Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் ஆர்ப்பாட்டம் : புதிய திசைகள்

Featured Replies

NDSNoShadow2.jpg

ஈழப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியிருப்பதன் மூலம் இலங்கை தீவு முழுவதும் தனது சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தியுள்ளது ராஜபக்ச அரசு. சிங்கள பேரினவாதத்தின் வரலாற்றில் இக்காலகட்டத்தை மிக உயர்நிலை சகாப்தமாக பிரகடனப்படுத்தி தனது அடக்கு முறைகளை அனைத்துக் களங்களிலும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது பேரினவாத அரசு.

இன்று இலங்கையில் நடப்பது இனச்சுத்திகரிப்பின் உச்சக்கட்டம் என்பது புரிந்து கொள்ளத்தக்கது. இலங்கைத்தமிழர் என்னும் இனத்தின் ஆணிவேரையே அறுத்தெறியும் நடவடிக்கை.எமது அரசியல் உரிமையை பறித்து, எமது பிரதேசங்களில் எம்மை சிறுபான்மையினராக்கி, ஆதிக்க மொழிமூலமே எமது வாழ்க்கையில் முன்னேற்றம் அடையமுடியும் என்ற சூழலை உருவாக்கி,எமது சமூகத்தை சீரழியவிட்டு எம்மை ஒரு அடிமை மனநிலைக்கு கொண்டு செல்வது என்பதுதான் இந்த இனவெறியின் இன்றைய இலக்கு.

இலங்கைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரைப் புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும் தமிழ் நாட்டின் ஜனநாயக மனிதாபிமான சக்திகளிடமிருந்தும் தனிமைப்படுத்தும் இலங்கை அரச பாசிசத்தின் நிகழ்ச்சி நிரல் இங்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஐம்பதாயிரம் மக்களைக் கொன்று போட்ட அரசிற்கு எதிராகப் போராட முன்வரும் ஒவ்வொரு மனிதர்களின் மீதும் இலங்கை அரசின் உளவியல் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. அப்பாவி மக்களை நாளாந்தம் அழிப்பவர்களை எதிர்த்துப் போராடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நிராகரிக்கக் கோருகிறார்கள்.

பலவகை ஒடுக்குமுறைகளையும் இன்று சந்தித்துவரும் முஸ்லிம் சமூகமும் மலையக சமூகமும் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சனையும் இதுதான். ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகங்களாகிய நாம் ஓரணியில் நின்று சிங்கள பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து செல்லும் அவசியத்தை இன்றைய காலம் வேண்டி நிற்கிறது.

தமிழீழ விடுதலை புலிகளை ஒடுக்குவது என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும் உலகின் யுத்த விதிமுறைகள் அனைத்தையும் மீறி காட்டுமிராண்டித்தனமாக அழித்ததில் இருந்து, இலங்கை அரசானது ஒடுக்குமுறையின் முன்னுதாரணமாக, உலகத்திற்கு ஆலோசனை வழங்கும் அனுபவசாலியாகத் தன்னை பிரகடனப்படுத்தி கொள்கிறது. சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்கி வாழும் பெருந்தேசிய இனம் சுதந்திரமாக வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை; இருக்கப்போவதும் இல்லை. சிங்கள மக்களின் உரிமைகள் தமிழ் மக்களின் உயிர் பறிப்புடன் எப்படிக் கரைந்து போயின என்பதை சிங்கள மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

இது யுத்த வெறிபிடித்து அலையும் ஓர் சர்வாதிகார அரசிற்கெதிரான போராட்ட கால கட்டம்.இலங்கைத்தீவிலும் புலம்பெயர் சூழலில் வாழும் அனைத்து மக்களும் தமது நிலை சார்ந்து போராடவேண்டிய தருணம் இது.சமூகத்தில் அடிப்படை ஜனநாயகம் இன்றி எந்தப்போராட்டமும் அடுத்த கட்டத்திற்கு நகர்வது சாத்தியமற்றது.

அனைத்து மக்களே, ராஜபக்ச அரசிற்கெதிரான போரில் ஒன்றிணைவோம்; போராட்ட சக்திகள் அனைவரும் பொது எதிரிக்கெதிராக ஒன்றிணைவோம். எம்மைப்போல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உரிமைக்காக போராடும் சக்திகளுடன் கைகோர்ப்போம். எமது போராட்டம் உலக அரங்கில் நடைபெறும் உரிமைப்போரின் ஓர் அங்கமாக மாறட்டும்.

லண்டனில் புதிய திசைகள் அமைப்பு இலங்கை அரசிற்கு எதிரான கீழ்க்காணும் முழக்கங்களோடும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது. அதே நாளில் தமிழ் நாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம், இதே நோக்கங்களுக்காக தமிழ் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றது.

இலங்கை இனவெறி அரசே,

இன அழிப்பை நிறுத்து!

தமிழர் பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து!

அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானோரை விடுதலை செய்!

அரசியல் கைதிகளை சித்திரவதை செய்யாதே!

கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் எங்கே?

richmond_terrace.jpg

காலம்: 21/08/2010

நேரம்: 2 - 5 பி.ப.

இடம்: Richmond Terrace, Westminster

அருகாமை ரயில் நிலையம்: Westminster

http://www.kuralweb.com/20100812/Demo.aspx

Edited by Alternative

... மே18 இற்குப்பின்னம் ... எல்லாம் சிறிது சிறிதாக சலசலப்பின்றியே ஓய்ந்து அடங்குகிறது! களத்து/புலத்து குத்தகைக்காரர்கள் கைகளில் உள்ள பணத்தை சுருட்டவும், கதிரைகளை பாதுகாப்பதிலையுமே கடந்த ஒரு வருடங்களை கழித்தார்கள் ... இனியும் இதைத்தான் செய்யவும் போகிறார்கள்!!!!

... எம் குரல்கள் மீண்டும் சர்வதேச மனச்சாட்சிகளை தட்ட வேண்டும்! அதை யார் செய்தாலும் ஆதரிப்போம், பங்கு கொள்வோம்! ... ஆனால் .. எம்மக்களின் அவலங்கள் சொல்லுமிடத்தே ...

..... புலிக்கோடியும் வேண்டாம் , பூனைக்கொடியும் வேண்டாம். ஏக பிரதிநிதித்துவ கோசங்களும் வேண்டாம்!!! ... சர்வதேசம் எதை ஏற்குமோ அதை முன் வையுங்கள்!

மற்றும் .... உந்த போராட்டங்களை தொடங்கி விட்டு ... தலைவர் உயிருடன் இருந்தால் தொடர்ந்திருப்போம்/உறுதியாக இருந்திருப்போம் இப்ப அவர் இல்லை! ஆதலினால் ... என்ற வசனத்துடன் போய் சிங்களவனின் கால்களில் விழாதீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

மே18 இற்குப்பின்னம் எல்லாம் சிறிது சிறிதாக சலசலப்பின்றியே ஓய்ந்து அடங்குகிறது!... எம் குரல்கள் மீண்டும் சர்வதேச மனச்சாட்சிகளை தட்ட வேண்டும்! அதை யார் செய்தாலும் ஆதரிப்போம், பங்கு கொள்வோம்!

வாத்தியார்

**********

மே18 இற்குப்பின்னம் எல்லாம் சிறிது சிறிதாக சலசலப்பின்றியே ஓய்ந்து அடங்குகிறது!... எம் குரல்கள் மீண்டும் சர்வதேச மனச்சாட்சிகளை தட்ட வேண்டும்! அதை யார் செய்தாலும் ஆதரிப்போம், பங்கு கொள்வோம்!

வாத்தியார்

**********

உதுதான் தேவையானது .... யார் குற்றியும் அரிசியானால் சரி!

மே18 இற்குப்பின்னம் எல்லாம் சிறிது சிறிதாக சலசலப்பின்றியே ஓய்ந்து அடங்குகிறது!... எம் குரல்கள் மீண்டும் சர்வதேச மனச்சாட்சிகளை தட்ட வேண்டும்! அதை யார் செய்தாலும் ஆதரிப்போம், பங்கு கொள்வோம்!

இலங்கை இனவெறி அரசே,

இன அழிப்பை நிறுத்து!

தமிழர் பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து!

அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானோரை விடுதலை செய்!

அரசியல் கைதிகளை சித்திரவதை செய்யாதே!

கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் எங்கே?

மேலே போடப் பட்ட கோஷங்கள் அல்லது அவை சார்ந்த கோஷங்கள் தவிர்ந்த வேறெந்த அமைப்பின் கொடிகளோ தனிமனிதர் படங்களோ ஆர்ப்பாட்டத்தில் புதிய திசையினரால் கொண்டு வரப்பட மாட்டாது. தமிழர் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் வேற்று நாட்டு அமைப்புகளும் தமது ஆதரவை வழங்க முன்வந்துள்ளன.

nds_21082010_ad.jpg

பிரித்தானியாவிலுள்ள பிரதானமான தமிழ் ஊடகங்களும் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். வலைத்தளம் நடாத்துபவர்கள் தமது இணையத்தில் இந்நிகழ்வின் விளம்பரத்தினைப் போட்டு ஆதரவு வழங்குமாறு புதிய திசையினர் உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றனர்.

தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவின் 'சுதந்திர தின'மான இன்று பல்வேறு சக்திகளும் லண்டனிலுள்ள இந்தியத் தூதுவராலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டப் போராட்டமொன்றை நடாத்தியிருந்தனர். இதில் புதிய திசைகளும் கலந்து கொண்டு 21ம் திகதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டப் போராட்டத்திற்கு அணிதிரளுமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

அதன் ஆங்கில வடிவம்:

“There has been a deafening global silence in response to Sri Lanka’s actions, especially from its most influential friends. The international community cannot be selective in its approach to upholding the rule of law and respect for human rights. Impunity anywhere is a threat to international peace and security everywhere.” - Kofi Annan, former UN Secretary-General

We all chose to remain silent from the time we heard the horrible news that the Sri Lankan government massacred fifty thousand Tamils, (according to the information by a United Nation field officer) in a tiny area in the north of country within three days. Following this massacre more than two hundred thousand innocent Tamils were held in concentration camps without any valid reason. Thousands of pregnant women and innocent children were killed by aerial attacks and alleged chemical weapons. In the name of eliminating minority ultra nationalists, the Sri Lankan government committed a planned genocide, preventing the entry of the entire national and international media, right groups, United Nation and so on, in the war zone.

Is this an example for eliminating the resistant politics for the international power? One wonders whether this is the new feature of new world-order? Will it be the general phenomena of the world’s power? Just some months after this Sri Lankan humanitarian disaster, India has started to massacre in order to evacuate poor hill country forest inhabitants from acres and acres of their own land for exploitation of mineral resources. Similar atrocities of power against the innocent poor people and against those who resist, is becoming social recognition in the other parts of the world. The war between the business power and the innocent is the real Avatar.

Sri Lanka is a multi-ethnic, multi-religious, multi-lingual and multicultural country. Despite this, the Sinhala-Buddhist Government claims that Sri Lanka is a Sinhala-Buddhist country. The ethno-religious mix of Sri Lanka, with 20 million people, consists of ethnic Sinhalese 74%, Tamils 18% (comprised of 12.5%ethnic Tamils and 5.5% plantation or Indian Tamils) and 6.5% Moors.

The major Sinhala political parties competed with each other to discriminate Tamils in their language, education and employment facilities with the motive of gaining the Sinhalese vote. The head of the SLA stated in an interview last year that the Sinhala-dominated Armed Forces comprise of 99% Sinhalese.

Followed by the genocide, the Sri Lankan government’s goal is ethnic cleansing. To achieve their goal with the deafening silence of the international community, they adopt the tactics such as:

1. Drive them out of the country. 1.3 million already had been driven out, still 2 million are left.

2. Make them "non-people", i.e. internal refugees. Currently, there are 200,000 Tamil civilians living either in concentration camps or in the Tamil north and east without proper accommodation. There are also 200,000 Tamil refugees in south India.

3. Make them "disappear". Today, Sri Lanka leads the world in "involuntary disappearances".

4. Kill them — i.e. genocide

“On December 23 2009, the US-based Human Rights Watch (HRW) came out with a detailed 49-page report entitled Besieged, Displaced, and Detained. The Sri Lankan government is responsible for the plight of 230,000 to 300,000 displaced people in the Vanni (northern) conflict zone. “

The world constructs a new world order with a new power configuration. If we fail to stand together, we will be the victims. Sri Lanka is just the laboratory for the big powers to learn how to handle the resistance. A demonstration is organized to show our solidarity against the Sri Lankan government’s ethnic cleansing activities.

Date: 21/08/2010

Time: 2 - 5 P.M

Venue : Richmond Terrace, Westminster

Nearest Tube: Westminster

இங்குள்ள தமிழ் ஊடகங்கள் இவ்வார்ப்பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்! ...

இவ்வூர்வலத்துக்கு ...

* கட்டளைக்காக காத்திருப்பவர்களும் வாருங்கள்!

* காசு/பதவிகளோடு கட்டிப்பிடித்திருப்பவர்களும் வாருங்கள்!

* நம்பிக்கையே வாழ்க்கையானவர்களும் வாருங்கள்!

* ஒட்டியிருப்பவர்களின் உதிரிகளும் வாருங்கள்!

... தட்டுங்கள் திறக்கப்படும் ... தொடர்ந்து தட்டுவோம், உலகில் மனிதம் இன்னும் சாகவில்லை என்ற நம்பிக்கையுடன் ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை இனவெறி அரசே,

இன அழிப்பை நிறுத்து!

தமிழர் பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து!

அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானோரை விடுதலை செய்!

அரசியல் கைதிகளை சித்திரவதை செய்யாதே!

கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் எங்கே?

மேலே போடப் பட்ட கோஷங்கள் அல்லது அவை சார்ந்த கோஷங்கள் தவிர்ந்த வேறெந்த அமைப்பின் கொடிகளோ தனிமனிதர் படங்களோ ஆர்ப்பாட்டத்தில் புதிய திசையினரால் கொண்டு வரப்பட மாட்டாது. தமிழர் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் வேற்று நாட்டு அமைப்புகளும் தமது ஆதரவை வழங்க முன்வந்துள்ளன.

nds_21082010_ad.jpg

பிரித்தானியாவிலுள்ள பிரதானமான தமிழ் ஊடகங்களும் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். வலைத்தளம் நடாத்துபவர்கள் தமது இணையத்தில் இந்நிகழ்வின் விளம்பரத்தினைப் போட்டு ஆதரவு வழங்குமாறு புதிய திசையினர் உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றனர்.

தேசியக்கொடி கொண்டு வரக்கூடாது என்றால் சனம் பெரிசா வராது, ஏன் நான் கூட வரமாட்டேன்,

தேசியக்கொடி கொண்டு வரக்கூடாது என்றால் சனம் பெரிசா வராது, ஏன் நான் கூட வரமாட்டேன்,

சித்தன்

தமிழ் மக்களது அவலநிலையையோ இலங்கை இனவாத அரசின் கோரமுகத்தை அம்பலப்படுத்துமுகமாகவோ பதாதைகள் ஏந்தி வருவது வரவேற்கப் படுகிறது. இந்த விடயங்களை மற்றைய சமூகங்களிற்கும் சர்வதேச அரசுகளிற்கும் வெளிப்படுத்து முகமாகவே இது போன்ற நிகழ்வுகள் சமூக ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப் படுகின்றன. இந்த அடிப்படையில் உங்களைப் போன்றவர்கள் பங்கு பற்ற வேண்டுமென்பதே எனது விருப்பம்.

தேசியக்கொடி கொண்டு வரக்கூடாது என்றால் சனம் பெரிசா வராது, ஏன் நான் கூட வரமாட்டேன்,

... பணத்துக்காகவும்/பதவிகளுக்காகவும் கடந்த காலங்களில் தமிழ்த்தேசியத்தை குத்தைகைக்கு எடுத்த/ தமிழ்த்தேசியத்தை வாழ்வாதாரமாக்கிய ஒட்டுக்கொஷ்டி இப்படியான நிகழ்வுகளை குழப்பவும் முற்படும்!... இதை இவ்வூர்வல அமைப்பாளர்கள் எதிர்பார்க்க வேண்டும்!

மற்றும் கொடி: விற்பனைப்பொருள்/இலாபகரமான பொருள்/...

... கடந்த மே18இற்கு முன் லண்டனில் நடைபெற்ற ஊர்வலத்தில் ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். அவ்வூர்வலத்தில் கொடிகள், ரீ சேட்டுக்கள், கை வளையங்கள் என இன்னோரென்ன பொருட்கள் விற்பனையாகியது! விற்பனையும் அமோகம்! ஒவ்வொருவரும் தலா பத்து பவுண்களுக்கு மேல் கொள்வனவு செய்ததாக அவ்வூர்வலத்தை ஒழுங்கு செய்த அமைப்பாளர்களில் ஒருவர் தெரிவித்தார். ஆனால் கடந்த ஒருவருட காலமாக இங்கிருந்து எவ்வித பணமும் நாட்டுக்கோ/நாடு சார்ததற்கோ செல்லவில்லை/அனுப்பப்படவில்லை!!!!!!!!!!????? ... அப்படியானால் கொடி விற்று வந்த பணங்கள் எங்கே?????????????????

யாராவது சொல்லுங்கோ??????

தமிழர்களின் எழுச்சிச் சின்னத்தை விற்பனைப் பொருளாக்கியவர்களின் வாழ்வாதாரத்துக்கா இப்பணங்கள் சென்றுள்ளன/செல்கின்றன/செல்லவுள்ளன????????? :rolleyes:

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... பணத்துக்காகவும்/பதவிகளுக்காகவும் கடந்த காலங்களில் தமிழ்த்தேசியத்தை குத்தைகைக்கு எடுத்த/ தமிழ்த்தேசியத்தை வாழ்வாதாரமாக்கிய ஒட்டுக்கொஷ்டி இப்படியான நிகழ்வுகளை குழப்பவும் முற்படும்!... இதை இவ்வூர்வல அமைப்பாளர்கள் எதிர்பார்க்க வேண்டும்!

மற்றும் கொடி: விற்பனைப்பொருள்/இலாபகரமான பொருள்/...

... கடந்த மே18இற்கு முன் லண்டனில் நடைபெற்ற ஊர்வலத்தில் ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். அவ்வூர்வலத்தில் கொடிகள், ரீ சேட்டுக்கள், கை வளையங்கள் என இன்னோரென்ன பொருட்கள் விற்பனையாகியது! விற்பனையும் அமோகம்! ஒவ்வொருவரும் தலா பத்து பவுண்களுக்கு மேல் கொள்வனவு செய்ததாக அவ்வூர்வலத்தை ஒழுங்கு செய்த அமைப்பாளர்களில் ஒருவர் தெரிவித்தார். ஆனால் கடந்த ஒருவருட காலமாக இங்கிருந்து எவ்வித பணமும் நாட்டுக்கோ/நாடு சார்ததற்கோ செல்லவில்லை/அனுப்பப்படவில்லை!!!!!!!!!!????? ... அப்படியானால் கொடி விற்று வந்த பணங்கள் எங்கே?????????????????

யாராவது சொல்லுங்கோ??????

தமிழர்களின் எழுச்சிச் சின்னத்தை விற்பனைப் பொருளாக்கியவர்களின் வாழ்வாதாரத்துக்கா இப்பணங்கள் சென்றுள்ளன/செல்கின்றன/செல்லவுள்ளன????????? :rolleyes:

இவூர்வலத்துக்கு நீங்கள் ஆதரவு தெரிவிற்கிறீர்களா? குழப்புறீர்ளா? தேசிய சின்னங்களை எதிர்த்துக்கொண்டும், அவற்றை இழிவு படுத்தி கொண்டும் ஊர்வலங்களுக்கு மக்களை அழைத்தால் அவர்கள் கடைசிவரையும் வரமாட்டார்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்,

richmond_terrace.jpg

காலம்: 21/08/2010

நேரம்: 2 - 5 பி.ப.

இடம்: Richmond Terrace, Westminster

அருகாமை ரயில் நிலையம்: Westminster

http://www.kuralweb.com/20100812/Demo.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதியதிசைகள் காறர் செய்யியதை வரவேற்கும் அதே நேரம் அவர்களிற்கு ஒரு விசயத்தை சொல்லலாம் என நினைக்கிறேன். இங்கை ஊர்வலம் நடாத்த முன்பொருமுறை நாம் முயற்சித்த போது லண்டன் தலைமை பூசாரி நம்மை எச்சரித்தார். காரணம் ஊரவலம் மூலம் பணம் சேரக்க வெளிக்கிட்டு விடுவார்கள் என்ற பயம்! புதிய திசைகளிற்கும் பூசாரி மாருக்கும் ஒத்துவராது என்பதும் நாம் அறிந்த விடயம். துரோகிகள் பணம் சேர்க்கவே இப்ப ஊர்வலம் நடாத்திகினம் என்று அறிக்கைகள் வரலாம். எனவே லண்டன் பூசாரிகளிடம் கதைத்தது உண்டியல் பொறுப்பை அவர்களிடம் கொடுத்தால் சிலவேளை நீங்களும் பூசாரிகள் ஆகலாம். புதிய திசைகள் முன்னை நாள் தீப்பொறி மற்றும் பல மாற்று இயக்கங்களை சேர்ந்தவர்களை கொண்ட அமைப்பு! இப்ப லெப் கேணல் துரோகி கோர்ணல் துரோகி என்று பட்டமளிப்பு அட்டகாசமாக நடக்குது! பாத்து செய்யுங்கோ!

பொண்டர் - பிரிகேடியர் துரோகி!

அப்ப கள்ளகூட்டம் நல்ல பேர் எடுக்க நடத்துற ஊர்வலமோ உது, எங்கட சனத்தை கொன்ற போது ஸ்ரீலங்கவிற்கு ஒத்து ஊதின கூட்டம் இப்ப என்ன சொல்லுறதுகாக தெருவில இறங்குதுகள், அப்ப சனம் வந்தது மாதிரித்தான், ஒட்டுகுழுக்கள் பெல்ஜியத்தில ஜந்தாறு பேருடன் ஏழெட்டு பியர் போத்திலோடயும் நடத்தின ஊர்வலமாத்திரியோ நடக்கபோகுது. :rolleyes::wub::lol: அந்த படம் அம்பிட்டால் இணைக்கிறன் பாருங்கோ :lol:

Edited by சித்தன்

... யார் குத்தினால் என்ன, அரிசி ஆனால் சரி ... ஆனால் அரைகுறையில் நிறுத்தி விட்டு "நமோ நமோ மாதா" ... பாடப்போகாட்டால் சரிதான்! :rolleyes:

... ம்ம்ம்ம்ம்... நாங்களும் மே18இற்கு முன்னம் கிழமைக்கணக்காக வெஸ்மினிஸ்ரரில் பார்த்தோமே எப்படி போராட்டம் நடத்தினார்களென்று(திகதி வாரியாக எனது டயரியில் கிடக்கு, யாரும் விரும்பின்/கேட்பின் ... முழுக்க அவிழ்க்க தயார்)??? .... எங்கும் சாக்கடைகள் தான்!

முன்பு குத்தகை எடுத்தவைகளுக்கு நோகும்தான் ... கொஞ்ச தைலம் தேய்க்க கொடுத்தால் சரியாகி விடும்! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.