Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனத்துரோகி ”கருணா”ஸின் குற்றச்சாட்டு - நாம் தமிழர் சட்டப்படி சந்திக்கும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனத்துரோகி ”கருணா”ஸின் குற்றச்சாட்டு - நாம் தமிழர் சட்டப்படி சந்திக்கும்.

தமிழக சிரிப்பு நடிகர் கருணாஸ் என்பவர் தன்னை நாம் தமிழர் இயகக்த்தினர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்களைக் கைது செய்யக்கோரியும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

ஆகவே, இது தொடர்பாக தனது நிலைப்பாட்டை நாம் தமிழர் இயக்கம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் உள்ள சூரியன் எப்.எம்.ஆனது அங்குள்ள திமிந்தா டி.சில்வா என்னும் பாராளுமன்ற உறுப்பினரின் தம்பியான ரய்னர் சில்வா என்பவரும் பஞ்சாபி ஒருவரும் இணைந்து நடத்தும் நிறுவனம் ஆகும்.

சமீபத்திய சிங்களனின் போர் வெற்றியைக்கொண்டாடும் வகையிலும் இதன் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டும் 3 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சியை இம்மாதம் 24,25,26 ஆகிய தேதிகளில் நடத்த முடிவு செய்தது.

இதில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் இருந்து பலரை அழைத்த பொழுதும் அனைவரும் கலந்து கொள்ள மறுத்து விட்டனர். ஆனால் 10 லட்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு கலந்து கொள்ள சம்மதித்தவர் காமெடி நடிகர் கருணாஸ் ஆவார். இது தொடர்பாக அவருக்கு முன் பனம் 5 லட்சம் கொடுக்கப்பட்டு மீத தொகை நிகழ்ச்சி முடிந்த பின் வழங்கப்படுவதாக இருந்தது.

இந் நிகழ்ச்சி தொடர்பாக அங்குள்ள வானொலியிலும் செய்தித்தாள்களிலும் கருணாஸ்,அவரது மனைவியும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் புகழ் பாடகி கிரெஸ் கருணாஸ், அங்காடித்தெரு சிரிப்பு நடிகர் பாண்டி ஆகியோர் கலந்து கொள்வது குறித்து விளம்பரமும் வந்தது.

கறுப்பு ஜூலை நினைவு தினம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது அங்குள்ள தமிழர்கள் மத்தியில் தீராத வேதனையை அளித்தது. இதன் தொடர்ச்சியாக தம்மைத்தமிழராய் உணர்ந்த அனைவரும் இதனை எதிர்த்தனர்.

இது தொடர்பாக நடிகர் கருணாஸ் அவர்களை தொலைபேசியில் அணுகி சில உணர்வாளர்கள் கேட்டதற்கு, தான் கோவிலுக்கு செல்ல இருப்பதாக சிலரிடமும், தான் நடிகன் எனக்கு ஜாதி, மதம், இல்லை எனக்கு அரசியல் தேவை இல்லை என்று சிலரிடமும், பணம் வாங்கி விட்டேன் இனி மறுக்க முடியாது என்று சிலரிடமும், தான் ஈழத்தமிழர்களுக்கு படிக்க உதவி செய்கின்றேன் என்று சிலரிடமும் முன்னுக்குப்பின் முரணான முறையில் பேசி இருக்கின்றார்.

ஆனால் தான் கொழும்பு செல்வது உறுதி என்றும் கூறி இருக்கின்றார். சிங்களனின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் அவர் பங்கு பெற இருப்பது குறித்து அனைவரிடமும் தீராத வேதனையைத்தந்தது.

அவருடன் செல்வதாக இருந்த அங்காடித்தெரு நடிகர் பாண்டி மட்டும் தமிழ் உணர்வாளார்களின் வேண்டுகோளை ஏற்று கொழும்பு செல்லும் நிகழ்ச்சியை ரத்து செய்தார். இந்நிலையில் 24 சனி அன்று காலை 8.30 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் அவருக்கும் அவரது மனைவி உட்பட 9 நபர்களுக்கும் விமானச்சீட்டு சிங்கள எப்.எம்.நிறுவனத்தால் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

சில முண்ணனி இயக்குனர்களின் வேண்டுகோளை மீறியும் அவரது பயணம் உறுதியான நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து அவரிடம் தமிழர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்ய அவரிடமே முறையிட்டிருக்கலாம் என்று தெரிகின்றது.

தனக்கு திரைப்பட வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் கனடா, அமெரிக்கா என்று ஈழத் தமிழர்களின் பணத்தில் பிழைப்பு நடத்திய கருணாஸ் இன்று சிங்களனின் வெற்றியைக் குறிக்கும் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க முனைந்துள்ளது மிகவும் வேதனையைத்தரும் ஒன்றாகும்.

இந்நிலையில் நேற்று காலை திடீரென்று சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் இயக்கத்தைச்சேர்ந்த சிலர் தன்னை தொலைபேசியில் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.

உண்மை வெளியான உடன் முன்னுக்குபின் முரணாக பேசுகின்றார். தமிழர்களுக்கு உதவி செய்வதாக அசினின் வழியில் தம்பட்டம் அடிக்கின்றார். நாம் தமிழர் இயக்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றார்.

தமிழர்களின் குரலாய் ஒலிக்கும் நாம் தமிழர் இயக்கம் இது குறித்து அச்சம் கொள்ளாது. இதனை சட்டப்படி சந்திக்கும். தமிழர்களின் இனமானப்பணியில் தன்னை தொடர்ந்து அர்ப்பணிக்கும்.(நன்றி -http://www.sangathie.com/index.php/news/10354/51//d,fullarticle)

http://www.tharavu.com/2010/07/blog-post_524.html

Karunas seeks police protection!

Comedian turned hero Karunas of Ambasamudram Ambani fame visited the Police Commissioners office today to lodge a complaint.

The comedian it seems has been threatened by several pro-Sri Lanka Tamil groups as he is planning to go to Kandy in Srilanka with his family for a pilgrimage.

Later speaking to newsmen, Karunas said:"I am getting threatening calls and SMS’s from people owing allegiance to Naam Thamizar, asking me not to go to Sri Lanka. It is purely a personal visit as Kandy Kathirkamam Murugan is my Kula Deivam (family deity) and I had taken a vow that I will pray there. I have also some relatives in Sri Lanka, and I will be definitely calling on them.”

- http://sify.com/movies/tamil/fullstory.php?id=14950857&cid=2363

அந்த நாயின் பெயரில் இருக்குது பிரச்சினை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.