Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முத்துமாலையா? விஷப்பாம்பா? - பத்ரி சேஷாத்ரி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் உலக நாடுகள் பொதுவாக இரு குழுக்களாகப் பிரிந்துகொண்டன. அமெரிக்கா தலைமையிலான குழு ஒன்று. மற்றொரு பக்கம் சோவியத் ரஷ்யாவும் அதன் கம்யூனிச தோழமை நாடுகளும். இந்த இரு அணிகளும் ஒருவரோடு ஒருவர் மறைமுகப் போரில் ஈடுபட்டிருந்தனர். அதைத்தான் பனிப்போர் (கோல்ட் வார்) என்று அழைத்தோம். பின்னர் 1980-களின் இறுதியில் சோவியத் யூனியன் உதிர்ந்ததும் பனிப்போர் நின்றுபோனது.

அதற்குப்பின் உலகில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சீனா, இந்தியா என்ற இரு பெரும் நாடுகள் பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் அடைந்துவருகின்றன. அமெரிக்காவின் வலிமை இன்னும் பெரிதாகக் குறைந்துபோய்விடவில்லை. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில்தான் இன்று பெரும் புவி-அரசியல் போராட்டமே. ஆனால் அதே நேரம், தன் அண்டை நாடான இந்தியா சரசரவென முன்னேற்றம் அடைந்துவிடக்கூடாது என்பதிலும் சீனா குறியாக இருக்கிறது. அதனால் ஏற்பட்டதே சீனாவின் முத்துமாலைத் திட்டம்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்கெனவே ஒரு போர் நடந்து, அதில் இந்தியாவுக்குத் தோல்வி ஏற்பட்டுள்ளது. தீர்க்கக்கூடிய சில எல்லைப் பிரச்னைகள், தீர்க்கமுடியாத சில எல்லைப் பிரச்னைகள் இரு நாடுகளுக்கும் இடையே உள்ளன. அருணாசலப் பிரதேசம் என்ற இந்திய மாநிலத்தைத் தங்களுடையது என்கிறார்கள் சீனர்கள். அது தொடர்பாக எண்ணற்ற சிறு சிறு சச்சரவுகள் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ளன.

காஷ்மீரை இந்தியாவின் பகுதி என்று சீனா ஏற்பதில்லை. பாரம்பரியமாகவே சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்துவருகிறது. தான் இந்தியாவிடமிருந்து அபகரித்த காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் சீனாவுக்கு தாரை வார்த்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா நலத்திட்டங்கள் செய்வதை இந்தியா எதிர்த்துவருகிறது. காஷ்மீரில் ஒரு சிறு பகுதி வேறு சீனாவின் வசம் உள்ளது என்று இந்தியா குறிப்பிடுகிறது.

மறுபக்கம், சீனாவுக்குப் பிடித்தமில்லாத திபெத் ஆன்மிக, அரசியல் தலைவர் தலாய் லாமாவுக்கு இந்தியா இடம் கொடுத்துள்ளது சீனாவுக்குக் கடும் கோபத்தை வரவழைத்துள்ளது.

இந்த நிலையில் சீனாவின் முத்துமாலைத் திட்டம் என்ன என்று பார்ப்போம். இந்தியாவின் அண்டை நாடுகள் பாகிஸ்தான், சீனா, நேபாளம், பூட்டான், வங்கதேசம், மியான்மர், இலங்கை, மாலத்தீவுகள் ஆகியவை. இவை தவிர, கடல் பகுதிகள் என்றால் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல், மலாக்கா கடற்கால்வாய், பாக் நீரிணைப்பு ஆகியவை. இந்தக் கடல் பகுதிகளில் உள்ள வேறு சில நாடுகளான தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகியவையும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தக் கடல், நிலப் பகுதிகளில் சீனா தன் ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்புகிறது. தனக்கு ஆதரவான அரசு, சீனாவை நம்பியிருக்கும் பொருளாதாரம், இந்த நாடுகளில் எல்லாம் ராணுவ முகாம்கள், இந்தக் கடல்களில் எல்லாம் சீன ரோந்து - இவைதான் சீனாவின் நோக்கம்.

இந்தியாவைச் சுற்றியுள்ள இந்த முத்துமாலையில் உள்ள முத்துகள் எவை? சீனாவின் ஹைனான் தீவு. வியட்நாமுக்கு 300 நாட்டிகல் மைல் கிழக்கே உள்ள பாராசெல் ஆர்க்கிபெலாகோ. வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள சீனத் துறைமுகம். மியான்மரின் சித்வேயில் சீனா கட்டிக்கொண்டிருக்கும் ஒரு துறைமுகம். பாகிஸ்தானின் க்வதார் என்ற இடத்தில் சீனா கட்டும் கப்பல்படை முகாம். இலங்கை ஹம்பண்டோடாவில் சீன உதவியுடன் உருவாகிவரும் துறைமுகம். இப்படி.

ஒருபுறம் இந்தியாவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளின் தன் ஆளுமையை அதிகரித்துவரும் சீனா, ஒவ்வொரு நாட்டு அரசுமீதும் தன் ஆளுமையை அதிகரிக்கிறது. இந்திய வெறுப்பு காரணமாக, பாகிஸ்தான் என்றுமே சீனாவின் கைக்குள்தான் இருந்துவருகிறது. வங்கதேசத்தில் மாறி மாறி ஆட்சியைப் பிடித்துவரும் கட்சிகளில் ஷேக் ஹசீனா இந்திய ஆதரவாளர். ஆனால் பேகம் காலிதா ஜியா, இந்திய எதிர்ப்பாளர் - எனவே சீன ஆதரவாளர்.

மியான்மர் ராணுவ குண்டர்களின் ஆட்சி சீனா, இந்தியா இரண்டிடமிருந்து சலுகைகளைப் பெற்றுக்கொண்டாலும், சீனாவின் ஆயுதங்களையே பெருமளவு நம்பியுள்ளது. மியான்மர் போராளிக் குழுக்கள் ஒரு கட்டத்தில் இந்தியாவில் முகாம்கள் அமைத்து, இந்திய ஆயுத உதவிகளைப் பெற்றுவந்தனர். ஆனால் மியான்மருடன் இணங்கிப் போகவேண்டும் என்பதற்காக, 1990-களில் இந்தியா பர்மியப் போராளிகளை முற்றிலுமாகக் கைவிட்டது. ஆனாலும் அதனால் சீனா மியான்மரில் கொண்டிருக்கும் பிடியைத் தளர்த்தமுடியவில்லை.

இலங்கை சிங்கள-தமிழ் பிரச்னையில் எப்படி ஈடுபடுவது என்பதில் இந்தியாவுக்குக் கடும் குழப்பம் இருந்தது. ஆனால் சீனாவுக்கு அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. உலகில் வேறு யாரும் - இந்தியா உள்பட - ஆயுதம் தரமாட்டேன் என்று சொன்ன நிலையில் சீனாவுக்கு அப்படி எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. தாராளக் கடன் வசதியுடன் இலங்கை கேட்ட ஆயுதங்களுக்கும் கூடுதலாகவே கொடுத்தார்கள். அதன்பின் ஐக்கிய நாடுகள் சபையில் இனக் கருவறுப்பு தொடர்பாக இலங்கைமீது எந்தப் பிரச்னை வந்தாலும் இலங்கைக்குச் சாதகமான குரலைத்தான் சீனா எழுப்பிவருகிறது. கூடவே அதற்கு விலையாக ஹம்பண்டோடா போன்றவை சீனாவுக்குக் கிடைத்துள்ளன. இலங்கையைச் சுற்றி மீன் பிடிக்கும் உரிமைகள் பலவும் சீனாவுக்குக் கிடைத்துள்ளன என்று பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோல சீனா, ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலும் ஏகப்பட்ட முதலீடுகளை ஏற்படுத்தியுள்ளது. நாடுகளுக்கு மான்யம், குறைந்த வட்டிக் கடன் ஆகியவற்றைக் கொடுக்கிறது. அந்தப் பகுதியிலேயே மிக முக்கியமான சக்தியாக சீனாதான் விளங்குகிறது. இந்தியா மிகவும் பின் தங்கிய நிலையில்தான் உள்ளது. விரைவாக வளர, இந்தியா, சீனா இரண்டுக்குமே ஆப்பிரிக்க வளங்கள் தேவை. ஆனால் சீனாவிடம் திட்டம் ஒன்று உள்ளது. இந்தியாவிடம் திட்டம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. உலக அளவில் எண்ணெய் வளங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் சீனாவே இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலீடுகளைச் செய்துவருகிறது.

இந்தியாவுக்கு வல்லரசுக் கனவுகள் ஏதும் தேவையில்லை. ஆனால் சீனா தனக்குக் கொடுக்கும் நெருக்கடிகளுக்கு நல்ல மாற்று ஒன்று இந்தியாவுக்குத் தேவை. அதற்கான கருத்தரங்குகளோ பொதுவிவாதங்களோ இந்தியாவில் நடைபெறுவதாகத் தெரிவதில்லை. இந்தியாவை இப்படி சீனா சுற்றி வளைக்கிறதே, இதனால் என்ன அபாயம் என்பதுபற்றி இந்திய அரசியல்வாதிகள் சிந்திப்பதாகவே தெரியவில்லை. இந்தியப் பொதுமக்களுக்கும் இதுகுறித்து தகவல்கள் ஏதும் இல்லை. இது தொடர்பாக இந்திய ராணுவ, பொருளாதார, யுத்ததந்திர நிபுணர்கள் திட்டங்கள் தீட்டவில்லை என்றால், சீனா இந்தியாவைச் சுற்றி அமைக்கும் முத்துமாலை, இந்தியாவின் கழுத்தை நெரிக்கும் விஷப் பாம்பாக மாறிவிடும்.

http://www.suriyakathir.com/issues/innerpage.php?key1=T3

முத்தமிழ் வேந்தன்

சென்னை

இந்திய குடி மக்களில் பெரும்பலானவர்களிற்கு தமது அன்றாட வாழ்க்கையை எப்படி கொண்டு செல்வது என்பதே ..முதல் பிரச்சினை....

அவர்களிற்கு இது பற்றி எல்லாம் கவலை பட எங்கே நேரம் இருக்கபோகிறது....

எமது பேராசிரியர் சொன்னார்..

இன்னும் இருபது ஆண்டுகளில் இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் தமக்கிடையே சண்டை இட்டு கொள்ளும்..தண்ணீருக்காக .....அப்துல் கலாம் சொன்ன நதி நீர் இணைப்பு திட்டம் தான் ஒரே ஒரு சிறந்த வழி ஆனால் அது நிறைவேற நிச்சயமாக அரசியல் வாதிகள் விட மாட்டார்கள்.. இந்தியா தானாகவே உடைந்து விடும்......

நான் கேட்டேன் நீங்கள் ஏதாவது பண்ணலாமே...உங்கள் மாநிலத்திற்கு ஆவது ..அவர் சிரித்து விட்டு சொன்னார்..நான் என்ன பண்ணுவது ஏன் செய்யணும்..எப்படியாவது போகட்டும்..

படித்தவர்களிடம் நாடு பற்று இப்படி இருக்கிறது.....

ஒருவேளை தலைவரும் இயக்கமும் இல்லாவிட்டால் நாமும் இவர்களை போல் நாட்டு பற்று இல்லாதவர்கள் ஆக தான் இருந்திருப்பமோ என்னவோ..? ஆனால் ஒன்று எமக்கு சிங்களவன் அடித்து அடித்தே நீ தமிழன் நீ தமிழன் என்று நினைவு படுத்தி இருப்பான்.....

Edited by venna

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய குடி மக்களில் பெரும்பலானவர்களிற்கு தமது அன்றாட வாழ்க்கையை எப்படி கொண்டு செல்வது என்பதே ..முதல் பிரச்சினை....

அவர்களிற்கு இது பற்றி எல்லாம் கவலை பட எங்கே நேரம் இருக்கபோகிறது....

எமது பேராசிரியர் சொன்னார்..

இன்னும் இருபது ஆண்டுகளில் இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் தமக்கிடையே சண்டை இட்டு கொள்ளும்..தண்ணீருக்காக .....அப்துல் கலாம் சொன்ன நதி நீர் இணைப்பு திட்டம் தான் ஒரே ஒரு சிறந்த வழி ஆனால் அது நிறைவேற நிச்சயமாக அரசியல் வாதிகள் விட மாட்டார்கள்.. இந்தியா தானாகவே உடைந்து விடும்......

நான் கேட்டேன் நீங்கள் ஏதாவது பண்ணலாமே...உங்கள் மாநிலத்திற்கு ஆவது ..அவர் சிரித்து விட்டு சொன்னார்..நான் என்ன பண்ணுவது ஏன் செய்யணும்..எப்படியாவது போகட்டும்..

படித்தவர்களிடம் நாடு பற்று இப்படி இருக்கிறது.....

ஒருவேளை தலைவரும் இயக்கமும் இல்லாவிட்டால் நாமும் இவர்களை போல் நாட்டு பற்று இல்லாதவர்கள் ஆக தான் இருந்திருப்பமோ என்னவோ..? ஆனால் ஒன்று எமக்கு சிங்களவன் அடித்து அடித்தே நீ தமிழன் நீ தமிழன் என்று நினைவு படுத்தி இருப்பான்.....

இது சட்டமன்ற திமுக தேர்தல் அறிக்கை..

இன்று கலைஞர் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன் விவரம்:

* தமிழகத்திலுள்ள எல்லா விமான நிலையங்களிலும் வந்து போகும் விமானங்களிலும் செய்யப்படும் அனைத்து அறி விப்புகளும் தமிழ் மொழியிலும் இருக்க வேண்டுமென்று வலியுறுத்துவோம்.

* தமிழ் அறிஞர்களுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படவிருக்கும் விருதுகளுக்கு "தொல்காப்பியர் விருது'', "திருவள்ளுவர் விருது'' என்று பெயர் வைத்திடுமாறு வலியுறுத்துவோம்.

* திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பதற்கு வலியுறுத்துவோம்.

* சிறு குறு விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட கூட்டுறவுக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வோம்.

* கரும்பு விவசாயிகள் இதுவரை செலுத்தி வந்த லாரி வாடகையை நிர்வாகமே செலுத்த வழி வகை செய்வோம்.

* தமிழகத்தில் மொத்தம் உள்ள சுமார் 55 இலட்சம் ஏக்கர் தரிசு நிலங்களைப் பயன்படுத்தி, நிலமற்ற ஒவ்வொரு ஏழை விவசாயக் குடும்பத்திற்கும் குறைந்த பட்சம் இரண்டு ஏக்கர் நிலம் வீதம் வழங்குவோம்.

* தென் மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வோம்.

* கிராமப்புறக் குடிசைத் தொழில், மற்றும் சுய வேலை வாய்ப்புகளைப் பெருக்கிட கிராமப்புற குறுநிதிக் குழுக்களை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவோம்.

* கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகள் இயற்கை மரணமடைந்தால் அவர்கள் கூட்டுறவு வங்கி களுக்கு செலுத்த வேண்டிய கடனும் வட்டியும் அறவே தள்ளுபடி செய்வோம்.

* சிறு வாணிபம் செய்வோர் வளம் பெறவும் அவர்கள் தண்டல் வட்டியிலிருந்து விடு படவும் கூட்டுறவு வங்கி களின் மூலம் எளிய முறையில் வாராந்திரக் கடன் பெற உரிய நடவடிக்கைகள் மேற் கொள்வோம்.

* மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ள ஆசிரி யர் பணி இடங்களை உடனடியாக நிரப்புவோம்.

* மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற குறிக்கோளை நடை முறைப் படுத்துவோம்.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசுக் கல்லூரி யில் ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பும் பட்டயப் படிப்பும் துவக்க நடவடிக்கை மேற் கொள்வோம்.

* பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களுக்கு அவர்களுடைய முழுக்கல்விக்கட்டணம் தங்கும் விடுதிக் கட்டணம் போன்றவற்றை அரசே ஏற்று அவர்கள் கல்வி பெற துணை நிற்போம்.

* மாணவர்களுக்கு சத்துணவோடு வாரம் இரண்டு முறை, திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முட்டை வழங்கப்படும்.

* விளையாட்டரங்கங்கள் இல்லாத மாவட்டத் தலைநகரங்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

* கிராமப்புற இளைஞர்களுக்கு கணினிப் பயிற்சி எட்டாக்கனியாக இருப்பதால் கிராமப் பகுதிகளில் கணி னிப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு, இலவசமாகப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடை முறைப்படுத்துவோம்.

* தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியைப் பயன்படுத்தி கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை உருவாக்கி வேலை வாய்ப்பு பெருகுவதற்கு முயற்சி மேற் கொள்வோம்.

* அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ள அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் 300 ரூபாய் வழங்குவோம்.

* மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களுடைய வரு மானத்தை பெருக்கிக்கொள் ளும் வகையில் உணவுப் பொருட்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* தற்போதுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை போலவே, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்காக சுய உதவிக் குழுக்கள் திட்டம் ஒன்றை புதிதாக தொடங்குவோம்.

ஐந்தாண்டு காலமாக கூட் டுறவு தேர்தலையே நடத்த வில்லை என்பதை சுட்டிக்காட்டுவதோடு உடனடியாக கூட்டுறவு தேர்தல்களை நடத்துவோம்.

* நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைக்கு தற்போது கிலோ அரிசி ரூ.3.50 என்று விற்பதற்கு பதிலாக கிலோ அரிசி இரண்டு ரூபாய் வீதம் தரமான அரிசி வழங்கி தாய் மார்களின் உள்ளத்தை குளிர்விக்கும் பபசாதனை புரிவதுடன், தாய்மார்களின் பொழுது போக்குகளை மனதில் கொண்டு, பொது அறிவை பரப்புவதற்கும் பயன் படும் வகையில் தொலைக் காட்சி பெட்டியில்லாத ஒவ்வொரு வீட்டுக்கும் அறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்களையொட்டி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங் கும் திட்டம் தொடங்கப் பட்டு செயல்படுத்தப்படும்.

* கருவுற்ற ஏழை பெண்களுக்கு மகப்பேறுக்கு முன் மூன்று மாதங்களுக்கும், பின் மூன்று மாதங்களுக்கும் பேறு கால உதவியாக மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும்.

* ஏழையெளிய மக்களின் சமையல் எரிவாயு கடன்களை ரத்து செய்து, மீண்டும் தாய் மார்கள் சமையல் எரி வாயு அடுப்பு பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

* தமிழகத்தில் உள்ள அனைத்து நகர பகுதிகளிலும் அனுமதியில்லாமல் இதுவரை கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வோம். அந்த பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்போம்.

* தமிழகத்தில் உள்ள முக்கிய இரண்டு வழிச்சாலைகளை நான்கு வழிச்சாலைகளாகவும், நான்கு வழிச்சாலைகளை ஆறு வழிச்சாலைகளாகவும் படிப்படியாக மாற்றுவோம்.

* சென்னை மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகையையும், வாகன எண்ணிக் கையையும் கருத் தில் கொண்டு முக்கிய சந்திப்பு களில் புதிய பாலங்கள், மேம் பாலங்கள் அமைக்க ஆவன செய்வோம்.

* கிழக்கு கடற்கரை சாலையை கடலூர் தொடங்கி கன்னியாகுமரி வரை விரிவு படுத்துவதோடு, இருவழிச் சாலைகள் நான்கு வழிச்சாலை களாக மாற்றப்பட நடவடிக்கை எடுப்போம்.

* சென்னையின் பல பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பெருநகர் மெட்ரோ சுரங்க வழி ரெயில் போக்குவரத்தை கொண்டு வருவோம்.

* தஞ்சையில் உள்ள ராணுவ விமானதளத்தை பொது மக்கள் போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றிட முயற்சிகள் மேற்கொள்வோம்.

* மத மாற்ற தடைச்சட்டத்தை நீக்குவோம்.

* ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், அனைத்து மதங்களிலும் இருக்கின்ற ஆதிதிரா விடர்களுக்கும் கிடைக்குமாறு செய்வோம்.

* மதிப்புக்கூட்டு வரியை நடைமுறைப்படுத்த மாட்டோம்.

* சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டினை எதிர்ப்போம்.

* முதியோர், ஊனமுற்றோர், கணவனால் கை விடப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் போன்றவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் இரு நூறு ரூபாய் ஓய்வூதியம் 400 ரூபாயாக உயர்த்தப்பட்டு எண்ணிக்கை வரம்பு எதுவுமின்றி வழங்குவோம்.

* வேலை வாய்ப்பில் ஊன முற்றவர்களுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 200 ரூபாய் என்பது 500 ரூபாயாக உயர்த்தப்படும்.

சேலம், ஈரோடு, காஞ்சீபுரம், கரூர், அருப்புக்கோட்டை போன்ற நகரங்களில் நெசவுத் தொழில் சார்ந்த பூங்காக்களை அமைப்பதற்கு பாடுபடுவோம்.

* கிழக்கு கடற்கரை குதிகளிலும் மற்றும் கச்சத்தீவு அருகிலும் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதையும், கடத்தப்படுவதையும், சுட்டுக்கொல்லப்படுவதையும் தடுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

* சுனாமி நிவாரண நிதி வழங்கியதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்தும், உண்மையான பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிய நிதி உதவி வழங்காதது குறித்தும் முறைகேடான முறையில் ஆளுங்கட்சியினருக்கு வழங் கப்பட்ட நிதி உதவி குறித்தும் விசாரணை நடத்துவோம்.

* உதகமண்டலம், ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதி சுற்றுலாத் தளங்களில் கம்பி வழி ஊர்திகள் அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற் கொள்வோம்.

* திருவள்ளுவர்பபபசிலையை அருகில் சென்று காண்பதற்கு நவீன படகு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவோம்.

* கண்ணகி சிலை மீண்டும் கடற்கரை சாலையில் அதே இடத்தில் நிறுவுவோம்.

* ரயில் கட்டண அளவுக்கு பேருந்து கட்டணத்தை சீராக்குவோம்.

* சினிமா வெளிப்புறக்காட்சி படப்பிடிப்புக்கு அரசு உயர்த்தியுள்ள கட்டணங்களை பெரிதும் குறைப்போம்.

* எம்.ஜி.ஆர். திரைப்பட நகரை, மீண்டும் புதிதாக உருவாக்குவோம்.

* நடிகர் திலகம் சிவாஜிக்கு பாண்டிச்சேரி அரசு அமைத்துள்ளது போன்ற சிலையையும், அத்துடன் மணி மண்டபத்தையும் விரைவில் அமைப்போம்.

* பெருந்தலைவர் காமராஜருக்கு பல நினைவு சின்னங்களையும், குமரிமுனையில் மணி மண்டபத்தையும் அமைத்துள்ள தி.மு.க. அரசு காமராஜர் பிறந்த நாளாம் ஜுலை 15-ந் தேதியை கல்விக்கண் திறந்த நாளாக அறிவித்து பள்ளிகளில் விழா எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளும்.

சென்னை புறநகர் பகுதிகளில் இயற்கையாக அமைந்துள்ள ஏரிப்பகுதிகளை சீரமைத்து புதிய குடிநீர் திட்டங்களை உருவாக்க செயல் திட்டங்களை வகுப்போம்.

தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற மேலவையை விரைவில் கொண்டு வர உரிய அரசியல் சட்டத்திருத்தம் செய்ய வலியுறுத்துவோம்.

* `டெஸ்மா' சட்டத்தை அறவே ரத்து செய்வோம்.

* மத்திய அரசு தற்போது அமைக்க முன் வந்துள்ள 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டவுடன் தமிழகத்திலும் உடனடியாக நடைமுறைப்படுத்துவோம்.

* காவலர் குறை தீர்க்க, காவல்துறை மறுமலர்ச்சி பெற மூன்றாவது போலீஸ் கமிஷன் அமைப்போம்.

* கிராமப்புற மாணவர்கள், விவசாயிகள் வணிகர்கள் பயன்பெறும் வகையில் கழக ஆட்சிக் காலத்தில் இயக்கப்பட்ட சிறிய பேருந்துகளை மீண்டும் அறிமுகப்படுத்துவோம்.

* சென்னை மாநகரிலே போக்குவரத்து நெருக்கடிக்குப் பெரிதும் உள்ளாகி உள்ள பகுதிகளில் `பறக்கும் சாலை' திட்டத்தைச் செயல்படுத்துவோம்.

* சென்னை நகரின் முக்கிய வணிக மையங்கள் பணி இடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பல அடுக்கு மாடி கார் நிறுத்துமிடங்களை கட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்வோம்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

# காலியாக உளள ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.

# மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

# கிலோ 2 ரூபாய்க்கு தரமான அரிசி வழங்கப்படும்.

# வீடு தோறும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கிடைக்க வகை செய்யப்படும்.

# ஏழை, எளிய தாய்மார்களுக்கு எரி வாயு அடுப்பு இலவசமாக வழங்கப்படும்.

# சிறு குறு விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

# விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

# நிலமற்ற ஏழை விவசாயிகளுககு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும்.

# விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.

-நன்றி தட்ஸ்தமிழ்...

இதில் பெரும்பாலும் மக்கள் நல திட்டங்கள் எனும் பெயரில் எல்லாம் ஓசி... இன்னும் இங்கு பாக்கி இருப்பது திருமணம்.... அதையும் இலவசமாக அண்ணா பிறந்தநாள் அண்டார்டிக்கா பிறந்தநாள் என மொத்தமாக 200,300 செய்கிறார்கள்.. அதையும் தனித்தனியெ இலவசமாக அறிவித்துவிட்டால் பெற்றோர்களுக்கும் வேலை மிச்சமாகும்.. அத்தோடு பிறந்தது முதல் பாடையில் போகும் வரை... அனைத்தும் இலவசமாகிவிடும்... நான் சொல்வது சரிதானே? :lol: :lol: :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.