Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் குடாநாட்டுக்கு திடீர் விஜயம்

Featured Replies

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், மக்கள் வாழ்க்கை மேம்பாட்டு அபிவிருத்தி, மீள்குடியமர்வு என்பன தொடர்பான நடவடிக்கைகள் தமக்குப் பூரண திருப்தியை அளிப்பதாக இந்தியத் தூதரக அதிகாரிகள் குடாநாட்டின் உயர் அதிகாரிகள் பலரிடம் கூறியதாகத் தெரியவந்ததுள்ளது.

இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இருவர் நேற்றுக் குடாநாட்டுக்குத் திடீர் விஜயம் செய்திருந்தனர். யாழ்ப்பாணத்தின் இப்போதைய பாதுகாப்பு நிலையை நேரில் கண்டறியும் பொருட்டே இங்கு அவர்கள் வந்தனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நேற்றுக் காலை விஜயம் செய்து பொதுமக்களுடன் உரையாடி இப்போதுள்ள பாதுகாப்பு நிலைவரத்தைக் கேட்டறிந்தனராம். போருக்குப் பின்னரான பாதுகாப்பு நிலைமை குறித்த தகவல்களை மிக விவரமாகத் தாம் சந்தித்த பொதுமக்களிடம் இருந்து அறிந்து சென்றுள்ளனர். என கூறப்படுகின்ரது.

இந்தியத் தூதரக இரண்டாம் நிலைச் செயலர் கே.முரளிதரன், கவுன்சலர் ஏ.சுனில் ஆச்சயா ஆகிய இருவரும் நேற்றுக்காலை குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து, நிலைமைகளைப் பார்வையிட்டனர். அதன்போது பொது மக்கள் பலரையும் நேரில் சந்தித்து அவர்களின் வாழ்க்கை நிலை, தேவைகள், போருக்கு பின்னரான யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைவரம் என்பன தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் இருவரும் விவரமாகக் கேட்டறி்ந்துள்ளனர்.

போர் முடிவடைந்த பின்னர் அச்ச சூழ்நிலை பெருமளவுக்கு நீங்கி இருப்பதாகவும் முன்னரைக் காட்டிலும் பல்வேறு வகைகளில் தமது வாழ்க்கைத்தரம் உயரத் தொடங்கி உள்ளதாகவும், குடாநாட்டின் பொருளாதார நிலையை உயர்த்த அபிவிருத்தித் திட்டங்கள் தேவைப்படுவதாகவும் மக்கள் அவர்களிடம் தெரிவித்தனர் என்று அறியவந்துள்ளது..

பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக ஆராயும் பொருட்டு வடமாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட அரச அதிபர், பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆகியோரையும் இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன் போதே இந்திய அதிகாரிகள் அனைத்து செயற்பாட்டிலும் திருப்தியாக உள்ளதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

நல்லூரிலும் யாழ் நகரிலும் நிலைமைகளை கேட்டால் இப்படித்தான் இருக்கும் என எல்லோருக்கும் தெரியும்????

Eelanatham.net

Edited by உமை

இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் குடாநாட்டுக்கு திடீர் விஜயம்

இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இருவர் நேற்றுக் குடாநாட்டுக்குத் திடீர் விஜயம் செய்திருந்தனர். யாழ்ப்பாணத்தின் இப்போதைய பாதுகாப்பு நிலையை நேரில் கண்டறியும் பொருட்டே இங்கு அவர்கள் வந்தனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நேற்றுக் காலை விஜயம் செய்து பொதுமக்களுடன் உரையாடி இப்போதுள்ள பாதுகாப்பு நிலைவரத்தைக் கேட்டறிந்தனர். போருக்குப் பின்னரான பாதுகாப்பு நிலைமை குறித்த தகவல்களை மிக விவரமாகத் தாம் சந்தித்த பொதுமக்களிடம் இருந்து அறிந்து சென்றுள்ளனர்.

யாழ்.குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இருவர் திடீர் விஜயம் ஒன்றை நேற்று மேற்கொண்டனர்.

இந்தியத் தூதரக இரண்டாம் நிலைச் செயலர் கே.முரளிதரன், கவுன்சலர் ஏ.சுனில் ஆச்சயா ஆகிய இருவரும் நேற்றுக்காலை குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து, நிலைமைகளை பார்வையிட்டனர்.

அதன்போது பொதுமக்கள் பலரையும் நேரில் சந்தித்து அவர்களின் வாழ்க்கை நிலை, தேவைகள், போருக்கு பின்னரான யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைவரம் என்பன தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் இருவரும் விவரமாகக் கேட்டறிந்தனர்.

போர் முடிவடைந்த பின்னர் அச்ச சூழ்நிலை பெருமளவுக்கு நீங்கி இருப்பதாகவும் முன்னரைக் காட்டிலும் பல்வேறு வகைகளில் தமது வாழ்க்கைத்தரம் உயரத் தொடங்கி உள்ளதாகவும், குடாநாட்டின் பொருளாதார நிலையை உயர்த்த அபிவிருத்தித் திட்டங்கள் தேவைப்படுவதாகவும் மக்கள் அவர்களிடம் தெரிவித்தனர் என்று அறியவந்துதது.

பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக ஆராயும் பொருட்டு வடமாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட அரச அதிபர், பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆகியோரையும் இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், மக்கள் வாழ்க்கை மேம்பாட்டு அபிவிருத்தி, மீள்குடியமர்வு என்பன தொடர்பான நடவடிக்கைகள் தமக்குப் பூரண திருப்தியை அளிப்பதாக இந்தியத் தூதரக அதிகாரிகள் குடாநாட்டின் உயர் அதிகாரிகள் பலரிடம் கூறியதாகத் தெரியவந்தது.

நன்றி

ஈழநேசன்

;;;;;;;;;;;;;...................................................................................................

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், மக்கள் வாழ்க்கை மேம்பாட்டு அபிவிருத்தி, மீள்குடியமர்வு என்பன தொடர்பான நடவடிக்கைகள் தமக்குப் பூரண திருப்தியை அளிப்பதாக இந்தியத் தூதரக அதிகாரிகள் குடாநாட்டின் உயர் அதிகாரிகள் பலரிடம் கூறியதாகத் தெரியவந்தது
.

அட இஞ்சபாரடா கூத்த

இந்தித் தூதரக இனப்படுகொலை அதிகாரிகள், சிங்கள பயங்கரவாதிகளின் எலும்புத் துண்டுகளை நக்கியதட்கு நன்றி சொல்ல போயிருப்பார்கள்.

சீன நாட்டினர் இந்தியாவினுள் ஊடுருவும் வழியைக் கூறி காசு வாங்கவும் இந்தித் தூதரக இனப்படுகொலை அதிகாரிகள் போயிருக்கலாம்.

கோப்பாய் கல்வியல் கல்லூரியில் இந்திய பயங்கரவாதிகள் சிலர், பல இளைஞர்களுக்கு 10 நாள் பயிற்சி வழங்குகிறார்கள் என்று ஒரு யாழ்ப்பான தகவல் சொல்லுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.