Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேது சமுத்திர திட்டத்தை வீழத்தியது சாஸ்திரமா? சிறிலங்காவா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சேது சமுத்திர திட்டத்தை வீழத்தியது சாஸ்திரமா? சிறிலங்காவா?

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலமாக வற்புறுத்தப்பட்டு, திட்டமிடப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்த சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது என்று தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஒரு அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.

img1100825077_1_1.jpg

தி.மு.க.தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஒரு செய்தியாளர், “சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டதா?” என்று கேள்வி கேட்க, அதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி, “சாஸ்திர, சம்பிரதாய மூட நம்பிக்கைகள் காரணமாக சேது சமுத்திரத் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் கிடப்பில் போடப்படும் நிலைக்கு ஆளாகின்றன” என்று பதிலளித்துள்ளார்.

பெரியாரின் வழியில் நின்று, தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் சாஸ்த்திரங்கள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்தே நடைபோட்டு வந்தவரான தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி, அதே சாஸ்த்திர சம்பிரதாய மூட நம்பிக்கையின் காரணமாக தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்த சேது சமுத்திரத் திட்டம் கிடப்பில் போடப்படும் நிலைக்கு ‘ஆளாவதை’ அறிந்தும், வேறென்ன செய்ய முடியும் என்பதுபோல் பதிலளித்துள்ளதுதான் எப்படி என்று புரியவில்லை!

இப்படி ஒரு முடிவை மத்திய அரசு தமிழக முதல்வருக்குத் தெரிவித்தது எப்போது? அதனை ஒரு செய்தியாளர் கேள்வியாகக் கேட்கும் வரை மக்களுக்குத் தெரியப்படுத்தாதது ஏன்? என்ற கேள்விகளும் எழுகின்றன.

ரூ.50 அல்லது 100 கோடியல்லல, ரூ.2,417 கோடித் திட்டத்தை சாஸ்த்திர, சம்பிரதாய மூட நம்பிக்கைகள் காரணமாக கிடப்பில் போட எப்படி, யார் அனுமதித்தது? என்பதும் புரியவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதே!

சேது சமுத்திரத் திட்டத்திற்காக இராமேஸ்வரம் கடல் பகுதியில் கப்பல் செல்வதற்காக குறிக்கப்பட்ட பாதையில் கடலை ஆழப்படுத்தும் பணி மேற்கொண்டால் அது ஆடம்ஸ் பாலம் என்று அழைக்கப்படும் இராமர் பாலத்தை சிதைத்துவிடும் என்று புராண இதிகாசங்களைக் காட்டி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்னமும் விசாரணையில்தான் உள்ளது. தள்ளுபடி செய்யப்படவில்லை.

img1100825077_1_2.jpg

சுப்ரமணியம் சுவாமியின் வழக்கின் அடிப்படை ஒன்றும் ஒரு பெரிய தடையில்லை என்பது வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்ட கேள்வியில் இருந்தே நன்கு புலனானது. ஆயினும், கப்பல் செல்வதற்காக ஆடம்ஸ் (இராமர்) பாலம் என்றழைக்கப்படும் மணல் திட்டுகளை பாதிக்காத வண்ணம், மாற்றுப் பாதையில் அத்திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தனுஷ்கோடிக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் ஆய்வு செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

அந்த நிபுணர் குழு தனது ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு அளிப்பது என்றும், அதனடிப்படையில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்வது என்றும் மிக வெளிப்படையாக முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒரு செய்தியாளர் (சற்றும் எதிர்பாராத வகையில்) சேது சமுத்திரத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்ப, அது கிடப்பில் போடப்பட்டுவிட்டது என்று தமிழக முதல்வர் கூறுகிறார் என்றால், இதற்கு ஏதோ பின்னணி இருக்க வேண்டும் என்ற மிக வலிமையான ஐயம் எழுகிறது.

சேது சமுத்திர திட்டமும் கருணாநிதி பேச்சும்!

கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி புதன்கிழமை, திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், மதவாதிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து “சேதுக் கால்வாய் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றக் கூடாது” என்று கூறியுள்ளார்.

“ஏற்கனவே திட்டமிடப்பட்ட (பாதை எண் 6) பாதையில்தான் சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியவர், (நீதிமன்றத்தில் வழக்கு உள்ள காரணத்தினால்) திட்டப் பணிகள் தொய்வடைந்துள்ளது உண்மைதான் என்று கூறினார்” என்று அன்றைய செய்தி (தமிழ்.வெப்துனியா.காம்) கூறுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலையொட்டி சென்னையில் (ஏப்ரல் 19ஆம் தேதி) நடந்த திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் கருணாநிதி (அப்போதும் முதல்வராகத்தான் இருந்தார்), எங்கள் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைந்தால் சேது சமுத்திரத் திட்டத்தை இரத்து செய்வோம் என்று கூறும் துணிச்சலை ஜெயலலிதாவுக்குத் தந்தது யார் என்று கேள்வி எழுப்பினார்.

“தமிழ்நாட்டுக்கு தேவையான ஒரு திட்டத்தை, வளம் கொழிக்கக் கூடிய ஒரு திட்டத்தை, பாலைவனமாக இருக்கும் தமிழகம் சோலைவனமாக மாறக் கூடிய அளவுக்கு உருவாகக் கூடிய ஒரு திட்டத்தை, ஏறத்தாழ 800 கல் தொலைவு சுற்றிக் கொண்டு இலங்கைத் தீவையும் சுற்றிக் கொண்டு செல்லும் பயணம் சுருங்கி மிகக் குறைவான தூரத்தில் நமது வாணிபம் நடைபெறவும், நம்முடைய வர்த்தகச் செல்வம் பெருகவும், போக்குவரத்தில் செலவு குறையவும் ஒரு அருமையான திட்டத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு பெரியவர்கள், பெரு மேதைகள், விஞ்ஞானிகள், வல்லுனர்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து தயாரித்த திட்டத்தை, பெருந்தலைவர் காமராஜர், ஜவஹர்லால் நேருவிடத்திலே வலியுறுத்திய திட்டத்தை, அதற்குப் பிறகு பெரியார், அண்ணா வலியுறுத்திய திட்டத்தை வேறோடு அழிப்பேன், ரத்து செய்வேன் என்று சொல்கின்ற அளவுக்கு இவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? “ என்று கருணாநிதி பேசியுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறாத ஒரு நிலை ஏற்படுமானால் அப்போது நமது போர்க்குணத்தைக் காட்டுவோம் என்று இந்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியுள்ளார்.

img1100825077_2_1.jpg

சேது சமுத்திரம் திட்டத்திற்கு 2400 கோடி ரூபாயில் திட்டமிட்டது உண்மை. சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும், நானும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட கூட்டத்திலேதான் அடிக்கல் நாட்டு விழா நடத்தி வைக்கப்பட்டது. அது வளர்ந்து பெரிய அளவிற்கு வளம்தரும் திட்டமாகவும், தமிழகத்தை எதிர்காலத்திலே வாழவைக்கும் திட்டமாகவும் அமைந்து விடுமேயானால், அந்தப் பேரும் புகழும் தி.மு.கழகத்திற்கு வந்து விடுமே என்ற கவலையாலும் - யார் யார் அந்தத் திட்டம் வர வேண்டுமென்று முதலிலே சொன்னார்களோ - நான்தான் முதலிலே சொன்னேன் என்று மார் தட்டினார்களோ - அவர்கள் எல்லாம் கூட அம்மையாரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு - அந்தத் திட்டம் தேவையில்லை என்று சொல்கின்ற நிலைமை ஏற்பட்டு, அந்தத் திட்டத்தை கிடப்பிலே போடுகின்ற ஒரு சூழ்நிலை - அதுவும் உச்சநீதிமன்றம் வரையிலே சென்றுள்ளது. சேது சமுத்திரத் திட்டத்திற்காக இன்னும் பொறுமை காப்போம் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்.

அந்தத் திட்டத்திற்காகத் தொடர்ந்து பாடுபடுவோம். மத்தியிலே இருக்கின்ற அரசு தமிழகத்தின் தேவைகளை புறக்கணித்து விடுகின்ற அரசல்ல. அவர்களுக்கும் சேது சமுத்திரத் திட்டத்திலே ஒரு சங்கடம். அங்கே ராமரைக் காட்டிப் பயமுறுத்துகிறார்கள். அதனால் அவர்கள் சற்றுத் தயங்குகிறார்கள். அந்தத் தயக்கத்திற்குக் காரணத்தை நம்மிடமும் தெரிவிக்கிறார்கள். நாமும் அவர்களுடைய தர்ம சங்கடத்திற்காகப் பார்க்க வேண்டியிருக்கிறது. இவைகள் எல்லாம் ஒரு காலக்கட்டத்திற்குத்தான். எல்லை மீறி விடுமேயானால், அப்படி மீறுகிற நேரத்தில் நாம் நம்முடைய வீரத்தை, நம்முடைய போர்க் குணத்தை, நம்முடைய உரிமைக் குரலை அந்த நேரத்திலே காட்டத்தான் போகிறோம். அப்போது நாம் வாளாயிருக்கப் போவதில்லை” என்று பேசிய தமிழக முதல்வர், “எனக்குப் புரிகிறது - கொஞ்சம் உசுப்பி விட்டாலே எந்த அளவிற்கு ஆர்வத்தோடு செயல்படுவீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. உங்கள் போர்க் குணம் 1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தோடு அழிந்து விடவில்லை. இன்னமும் அதன் சாரல் இருக்கிறது. அதனுடைய காரம் இருக்கிறது. அதனுடைய வேகம் இன்னமும் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.

இப்படி போர்க் குணத்தோடு சேது சமுத்திர திட்டத்தைக் கொண்டுவரவும், அதனை நிறைவேற்றவும் உறுதியாக இருந்த திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி, தனது பிப்ரவரி பேச்சிற்கு நேர் முரணாக, மிகச் சாதாரணமாக “சேது சமுத்திரத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது” என்று கூறுகிறார் என்றால், இதன் பின்னணியில் வலுவான காரணம் இருக்குமென்றே தெரிகிறது.

தமிழ்நாட்டின் முதல்வர் அந்த ‘வலுவான காரணம்’ சாஸ்த்திரம் என்றும் சம்பிரதாய மூட நம்பிக்கை என்றும் கூறுகிறார். அதுவல்ல என்று நிச்சயமாகக் கூற முடியும்.

சிறிலங்காவிற்கு சாதகமானப் பேச்சு!

img1100825077_3_1.jpg

சேதுக் கால்வாய் திட்டம் என்பது தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இந்தியாவின் கடல் வழிப் போக்குவரத்திற்கும் மிகச் சாதகமானது. சேது சமுத்திரத்தில் கப்பல் போக்குவரத்து தொடங்கினால், இந்தியாவின் மேற்குக் கரையில் இருந்து கிழக்குக் கரை துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களின் பயணத் தூரம் 800 கி.மீ. வரை குறையும். இதனால் பயண நேரம், எரிபொருள் மிச்சம் ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்த பின்னரே, பொருளாதார ரீதியாகத் (Economic Viability) சிறந்தத் திட்டம் என்று ஒப்புக் கொள்ளப்பட்டு, தேச சுற்றுச் சூழல் ஆய்வுக் கழக்கதின் (National Environmental Engineering Research Institute - NEERI) ஒப்புதலைப் பெற்று சேதுக் கால்வாய் நீர்வழித் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் அது கொழும்பு துறைமுகத்திற்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்திவிடும் என்பதை நன்கறிந்த சிறிலங்க அரசு அதற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டது வந்ததை அனைவரும் அறிவோம். அத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் இங்குள்ள ஊடகங்களின் துணையுடன் ஒரு வீடியோவையே வெளியிட்டது சிங்கள அரசு. தமிழ்நாட்டின் நலன், தமிழரின் மேம்பாடு ஆகியவற்றை தொன்றுதொட்டு எதிர்த்துவரும் அறிவு ஜீவிகளும் சேதுக் கால்வாய் திட்டத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்கள். ஆங்கில நாளேடுகளில் கட்டுரைகள் எழுதினார்கள். இதெல்லாம் தமிழர்கள் நன்கறிந்த விடயம்தான். அதற்கெல்லாம் சற்றும் விட்டுத்தராத தமிழக முதல்வர், இன்றைக்கு சேதுக் கால்வாய் திட்டம் கிடப்பில் போடப்படுவதை சாதாரணமாக பேசுகிறார் என்றால், சிறிலங்க வலையில் இவரும் விழுந்துள்ளாரா அல்லது வீழ்த்தப்பட்டுள்ளாரா என்கிற ஐயப்பாடு எழுகிறது.

ஏனென்றால், கடந்த வாரம் 18ஆம் தேதி புதன் கிழமை, இந்தியாவின் அயலுறவுச் செயலர் நிருபமா மேனன் ராவ சென்னை வந்து தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார்.

img1100825077_3_2.jpg

55 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் ஈழத் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் குறித்து நேரில் சென்று பார்த்துவிட்டு வர மத்திய அரசின் மூத்த அதிகாரி அடுத்த மாதத் துவக்கத்தில் இலங்கை செல்ல இருப்பதாகவும், அதுகுறித்து தமிழக முதல்வரிடம் விளக்குவதற்காகவே நிருபமா நேரில் வந்தாகவும் தெரிவிக்கப்பட்டது. இங்கிருந்து போகும் மத்திய அரசின் அயலுறவுச் செயலர், அதிகாரிகள் தமிழர்களின் ‘நலனை’ எந்த அளவிற்கு அக்கரையுடன் பேசுவார்கள் என்பது மற்ற எவரையும் விட தமிழக முதல்வருக்கல்வா நன்றாகத் தெரியும்! எனவே அந்தச் சந்திப்பில் ‘முக்கியமான ஒரு முடிவு பரிமாறப்பட்டிருக்கும்’ என்ற ஐயப்பாடு பலருக்கும் இருந்தது. அதுவே நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியே வந்துள்ளது.

தமிழர்களின் பிரச்சனைகளை உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவது, பிறகு அதற்கு நேர்மாறாக நடந்துகொள்வது என்பதெல்லாம் இன்றைய தமிழக முதல்வர் கடந்த வந்த அரசியல் பாதையில் புதைந்து கிடக்கும் ‘மைல் கற்கள்’ அல்லவா.

அன்று ஈழத் தமிழன் ஏமாற்றப்பட்டான், இன்று தமிழ்நாட்டுத் தமிழன் (மீண்டும் ஒரு முறை) ஏமாற்றப்பட்டுள்ளான்.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1008/25/1100825077_3.htm

சேது சமுத்திரத் திட்டத்தை வீழ்த்தியது தமிழின விரோதிகளின் கூட்டுச் சதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.