Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலாவது காலடி எடுத்துவைக்க அமைச்சர் டியூ குணசேகரா தயாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது காலடி எடுத்துவைக்க அமைச்சர் டியூ குணசேகரா தயாரா?

எமது நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் போது, அயல் நாடுகளின் அனுபவங்களையும் பெற வேண்டும். குறிப்பாக இந்தியாவினதும் மற்றும் சர்வ தேச நாடுகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பவேண் டும். அவ்வாறு செய்வதன் மூலம் காணப்படும் தீர்வே ஆக்கபூர்வமானதாக அமையும். எமது பிரச்சினைக்கு அறிவுபூர்வமாகச் செயற்படுவது அவசியம்.

குடாநாட்டில் சில குறிப்பிட்ட நிகழ்வுகளில் பங்கு பற்றிய அமைச்சர் டியூ குணசேகரா, தெல்லிப்பழை பிர தேச செயலகத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையின் போது பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அமைச் சர் குணசேகராவே. அவர் இரண்டு நாள் விஜயமாக, தமது பிரதி அமைச்சர் காமினி விஜயமுனி சொய்ஸாவு டன் யாழ்ப்பாணம் வந்தபோது கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்த மாநாட்டிலும் உரையாற்றினார். 30 வருடங் களின் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு யாழ்ப்பா ணத்தில் நடைபெற்றது இதுதான் முதல் தடவை.

இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரசமைப்பின் 13 ஆவது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, அதற்கான பிரேரணையை, எதிர்க் கட்சித் தரப்பில் இருந்து தாம் எதிர்த்து வாக்களித்த தையும் அமைச்சர் ஞாபகப்படுத்தினார்.

எமது நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர், இனப்பிரச் சினைக்கான தீர்வினைக் காண கடந்த கால அரசியல் தலைவர்கள் தவறிவிட்டனர் என்றும் பழைய சங் கதியை அமைச்சர் ஞாபகப்படுத்தினார். அதனால் அப் பாவி மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவ்வாறிருந்தும் பிரதான அரசியல் கட்சிகளிடையே இன்னமும் ஒருமைப்பாடு இல்லை. அதன் காரணமாக முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்கமுடி யாமல் உள்ளது என்றும் அமைச்சர் டியூ குணசேகரா கூறியுள்ளார். அவர் குறிப்பிடும் முக்கிய பிரச்சினை களில் முதன்மையானது இனப்பிரச்சினை ஆகும்.

கடந்த 60 வருடங்களாக தீர்வுகாணப்படாத இனப் பிரச்சினையே ஏனையவற்றை விட முதன்மைப்படுத்தித் தீர்க்க வேண்டியது. அதனை அமைச்சர் டியூ குணசேகரா அங்கம் வகிக்கும் அரசாங்கம் உள்ளார்த்தமாகப் புரிந்து கொண்டதாகத் தோன்றவில்லை.

இனப்பிரச்சினைக்கு ஆற அமர, பல தரப்புகளுடன் பேசியே தீர்வுகாணவேண்டும் என்ற நிலைப்பாட்டி லேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனைக் கிடப் பில் போட்டுவிட்டிருக்கிறார். இந்தியாவுக்கு விஜயம் செய்து திரும்பி வந்த பின்னர், இனப்பிரச்சினைக்கான தீர்வை திடீர் "நூடில்ஸ்' தயாரிப்பது போன்று கொண்டு வர முடியாது என்று கருத்துத் தெரிவித்த பின்னர், இனப் பிரச் சினைக்குத் தீர்வு காண்பது குறித்து அவர் எதனையும் வெளிப்படுத்தவில்லை.

அவரது அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்தி ரக் கட்சி மற்றும் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் இனப் பிரச்சினை முன்னுரிமை கொடுத்துத் தீர்க்கப்படவேண் டியது என்பதனை வலியுறுத்திக் கூறியதாக எந்தத் தகவ லும் இல்லை. அரசில் அங்கம் வகிக்கும் லங்கா சமசமா ஜக் கட்சியின் அமைச்சர் கலாநிதி திஸ்ஸ விதாரண, அனைத்துக் கட்சி மாநாட்டை மீண்டும் கூட்டி இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று கூறியதோடு எல்லாம் முடிந்துவிட் டது. அவரும் இப்போது மறந்திருப்பார் என்று நம்பலாம்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது அவ் வளவு இலகுவானதல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் அதுவே இந்த நாட்டினை இத்தனை தசாப்பதங்களாகச் சீரழித்து வைத்திருக்கிறது என்ப தனை அரசியல் தலைவர்கள், மிகக் குறிப்பாக ஆட்சி யிலுள்ளவர்கள் உணரவேண்டும். அதற்கு முன்னுரிமை வழங்கி, பற்றுறுதியுடன் உழைத்தால் தீர்வு ஒன்றை வகுத்துக்கொள்ளமுடியும்.

இந்த நாட்டில் வாழும் மூவின மக்களையும் பெரும் பான்மை சிறுபான்மை என்று கருதி அவர்களுக்கான அதிகாரங்கள், உரிமைகளை விகிதாசாரத்தில் வழங்க வேண்டும்; பெரும்பான்மையின மக்கள், ஏனைய இரு தரப்புகளையும் விட எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்களிடம் மேலாண்மையும், அதீத அதிகார பலமும், சிறப்பு உரிமைகளும் இருக்கவேண்டும் என்ற நிலைப் பாட்டில் அரசாங்கம் இருக்கும் வரைக்கும், இனப்பிரச் சினைக்கு சமரசமாக ஒரு தீர்வைக் காண்பது கடினம்.

இத்தகைய ஒரு சூழலில் அயல்நாடுகளின், மிகக் குறிப் பாக இந்தியாவின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும் அதன் அனுசரணை தேவை என்பதும் யதார்த்தமே.

அந்த வகையில், அமைச்சர் டியூகுணசேகரா சொல் வதுபோல், இந்தியாவின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய தேவை அத்தியாவசியமாகிறது.

அரசாங்கத் தரப்பும், தமிழர் தரப்பும் இந்தியாவின் ஆலோசனையையும் அனுவபவத்தையும் பெறுவதற்கு முனைந்து கொள்ளும் முயற்சிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. ஆனால் அது கால எல்லையின்றி நீளக் கூடாது; தங்குமிடம் போட்டுத் தாமதிக்கக் கூடாது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் டியூ குணசேகரா இதனை அதன் தலைமைப்பீடத்திடம் எடுத்துரைத்து உந்துசக்தியாக விளங்கவேண்டும். அதற்கான மனோ திடமும், பலமும் அவருக்குத் தேவை. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய எல்லோரும் இந் நாட்டின் சகோதரப் பிரஜைகளே என்பதனை நிலைநாட்ட, அதற்குரிய தளம் ஒன்றை அரசின் பக்கம் சார்ந் துள்ள டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாண யக்கார போன்றவர்களால் அமைக்க இயலுமா? இனப் பிரச்சினைத் தீர்வுக்குரிய முதல் நீரோட்டமாக அது சாத் தியமானால் உகந்த தீர்வு என்ற இலக்கை எய்து வதற்கான முதலாவது காலடியாக அது அமையலாம். அது நடக்குமா?

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.