Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னியில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கரும்புலிகள் நினைவு தினம்

Featured Replies

தேசியத் தலைவர் அவர்களால் தெய்வப் பிறவிகள் என புகழாரம் சூட்டப்பட்ட கரும்புலிகள் நினைவு தினம் இன்று சிட்னியில் Wentworthville, Redgum Function Centre இல் நினைவு கூரப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தாய்நாட்டின் விடுதலையை விரைவாக்க தமது உடல்களை ஆயுதமாக்கி பகைவர்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி வீரகாவியமான கரும்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மாலை 6.20மணிக்கு ஈகைச் சுடர் ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. தமிழீழ விடுதலைக்கு தனது இன்னுயிரை ஈர்ந்த மாவீரர் ஒருவரின் சகோதரன் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தாயக மண்மீட்பு போரில் தமது இன்னுயிர்களை ஈர்ந்த மாவீரர்களுக்கும் அந்நிய ஆக்கிரமிப்பு படைகளாலும் இரண்டகர்களாலும் படுகொலை செய்யப்பட்ட மக்களுககாகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தின் தொடர்ச்சியாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. பொதுச் சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரன் ஒருவர் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது. தமிழீழ தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான துசாந்தன் அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலியா தேசியக் கொடியை நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலியாப் பிரதிநிதிகளில் ஒருவரான தர்சன் குணசிங்கம் ஏற்றிவைத்தார்.

தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த யுவதி ஒருவர் கரும்புலிகளின் தியாகம் பற்றி தமிழில் உரையாற்றினார். 83 யூலைக் கலவரம் தொடர்பான நினைவுகளை ஆங்கிலத்தில் பகிர்ந்து கொண்டார் அ பரராஜசிங்கம்.

பரராஜசிங்கத்தின் உரையை அடுத்து தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த கீதா,லாவண்யா மற்றும் பைரவி ஆகியோர் ”வன்னி மண்ணில் மயில் கூத்தாடுமா அல்ல போராடுமா” என்ற பாடலுக்கு நடனமாடினார்கள்.

நடனம் நிறைவுபெற்றதும் கரும்புலி கப்டன் மில்லரைப் பற்றிய விவரண ஒளித் தொகுப்பும் இறுதிக்கட்ட போரில் களமாடி வீரகாவியமான மூத்த தளபதிகளைப் பற்றி ய ஒளிப்படத் தொகுப்பும் காண்பிக்கப்பட்டது.

இந் நினைவு கூரல் நிகழ்வைத் தொடர்ந்து அநுராதபுர விமானபடைத் தளம் மீதான தாக்குதல் நினைவாக உருவாக்கப்பட்ட எல்லாளன் திரைப்பட ஒளி இறுவெட்டும் மாவீரர்கள் நினைவாக உருவாக்கப்பட்ட, பிரிகேடியர் பால்ராஜ் “சமர்க்கள நாயகன்”, கேணல் தமிழேந்தி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் சொர்ணம், பிரிகேடியர் சசிக்குமார் ஆகியோர் நினைவாக “வீரத்தளபதிகள்”, பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா அவர்கள் நினைவாக “சமர்க்கள நாயகிகள்” ஆகிய மூன்று ஒலி இறுவெட்டுக்களும் வெளியிடப்பட்டன.

இவ் இறுவெட்டுக்களை மருத்துவ கலாநிதிகளான மனமோகன், கேதீஸ், Regal Sheetmetal ராஜீவன் excellent jewelery சௌந்தர்நாயகன், சிவசுப்பிரமணியம், பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் மருமகன் வேணு ஆகியோர், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அவுஸ்திரேலியா வெளியீட்டுப் பிரிவு பொறுப்பாளர் உதயன் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

இறுதியாக அவுஸ்திரேலியா மற்றும் தேசியக் கொடியிறக்கலுடன் கரும்புலிகள் நினைவுகூரல் நிகழ்வு நிறைவுபெற்றது.

http://pooraayam.com/world-tamil/394-2010-07-10-12-42-31

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.