Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் புராதன பாரம்பரியத்தை பாதுகாக்கும் மலேசிய நிபுணர்

Featured Replies

தமிழர்களின் புராதன பாரம்பரியங்களை இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் மூலம் பேணிப் பாதுகாக்கும் முன்முயற்சியை மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் மேற்கொண்டுள்ளார். சுபாஷினி றிம்னல் என்ற இப்பெண்மணி தற்போது ஜேர்மனியில் வசித்து வருகிறார். உலகளாவிய ரீதியில் விலைமதிக்க முடியாத இந்தப் புராதன தொல்பொருள் சின்னங்களுக்கான ஆதாரங்களை அவர் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

"தமிழ்ப் பாரம்பரியத்தை டிஜிட்டல் ஊடாகப் பாதுகாக்க நான் விரும்புகிறேன். புராதன தமிழ்விதானங்கள், ஆலயங்களின் தூண்களிலுள்ள எழுத்துகள்,குகைகள் என்பவற்றில் காணப்படுகின்றன. அத்துடன், செப்புத்தகடுகள்,ஓலைச்சுவடிகள், காகிதங்களில் காணப்படுகின்றன. எமது தமிழ் பாரம்பரிய மன்றமானது இந்த விடயங்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறது. எதிர்காலத்தில் டிஜிட்டலில் இவற்றைப் பேணிப்பாதுகாக்க விரும்புகின்றது என்று பேர்னாமா செய்திச் சேவைக்கு அவர் கோயம்புத்தூரிலிருந்தவாறு தெரிவித்தார். அங்கு இடம்பெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவர் பங்கேற்றிருக்கிறார். இந்த தமிழ்ப் பாரம்பரியம் என்ற இந்த அமைப்புக்கு உலகளாவிய பல நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்களிப்பை வழங்குகின்றனர். பிரிட்டன்,ஜேர்மனி,சுவிற்ஸர்லாந்து,இந்தியா,இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இணையத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பை மேம்படுத்துவதற்குப் பங்களிப்பைச் செலுத்துகின்றனர். அத்துடன், உலகளாவிய ரீதியில் பரந்து காணப்படும் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் தமிழ் வரலாறு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. 2002 இல் இங்கிலாந்தில் இவை ஆரம்பிக்கப்பட்டது. பிரிட்டிஷ் நூலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வமான 13 புராதன தமிழ் நூல்களை வைத்துக்கொண்டு இந்த இலத்திரனியல் மூலமான நடவடிக்கை ஆரம்பமானது.

இப்போது சுமார் 7 ஆயிரம் ஓலைச்சுவடிகளைக் கடந்த ஆறு வருடங்களில் சுபாஷினியும் அவரின் குழுவினரும் வைத்திருக்கின்றனர். இவை 150 200 வருடங்களுக்கு முற்பட்டவையாகும். அவை கணினிமயப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், இந்துமத முனிவர்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சிகிச்சையளித்த சித்த மருத்துவக் குறிப்புகளையும் அவர்கள் சேகரித்து வைத்துள்ளனர். அவை ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டவையாகும்.

இந்த ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டதில் 60 வீதமானவை கப்பல் நிர்மாணம், கட்டிடக்கலை, ரொக்கற் சார்ந்த அறிவியல் என்பன பற்றியதாகும். பெறுமதி வாய்ந்த பண்டையகால இந்த விபரங்களை நாம் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. விசேடமாக இணையத்தில் இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். இதனால் சர்வதேச ரீதியாக இது தொடர்பான அறிவு விரிவடையும் என்று பினாங்கில் பிறந்த சுபாஷினி கூறியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் அவருக்குள்ள ஆர்வம் எல்லை கடந்ததாகும்.

தகவல் தொழில்நுட்ப நிபுணரான இவர் சர்வதேச கணினி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தனது பணியின் போது செக்.குடியரசினால் 13 ஆம் நூற்றாண்டு கால பைபிள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுகொண்ட பின் தமிழ்ப் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்ற தனது செயற்திட்டத்தை அவர் ஆரம்பித்திருக்கிறார்.

http://www.thinakkural.com/publication_west/content.php?contid=3734&catid=1

"தமிழ்ப் பாரம்பரியத்தை டிஜிட்டல் ஊடாகப் பாதுகாக்க நான் விரும்புகிறேன். புராதன தமிழ்விதானங்கள், ஆலயங்களின் தூண்களிலுள்ள எழுத்துகள்,குகைகள் என்பவற்றில் காணப்படுகின்றன. அத்துடன், செப்புத்தகடுகள்,ஓலைச்சுவடிகள், காகிதங்களில் காணப்படுகின்றன. எமது தமிழ் பாரம்பரிய மன்றமானது இந்த விடயங்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறது.

அத்துடன், உலகளாவிய ரீதியில் பரந்து காணப்படும் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் தமிழ் வரலாறு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. 2002 இல் இங்கிலாந்தில் இவை ஆரம்பிக்கப்பட்டது. பிரிட்டிஷ் நூலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வமான 13 புராதன தமிழ் நூல்களை வைத்துக்கொண்டு இந்த இலத்திரனியல் மூலமான நடவடிக்கை ஆரம்பமானது.

இப்போது சுமார் 7 ஆயிரம் ஓலைச்சுவடிகளைக் கடந்த ஆறு வருடங்களில் சுபாஷினியும் அவரின் குழுவினரும் வைத்திருக்கின்றனர். இவை 150 200 வருடங்களுக்கு முற்பட்டவையாகும். அவை கணினிமயப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், இந்துமத முனிவர்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சிகிச்சையளித்த சித்த மருத்துவக் குறிப்புகளையும் அவர்கள் சேகரித்து வைத்துள்ளனர். அவை ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டவையாகும்.

இந்த ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டதில் 60 வீதமானவை கப்பல் நிர்மாணம், கட்டிடக்கலை, ரொக்கற் சார்ந்த அறிவியல் என்பன பற்றியதாகும். பெறுமதி வாய்ந்த பண்டையகால இந்த விபரங்களை நாம் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. விசேடமாக இணையத்தில் இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். இதனால் சர்வதேச ரீதியாக இது தொடர்பான அறிவு விரிவடையும் என்று பினாங்கில் பிறந்த சுபாஷினி கூறியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் அவருக்குள்ள ஆர்வம் எல்லை கடந்ததாகும்.

தகவல் தொழில்நுட்ப நிபுணரான இவர் சர்வதேச கணினி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தனது பணியின் போது செக்.குடியரசினால் 13 ஆம் நூற்றாண்டு கால பைபிள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுகொண்ட பின் தமிழ்ப் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்ற தனது செயற்திட்டத்தை அவர் ஆரம்பித்திருக்கிறார்.

அம்மையாருக்கு வாழ்த்துக்கள்.

சித்தம் கலங்கிப்போன சிவத்தம்பி, கொலைஞர் கருநாய்நிதி போல தமிழுக்கும் சமயத்துக்கும் சம்பந்தமே இல்லை, தமிழ் மதச் சார்பற்றது என்று ஒரு போலித் திராவிடக்குழு வெளிக்கிடும். ஆதாரம் இல்லாமல் உளறி உளறி, போக்கிரிகள் பலரின் ஆதரவுடன் ஈற்றில் தமிழுக்கு எதுவுமே சம்பந்தம் இல்லை, பாரம்பரியமே இல்லை என்று நிறுவி தமிழையும், தமிழினத்தையும் அழித்துவிடுவதில் இந்த குழுக்கள் மும்மரமாக இருப்பதை உணரும் போது காலம் தாழ்ந்ததாக அமையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.