Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இரவு நேரங்களில் பஸ்வண்டிகளில் இளைஞர்கள் தொல்லை

Featured Replies

திங்கட்கிழமை, ஆகஸ்ட் 30, 2010

யாழ்ப்பாணத்தில் இரவு நேரங்களில் தனியார் சிற்றூர்திகளில் மற்றும் பேருந்துகளில் இளைஞர்களின் சேஷ்டைகள் அதிகரித்துள்ளதாகப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் சமீப காலமாகச் சுமுகமான சூழ்நிலை நிலவுவதால் பயணிகளின் நலன் கருதி யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து தூர இடங்களுக்குச் செல்லும் இறுதி நேர தனியார் சிற்றூர்திகள் மற்றும் பேருந்துகள் புறப்படுவது இரவுவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேலைக்குச் சென்று திரும்புவோர், மாலைநேர வகுப்புக்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், வைத்திய சாலைக்குச் சென்று திரும்புவோர் எனப் பலதரப்பட்டோர் இந்த இரவுநேர பஸ் சேவையால் பயனடைவது குறிப்பிடத் தக்கது.

எனினும் இந்த இரவுநேர பஸ்களில் மதுபானம் அருந்தி விட்டுவரும் சில இளைஞர்கள் பஸ்களில் பயணிக்கும் இளம் பெண்களுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முனைவதாகவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இவை கூடுதலாகத் தனியார் சிற்றூர்திகளிலேயே நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை ஒரு சில நடத்துநர்கள் கண்டித்தாலும், பல நடத்துநர்கள் கண்டும் காணாதது போல் செயற்படுவதாகவும், பொதுமக்களால் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Eelanatham.net

பூனைக்கு மணி கட்டுவது யார்? என்பது போல, யாழ் மக்களின் இன்னொரு பிரச்சினை, யாராவது தமது பிரச்சினைகளை தீர்க்கவேண்டும். தாம் தமது பிரச்சனைகளை தீர்க்க முன்வருவதில்லை.

நடத்துனர் மட்டும் மது அருந்திய இளைஞர்களை கண்டிக்கவேண்டும் என்று எதிர்பார்த்து, "விசனம்" தெரிவிப்பதோடு நின்றுவிடமால், தாம் ஓன்று சேர்ந்து மறக்க முடியாத மாதிரி நாலு சாத்து சாத்தினால் சரியாகிவிடும். அதுவும் மது அருந்தியவர்களை சாத்துவது கஷ்டமான விடயம் இல்லை.

கையாலாகாதவர்களுக்கு யாரும் உதவி செய்ய முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.