைகளை அறியாமல், தமது விருப்பங்களைத் திணிக்கும் "மேய்ப்போர்" அரசியலே தமிழர் தலைமைகளால் விரும்பப்படுகின்றது. நியாயமான கேள்விகள்/சந்தேகங்கள் உள்ளோரைக் கூட முத்திரை குற்றி அடக்கத்தான் முனைகின்றார்களே தவிர, விளக்கங்கள் கொடுக்கமுனைவதில்லை.

இதை கொஞ்சம் உங்களுக்கு விளக்கமாக சொல்ல வேண்டும்... சில மாதங்களின் முன் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது...

மதிக்க ஒன்றும் தேவையில்லை. முன்னுரிமையும், நாற்காலியும் கொடுக்கத் தேவையில்லை. அவர்கள் சொல்லும் கருத்துக்களில் நியாயமானவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்தாலே போதும்.

அவர்கள் செய்தவைகள் அனியாயமாக இருக்கும் போது நியாயம் என்று எப்படி வரும்...?? இண்றும் புலி ஆதரவாளர்கள் எண்று விளித்து கொண்டு , நாங்கள் மதிப்பு வைத்து இருக்கும் தலவர் மீது அவதூறுகள் சொல்பவர்கள் தான் சிந்திக்க வேண்டும் நாங்களும் இந்த மக்களின் அங்கம் எண்று...

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னவற்றையே திரும்பத் திரும்பச் சொல்லி சலிப்பூட்ட விரும்பவில்லை.. ஆகவே இறுதியாக ஆயுதப் போராட்டம் வன்னிக் காட்டில் இருந்தோ அல்லது புலம்பெயர் நாடுகளில் இருந்தோ வெடிக்காது என்றும், ஆனால் அழுத்தங்களைப் பிரயோகிக்கக்கூடிய அரசியல் போராட்டங்கள் புலத்திலும் தாயகத்திலும் தொடரச் சந்தர்ப்பங்கள் உள்ளன என்றும் கூறி முடித்துக் கொள்கின்றேன்.

இதுக்கு காலம் தான் பதில் சொல்லும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.