Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூகோள வியூகம்

Featured Replies

இலங்கையின் வியூகம் எதுவோ?

வன்னிப் போரினால் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்த இலட்சக்கணக்கான மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளைச் செய்து கொடுப் பதில் எத்தகைய முன்னேற்றம் உண்டாகியுள்ளது. அதன் பொருட்டு இந்தியா வழங்கிய நிதியுதவிகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சென்றடைந்ததா? அவர்களது வாழ்வில் விடிவு பிறப்பதற்கான அறிகுறிகள் சிறு கீற்றாகவேனும் தென் படுகின்றதா? இவற்றுக்கான விடைகளைக் கண்டறியும் பொருட்டு விஷேட தூதுவர் ஒருவரை இந்திய மத்திய அரசு இலங் கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுமார் 2 மாதங் களுக்கு முன்னர் தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் இந்தியத் தரப்பின் விருப்பம், ஏற்பாடு, செயல் வடிவம் பெறுவதற்கு முன்னதாக இலங்கையில் இருந்து மூவர் குழு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி விரைகிறது. இலங்கை அரசாங்கம், இடம்பெயர்ந்த வன்னி மக்களின் மீள் குடியேற்றம், பாதிப்புற்றோரின் இயல்பு நிலையை மீள் வித்து அவர்கள் தமது சொந்தக்காலில் நின்று வாழ்வதற்கு வசதி, வாய்ப்புக்களைச் செய்து கொடுத்துள்ளதா என்பதனை இந்திய அரசின் சிறப்புத் தூதுவர் நேரில் கண்டறிந்த பின் னர் அதிருப்தி தெரிவிப்பதைத் தவிர்ப்பதற்காக மூவர் குழு முந்திக் கொண்டு புதுடில்லி செல்வது குறித்து ஏற்கனவே இப்பத்தியில் எழுதியிருந்தோம்.

முன்னர் ஒரு முறை, ஏழு மாதங்களுக்கு முன்னர் வன்னியில் தமிழ் மக்களின் மீள் குடியமர்வு மற்றும் யாழ்ப்பா ணத்து நிலைமையினைப் பார்வையிட வந்த தமிழக நாடா ளுமன்ற உறுப்பினர்கள் குழு மீள்குடியேற்றம் குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தது.

அதனாலோ என்னவோ, இந்தியச் சிறப்புத் தூதுவர், மீளக் குடியேறிய வன்னி மக்களின் நிலைமையை நேரில் பார்த்த பின்னர் உண்மை நிலவரத்தை பரிதாபகரமான நிலை மையை தனது நாட்டு அரசுக்கு எடுத்துக் கூறி விட் டால் இந்திய அரசின் அதிருப்தியைத் தேடிக்கொள்ள நேரி டும் என்ற அச்சம் காரணமாகவே அமைச்சர் பசில் தலைமையிலான மூவர் குழு முந்திக் கொண்டு புதுடில்லிக்குச் செல்கி றது எனச் கொள்ளலாம். அதனையும் விட மற்றொரு பிரதான காரணம் உண்டு என்று உள்ளகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.

1964இல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடைபெற்ற பெரும் போரின் பின்னர் இரண்டு நாடுகளும் சிங்கமும் புலியுமாக ஒன்றை மற்றையது தட்டி விழுத்தும் பகைமை நிலையில் உள்ளன.

ஆனால் இலங்கையின் வெளிநாட்டு இராஜதந்திரம் எதிரி நாடுகள் இரண்டுடனும் பாலுக்கும் காவல், பூனைக் கும் தோழன் என்ற நிலையில் அணைத்து வைத்துக் கொண்டு செயற்படுகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கட்டுவதற்கு சீனா வின் உதவியென்றும் காங்கேசன் துறைமுகத்தைக் அபிவிருத்தி செய்ய இந்திய உதவியென்றும் வவுனியாவில் இருந்து காங்கேசன் துறை வரையிலான ரயில் பாதையை நிர்மாணிக்க இந்தியாவின் உதவியைப் பெற்றிருப்பதோடு, காஙகேசன் சீமெந்துத் தொழிற்சாலையை புனர்நிர்மாணம் செய்வதற்கான ஆரம்பக் கட்ட வேலையை சீனாவைக் கொண்டும் செய்விக்க ஏற்பாடு செய்துள்ளது இலங்கை அரசு.

இத்தகைய ஒரு பின்புலத்தில், காங்கேசன் சிமெந்துத் தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்துள்ள சீனச் சிறைக் கைதி கள் கடல் வழியாகத் தமிழகத்திற்குள் ஊடுருவி பாது காப்புத்துறைத் தகவல்களை சேகரித்துத் தமது நாட்டு அரசுக்கு வழங்கலாம் என்ற சந்தேகம் இந்தியப் பாதுகாப்புத் தரப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக, ""ஒப்பரேஷன் ஹம்லா'' என்ற பாதுகாப்பு நடவடிக்கையை இந்தியா தமிழ கக் கடற்கரையோரப் பகுதிகளில் ஏற்கனவே அது ஆரம் பித்துவிட்டது.

ஏன்?

கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரிகள் இருவர் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட திடீர் விஜயமும், தாமே மக்களுடன் நேரில் உரையாடித் தகவல்களைப் பெற்றுக்கொண்டமையும் இலங்கையில் சீனாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியா உஷார் அடைந்து வருவதன் ஒரு குறியீடு என்றே கருதப்படுகின்றது. ஆபிரிக்கா, பொஸ்வானா, நைஜீரியா, தன்சானியா, சாம் பியா ஆகிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவுவதற்கும், வர்த்தக ரீதியில் தொழிற்சாலைகள், நிறு வனங்களை நடத்துவதற்குமெனக் கால்பதித்த சீனா, அந் நாடுகளில் பல குளறுபடிகளுக்கும் அவற்றின் பாதுகாப்புக் கும் குந்தகமான தில்லு முல்லுகளில் ஈடுபட்டது என்ற பதிவுகள் ஏற்கனவே உள்ளன. மிகக் குறிப்பாக ஆபிரிக்கா வின் ரயில் சேவை அபிவிருத்தி வேலைக்குச் சென்ற சீனக் கைதிகள் அங்கு பாதுகாப்புத்துறை உளவுக்கும் பயன்படுத் தப்பட்டார்கள் என்ற சந்தேகம் எழுந்தது.

எப்படியோ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கடந்த வாரம் சீனாவுக்கு விஜயம் செய்தது அந்த நாட்டின் விருப்பு வெறுப்புகளையும் சரியான நோக்கத்தையும் அறியும் பொருட்டே என்றும் தகவல்கள் உண்டு.

இத்தகைய ஒரு பின்னணியிலேயே, பஸில், கோத்த பாய, லலித் வீரதுங்க என்ற ஜனாதிபதியின் நம்பிக்கைக்கும், அபிமானத்திற்கும் உரிய முக்கூட்டுக் குழு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி பயணமாகிறது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் அமைச்சர்கள் புதுடில்லிக்கு அனுப்பப்படாமல் முக்கூட்டுக் குழு செல்வதில் மற்றொரு இரகசியமும் உண்டு என்கின்றன விடய மறிந்த வட்டாரங்கள். புதுடில்லியில் இந்தியாவின் "சவுத் புளொக்' அதிகாரிகள் நடத்தக்கூடிய பிய்த்து வாங்கல்களை வெளியில் வராமல் இரகசியமாக வைத்திருக்கக் கூடிய வர்கள் என்ற ஜனாதிபதி மஹிந்தவின் நம்பிக்கைக்கு உரியவர்கள் இந்த முக்கூட்டு குழுவினர் மட்டுமே என்றும் சொல் லப்படுகிறது.

எப்படியோ, தமக்கிடையே பெரும் பகைமையுள்ள இரண்டு நாடுகளுடன் தோழமை கொண்டுள்ள இலங்கை அரசு, அவற்றைக் கையாண்டு தாக்குப்பிடிக்க எந்த வகையான வியூகத்தை அல்லது தந்திரத்தைக் கடைப்பிடிக்கப் போகிறது என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....!

-- [ உதயன் ]

  • தொடங்கியவர்

சீனர்களுடன் இந்தியாவும், தமிழர்களும் நல்லுறவு கொள்வது எப்படி?

”நெருடல்” இணையதளத்தில் செண்கபத்தாரின் திறனாய்வுப் பார்வை மூலம் ராசதந்திரத் தொடர்புகளைத் தமிழ் மக்கள் சீனத்துடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசர அவசியம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

1962-ல் சீனா – இந்தியா போர் ஏற்பட்டது ஏன்? ஏன்பதையும் இன்று வரை மக்கள் சீனம் இந்தியாவை எதிரியாகவே பாவிப்பது ஏன்? ஏன்பதையும் ஆய்வு செய்து அறிந்தால் தான் பெய்ஜிங், கொழும்புவை ஆதரிப்பதன் பின்னணியைப் புரிய முடியும் இதைப்புரிந்து கொண்டால் தான் சீனாவுக்குத் தமிழ் மக்கள் பகைவர்கள் அல்ல என்பதை உணர்த்த முடியும். சீனர் – தமிழர் நல்லுறவை நிலை நாட்ட முடியும்.

1959ல் திபேத்தியத்தலைவர் தலாய்லாமாவை இந்தியாவுக்குள் அனுமதித்து அடைக்கலம் கொடுத்து சிறப்பு விருந்தினராகக் கருதிச் செயல்பட்ட அன்றைய பாரதப் பிரதமர் நேருவின் அதிகப்பிரசங்கித்தனம் தான் 1962 போருக்கு மூலகாரணம். காங்கிரஸ் கட்சி வறுமைமிகு இந்தியா கம்யூனிஸ்ட் நாடாக மாறிவிடக் கூடாதென்று சீனாவை இந்தியர்கள் வெறுக்கச் சதி செய்து வலியச்சென்று போரை வரவழைத்ததுதான் உண்மை. சீனா மீதான வெறுப்பு கம்யூனிசத்தின் மீதான வெறுப்பாக மாறிவிட்டது.

1964 கம்யூனிஸ்ட் கட்சி பிளவு பட்டு பலவீனப்பட்டும் போனது. பிரதான எதிர்கட்சியாகக்கூட வர இயலாதா நிலை வந்து விட்டது.

தன்னை உலகத் தலைவராகப் பாவித்துக் கொண்ட நேரு. சூ- என் -லாயைத் தனக்கிணையான தலைவராக ஏற்க மறுத்து. அவரையும் அதன் மூலம் மக்கள் சீனத்தையும் சிறுமைப் படுத்தியது பேருண்மை. எல்லைப் பிரச்சனை குறித்துப்பேச சூ-என்-லாய் பலமுறை பேச்சு வார்த்தைக்கு முயன்றும் தவிர்த்வர் நேரு. என்பது பர ஆய்வாளர்களின் அசைக்க முடியாத ஆதாரங்களுடனான கருத்து. (முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் டி.ஞானையாவின் நூல்) சீனாவின் ராணுவபலத்தை நேரு குறைத்து மதிப்பிட்டார் விளைவு. ஏறத்தால உரு லட்சம் சதுர கி.மீ நிலப்பரப்பை இந்தியா, சீனாவிடம் இழந்தது இன்று வரை மீட்கமுடியவில்லை. சீனாவின் அசுர ராணுவபலம் இ;ன்று இந்தியாவால் மட்டுமின்றி அமெரிக்காவாலும் உணரப்பட்டு விட்டது.

நேருவும் இந்தியாவும் சீன எதிர்ப்பிலிருந்தாலும் சோவியத் யூனியன் ஆதரவாளர்களாகவாவது இருந்தனர் ராஜிவ் நரசிம்மராவ் காலம் தொடந்கி இந்தியா அமெரிக்க ஆதரவு நிலைகக்கு வரத்துவங்கியது மன்மோகன்சிங் காலத்தில் அமெரிக்க தாசனாகவே மாறிப்போனது.

சீனாவுக்கு முதலில் தலாய்லாமாவால் வந்த கோபம் பிறகு அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் மூலம் இந்தியா மீது பல மடங்கு அதிகரித்தது. சீனாவுக்கு எதிராக அதன் அண்டை நாடான இந்தியாவை அமெரிக்கா ஆசியாக்கண்டத்துக்குள் கொம்பு சீவிவிடுவதால் இந்தியாவுக்கு எதிராகச் சீனா அதன் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர், இலங்கை, நேபாலம், மலேசியா, போன்ற நாடுகளுடன் நெருக்கமாகி விட்டது இதில் இலங்கை மட்டும் சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளிடமும் உதவி பெறுகிறது. இந்தியாவை ஏமாற்றுகிறது. இந்தியா ஏமாறவில்லை மாறாகத் தமிழர்களை ஏமாற்றுகிறது.

சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களிலிருந்து தப்பிக்கவே கூடங்குளம், கல்பாக்கம் என்று அணு உலைகளையும் ஸ்ரீ ஷரி கோட்டா திருவனந்தபுரம் என்று விண்வெளி ஆய்வு மய்யங்களையும் ஆவடியில் கனரக வாகன தொழற்சாலைகளையும் (டேங்க் பாக்டரி) ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களையும் புது டெல்லி, தென்னிந்தியாவில் நிலவியது. இப்போது சீனா இலங்கையில் கால்பதித்ததன் மூலம் இவற்றுக்குச் சீனாவால் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது 1974-ல் கச்சதீவு இலங்கைக்கு இந்திராவால் தாரைவார்க்கப்பட்டதும், கருணாநிதி ஒத்துழைத்தும் சீனாவுக்கு வசதியாகப் போய்விட்டது.

கச்சத்தீவில் சீனா ராடார் ஸ்டேஷன் அமைகிறது. இந்துமாக்கடலில் மீன் பிடிக்கும் உரிமையை இலங்கையிடமிருந்து சீன நிறுவனம் பெற்றுவிட்டது. பாதிக்கப்படப்போவது யார்? பொதுவாக தென்னிந்தியர்களும் குறிப்பாகத்தமிழர்களும் தான் தமிழ் மீனவர்களின் வாழவுரிமை தான் பறிபோகும் சீனர்களுடன் தமிழகத்தமிழனும் ,ஈழத்தமிழனும் வாழவாதாரம் காக்கப் போரிட்டாக வேண்டிய நிலை வந்து விட்டது.



  1. தாக்கு பிடிக்க முடியுமா?
  2. தமிழனால் சீனர்களை எதிர் கொள்ள இயலுமா?
  3. தப்பிக்க வழி என்ன?



  • தலாய்லாமாவை இந்திய மண்ணிலிருந்து வெளியேற்ற இந்தியாவாழ் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
  • சிங்கப்பூர், மலேசியா, மியான்மர் வாழ் தமிழர்கள் ஆங்காங்கு சீனர்களுடன் இணைந்து சீனர்-தமிழர் நட்புறவு அல்லது கலாச்சாரக்கழகங்களை ஏற்படுத்த வேண்டும்.
  • லீகுவான்யூ போன்ற இன்னும் பல சீனர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.
  • சார்க்” எனப்படும் தெற்காசிய ஒற்றுமையைத் தாண்டி ஒடடுமொத்த ஆசிய ஒற்றுமைக்கும் பாடுபட வேண்டும்.
  • சிங்களர்களை விடத் தமிழர்களின் மக்கள் தெகை எட்டு மடங்கு அதிகம் என்பதை பெய்ஜிங்குக்குத் தெரியபடுத்த வேண்டும்.
  • காங்சிப்பட்டு- சீனத்துப்பட்டு வாணிபத் தொடர்பையும், சில்க்ரூட் இருந்ததையும், போகர் வரலாற்றையும் நினைவூட்ட வேண்டும்.

சீனர்கள் தமிழர்களை எதிரிகளாகத் கருதாத நிலையை உருவாக்க வேண்டும்.

http://www.nerudal.com/nerudal.18322.html

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர் அகூதாஅ தங்களின் இணைப்பிற்கு... வலியில்லாமல் வாழ்க்கையில்லை எனில்... திடீர் திருப்பம் ஏதாவது ஒன்று இங்கு நிகழவேண்டும்...அது சீனாவின் மூலமாக இருந்தாலும் சரி... அப்பத்தான் இந்தியத்தின் காப்பாற்றும் திறமை இங்கு தோலுரித்து காட்டபடும்.. மீன் வாங்கி தின்னு போட்டு மீனவன் செத்தால் நமக்கென்ன என வாழும் கோஸ்டிகளுக்கு...அப்பத்தான் என்ன ஏது என்று இவர்களுக்கு பிரியும்... அதிலும் சில ஜென்மங்களுக்கு சொரணை இல்லாதிருப்பது வேறு விசயம்..( விஜய் படத்தில் வருவது போல ... ஏம்மா அவன் உன்னை கற்பழிக்கும் போது நீ என்னம்மா பண்ணிக்கிட்டிருந்த??? நான் இன்ரஸ்டா சீரியல் பாத்திட்டிருந்தண்ணா) அவனவன் வீடுகளுக்கும் சிங்களவன் வரவேண்டும் ... இவர்கள் இந்தியத்தின் உதவி(உபத்தரவ)குரலை எழுப்பவேண்டும்... இப்பத்தானே திருத்தணியில் புத்த மடலாயத்தை தொடங்கி இருக்கான்.. திருப்பூரில் இவர்கள் சிங்களர்கள் அட்டகாசம் சொல்லி மாளாது... மெதுவாக டவுன் பஸ்ஸில் சொறிலங்கா கிரிகெட்டு பனியன் ஜட்டியை போட்டு கொண்டு நடமாட ஆரம்பித்துவிட்டர்கள்... :unsure:

  • தொடங்கியவர்

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக அதிகளவு எதிர்பார்ப்புகளுடன் இலங்கை இந்தியாவின் கவலையை அதிகரித்திருக்கும் சீன நிதி

சீனாவின் நிதியுதவியுடன் 1.5 பில்லியன் டொலரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தின் முதலாவது தொகுதியை திறந்து வைப்பதற்கு இலங்கை தயாராகிவருகிறது. தெற்காசியாவில் சீனாவின் தந்திரோபாயமான முதலீடு குறித்து இந்தியாவின் கவலைகளை இந்தத் துறைமுகத் திட்டத்திற்கு சீனாவின் நிதியுதவி அதிகரிக்கச் செய்துள்ளது.

பண்டையகால "பட்டுப்பாதையில்" (Silk Route) அமைந்துள்ளதும் உலகின் சுறுசுறுப்பான கப்பல் போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாக அமைந்திருப்பதுமான அம்பாந்தோட்டைத் துறைமுகமானது இலங்கையின் பொருளாதார மீட்சியை முன்னெடுப்பதற்கு உறுதுணையாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் 300 மில்லியன் டொலர் கடனுடன் இந்தத் துறைமுகத்தின் முதற்கட்டப்பணி பூர்த்தியடைந்து நவம்பரில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

2014 இரண்டாம் கட்டப்பணி பூர்த்தியடையுமென அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதன் மூலம் இலங்கையின் தென்பிராந்திய முனையானது வெளிநாட்டு முதலீட்டைக் கவர்ந்திழுக்கும் காந்தமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வருடாந்தம் இந்தக் கடல்மார்க்கத்தால் 70 ஆயிரம் சரக்குக் கப்பல்கள் கிழக்கும் மேற்குக்குமிடையில் சேவைகளை நடத்துகின்றன. அவற்றில் சுமார் 2500 கப்பல்கள் இந்தத் துறைமுகத்தில் தமது சேவையைப் பெற்றுக்கொள்ளுமென இலங்கைத் துறைமுக அதிகாரசபையின் தலைவர் பிரியத் விக்கிரம ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.

இரண்டாவது கட்டம் பூர்த்தியடைந்தவுடன் சுமார் 10 வருடங்களில் வருடாந்தம் 8 ஆயிரம் கப்பல்களைக் கையாள்வதற்கான இலக்கை நாம் கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவைச்சூழ பூகோள ரீதியாக தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்வதற்கான முத்துமாலை திட்டத்தின் கீழ் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா பயன்படுத்துமென நம்பும் இந்தியா இந்த விடயம் தொடர்பாக அதிக கவலை கொண்டுள்ளது. பங்களாதேஷ்,மியன்மார்,பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் துறைமுக வசதிகளை சீனா அபிவிருத்தி செய்து வருகிறது. நேபாளத்தில் புகையிரதத் திட்டங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

தெற்காசியாவில் சீனாவானது அதிகளவுக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து இந்தியா தரப்பில் அச்சுறுத்தல் என்ற அபிப்பிராயம் அதிகரித்துள்ளது என்று யூரேசியா குழுமத்தின் ஆசிய விமர்சகர் மரியா கூஸிஷ்ரோ கூறியுள்ளார்.

கடந்த வருடம் சீனா இலங்கைக்கு 1.2 பில்லியன் டொலர் கடனை வழங்கியிருந்தது. இலங்கைக்கு அதிகளவு கடன் மற்றும் உதவிகளை வழங்கும் ஜப்பானைவிட சீனாவின் உதவி அதிகரித்திருந்தது.

இலங்கையின் பிரதான துறைமுகமாக தற்போது காணப்படும் கொழும்புத் துறைமுகமானது வருடாந்தம் 6 ஆயிரத்துக்கும் அதிகமான கப்பல்களைக் கையாண்டு வருகின்றது. அம்பாந்தோட்டையில் கப்பல் கட்டிடம், சீமெந்து உலை,உரத்தைப் பொதி செய்தல், களஞ்சியசாலை, வாகனத்தை ஏற்றியிறக்குதல் போன்றவற்றில் முதலீடு செய்வதற்காக சீனா,சிங்கப்பூர்,இந்தியா,மத்திய கிழக்கு உட்பட பாரிய கப்பல் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முப்பது முதலீட்டாளர்கள் ஏற்கனவே தமது முதலீட்டு யோசனைகளை அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த முதலீட்டாளர்கள் காணியைக் குத்தகைக்கு எடுக்க முடியும். துறைமுக அதிகாரசபையுடன் சமபங்கு கூட்டுச் செயற்பாட்டில் ஈடுபட முடியுமென்று விக்கிரம கூறியுள்ளார். ஆயினும் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தல் மற்றும் கப்பலுக்கு எரிபொருள் விநியோகத்தல் போன்றவற்றுக்கு தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்படாது. வெளியாட்களுக்கு எண்ணெய்க்குதங்களை வழங்க விரும்பவில்லையென விக்கிரம கூறியுள்ளார். கிழக்கு இந்தியா,அவுஸ்திரேலியாவிலிருந்து ஆபிரிக்கக் கண்டத்திற்குப்

கப்பல்கள் பயணம் செய்கின்றன. அக்கப்பல்கள் செல்லும் பாதையானது டுபாய்,சிங்கப்பூர் போன்ற முக்கியமான துறைமுகங்கள் ஊடாகச் செல்வதில்லை. அதனால் அவற்றுக்கு எரிபொருள் விநியோகிக்கக்கூடிய சிறப்பான இடமாக அம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளது என்று தரகுக் கம்பனியொன்று தெரிவித்துள்ளது.

தினக்குரல் ] - [ Aug 13, 2010 04:00 GMT ]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.