Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர்களிற்கு உங்களால் உதவ முடியுமா?

Featured Replies

வணக்கம்,

இன்று மேலுமொரு யாழ் பல்கலைக்கழக மருத்துவப்பீட மாணவன் தற்கொலை செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது.

மேலை நாடுகளில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் Peer Support Groups, Mentor Programs, மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை பிரிவுகள் என பல்வேறு உதவி அமைப்புக்கள் காணப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழகத்தில் எவ்வாறான நிலமை தற்போது காணப்படுகின்றது என தெரியவில்லை.

சமுதாயத்தில் உள்ள பல்லாயிரம் மாணவர்களில் வடிகட்டல் முறை மூலம் தேர்வு செய்யப்படும் சிலநூறு மாணவர்களே தாயகத்தில் பல்கலைக்கழக பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கு வருடாவருடம் வாய்ப்பு கிடைக்கின்றது. அதிலும் மருத்துவப்பிரிவு, பொறியியற்பிரிவுகளில் அனுமதி கிடைப்பதற்கு மிகக்கடினமான உழைப்பை மாணவர்கள் செலுத்தவேண்டியுள்ளது: It’s a life time dream for most students.

இவ்வாறான நிலையில், மாணவர்கள் தமது பல்கலைக்கழக வாழ்விற்கு சாணக்கியமான முறையில் முகம் கொடுக்கத் தெரியாமல் தற்கொலை செய்வது என்பது மிகவும் வேதனையான, கவலைக்குரிய விடயம்.

பரீட்சைத் தோல்விகளே தற்கொலைக்கான பிரதான காரணமாக இல்லாவிட்டாலும் நாளாந்த நடைமுறை வாழ்வை எதிர்கொள்வதற்கு மாணவர்கள் தகுந்த உளவியல் பலத்தை கொண்டிராமை ஒட்டுமொத்த சமூகத்திற்கே மிகவும் ஆபத்தானது.

பல்வேறு உளவியல் நெருக்கடிகளுடன் நூலிழையில் ஊசலாடி, உயிர்தப்பி பட்டம் பெறக்கூடிய மாணவர்களினால் ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை நிலைநிறுத்துவதற்கு தேவையான தகுந்த சேவையை வழங்கமுடியுமா?

யாழ், கிழக்கு பல்கலைக்கழகங்களுடன் பல தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயலாற்றுவதாக காலத்திற்கு காலம் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்கின்றோம். ஆயினும், தாயகத்தில் உள்ள மாணவர்களின் நிலமையை பார்க்கும்போது, அங்கிருந்து வருகின்ற செய்திகளை நோக்கும்போது தொண்டு நிறுவனங்கள் வலுவான நிலையில் தமது பணிகளை மேற்கொள்ள முடியவில்லை போல் தெரிகின்றது.

அப்படியாயின் நீங்கள் என்ன செய்ய முடியும்?

பல்வேறு துறைகளில் பட்டம் பெற்று பணியாற்றுகின்ற மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டவல்லுனர்கள் என நம்மவர்கள் உலகெங்கும் வாழ்கின்றார்கள். பலர் மிகுந்த செல்வச் செழிப்புடனும் இருக்கின்றார்கள்.

நீங்களும் இவ்வாறானதொரு தொழில் துறைசார் நிபுணராயின் ஒவ்வொரு துறைக்குமென Support Groupsஐ உருவாக்கி, யாழ், கிழக்கு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயலாற்றி மாணவர்கள் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கு உங்களால் உதவ முடியுமா?

மேலும், ஒரே துறைகளில் கல்வி கற்கின்ற வெளிநாடுகளில் உள்ள நமது மாணவர்களையும், யாழ், கிழக்கு பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்களையும் இணைப்பதற்கு உங்களால் ஓர் இணைப்பு பாலம் ஏற்படுத்தி கொடுக்க முடியுமா?

யாழ் பல்கலைக்கழகம்:

வலைத்தளம்:

தொடர்புகள்:

நிறைவேற்று அதிகாரிகள்:

அலுவலகங்கள்:

கிழக்கு பல்கலைக்கழகம்:

வலைத்தளம்:

தொடர்புகள்:

நிறைவேற்று அதிகாரிகள்:

அலுவலகங்கள்:

அண்மைய செய்தி:

Jaffna University medical student commits suicide

A third year medical student of Jaffna University committed suicide Friday hanging himself in a house in Kantharoadai in Chu'n'naakam in Jaffna. His friends who found him missing Saturday went in search of him to his house and found him hanging dead by a rope, sources in Jaffna said. It is suspected the student took his life having failed in the recent examination. He is the third medical student of Jaffna University to commit suicide for failure in the examination this year.

The medical student dead was identified as Vaitheeswaran Sarangan, 30, serving internship in Jaffna Teaching Hospital. He and his mother, uprooted from Sri Lanka Army High Security Zone in Maaviddapuram, were living in Kantharoadai.

Sarangan's mother had left to London to participate in the convocation ceremony of her other son and he was staying in the house alone.

தகவல் மூலம்: தமிழ்நெட்

பி/கு: மூளை சுகமில்லாதவர்களே உளவியல் ஆலோசனைகள் பெறவேண்டும் என்பது போன்ற தவறான அபிப்பிராயம் நம்வர்களிடையே உள்ளது. இந்த நிலமை மாற்றியமைக்கப்பட வேண்டும். வெளிநாட்டவர்கள் தமது ஒவ்வோர் சிறிய பிரச்சனைகளையும் தீர்த்துக்கொள்வதற்கு தனிப்பட்ட உளவியல் ஆலோசகர்களைக்கூட வைத்து இருக்கின்றார்கள். நாங்கள் பிரச்சனைகளை எங்களுக்குள் வைத்து குடைந்து சிரமப்படுவோம். ஆனால், அவர்கள் அவற்றை தமது குடும்ப வைத்தியர், உளவியல் ஆலோசகர்களிடம் தெரியப்படுத்தி தகுந்த ஆலோசனைகளைப் பெற்று தமது நாளாந்த வாழ்க்கையை இலகுவாகவும், வெற்றிகரமாகவும் கொண்டு செல்கின்றார்கள். பலரும் அறிந்த பிரபல சர்வதேச ஊடகமான CNNஇன் Larry Kingஅவர்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை.

நன்றி.

Edited by கரும்பு

பல்வேறு துறைகளில் பட்டம் பெற்று பணியாற்றுகின்ற மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டவல்லுனர்கள் என நம்மவர்கள் உலகெங்கும் வாழ்கின்றார்கள். பலர் மிகுந்த செல்வச் செழிப்புடனும் இருக்கின்றார்கள்
.

அது சரி உந்த பெரிய படிப்பு படிச்ச சனம் எல்லாம் யாழ்களம் பார்பினம் என்று நினைச்சீங்களோ மச்சான்.......உப்படியானவர்களுக்கு உந்த செய்தி போக வேணும் என்றால் இதை பி.பி.சி (இன்கிலிஷ்)சி.என்.என். போன்றவற்றில் பிரசுரிக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

.

அது சரி உந்த பெரிய படிப்பு படிச்ச சனம் எல்லாம் யாழ்களம் பார்பினம் என்று நினைச்சீங்களோ மச்சான்.......உப்படியானவர்களுக்கு உந்த செய்தி போக வேணும் என்றால் இதை பி.பி.சி (இன்கிலிஷ்)சி.என்.என். போன்றவற்றில் பிரசுரிக்கவேண்டும்

உண்மை தான்...படித்தவர்களுக்கு இதெற்கு எல்லாம் நேரம் கிடைக்குமோ தெரியாது...ஆனால் இப்படி அநியாய தற்கொலைகளை கட்டாயம் நிறுத்த வேண்டும்...சிங்களவன் கொல்கிறான் என சொல்பவர்கள் இப்படியான தற்கொலை மரணங்களை கணக்கில் எடுப்பதில்லை.

  • தொடங்கியவர்

அப்படிக்கூற முடியாது. நல்ல நிலமையில் வெளிநாடுகளில் வாழ்கின்ற யாழ் பல்கலைக்கழக பழையமாணவர்களே ஆகக்குறைந்தது நூறு பேர்களுக்கு மேல் யாழ் இணையத்தை வெறும் பார்வையாயளர்களாக எழுந்தமானமாக பார்வையிடுகின்றார்கள் என்று என்னால் கூறமுடியும். தவிர, யாழ் இணையத்தை பார்வையிடுகின்ற பல்வேறு ஊடகவியலாளர்கள் செய்தியின் உள்ளம்சத்தை தொடர்ந்து வெளிக்கொண்டு செல்வார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

நல்ல விடயம். ஆனால் ஏன் யாழ் பல்கலைக்கழகத்தற்கு மட்டும் இதனை மட்டுப்படுத்த வேண்டும். கிழக்கு பல்கலைக்கழகத்திற்கும் இது அத்தியாவசியமானதுதானே?

  • தொடங்கியவர்

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, திருத்தம் செய்து உள்ளேன்.

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, திருத்தம் செய்து உள்ளேன்.

மெத்த மகிழ்ச்சி

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நேர்முக தேர்வில், அண்மையில் இந்திய பயங்கரவாதிகளுடன் உறவை ஏற்படுத்திய பிள்ளையான் கிழக்கு பிரதேச நபர் ஒருவருக்குத் தான் அந்த பதவியை கொடுக்க வேண்டும் என்று மிரட்டி மீண்டும் பிரதேசவாதத்தை கிழக்கு பல்கலைக்கழகத்துக்குள் புகுத்தியுள்ளாராம்.

இதனால் சகல தகுதியையும் கொண்ட யாழ் மகன் ஒருவரின் தேர்வில் இழுபறி ஏற்பட்டுள்ளதாம்.

எமது கிழக்கு பிரதேசத்தின் அழிவில், குறுக்கு வழியில் பதவியை பிடிக்க முயலும் தகுதியற்ற உதவிப் பதிவாளர்களும், பிள்ளையான் போன்றவர்களும் உள்ளனர். பிரதேசவாதத்தை கிழக்கு பல்கலைக்கழகத்துக்குள் புகுத்தும் இவர்களுக்கு அடுத்த தேர்தலில் எமது மக்கள் பதில் கொடுப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.