Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கே.பி சொல்வது உண்மையா பொய்யா இனம் காண முடியாத ஊடகங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே.பி சொல்வது உண்மையா பொய்யா இனம் காண முடியாத ஊடகங்கள்

இலங்கை அரசாங்கத்தின் தடுப்பில் உள்ளதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன், இலங்கையின் சில ஊடகங்களுக்கு அவ்வப்போது செவ்விகளை வழங்கி வருகிறார் அண்மையில் அவர் வழங்கிய செவ்வியில் வன்னியில் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா நடேசன் இந்திய உள்துறை அமைச்சர் பா சிதம்பரத்துடன் தொடர்புக்கொண்டு போர் நிறுத்தம் ஒன்று குறித்து பேச்சு நடத்தியதாக குமரன் பத்மநாதன் தெரிவித்திருந்தார்

அப்போது போர் நிறுத்தத்திற்காக சிதம்பரம் பல நிபந்தனைகளை விதித்திருந்தார் என்றும்

இந்த குறித்த விடயம், தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் வைகோ மற்றும் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ நெடுமாறன் ஆகியோருக்கு தெரியக்கூடாது என சிதம்பரம் நடேசனிடம் தெரிவித்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்

இவ்வாறான உரையாடலுக்கிடையில் சிதம்பரத்தை முழுமையாக நம்பாத நடேசன், கம்யூனிஸ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே மகேந்திரனிடம் இந்த விடயத்தை தெரிவித்ததாகவும்

ஆதனைத் தொடர்ந்து மகேந்திரன், வை கோபாலசாமியிடமும், நெடுமாறனிடமும் சிதம்பரத்தின் நிபந்தனை தொடர்பாக தெரிவித்ததாக குமரன் பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார்

இவ்வாறான உரையாடலிக்கிடையில் கோபமடைந்த வை. கோபாலசாமி, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தாம் வழங்கிவரும் ஆதரவை விலக்கிக்கொள்ளப்போவதாக தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்

அத்துடன், இந்திய மத்திய பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியே ஆட்சியமைக்கும் என்பதால், அந்த கட்சியை கொண்டு இலங்கை அரசாங்;கத்தை போர் நிறுத்தத்திற்கு இணங்க வைக்கலாம் என்ற நம்பிக்கையையும் கோபாலசாமி, நடேசனிடம் தெரிவித்தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

ஆகவே தான் நடேசனும் சிதம்பரத்துடனான பேச்சுவார்த்தையை கைவிட்டதாக குமரன் பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார்.

http://meenakam.com/?p=5673

  • கருத்துக்கள உறவுகள்

பத்மநாதன் பேட்டி: “விடுதலைப்புலிகளுடன் எனக்கு தொடர்பு இல்லை” மார்க்.கம்யூ.எம்.எல்.ஏ. மகேந்திரன் அறிக்கை

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் குமரன் பத்மநாதன் (நேற்று முன்தினம்) இலங்கையில் பத்திரிகைக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுச் செயலாளர் நடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் கே.மகேந்திரனிடம் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் கொண்டு வரும் ஆலோசனை சொன்னதாகவும், இத்தகவலை கே. மகேந்திரன் ம.திமு.க. தலைவரிடம் கூறியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தியை நான் முழுமையாக மறுக்கிறேன். நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், சட்ட மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறேன். எனக்கோ என்னுடைய கட்சிக்கோ விடுதலைப்புலிளோடோ, மேற்கூறிய நடேசனோடோ எந்தச் காலத்திலும் எந்தவித தொடர்பும் இருந்ததில்லை.

இலங்கைத் தமிழர்கள் சொல்லோணா துயரத்திற்கு ஆளான போது இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் ரீதியான சுமுகத் தீர்வுகாண வேண்டும் என்ற நிலையைத்தான் நாங்கள் தொடர்ந்து வலிறுத்தினோம். மேலும் இலங்கைத் தமிழ்ர்களுக்கு மாநில சுயாட்சி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் எங்கள் கட்சி வலியுறுத்தியது. இப்போதும் எங்கள் கட்சி அதையே வலியுறுத்துகிறது.

விடுதலைப்புலிகளின் அணுகுமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எப்போதுமே ஏற்புடையதல்ல. எனவே போர்நிறுத்தம் குறித்து என்னிடம் நடேசன் பேசியதாக குமரன் பத்மநாதன் அளித்துள்ள பேட்டியில் கூறப்படுவது உண்மையானது அல்ல என்பதை தெளிவு படுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/2010/08/23120600/comunisti-mahendran-mla-statem.html

வைச்சிட்டான்னையா ஆப்பு வைச்சிட்டானையா........

Referring to the remarks of former LTTE leader Kumaran Pathmanathan on the role some politicians from Tamil Nadu in the efforts to arrive at a ceasefire in Sri Lanka's war against the LTTE, Tamil Nadu Chief Minister M. Karunanidhi said Pathmanathan has to explain the facts relating to the war.

Karunanidhi pointed out that KP had contended that MDMK leader Vaiko had stood in the way of a ceasefire.

Quoting KP, he also said that Mr.Vaiko influenced a change in the decision of the LTTE leadership to enter into a ceasefire because if a peace process began, then the DMK and Congress would get credit for such a development.

Also, CPI (M) MLA K. Mahendran had contested the part in which KP had stated that it was Mahendran who conveyed to Vaiko that the LTTE

வைச்சிட்டான்னையா ஆப்பு வைச்சிட்டானையா........

Referring to the remarks of former LTTE leader Kumaran Pathmanathan on the role some politicians from Tamil Nadu in the efforts to arrive at a ceasefire in Sri Lanka's war against the LTTE, Tamil Nadu Chief Minister M. Karunanidhi said Pathmanathan has to explain the facts relating to the war.

Karunanidhi pointed out that KP had contended that MDMK leader Vaiko had stood in the way of a ceasefire.

அப்ப புலிகள் சரண் அடைந்து கொல்லப்பட்டதை மறைச்சு தனிய ஆயுத மௌனிப்பு மட்டும் தான் சரண் அடைய இல்லை எ ண்டு ஏனாம் பொய் சொன்னவர்...?? அதையும் வைகோவும் நெடுமாறன் அண்ணையுமோ சொல்லிக்குடுத்தவை...??

தனிய இந்தியாவோடைதான் தான் பேச்சு வார்த்தை நடத்தினதை உங்கட KP இப்பவாவது ஒத்துக்கொண்டாரே....!

நல்ல KP யும் பின்னாலை போற மோட்டுக்கூட்டங்களும்...

Edited by தயா

KP (அல்லது KP பெயரில்) இந்திய, சிங்கள பயங்கரவாதிகளின் கூட்டுக் கட்டுக் கதைகளை, இந்திய பயங்கரவாதிகளின் கைப்பொம்மை ஊடகங்கள் தாராளமாக வெளியிட்டு வருகின்றன.

இவை அனைத்தும் தமிழரின் மீள் ஓன்று கூடலை தடுக்கும் நோக்கமும், நாடு கடந்த அரசின் செயற்பாடுகளை குழப்பும் நோக்கமும், இந்திய பயங்கரவாதிகளுக்கு வெள்ளைப் பூச்சு பூசும் முயற்சியும் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.