Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினைத் தீர்வு... என்னாகும்?

Featured Replies

வடக்கு , கிழக்கு இணைந்த ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சி அடிப்படையில் நிரந்தர அரசியல் தீர்வைத் தமிழ் மக்கள் பெற்றுக் கொள்வதற்கு, பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணம் வந்திருந்த பிரிட்டனின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் மார்க் குட்டிங்கிடம் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு நேற்றுமுன்தினம் முன்வைத்த கோரிக்கை இதுதான்.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இந்த நாட்டை ஆண்டவர்கள் பிரிட்டிஷ்காரர்களே. தாம் இந்த நாட்டைக் கைப்பற்றியபோது இங்கு தனித்தனியாக இருந்த சிங்கள, தமிழ் இராச்சியங்களை ஒன்றிணைத்த வர்கள் பிரிட்டிஷ்காரர்களே. அந்த வகையில் தாம் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டிய கடமை ஒன்று இன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு உண்டு.

ஆனால் இலங்கை தன்னாதிக்கமும் சுயாதிபத்தியமும் உள்ள ஜனநாயக நாடாக உள்ளதால், அதன் விவகாரங்களில் தலையிட முடியாது என்ற காரணத்தைக் கூறி, ஏனைய நாடுகளைப் போன்று பிரிட்டனும் தமிழருக்கு நீதி கிடைக்க உதவமுடியாத நிலையைச் சுட்டிக்காட்டித் தப் பித்துக்கொள்கிறது.

மேலும், அருகில் உள்ள இந்தியாவின் கருத்துக்களையும் ஆலோசனைகளையுமே முழு அளவில் காதில் போட்டுக்கொள்ளாத இலங்கை அரசு, பிரிட்டன் கூறும் ஆலோசனைகளை கிட்டவும் முகர்ந்து பார்க்குமா என்பது சந்தேகத்துக்குரியதே. ஆயினும் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதால் பிரிட்டனும் இதில் அக்கறையுடன் கவனம் செலுத்தவேண்டும்.

இதற்கிடையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு முற்று முழுதாக இந்நாட்டில் இருந்தே வரவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டுகிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ.

இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா இருபத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது விரலை வைத்துச் சுட்டுக்கொண்டது. இலங்கையில் இப்போது தோன்றியுள்ள அரசியல் கள நிலைகளின் பின்னணியில், மீண்டும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தனது கையைப் புகுத்தசற்று முனைந்திருக்கிறது.

ஆயினும், இது விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பையும் தாம் பெரிதாக விரும்பவில்லை என்பதனை ஜனாதிபதி சூசகமாக இரண்டொரு நாள்களுக்கு முன்னர் கூறியிருக்கிறார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்நாட்டில் தயாரிக் கப்பட்டதாக இருக்கவேண்டும். இந்த நாட்டில் நடை முறைப்படுத்தவேண்டிய தீர்வை இந்தியாவால் (வெளி யில் இருந்து) கொண்டுவரமுடியாது.

இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை, தீர்வைக் கொண்டுவருபவர்கள் இதனைத் தெரிந்திருக்கவேண்டும். தீர்வு யோசனைகளை பெரும்பான்மை இன மக்கள் நிராகரித்துவிட்டால் பிறகு எவரும் எதுவும் செய்யமுடியாது. ஆகையால் இனப்பிரச்சினைக்கான தீர்வு எங்கள் நாட்டிலேயே வகுக்கப்படவேண்டும்; வரையப் படவேண்டும். மேலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு எல்லா சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதி இந்திய ஊடகவியலாளர் ஒருவருக்கு விளக்கியுள்ளார்.

மத்திய அரசுடன் மாகாணங்கள் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா என்பது குறித்து நாம் ஆராய விரும்புகிறோம். இது மிகவும் முக்கியமானதாகும். அதனாலேயே மேல்சபை அமைக்கும் யோசனையைப் பரிசீலித்து வருகிறோம் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இணக்கத்துடன் தீர்வு ஒன்றைக் காண விரும்புகிறேன். ஆனால், எமது நெருக்கடிகளை அவர்கள் விளங்கிக்கொள்வது அவசி யம். பெரும்பான்மையினரின் ஆதரவில்லாவிடில் அரச மைப்புக்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதும் இயலாத காரியமாகிவிடும். இவ்வாறாக இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தப்பட்ட விடயத்தை பிறர் தலையீடு இல்லாமல், பெரும்பான்மையினருக்கு இடைஞ் சல் தராத விதத்தில், கையாளவே ஜனாதிபதி விரும்புகிறார் என்பது வெள்ளிடை மலைபோல் தெரிகிறது.

ஆகையால், பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர்கள், மஹிந்த அமைக்கவுள்ள இனப்பிரச்சினைத் தீர்வு என்ற குகைக்கு ஊடாகச் சென்று வெளிச்சத்தைக் காண்பதில் பல அம்சங்களை, தந்திரோபாயங்களைக் கையாளும் திறமை பெறவேண்டும். அதில் தேர்ச்சி காண மிகுந்த இராஜதந்திரமும், ஒருமித்த நிலையும் அத்தியாவசியமா னவை.

இலக்கு எது என்பதில் தெளிந்த சிந்தனையும், நேர் கொண்ட நோக்கும், அப்பழுக்கில்லாத அரசியல் விவே கமும், தூரப்பார்வையும், காட்டிக்கொடுப்பில்லாத ஒற்று மையும் பிரதானமாகத் தேவை.

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் பல தசாப்தங்களாக, பல வடிவங்களில், பல கட்டங் களில் முன்னெடுக்கப்பட்டது. ஆயினும் அவ்வப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் எமது உரிமைப் பிரச் சினையைத் தமது நிலைப்பாட்டின் பார்வையில் மட்டுமே அடித்தளமிட்டனர். அந்த நிலை மீண்டும் ஏற் படாமல், முன்னெச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் செயற்படுவதனை ஆத்மார்த்தமாக்கிக் கொள்வது அவ சியத்திலும் அவசியம்.

"தோற்றுப்போன' நிலையில், கிடைப்பதை இரு கரம் ஏந்தி பெற்றுக்கொண்டால் பரவாயில்லை என்ற சிந்தனை தமிழர் தரப்பிடம் கிஞ்சித்தும் வேண்டாம். விவேகமும், ஒற்றுமையும், நேர்மையும் எவ்வேளையும் வெற்றிதரும் என்பதனை நன்றாக உணர்வோமாக.

http://www.uthayan.com/Welcome/afull.php?id=458&L=T&1277890581

இனப்பிரச்சினைத் தீர்வு... என்னாகும்?

தேர்தலில் போட்டியிட்ட (வென்ற, தோற்ற) புலத்து, புலம் பெயர் தமிழர் "பிரதிநிதிகள்", தமிழரை ஏமாற்றியபடி தமது அரசியல் இருப்பை தக்கவைக்க, அரசியல் பிழைப்பை நடத்த இந்த "அரசியல் தீர்வு" தான் பேருதவி செய்கிறது. கள்ள வோட்டுக்களில் வென்று பதவி பெற்றவர்கள் - கடத்தல், கப்பம், கொலை என்று மும்மரமாக இருக்கிறார்கள்.

பிச்சைப் பாத்திரம் ஏந்தி சிங்கள அரசை பேச்சுவார்த்தைக்கு அழைத்த சம்பந்தன் கோஸ்டி, நட்சத்திர விடுதி சந்திப்புக்களை எதிர்பார்த்து நித்திரை கொள்கிறார்கள். தோற்றவர்கள் அடுத்த தேர்தல் வரை மக்களை மறந்து நித்திரை கொள்கிறார்கள்.

மக்களை மறந்து நித்திரை கொண்ட புலம் பெயர் பிரதிநிதிகள், ஐ. நா. சபையின் போர்க்குற்ற விசாரணை நிபுணர் குழு அமைக்கப்பட்டதும், தாம் நித்திரை கொள்ள மேலும் நாலு மாதம் போதாது - இன்னும் வேண்டும் என கேட்டுவிட்டு நித்திரை கொள்ள போயிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: நாட்டில் இனப்பிரச்சையே இல்லாதபோது, இல்லாத பிரச்சனைக்கு எப்படித் தீர்வு தர முடியும்??

தீர்வும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், எல்லாரும் வாருங்கள், நாட்டைக் கட்டியெழுப்புவோம். போர்க்குற்றம், தீர்வு, உரிமை என்பதெல்லாம் நாட்டை பிளவுபடுத்தி காட்டிக் குடுக்கும் செயல். ஆகவே கே.பீ அண்ணாவின் பாதையில் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்பதுதான் சரி.

பிற்குறிப்பு :சிங்கள பவுத்த நாட்டைக் கட்டியெழுப்ப விருப்பமற்றவர்கள் உதவி செய்யத் தேவையில்லை.

காலங் காலமாக சிங்களப் பேரினவாதத்தினால் சொல்லப்பட்டு வரும் விடயந்தான் இது. தீர்வை உருவாக்குவது. அதை பெரும்பான்மை நிராகரித்துவிட்டது என்று கைகழுவுவது. இந்தியா என்ன செய்யும் என்று சிறிலங்காவிற்கு ஓரளவு தெரியும். தனது இருப்பை தமிழ்மக்கள் ஊடாகத்தான் சிங்களத்தில் வைத்திருக்க முடியும் என்று இரு பகுதியும் புரிந்திருக்கிறது.

காலங் காலமாக சிங்களப் பேரினவாதத்தினால் சொல்லப்பட்டு வரும் விடயந்தான் இது. தீர்வை உருவாக்குவது. அதை பெரும்பான்மை நிராகரித்துவிட்டது என்று கைகழுவுவது. இந்தியா என்ன செய்யும் என்று சிறிலங்காவிற்கு ஓரளவு தெரியும். தனது இருப்பை தமிழ்மக்கள் ஊடாகத்தான் சிங்களத்தில் வைத்திருக்க முடியும் என்று இரு பகுதியும் புரிந்திருக்கிறது.

இதற்கு மீண்டும் துணை போகத் துடிக்கும் சம்பந்தன் போன்ற தமிழ் பிரதிநிதிகளை என்னவென்று சொல்வது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.