Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் விடுதலைப்புலிகளை தண்டனைக் காலம் முடியும் தருவாயில் பொய் வழக்கில் சிக்க வைக்கும் இலங்கை அரசு - அக்னி சுப்பிரமணியம், மனிதம்

Featured Replies

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்தவரான ராமசந்திர விக்னேஸ்வரன் என்ற முன்னாள் புலி உறுப்பினரை, தண்டனைக் காலம் முடியும் தருவாயில், பொய் வழக்குகளை புனைந்து திரும்பவும் சிறைக்குள் அடைத்து வைக்கிறது இலங்கை அரசு.

நெடுமாறன் என்ற புனைப்பெயரில் விடுதலைப்புலி அமைப்பில் வழங்கல் துறையிலும், பின்னர் புலனாய்வுத்துறை தளபதியாகவும் செயல்பட்டு வந்தவர்தான் கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்தவரான ராமசந்திர விக்னேஸ்வரன். இவருடைய தகப்பனாரை இந்திய அமைதிப்படை 1989ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகளுக்கு உணவு கொடுத்து உதவினார் என்று குற்றச்சாட்டப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டார். ஆனாலும், விக்னேஸ்வரன் என்ற நெடுமாறன் தனது 15வது வயதிலேயே ஐந்தாம் வகுப்பை முடித்துவிட்டு, 1987ம் ஆண்டே விடுதலைப்புலி இயக்கத்துடன் இணைத்து கொண்டு செயல்பட்டு வந்தார்.

யுத்த நிறுத்த சமாதான காலங்களில் ஈ.பி.டி.பி மற்றும் பிளாட் இயக்கங்கள் வன்னிக்கு உறவினர்களைத் தேடி வரும் தமிழ் மக்களை கடத்தி, கப்பம் வாங்கி வந்தது. விடுதலைப்புலிகள், இப்படி கப்பம் வசூலிக்கும் ஒட்டுக்குழுவினரை அடையாளம் கண்டு, நேர்மையற்ற முறையில் வசூலித்த கப்பத்தொகையை திரும்ப எடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை இந்த நெடுமாறனிடம் விட்டிருந்தது. இந்த செயல்பாட்டின் போது, 2003ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி இலங்கை அரசு படையினரால் விடுதலைப்புலிகள் ஜெயா மாஸ்டர் தலைமையில் 24 பேரை சிறை பிடித்து விசாரணைக்கு அனுப்பி வைத்தது. அப்போதைய நீதி அரசராக இருந்து வந்த இளம் செழியனிடம் நேர்நிறுத்தப்பட்ட போது, நெடுமாறன் மற்றும் ஜோன்ஸ் என்ற இருவரும் குற்றத்தை ஒப்பு கொண்டதன் அடிப்படையில், மற்றைய ஜெயா மாஸ்டர் உட்பட 22 பேரையும் விடுதலை செய்தார். நெடுமாறன் மற்றும் ஜோன்ஸிக்கு தலா 18 வருடங்கள் கடும் சிறை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் ரூ. 8 லட்சம் கட்டினால், தண்டனைக் காலம் பாதியாக குறைக்கப்படும் என்று அறிவித்தன் காரணமாய், இருவரும் தலா ரூ. 8 லட்சத்தை கட்டினர். சிறையில் நன்னடத்தை காரணமாய் சிறைத்துறை கொடுத்த சலுகையினால், மேலும் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. இதனால், கடந்த 25-12-2008ம் ஆண்டே நெடுமாறன் விடுதலை செய்யப்பட வேண்டும்.

ஆனால், பிடிபட்டவர்கள் விடுதலைப்புலிகள் என்ற ஒரே காரணத்தால், மனித உரிமைகளை மதிக்காத இலங்கை அரசு, 22-11-2008 அன்றே மன்னார் மாவட்டத்தில் 2002ல் வீடு கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முன்பு ஒரு முறை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நெடுமாறனை திரும்பவும் வழக்கில் சேர்ப்பதாய் திரு. நேசராசா என்ற சி.ஐ.டி காவல்துறை அதிகாரி தெரிவித்து வழக்கில் இணைக்கப்பட்டார். இதனால், நெடுமாறன் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், பிரபாகரன் என்ற நீதியரசர், காவல்துறையில் செயலை கண்டித்து, இவ்வழக்கின் தீர்ப்பை அடுத்த விசாரணையின் போது கூறுவதாய் வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

மன்னார் வழக்கோடு, சி.ஐ.டி. காவல்துறை நில்லாமல், 2005ம் வருடம் அனுராதபுரம் மாவட்டத்தில் சிங்கள பொடியன் கடத்தல் வழக்கில் நெடுமாறனை 2009 மே மாதத்தில் திரும்பவும் ஒரு வழக்கு போட்டு சேர்த்துள்ளது.

திரும்பவும், வவுனியா மாவட்டத்தில் மேனேஜரை கடத்தி ரூ. 3 கோடி வங்கிக் கொள்ளையில் 4 பேரை கைது செய்தனர். இதில் 2 பேர் வேளையில் இருந்து வரும் சி.ஐ.டி. காவல்துறையினர் ஆவர். இவர்களுக்கு ரூ. 50,000 பிணையில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதில் சிக்கியவர்கள் விக்னேஸ்வரன் என்ற பெயரையும் சம்பந்தப்படுத்தியதால், நெடுமாறன் என்ற விக்னேஸ்வரனையும் இந்த வழக்கிலும் சேர்க்கப்பட்டார். அனுராதபுரச் சிறைச்சாலையிலும், வெளிக்கடை சிறைச்சாலையிலும் 8 பேர் விக்னேஸ்வரன் என்ற பெயருடைய நபர்கள் இருந்த போதும், குறிப்பாக விடுதலைப்புலி என்ற ஓரே காரணத்தால், சி.ஐ.டி. காவல்துறையினர், நெடுமாறன் என்ற விக்னேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இதை எதிர்த்த நெடுமாறன், நீதிபதி முன்பு, தனக்கு வாக்குமூலம் கொடுக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டும் என்று வேண்டுகோளை வைத்துள்ளார். ஆனால், நீதிபதி, வழக்குரைஞரை வைத்து வாதாட வேண்டும் என்று கூறிவிட்டார்.

முள்ளிவாய்காலில் 40,000 மேற்பட்டோர் இலங்கை அரசு படைகளினால் கொத்து குண்டு, இராசாயன குண்டுகளை வீசி கொல்லப்பட்டதில், நெடுமாறனின் குடும்பம் ஒட்டு மொத்தமாய் பலியாகி விட்டனர். இதனால், தற்போது அனாதையாய் உள்ள நெடுமாறனுக்கு பணம் கட்டி, வழக்குரைஞரை வைத்து வாதாட முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் நீதி வேண்டி, உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பும் எவ்வித பதிலும் கிடைக்காத நெடுமாறன், நீதி வேண்டி இன்று 2ம் தேதி காலை முதல் அனுராதபுரம் சிறைச் சாலையில் சாகும்வரை உண்ணாநிலை இருந்து வருகிறார்.

நீண்ட காலமாய் சிறைக்குள்ளே இருந்து வரும் நெடுமாறனை வெளியே விடுதலையாகி வரவிடாமல், தடுக்கும் நோக்கோடு, மனித உரிமைகளை மதிக்காத இலங்கை அரசு, பொய் வழக்குகளை மாறி மாறி போட்டு தடைகளை விதித்து வருவதை பார்க்கும் போது, மனித உரிமைகளுக்கு எவ்வித மரியாதை கொடுக்க மனமில்லாமல் இருந்து வருவது உலக மக்களுக்கு புரிந்து கொள்ளக்கூடியதாய் இருக்கிறது.

--

www.manitham.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.