Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகத்தின் செயலாளர் நாயகமாக உலாவத் தொடங்கியுள்ளார் கே.பீ என்ற செல்வராஜா பத்மநாதன்‐ ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர்‐

Featured Replies

வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகத்தின் செயலாளர் நாயகமாக உலாவத் தொடங்கியுள்ளார் கே.பீ என்ற செல்வராஜா பத்மநாதன்‐ ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர்‐

இலங்கை அரசிற்கு 2ஆவது எதிரியாகவும் உலகநாடுகளின் உளவுப் பிரிவுகளின் பார்வையில் முக்கியமானவராகவும் உலாவிவந்த கேபி தற்போது வடகிழக்கு மக்களுக்கு சேவையாற்ற ஓர் அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரமுகராக முகம் காட்டத் தொடங்கியுள்ளார் என ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர் கண்டறிந்துள்ளார்.

தற்போது அவர் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகம் என்னும் புதிய அமைப்பொன்றை உருவாக்கியிருக்கின்றார். இலங்கை அரசாங்கத்திடம் அது பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகவும் யாழ்ப்பாணத்தில் வங்கிக்கணக்கை கொண்ட அமைப்பாகவும் அவ்வமைப்பு செயற்பட தொடங்கியிருப்பதாக ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர் கூறுகிறார். இந்த வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகத்தின் தளபதியாக செயலாளர் நாயகமாக கே.பி என்ற செல்வராசா பத்மநாதனின் பெயர் பதிவாகியிருக்கிறது. அவருக்கு நெருங்கிய சில நண்பர்கள் இந்த அமைப்பின் ஏனைய இயங்குணர்களாகவும் சகபாடிகளாகவும் கிடைத்திருப்பதாகவும் ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர் கூறுகிறார். கேபி கைதுசெய்யப்பட்டாரா? அல்லது சரண் அடைந்தாரா? என்ற ஐயங்கள் சுற்றிச் சுழல்கின்ற விடயங்களாக தொடர்கின்றன. இந்த நிலையில் கிடைக்கப் பெறுகின்ற தகவல்கள் தற்போது கேபி அரச உயர்மட்டத்தின் கௌரவ விருந்தினராகவே இருப்பதாக கூறப்படுகின்றது. கேபி இரண்டு தடவைகளாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருக்கின்றார். தனது சொந்தக் கிராமமான மயிலிட்டியைப் பார்வையிடுவதில் அவர் கூடுதலான ஆர்வம் கொண்டுள்ளார். மயிலிட்டி மக்களை கூடிய விரைவில் மீளக் குடியேற்ற தான் தயாராகி வருவதாக அவர் தனது நெருங்கிய சில நண்பர்களிடம் கருத்துப்பரிமாறியதனை ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர் உறுதிப்படுத்துகிறார்.

உயர்பாதுகாப்புவலயமான மயிலிட்டியில் இந்து ஆலயம் ஒன்றில் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கான அனுமதியை அவர் அரசின் உயர் மட்டத்திடம் இருந்து பெற்று வழங்கியிருக்கின்றார்.

அவர் வட கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகத்தின் ஊடாக தான் மக்களுக்கு சேவையாற்றப் போவதாக கூறி வருகின்றார். அதற்காக தனது சக மீனவ நண்பர்களிடம் ஒத்துழைப்பும் கேட்டும் வருகின்றார்.

"என்னிடம் பெருமளவு பணம் உள்ளது. இது மக்களுக்கான பணம். இது மக்களிடம் இருந்து பெறப்பட்ட பணம். இதை நான் அவர்களுக்கே செலவு செய்ய விரும்புகின்றேன்" என கேபி கூறுவதாக ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கிறார். எனினும் அவரது நண்பர்களும் இதில் தெளிவாகவே உள்ளனர். கேபி அரசியலை நோக்கி நகர்வதற்கு தாங்கள் ஒத்துழைப்பை வழங்கப் போவதில்லை எனக் கூறும் அவர்கள் ஆனால் கேபியிடம் உள்ள பணம் எமது மக்களின் பணம் என்ற வகையில் மக்களுக்கு அவர் உதவி செய்யத் தயாரானால் அதற்கு கைகொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என அவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.

இரு தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள கேபி பல இடங்களில் சந்திப்புகளையும் மேற்கொண்டிருக்கின்றார். அண்மையில் கேபி 10 புலம்பெயர் நாட்டவர்களை இலங்கைக்கு அழைப்பித்;திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. அவர்களில் மூவர் அவரது சொந்தக் கிராமமான மயிலிட்டியைச் சேர்ந்தவர்கள். ஏனைய இருவர் வட்டுக்கோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள். ஏதோ ஒரு வகையில் கேபியுடன் மிக நெருக்கமாகின்றவர்கள் மயிலிடியுடன் சம்பந்தப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். கேபியின் மயிலிட்டிக் கிராமப் பற்று அவரது சக நண்பர்களையும் கவர்ந்திருப்பதாக ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர் குறிப்பிட்டார்.

கேபிக்கும் கொழும்பிலுள்ள அரச உயர்மட்டத்தினருக்கும் உள்ள உறவு பற்றி அவரது நண்பர்கள் சிலாகிக்கின்றார்கள். பசில் ராஜபக்ஸ கூட கேபி சொல்வதைக் கேட்டுத்தான பதில் சொல்கிறார் என்கிறார்கள் அவர்கள்.

குறிப்பாக, கடந்த யுத்தத்தின் போது 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை இழந்து விட்டோமே எமக்கு என்ன தீர்வு என என இந்த சந்திப்பின் போது சில பிரதிநிதிகள் கேபியை கேட்டிருக்கின்றார்கள். கேபி உடனடியாக பசில் ராஜபக்ஸவிடம் மொழிபெயர்;த்துக் கூறி பசில் ராஜபக்ஸவின் பதிலையும் பெற்றுக் கூறியுள்ளதாக ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் கேபீயைச் சுற்றி எப்போதும் 15 வரையிலான சிவில் உடை தரித்த காவலர்கள் இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 3 மொழிகளும் சரளம் எனவும் கூறப்படுகிறது. இந்தப் 15 பேரும் கே.பீ சொல்வதனையே செய்பவர்கள் போல தென்படுவதாகவும் ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர் கூறுகிறார்.

இதேவேளை கேபி வழமையாக எல்லாரிடமும் கூறுவது போன்று விடுதலைப் புலிகளின் தலைமைக்கு தான் பல தடவைகள் ஆலோசனைகள் கூறிய போதிலும் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என குற்றம் சாட்டியிருக்கின்றார். ஏற்றுக் கொண்டிருந்தால் ஒரு அரசியல் தீர்வை பெற்றிருக்கலாம் என அவர் கூறுகின்றார். பல்வேறு நாடுகளுடன் இடம்பெற்ற பேரம்பேசுதல் தொடர்பாகவும் அவர் தனது சக நணபர்களிடம் பகரிந்து கொண்டதாகவும் ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளருக்கு தெரிய வருகின்றது.

வட கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகம் என்ற அமைப்பு எப்பொழுது செயற்படத் தொடங்கும் என்பது குறித்து எவருக்குமே தெரியவில்லை. எனினும் இலங்கை அரசு அதனை அங்கீகரித்திருக்கின்றது. அதன் பெயரில் வங்கிக் கணக்கும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற தமிழ்ச் சர்வகட்சிகளின் குழுக் கூட்டத்தில் கேபியையும் ஒரு முக்கிய அங்கத்தவராக இணைத்துக் கொள்ள அரச உயர்மட்டம் அழுத்தங்களை பிரயோகித்திருந்தது தெரிந்ததே. அரசில் அங்கம் வகிக்கின்ற ஏனைய அமைச்சர்களுக்கும் ஏனைய அரசியல் கட்சி பிரமுகர்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும் கேபியையும் வடக்கு கிழக்கின் அரசியல் புலத்தில் மிக முக்கியமானவராக்க அரசு பிரதான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு ஆரம்ப கட்டமாகவே கேபியின் அரச சார்பற்ற இணையமான வட கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகம் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுவதாக ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=27567&cat=1

இதுகளை எல்லாம் பார்க்க கொம்பியூட்டரை தான் உடைக்க வேணும் போல இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கான காலங்கள் கனிந்து வரும்போது சகலதும் வெளிச்சமாகும் உறவுகளே.............தொடாந்து போராடுவோம்....!

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தப் பொய்.இதை என்னால் நம்ப முடியாது. கே.பீ இலங்கை அரசாங்கத்தாலும் அதன் ராணுவப் புலநாய்வுப் பிரிவாலும் தொடர்ந்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வருகிறார். அவரது உடம்பில் காயம் படாத பகுதிகளே இல்லை. தினம் ஒரு வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு குற்றுயிரும் கொலை உயிருமாகக் கிடந்து தேசியத்துக்காக தனது உயிர், உடல் அனைத்தையுமே இழக்கத் துடியாத் துடிக்கும் ஒருவரை, அரசாங்கத்தின் ஏஜெண்ட் என்று சொல்வது அருவருக்கத் தக்கது.

இங்கிருந்து போய்ச் சந்தித்தவர்கள் கூட உண்மையைக் கூறவில்லை. அவர்கள் அவரை ஒரு சித்திரவதை முகாமில் கை, கால்களில் விலங்கிடப்பட்டு மொட்டை வழிக்கப்பட்டு, உதடுகளில் மின்சாரர்க் காயங்களுடன் கிடந்த அரை உயிர்க் கே.பீ ஐத்தான் பார்த்தார்கள். பேசக்கூட முடியாமல் தட்டுத் தடுமறி காகிதத்தில் எழுதிக் காண்பித்த அந்த மகான் இவர்களுடன் கதைத்தாராம், கோத்தாவை ஆரத்தழுவினாராம், ராணுவப் புல்நாய்வுத் தளபதியை கைலாகு கொடுத்து வரவேற்றாராம்....யாரிடம் வந்து என்ன சொல்கிறீர்கள்.இப்போதைக்கு கே.பீ தான் எங்களுக்கு விடிவு, வெள்ளி, நட்சத்திரம், சந்திரன், சூரியன் எல்லாம்....என்ன நான் சொல்கிறது விளங்குதுதானே??!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுத்தப் பொய்.இதை என்னால் நம்ப முடியாது. கே.பீ இலங்கை அரசாங்கத்தாலும் அதன் ராணுவப் புலநாய்வுப் பிரிவாலும் தொடர்ந்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வருகிறார். அவரது உடம்பில் காயம் படாத பகுதிகளே இல்லை. தினம் ஒரு வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு குற்றுயிரும் கொலை உயிருமாகக் கிடந்து தேசியத்துக்காக தனது உயிர், உடல் அனைத்தையுமே இழக்கத் துடியாத் துடிக்கும் ஒருவரை, அரசாங்கத்தின் ஏஜெண்ட் என்று சொல்வது அருவருக்கத் தக்கது.

இங்கிருந்து போய்ச் சந்தித்தவர்கள் கூட உண்மையைக் கூறவில்லை. அவர்கள் அவரை ஒரு சித்திரவதை முகாமில் கை, கால்களில் விலங்கிடப்பட்டு மொட்டை வழிக்கப்பட்டு, உதடுகளில் மின்சாரர்க் காயங்களுடன் கிடந்த அரை உயிர்க் கே.பீ ஐத்தான் பார்த்தார்கள். பேசக்கூட முடியாமல் தட்டுத் தடுமறி காகிதத்தில் எழுதிக் காண்பித்த அந்த மகான் இவர்களுடன் கதைத்தாராம், கோத்தாவை ஆரத்தழுவினாராம், ராணுவப் புல்நாய்வுத் தளபதியை கைலாகு கொடுத்து வரவேற்றாராம்....யாரிடம் வந்து என்ன சொல்கிறீர்கள்.இப்போதைக்கு கே.பீ தான் எங்களுக்கு விடிவு, வெள்ளி, நட்சத்திரம், சந்திரன், சூரியன் எல்லாம்....என்ன நான் சொல்கிறது விளங்குதுதானே??!!!

ஒன்றை விட்டு போட்டியள் கேபிதான் எங்களுக்கு சனி :):lol::lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம்,

சனி, மூதேவி, நாதாரி....வேற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.