Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் மனித உரிமைகள் ஆர்வலர் 17 பேருக்கு இந்தியாவில் பட்டங்கள் வழங்கிக் கௌரவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மனித உரிமைகள் ஆர்வலர் 17 பேருக்கு இந்தியாவில் பட்டங்கள் வழங்கிக் கௌரவிப்பு!

இலங்கையின் மனித உரிமைகள் ஆர்வலர்கள் 17 பேருக்கு இந்திய பல்கலைக்கழகங்களால் கௌரவ பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. டில்லி இந்திரா காந்தி திறந்த பல்கலைக் கழகம், பங்களூர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்திய புனர்வாழ்வு சபை இப்பட்டங்களை வழங்கிக் கௌரவித்தது.

எட்டுப் பேருக்குப் பேராசிரியர் விருதும்,ஐந்து பேருக்கு கலாநிதி விருதும்,நான்கு பேருக்கு விஸ்ப பந்து விருதும் அவர்களின் சமூக, சமாதான சேவைகளைப் பாராட்டி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரிலுள்ள ராஜபுதன செரட்டன் ஹொட்டலில் இவ் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு இலங்கையில் இருந்து எரிபொருள் பெற்றோலிய அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த. சமாதான நீதவான்கள் மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் ஜயந்த களுபோவில,அந்த அமைப்பின் தேசிய இணைப்பாளர் பேராசிரியா டி.எம். சந்திரபால, இலங்கை சமூக சேவைகள் அமைப்பின் பணிப்பாளர் எம்.எச்.எம்.றஷாக் உட்பட நாற்பது பேர் கொண்ட குழுவினர் சென்றிருந்தனர் இலங்கை அமைச்சர் சுசில் பிறேம ஜெயந்த இந்தியாவின் ராஜஸ்தான் மாநில அமைச்சர் ஐமது அகமட்கான் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கிக் கௌரவித்தனர்.

விருதுகளைப் பெற்றோர் விபரம் வருமாறு:

பேராசிரியர் பட்டங்களைப் பெற்றவர்கள்:

01.அம்பாறை மாவட்டத்தின் கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சமூக சேவையாளரும்,தொழிலதிபருமான சமாதான நீதிவான் சாமசிறி எம். இராஜேஸ்வரன்.

02.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் மோசஸ் மரியதாஸ்

03.எகட் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட் தந்தை.சில்வஸ்டர் சிறிதரன்

04.முன்னாள் நீதித்துறை பிரதி அமைச்சர் புத்திர சிகாமணி

05.பி.எம்.ஐ.திஸாநாயக்க 06.எல்.பி.ஜயரத்ண

07..ஈ.எஸ்.பியந்த விதானகே

08உபுல் பண்டார செனவிரட்ண

டாக்டர் பட்டங்களைப்பெற்றவர்கள்

01. எம்.கிருஷ்ணசாமி

02. நந்ததாச நாராயண

03..சில்வா செனவிரட்ண

04. அனுர எலியபுர

05. கொட்டின் வெதடதியரட்ண

விஸ்ப பந்து பட்டங்களைப் பெற்றவர்கள்

01. . எஸ்.. நாகலிங்கம்

02. எஸ்.கந்தசாமி

03. நந்தினி கெட்டியாராச்சி

04. எஸ்..கணேசானந்தம்

விருதுகளைப் பெற்று வந்த இவகர்ளுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து மாபெரும் வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய தொழிலதிபர் இராஜேஸ்வரன் இது அவரின் தன்னலமற்ற சமூக சேவைகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கிகாரம் என்றும் அவரால் இயன்ற சமூக சேவைகளை எதிர்காலங்களிலும் தொடர்ந்தும் மேற்கொள்வார் என்றும் தெரிவித்தார்.

நன்றி - Tamilcnn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.