Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள அரசின் நகர்வும் தமிழர்களின் நடவடிக்கைகளும்

Featured Replies

மஹிந்த அரசு வெளியில் சிங்கள மக்களிடம் தம்மை ஓர் அனைத்துலகத்திற்கு அடிபணியாத தலைமைத்துவம் என்று காட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே பீதியடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தினை பயங்கரவாதம் என்று சர்வதேச சக்திகளை உள்வாங்கி தமிழர்களது போராட்டத்தினை ஒடுக்கியது போன்று தற்போது சர்வதேச நெருக்கடிகளையும் எதிர்கொள்ளலாம் என்று மஹிந்த அரசு நினைத்தது.

உள்ளூரில் விடுதலைப்புலிகளை வென்று சிங்கள இனத்தை காப்பாற்றிய மன்னன் போன்றும் வெளியுலகிற்கு பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியினை நிலை நாட்டியவர் போன்றும் காண்பிக்கும் தோற்றம் நீண்டகாலத்திற்கு நிலைக்காது என்பதனை மஹிந்த அரசு கட்டம் கட்டமாக உணரும் காலம் நெருங்குகின்றது.

சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள்,ஐக்கிய நாடுகளின் ஆலோசனை குழு அமைப்பு,அனைத்துலக நாடுகளின் உதவி திட்டங்கள் தொடர்பான நிபந்தனைகள், ஜி.எஸ்.பி. வரி சலுகை இடை நிறுத்தம் ஆகியன ஒரு பக்கம் மிகப்பெரும் தலையிடியாக எழுந்துள்ளன. இவற்றை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற திட்டத்திற்குள் அடக்க மஹிந்த அரசு முயற்சித்தாலும் சர்வதேசம் விடுவதாக இல்லை.

ஆகவேஎ மஹிந்த வெளிப்படையாக எதிர்த்தும் உள்ளார்ந்த ரீதியாக பல நகர்வுகளையும் செய்து வருகின்றது.

1 தாமே விசாரணை செய்ய போவதாக ஓர் குழுவினை அமைத்தது.

2 மக்களை மீழ் குடியமர்த்திக்கொண்டிருப்பதாக காட்டுதல்

3 போராளிகளிற்கு புனர்வாழ்வழிப்பதாக காட்டுதல்

4 அரசியல் தீர்வு காணப்போவதாக இந்தியாவுடன் சேர்ந்து நாடகமாடி இந்தியா ஊடாக சர்வதேச அழுத்தத்தினை தணித்தல்

5 பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் தனக்கு எதிரான நாடுகளுக்கும் ஆதரவான நாடுகளுக்கும் வாணிப சலுகைகளை வழங்கி உள்வாங்குதல்.

6 போர்குற்ற ஆலோசனைக்காக அமைக்கப்பட்ட குழுவினரை அந்தந்த நாடுகள் ஊடாக அணுகுதல்

7 எல்லாவற்றுக்கும் மேலாக புலம்பெயர் மக்களுடனும், புலிகளுடனும் தாம் நல்லிணக்கத்திற்கு போவதாக சர்வதேசத்திற்கு காட்டி அனைத்து காய்களையும் ஒரே கல்லில் வீழ்த்தும் திட்டமான செல்வராசா பத்ம நாதனின் திட்டத்தினை நகர்த்தல்

ஆகிய திட்டங்களை நகர்த்திக்கொண்டு இருக்கின்றது.

மேற்கூறிய திட்டங்களில் நியாயப்பாடுகளை விட பொய்களும் ஏமாற்றுவித்தைகளும் , நம்பிக்கையீனங்களும் அதிகமாக இருப்பதனை அனைத்துலக நாடுகள் வெளிப்படுத்தியுள்ளன. கூடவே புலம்பெயர் மக்களின் பிரதிபலிப்ப்uக்களும் அவ்வாறே உள்ள நிலையில் சில சிங்கள கட்சிகளும் தமது நலன் கருதி மஹிந்தவின் இந்த திட்டங்கள் ஓர் அரசியல் நாடகம் என புட்டுக்காட்டியும் வந்துள்ளன.

இறுதியாக புலம்பெயர் மக்களை உள்வாங்குதல் மூலமான நல்லிணக்கம் என்ற கே.பி அவர்களுடனான திட்டமும் புலம்பெயர் மக்களினால் முறியடிக்கப்பட்டு வருகின்றது. ஏன் பல வெளி நாட்டு ஊடகங்கள் மற்றும் சிங்கள அரசியல் மற்றும் ஊடகங்களினாலும் கூட சிங்கள அரசின் நல்லிணக்க நாடகத்தினை புட்டுக்காட்டியுள்ளன.

பிசு பிசுத்துப்போன தமது நகர்வுகள் ஒரு பக்கம் இருக்க மறுவளமாக

சிங்கள அரசின் பொருளாதாரம் இன்னமும் வெளி நாட்டு கடன்களையும் உதவிகளையும் நம்பியே நகர்கின்றன. வேலைவாய்ப்பின்மை, விலை உயர்வு,கடன்சுமைகள் ஆகியன மஹிந்த அரசின் களுத்தை நெரிக்கின்றன. இதுவரை காலமும் போர் என்ற மாயைக்குள் சிங்கள மக்களை ஏமாற்றி வந்த மஹிந்த இனி என்ன செய்யப்போகின்றார் ? என்பது கேள்வியாக இருக்கின்றன. இதற்கு பதிலாக விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள் என்ற தோற்றப்பட்டினை சிங்கள புலனாய்வு பிரிவுகள் செய்துவந்தாலும் அது யாராலும் நியாயப்படுத்த முடியாத கட்டத்தினை எட்டிவிட்டது.

இன்னொருபக்கம் புலிகள் இருக்கின்றார்கள் ஆகவே போர்க்காலம் போல அரசாங்கம் இப்போதும் இருக்க வேண்டும் என எவ்வளவு காலம் சிங்களம் காட்டமுடியும். ஏனெனில் இந்த ஏமாற்று வித்தை சிங்களத்தின் பிடரியில்தனக்குத்தானே அடிக்கும் என்பதும் சிங்களத்திற்கு தெரியும். இந்த விடயம் எப்படி இருக்கும் என்றால்

உதவிகள் பெறுவதற்காக இடம்பெயர் தமிழ் மக்களின் எண்ணிக்கையினை முகாம்களில் கூட்டி காட்டுவதும் அதே வேளை அரசியலுக்காக மீழ் குடியேறிய மக்களின் தொகைகளை கூட்டிக்காட்டுவதும் போலவே இருக்கும்.

அதாவது இருக்கின்றார்கள், முற்றாக அழிக்கப்பட்டுள்ளார்கள் என்ற எதிர்மறையான கருத்துக்களை சிறிலங்கா அரசாங்கம் நீண்டகாலம் பயன்படுத்த முடியாது.

ஆகவே சிங்களத்திற்கு எல்லாவற்றுக்கும் ஓர் வரையறை உண்டு அது எதுவரை என்பதும் மஹிந்த அரசிற்கு தெரியும்.

அதற்குள் முற்று முழுதாக தமிழர் போராட்டத்திற்கு முக்கிய அடையாளங்களாக இருக்கும் மக்கள் தொகை, நிலம் ஆகியவற்றில் முழுமையான மாற்றங்களை செய்யவேண்டும் என திட்டமிட்டு வேகமாக செயற்படுகின்றது. அதுவரை சிங்களம் தன்னாலான பொய்களையும், நெகிழ்வுகளையும், கடைப்பிடிக்கும்.

சிங்கள குடியேற்றம், தமிழர் வளங்களை சூறையாடல், தமிழர் மன வலிமையினை உடைத்தல், தமிழின ஆளணிகளை நலிவடைய செய்தல், இளம் சமுதாயத்தை சீரழித்தல், கலாச்சார சீரழிவுகள் ஆகிய உள்ளடங்கலான தமிழர் பொருளாதார, சமூக,குடும்ப, கலாச்சார கட்டமைப்புக்களை சினாபின்னமாக்கும் திட்டங்களை செய்துவருகின்றது.

ஆகவே

சிங்கள அரசின் இந்த தமிழினத்தை வேரோடு அறுக்க தேவையான கால அவகாசத்தை அனைத்து தமிழர்களும் ஒருங்கிணைந்து புரிந்து செயற்படவேண்டும். அபிவிருத்தி, புனர்வாழ்வு, நல்லிணக்கம் என்ற பசப்பு வார்த்தைகளுக்குள் வீழ்ந்துவிடாது அத்துடன் தாயகத்தில் தமிழ் மக்களின் நலன்களை தன்முனைப்பாக செய்து கொண்டு தமிழர் போராட்டமும், வேலைத்திட்டங்களும் நகரவேண்டும்.

ஈழநாதம்

சிங்களத்துக்கு ஒரு கரி நாளாக ஆவணி ஞாயிறு 15 ( August 15, 2010 )அமையும் என எதிர்பார்ப்போம்.

-- ஐரோப்பிய ஒன்றியம் அன்றே ஜி எஸ் பி என்ற வர்த்தக சலுகையை இரத்து செய்யும் என எதிர்பார்க்கின்றோம்.

-- இதன் மூலம் 540 பில்லியன் ருபாய்கள் ( 540, 000, 000, 000) இழக்கப்படலாம்.

-- 40000 வேலைகள் இழக்கப்படலாம்.

http://www.sundaytimes.lk/100704/News/nws_02.html

ஐரோப்பிய ஒன்றியத்தை தொடர்ந்து அமெரிக்காவும் தனது ஜி எஸ் பி சலுகையை தொழிலாளர்கள் உரிமைகைளை சலுகைகளை உயர்த்த வேண்டும் என வலியுறதத்தொடங்கியுள்ளது. இதனால் சிங்களத்தின் பொருட்கள் விலை கூடி அவற்றின் விற்பனை திறனை இழக்கலாம்.

http://www.sundaytimes.lk/100704/News/nws_18.html

முடிந்தால் உதவ யோசியுங்கள்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72992

Edited by akootha

சிங்களத்துக்கு ஒரு கரி நாளாக ஆவணி ஞாயிறு 15 ( August 15, 2010 )அமையும் என எதிர்பார்ப்போம்.

-- ஐரோப்பிய ஒன்றியம் அன்றே ஜி எஸ் பி என்ற வர்த்தக சலுகையை இரத்து செய்யும் என எதிர்பார்க்கின்றோம்.

-- இதன் மூலம் 540 பில்லியன் ருபாய்கள் ( 540, 000, 000, 000) இழக்கப்படலாம்.

-- 40000 வேலைகள் இழக்கப்படலாம்.

இதற்கு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான சிங்கள தேவா இப்படி கூறுகிறான் ...

Q: What does losing the GSP+ scheme mean for the Sri Lankan economy?

A: I don’t think we should count chickens before they’re hatched. I’m not 100% sure that (Sri Lanka) has lost it. The scheme has been granted to Sri Lanka’s friendship countries. In fact, the European Union is increasing aid to Sri Lanka. I was involved in that decision, just a couple of weeks ago, to grant € 68 million worth of aid to Sri Lanka. If the EU was angry with Sri Lanka, why would they increase the amount of aid to (the island)?

http://www.thesundayleader.lk/2010/07/04/gsp-media-has-made-it-an-issue-%e2%80%94-deva-aditya/

இவற்றை தடுக்க எம்மவர் செய்யவேண்டியவைகள் பல பல ..

எங்கள் ஆய்வுகளும், கணிப்புகளும் எங்கோ சென்று கொண்டிருக்க .. அங்கு வடகிழக்கில் படுபயங்கர வேகத்தில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெறத் தொடங்கி இருக்கின்றன ...

2010070305a.jpg

gotamain1.jpg

இதற்கு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான சிங்கள தேவா இப்படி கூறுகிறான் ...

இவற்றை தடுக்க எம்மவர் செய்யவேண்டியவைகள் பல பல ..

இதை தானாக்கும் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்று கூறுவார்கள்

எங்கள் ஆய்வுகளும், கணிப்புகளும் எங்கோ சென்று கொண்டிருக்க .. அங்கு வடகிழக்கில் படுபயங்கர வேகத்தில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெறத் தொடங்கி இருக்கின்றன ...

2010070305a.jpg

gotamain1.jpg

எங்கட ஆக்களே இப்போது விழுந்தடித்துக் கொண்டு நாட்டை முனேற்ற பாடுபடும் போது சிங்களவன் செயாமல் விடுவானா, இனிமேல் வன்னியிலும் சிங்களமே ஒலிக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.