Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

3ஆம் இணைப்பு‐ கே.பி எனப்படும் கே.பத்மநாதன் ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் இறுதிப்பகுதி ‐ தமிழில் GTN

Featured Replies

3ஆம் இணைப்பு‐ கே.பி எனப்படும் கே.பத்மநாதன் ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் இறுதிப்பகுதி ‐ தமிழில் புவுN

01 யுரபரளவ 10 01:49 யஅ (டீளுவு)

விடுதலைப் புலிகளின் சர்வதேசப்பிரதிநிதியாக இருந்து இலங்கை அரசால் மலேசியாவில் வைத்து கைது செய்து கொண்டு செல்லப்பட்ட கே.பி எனப்படும் கே.பத்மநாதன் ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் இறுதிப்பகுதி இது

2006 தொடக்கம் 2009 வரையான போர்க்கள நிலவரங்களை எப்படி நீங்கள் அறிந்து கொண்டீர்கள்? முதலில் கிழக்கு பின்னர் வன்னி கள நிலவரங்கள் குறித்து விடுதலைப் புலிகள் உங்களுக்கு அறியத் தந்தார்களா?

போர்ப்பிராந்தியத்திலிருந்து வெகு தொலைவில் நானிருந்தேன். கிழக்கு மற்றும் வன்னிக்கள முனைகளில் என்ன நடைபெறுகிறது என்பதனை நான் அறிந்தவனாகத் தான் இருந்தேன். எங்களுடைய உறுப்பினர்கள் கடும் அழுத்தத்துக்குள்ளாகி இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. இராணுவம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துள் நுழைந்த போது அவர்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை.

நான் முன்னரே சுட்டிக்காட்டியது போல செப்டம்பர் 11 அல்ஹைடாவின் தாக்குதல் இலங்கைப் போரிலும் முற்றாக வேறுபட்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்க சர்வதேச சமூகத்தைத் தள்ளி விட்டிருந்தது. இராணுவ ரீதியாக படையினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்பது எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால் இந்தக்கள நிலவரம் முற்றாக மாறியிருக்கிறது என்பதை பிரபாகரன் மிக இலகுவாகவே புறக்கணித்திருந்தார். விளைவு தான் வரலாறாயிற்றே.

இந்தப் போரில் மிக முக்கியமான பாத்திரத்தை நீங்கள் வகித்திருக்கிறீர்கள்? வடக்கு கிழக்கு களமுனைகளில் உங்களுடைய தந்திரோபாயம் தோல்வியடைந்தது ஏன் என்று கருதுகிறீர்கள்?

பிரபாகரன் கள நிலவரம் குறித்து எதனையும் அறிந்திருக்கவில்லை. செப்.11 தொடர்பாக அவர் அவதானமாக அலசி ஆராய்ந்திருப்பாரேயானால் அதேபோன்று மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானது இலங்கையின் தந்திரோபாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்ததை அவதானித்திருப்பாரேயானால் விடுதலைப்புலிகள் இன்றும் இருந்திருப்பார்கள். பிரபாகரன் மிக எளிமையான ஒரு மனிதர். அவர் தனது இலக்கிற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார். சுpலசமயங்களில் கண்முடித் தனமாகக் கூட.

1987 – 1990 வரையான உங்களது பங்களிப்பு என்னவாக இருந்தது?

தாய்லாந்து மலேசியா சைப்பிரஸ் உட்படப் பல நாடுகளுக்குச் செல்வதும் வருவதுமாக இருந்தேன்.

பல வருடங்களாக வெளிநாடுகளிலேயே இருந்து பணியாற்றி வருகிறீர்கள். சர்வதேச ரீதியாக ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் அறிவீர்கள். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் பற்றி உங்களது அபி;ப்பிராயம் என்ன?

ஆப்கான் மற்றும் ஈராக் இரண்டும் இன்னமும் நெருக்கடிக்குள் தான் இருக்கின்றன. சர்வதேசப்படைகள் இன்னமும் அங்கு அவற்றைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கின்றன. வெளிநாட்டுப்படைகளின் வரவால் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்ற உதாரணத்திற்கு ஆப்கானும் ஈராக்கும் கூட விதிவிலக்காகவில்லை.

உங்களுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும் அதனால் நீங்கள் அரசியலுக்கு வரப் போவதில்லை என்றும் அண்மையில் கருணா தெரிவித்திருந்தார். இது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அன்ரன் பாலசிங்கம் தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவை நோர்வே ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தைகளின் போது வெளிநாடுகளில் நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா?

கருணாவுக்குச்சுதந்திரம் இருக்கிறது தனது அபிப்பிராயத்தைச் சொல்வதற்கு. என்னைப்பற்றிய அவருடைய அபிப்பிராயம் குறித்தோ அல்லது நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பது பற்றிய அவருடைய அபிப்பிராயம் குறித்தோ நான் எதனையும் சொல்லப் போவதில்லை. இந்தக்கணத்தில் தேவையானது போருக்குப் பிந்தைய புனர்வாழ்வு புனர் நிர்மாணமும் மீள் குடியேற்றமும் தான்.

இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுக்களில் அன்ரன் பாலசிங்கம் தலைமையிலான குழுவில் ஒருவராக பிரபாகரன் என்னை நியமித்தார். ஆனால் சிலர் அதனை எதிர்த்தார்கள். பல்வேறு நாடுகளுக்கும் சென்று அரச பிரதிநிதிகளுடன் பேசும் வாய்ப்பை அது எனக்கு ஏற்படுத்தி இருந்தது. ஆனால்இ அதனை எதிர்த்தவர்கள் பயந்தார்கள் நான் இதனைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தை தவிர்ந்த வேறு விடயங்களில் ஈடுபடக்கூடும் என.

ஒரு சந்தர்ப்பத்தில் பிரபாகரன் அன்ரன் பாலசிங்கத்தை பேச்சுவார்த்தைக் குழுவிலிருந்து நீக்க விரும்பியிருந்தார். அன்ரன்பாலசிங்கம் கையாண்ட வழிமுறையை அவர் அங்கீகரித்திருக்கவில்லை.

நான் தற்போது அரசாங்கத்தோடும் இராணுவத்தோடும் இணைந்து பணியாற்றுவது பற்றி சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். மிகநீண்டகாலமாகவே துயர்ப்படும் மக்களுக்கு ஒரு அரசாங்கத்தின் உதவியின்றி எவ்வாறு உதவுதல் முடியும்? நான் என்ன செய்ய வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்? சந்திரனிலிருந்து உதவியைப் பெற்றுக் கொண்டு வருவதா அல்லது அரசாங்கத்துடன் இணைந்து போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிவதா?

2003 ஏப்ரலில் புலிகள் பேச்சுவார்த்தையை முறித்தது குறித்து புலிகளின் தலைவரிடமிருந்து அதற்கான காரணங்களைப் பெற முயலவில்லையா?

நம்பிக்கையீனம் தான் பேச்சுமுறிவடையக்காரணமாக இருந்தது. போர் நிறுத்த ஒப்பந்த முறிவு குறித்து பிரபாகரனுடன் பேசிய போது கிடைத்தது இது தான். பேச்சுவார்த்தையூடாகச் சமாதானம் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. போர் புரிவதை விடக் கடுமையானது அது. அரசாங்கத்தின் பிரதிநிதிகளோடு ஒப்பிடும் போது விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் சாதாரணமானவர்களாகவும் ஆற்றல் குன்றியவர்களாகவும் காணப்பட்டனர். அரசாங்கத்தின் தரப்பில் ஜி.எல்.பீரிஸ் உட்படப் பல தகுதிவாய்ந்த நிபுணர்கள் அங்கு இருந்தாhர்கள்.

2007 மத்தியில் கிழக்கின் முக்கியமான எல்லாத் தளங்களையும் இழந்த பிற்பாடு தாம் அவற்றை மீளக் கைப்பற்றி விடுவோம் என்று புலிகள் நம்பினார்களா? எவ்வாறு?

ஒருமுறை வன்னி மோதலில் இராணுவத்;தின் கை ஓங்கியபின்னரும் கூட அது எங்களது களநிலவரங்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

சில ஆய்வாளர்கள் நம்புகிறார்கள் கடற்படையினர் புலிகளுக்கான கடல் வழி வழங்கல் பாதைகளைக் கட்டுப்படுத்தியபடியால் தான் இலங்கையின் வெற்றி சாத்தியமாகியதென. இதனுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா?

கடல்வழி வழங்கலைக்கட்டுப்படுத்தியமை பாரிய பின்னடைவு தான்.

இப்போது போர் முடிவடைந்து விட்டது. போரில் ஈடுபட்ட தரப்புக்கள் பேச்வார்த்தை நடாத்தி எல்லா சமூகங்களுக்கும் பயன்தரக்கூடிய ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியுமா?

இதே போன்ற கேள்விக்கு நான் ஏற்கெனவே பதிலளித்து விட்டேன்.

2005 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு வாக்காளர்களின் வாக்குரிமையை மறுத்தமையானது அன்று பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு சாதகமான நிலையை வழங்கியதல்லவா?

ரணில் விக்ரமசிங்க வெற்றிகரமான ஒரு முடிவை அடைய பலம் வாய்ந்தவராக இல்லை என்று பிரபாகரன் நினைத்திருக்கக்கூடும்.

சிறிலங்கா அரசின் புனர்நிமாண அமைச்சராகக் கூடிய வாய்ப்பு உள்ளதுபோல் தெரிகிறது. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் இருந்து கடத்தி வந்து அதுவும் புலிகளின் மிக முக்கிய புள்ளியை இப்படி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கவும்,வெளிநாட்டு பிரமுகர்களை சந்த்திக்கவும் எப்படி முடிகிறது? அதுவும் சிறையில் இருந்து கொண்டு.இவ்வளவு பெரியாளாக்க அரசுக்கு இவர் யார்? கூட நின்று போர் புரிந்த சரத்தையே சிறையில் வதைபடும் போது இவர் மட்டும் இவரால் மட்டும் எப்படி செயற்பட முடிகிறது.அப்படி அரசு உண்மையாக புதிதாக ஒரு பெயரில் அகதிகளுக்கு பணம் சேர்க்க முயலும் அரசு ஏன் பாலகுமார் அல்லது யோகி போன்றவர்களை

பயன்படுத்தாமல் கொன்றார்கள்?.

அது சரி பல கோடி இன் பணத்தை முடக்கிய அரசு ஏன் அவற்றை அகதிகளுக்கு பயன்படுத்தவில்லை.சரத் நாட்டுக்காக இவ்வளவு செய்தும் ஒரு செவ்வியையாவது பத்திரிகைகளுக்கு வழங்க முடிகிறதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.