Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு பாதுகாப்பு வலயங்களை ஒரே இரவில் அகற்ற முடியாது - சிறிலங்கா அரசு புதிய விளக்கம்

Featured Replies

வடக்கிலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை ஒரே இரவில் விலக்கிக் கொண்டு விட முடியாது, கட்டம் கட்டமாகவே அதை விலக்க முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று பிற்பகல் வடபகுதி ஊடகவியலாளர்கள் குழுவிடம் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் ஹுலுகல்லவும், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவலவும் இது குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

அங்கு சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மெடவெல கருத்து வெளியிடுகையில்,

“வடக்கிலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களைக் கட்டம் கட்டமாக அகற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளாலி, முகமாலை, கச்சாய், சாவகச்சேரி, மல்லாவி, காங்கேசன்துறை தொடக்கம் தெல்லிப்பளை வரையான யாழ் - காங்கேசன்துறை வீதியின் மேற்குப் பகுதி, மாங்குளம் உட்பட பல பிரதேசங்களில் உயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்கனவே நீக்கப்பட்டும், சுருக்கப்பட்டும் உள்ளன.

உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் மீளக் குடியமர்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

படையினர் தங்கி இருந்த பல கட்டடங்களும், தனியார் வீடுகளும் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

படையினர் சமாதானத்தையே விரும்புகின்றனர்.

அதனால் பழைய நிலைமை ஏற்படாதிருப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்கின்றனர்.

இராணுவத்தினர் போர் புரியக் கூடிய பிரிவினர் மட்டுமன்றி நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்பு செய்யக் கூடியவர்களாகவும் உள்ளனர்.

வடக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்தும் பணிகளிலும், கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளிலும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல,

"போர் முடிவுக்கு வந்து சுமார் பதினொரு மாதங்கள் தான் நிறைவடைந்துள்ளன. ஆனாலும் நாம் தேசிய பாதுகாப்பு விடயத்துக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட்டு வருகிறோம்.

உயர் பாதுகாப்பு வலயங்களை கட்டம், கட்டமாக அகற்றவும், குறைக்கவும் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை எடுத்த எடுப்பிலேயே ஒரே இரவில் முழுமையாக அகற்ற முடியாது.

அப்படிச் செய்தால் படையினர் மட்டுமன்றி தமிழ்மக்களும் கூடப் பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும்.

இதற்கு நிறையவே முன் அனுபவங்கள் உள்ளன” என்று தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிறிலங்கா அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, வடக்கிலுள்ள அனைத்து உயர்பாதுகாப்பு வலயங்களையும் நீக்க முடியாது என்றும் அந்தக் காணிகளை சுவீகரிக்கும் உரிமை அரசுக்கு இருப்பதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.