Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் ஆணைக்குழு முன் மக்கள் அழுதவாறு சாட்சியம்

Featured Replies

இலங்கை அரசின் பப்பெற் கமிசனான நல்லிணக்க ஆணைக்குழு நேற்று வவுனியாவில் http://www.youtube.com/user/Eelanatham#p/a மக்களிடம் வாக்கு மூலங்களை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் சென்றபோதும் வரையறுக்கப்பட்டவர்களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட்டன. கூடவே இவர்களுக்கு சில அழுத்தங்களும் கொடுக்கப்பட்டன. எனினும் மக்கள் அழுத வண்ணம் தங்கள் வாக்கு மூலத்தை கொடுத்தனர்.

இ ராணுவத்தினரால் தங்கள் உறவினர்கள் கடத்தப்பட்டதாகவும், கொல்லப்பட்டதாகவும் மக்கள் சாட்சியம் அளித்துள்ளனர். கட்டத்தப்பட்டவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர். பல ஆண்டுகளாக சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர்கள் கூடிய விரைவில் அவர்களிடம் விசாரணையை முடித்து, விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

அத்துடன் சில உள்ளூராட்சி உறுப்பினர்கள் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளதுடன் மேலும் போரினால் சேதமடைந்த அனைத்தையும் மீழ கட்டித்தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

வெள்ளவத்தையில் தமிழ்மக்கள் அரசின் செலவில் குடியேறவில்லை. ஆனால் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அரசின் தூண்டுதலில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதுதான் நியாயமற்ற விடயமாகும்.

வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய அங்கத்தவரும் நெடுங்கேணியைச் சேர்ந்தவருமான ஜி. லிங்கநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு நேற்று வவுனியா செயலகத்தில் இடம்பெற்ற போது அங்கு சமுகமளித்து பகிரங்கமாகச் சாட்சியம் அளிக்கையில் அவர் இப்படிக் கூறினார்.

அவர் பகிரங்க சாட்சியம் அளித்த பின்னர் இரகசியமாகச் சாட்சியம் அளிக்க விரும்புவதாகவும் ஆணைக்குழுவினரி டம் தெரிவித்தார். அதற்கு அனுமதி வழங் கப்பட்டிருந்தது. பகிரங்க சாட்சியத்தில் அவர் தெரிவித் தவை வருமாறு:

வன்னி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களின் அவலம் தொடர்கின்றது. யுத்தம் முடிந்து ஒரு வருடம் பூர்த்தியாகியும் அவர்களுக்கு இன்னமும் அமைதியான வாழ்வு கிட்டவில்லை.

அவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. கூடார வாழ்க்கையையே அவர்கள் தொடர்கின்றனர். வீட்டு வசதியோ, வாழ்வாதார உத வியோ அரசால் செய்யப்படவில்லை.

அபிவிருத்திக்கு முன்னர் அவலப்படும் மக்களின் வாழ்வை நோக்குங்கள் பெரியளவிலான அபிவிருத்திக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவற்றுக்கு முன்னர் அவலப்படும் மக்களின் வாழ்வைச் சீராக்கவே ஏற்பாடு செய்யவேண்டும் அதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.

முறிகண்டிப் பகுதியில் மீளக்குடியமர அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படாமல் இடைத் தங்கல் முகாம்களிலேயே தங்கவைக்கப் பட்டுள்ளனர். இந்த நிலைக்கு முடிவு ஏற்பட்டு அவர் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு அவர்களிடம் நம்பிக்கையைக் கட்டி எழுப்ப ஏற்பாடு செய்யவேண் டும். இன்றுள்ள சகல பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான தீர்வு கிட்ட வேண்டுமானால் அதிகாரம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என்றார்.

கைதான, கடத்தப்பட்ட, சரணடைந்த தமது இரத்த உறவுகளைப் பிரிந்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த பெண்களில் எழுவரும்

தேம்பித் தேம்பி அழுது, கண்ணீர் மல்கி அவர்களை மீட்டுத்தருமாறு வேண்டினார்கள். தமது உறவுகளைக் கண்டுபிடித்துத் தருவதற்கு உதவுமாறு கெஞ்சிக் கேட்டனர்.

வன்னியில் நடைபெற்ற யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் வெள்ளை வானில் கடத்தப்பட்டுக் காணாமல்போனோர், யுத்தத்தின் பின்னர் படையினரிடம் சரண் அடைந்தவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோர் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று அழுதவாறு பெண்கள் எழுவரும் விண்ணப்பித்தனர்.

அவர்களைக் கண்டுபிடித்து தம்மிடம் ஒப்படைத்துத் தமது வாழ்வைச் சீராக்க உதவுங்கள் என்று ஆணைக் குழு உறுப்பினர்களிடம் தளதளத்த குரலில் விண்ணப்பித்தனர். வவுனியா செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஆணைக்குழு அமர்வில் மொத்தம் பத்துப் பேர் சாட்சியம் அளித்தனர். அவர்களில் எழுவர் அபலைகளாகிவிட்ட பெண்கள். சோகமே உருவாகக் காணப்பட்ட அவர்கள் கவலை ததும்ப, தேம்பித் தேம்பி அழுதவாறு சாட்சியம் அளித்தனர்.

வவுனியாவைச் சேர்ந்த உமாகாந்தன் நகுலேஸ்வரி என்பவர் சாட்சியம் அளிக்கையில்

எனது கணவர் எமது வீட்டில் வைத்து வெள்ளைவானில் வந்தோரால் கடதிச் செல்லப்பட்டார். அவர் தொடர்பாக பல இடங்களிலும் தொடர்புகொண்டு கேட்டபோது பலன் கிடைக்கவில்லை. காணாமற் போன எனது கணவரைக் கண்டுபிடித்து தாருங்கள் என்றார்.

தாய் ஒருவர் சாட்சியம் அளிக்கையில் பலவந்தமாக விடுதலைப் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் கடைசிக் கட்டத்தில் மோ மாதத்தில் மொட்டையடித்து விடுவிக்கப்பட்டார். அவரை வவுனியாவுக்கு அழைத்துச் சென்ற போது ஓமந்தையில் எங்களை விட்டு அவர் பிரிக்கப்பட்டார். பின்னர் "மெனிக்' முகாமில் அவர் இருந்ததாக வேறு சிலர் மூலம் அறிந்தேன். ஆனால் எமக்கு தக வல் எதும் கிடைக்கவில்லை. அவரை மீட் டுத்தாருங்கள் என்றார்.

சுதர்சன் சிவனேஸ்வரி என்ற இளம் பெண் சாட்சியம் அளிக்கையில்

விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டதற்காக கைது செய்யப்பட்ட எனது கணவன், வெலிகந்த முகாமில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் அவரைப் பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது. அவரை விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.

வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி நல்லதம்பி என்பவர் சாட்சியம் அளிக்கையில்

2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் கூமாங்குளத்தில் படையினர் நடத்திய தேடுதலில் எனது மகனைக் கைதுசெய்து அழைத்துச் சென்றனர். மறுநாள் நீதிமன்றத் தில் ஆஜர் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத் துச் செல்லும் வழியில் சிலர் அவரைக் கடத்திச் சென்றனர்.

தேடிச்சென்றபோது அவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டமை தெரியவந்தது. இதுவரை அவரைப் பற்றித் தகவல் எதுவும் இல்லை. அவரைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்றார்.

நேற்றுமுற்பகல் 11.30 மணிக்கு விசாரணை முடித்துக்கொண்ட குழுவினர் ஓமந்தையில் விடுதலைப் புலிப் போராளிகள் தடுத்துவைத்துள்ள முகாமுக்கு சென்ற னர். இன்று விசாரணைக்கு நெடுங்கேண்யில் பொதுமக்களுக்கான அமர்வை நடத்த உள்ளது.

Eelanatham.net

Edited by உமை

சிங்கள அரச பயங்கரவாதிகளால் அமைக்கப்பட்ட, சிங்கள இனப்படுகொலையாளர்கள், சிங்கள இனவாதிகள், சிங்கள பயங்கரவாதிகள் அடங்கிய கண்துடைப்பு ஆணைக்குழுவை, எந்தவொரு ஈழத் தமிழரும் நம்பப் போவதில்லை, நேர்மையை, நீதியை, மனிதநேயத்தை மதிக்கும் எந்தவொரு சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளாது.

சிங்கள அரச பயங்கரவாதிகளால் கடந்தகாலங்களில் அமைக்கப்பட்ட கண்துடைப்பு, காலத்தை கடத்தும் ஆணைகுழுக்களால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பயனும் கிடைத்ததில்லை என்பது வரலாறு.

எனவே, இது சிங்கள, இந்திய தமிழின படுகொலையாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் சதித்திட்டம்.

நேர்மையை, நீதியை, மனிதநேயத்தை மதிக்காத சர்வதேச சமூகமும் இதனை ஏற்றுக்கொள்ளலாம்.

தமிழரால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவர்கள் மட்டுமே அடங்கிய ஆணைக்குழுவினை அமைப்பதுதான் முறை. அதில் சிங்கள, இந்திய இனப்படுகொலையாளர்கள் சமூகங்களை சேர்ந்தவர்கள் யாரும் இடம்பெறக்கூடாது.

அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டிய கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.