Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரவு நேரப் பேருந்துகளில் இளைஞர்களின் சேஷ்டைகள் அதிகரிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

yarl.jpgஇரவு நேரங்களில் தனியார் சிற்றூர்திகளில் மற்றும் பேருந்துகளில் இளைஞர்களின் சேஷ்டைகள் அதிகரித்துள்ளதாகப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் சமீப காலமாகச் சுமுகமான சூழ்நிலை நிலவுவதால் பயணிகளின் நலன் கருதி யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து தூர இடங்களுக்குச் செல்லும் இறுதி நேர தனியார் சிற்றூர்திகள் மற்றும் பேருந்துகள் புறப்படுவது இரவுவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேலைக்குச் சென்று திரும் புவோர், மாலைநேர வகுப்புக்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், வைத்திய சாலைக்குச் சென்று திரும்புவோர் எனப் பலதரப்பட்டோர் இந்த இரவுநேர பஸ் சேவையால் பயனடைவது குறிப்பிடத் தக்கது.

எனினும் இந்த இரவுநேர பஸ்களில் மதுபானம் அருந்திவிட்டு வரும் சில இளைஞர்கள் பஸ்களில் பயணிக்கும் இளம் பெண்களுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முனைவதாகவும் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவை கூடுதலாகத் தனியார் சிற்றூர்திகளிலேயே நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனை ஒரு சில நடத்துநர்கள் கண்டித்தாலும், பல நடத்துநர்கள் கண்டும் காணாதது போல் செயற்படுவதாகவும், பொதுமக்களால் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tharavu.com/2010/08/blog-post_30.html

பூனைக்கு மணி கட்டுவது யார்? என்பது போல, யாழ் மக்களின் இன்னொரு பிரச்சினை, யாராவது தமது பிரச்சினைகளை தீர்க்கவேண்டும். தாம் தமது பிரச்சனைகளை தீர்க்க முன்வருவதில்லை.

நடத்துனர் மட்டும் மது அருந்திய இளைஞர்களை கண்டிக்கவேண்டும் என்று எதிர்பார்த்து, "விசனம்" தெரிவிப்பதோடு நின்றுவிடமால், தாம் ஓன்று சேர்ந்து மறக்க முடியாத மாதிரி நாலு சாத்து சாத்தினால் சரியாகிவிடும். அதுவும் மது அருந்தியவர்களை சாத்துவது கஷ்டமான விடயம் இலை.

கையாலாகாதவர்களுக்கு யாரும் உதவி செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த நாய்ளுக்கும் சேர்த்துத்தான் ஐரோப்பிய வீதிகளில சின்னஞ்சிறுசுகள் நீதிகேட்டு நெடும்பயணம் போகினம் எண்டத நினைத்தால்தான் கவலையாக இருக்கு. அண்மையில் தாயகம்போன எனது உறவினர் ஒருத்தர் அங்குநடக்கிற அனியாயங்களைக் கண்டுட்டு இதுக்குத்தானா ஆயிரமாயிரம் போராளிகளைக் களப்பலி கொடுத்தோம் என கேட்டதுக்கு அவர்களை யார் போராடச் சொன்னவை எண்டும் சிலதுகள் கோட்டுதுகளாம். அங்க நீங்கள் அனுப்புகிற வெளிநாட்டுக்காசை செலவுசெய்துகொண்டு அனேகர் திமிர்பிடித்து அலையுதுகள். அதேவேளை வன்னியின் இறுதிப்போரில் அனைத்தையும் இழந்துவிட்டு மனநோயாளிகளாகவும் அனேகர் அலைகிறார்கள். எத்தனையோ பல்கலைக்கழக மாணவர்கள் வறுமையில் வாடுகிறார்கள் சிலதுகள் இடுப்புக்குள்ள கத்தியோடையும் அலையுதுகள். பல்களைக் கழக துணைவேந்தரே இனஅழிப்பாளனின் எடுபிடியெண்டால் யாரைத்தான் நல்லவனெண்டு எதிர்பார்க்கமுடியும்!

ஏதாவது அடாவடித்தனம், கடத்தல், கொள்ளை, கொலை ..... போன்றன இலங்கைத் தமிழர் பகுதியில் நடந்துவிட்டால், பெரும்பாலான தரம் கெட்ட தமிழ் பத்திரிகைகளின் தலைப்புக்கள் பெரும்பாலும்,

மக்கள் "விசனம்", "அதிர்ச்சி", "பீதி", "கிலி", "கவலை", "பதட்டம்", "கலவரம்" போன்ற கோழைத்தனமான சொற்களைப் பயன்படுத்துவது வழக்கம். இதைப் படித்துப் படித்து மக்களும் கோழைகளாகி வருகின்றனர்.

தமிழ் மக்கள், "விசனம் தெரிவிப்பது", "அதிர்ச்சியடைவது", "பீதியடைவது", .... போன்றவற்றை கைவிட்டு, அடாவடித்தனம், கடத்தல், கொள்ளை, கொலை ..... போன்றன நடக்கும் போது,

"கோபம்", "ஆவேசம்", "கொதித்தெழுதல்", "கண்டித்தல்", "சட்டம் ஒழுங்கைப் பேணுபவர்களின் இயலாமையை குறைகூறல்", "எதிர்ப்பை வெளியிடல்", ... போன்ற பதங்களை பாவித்தால் நல்லது.

ஒன்று, இரண்டு தரமான பத்திரிகை ஆசிரியர்கள் மட்டுமே இவ்வாறன பதங்களை பரவலாக பயன்படுத்தி வருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்பண்பாடு என்றால் அன்றிலிருந்து ...இன்றுவரை தமிழ்நாட்டில் யாழ்பாணத்தினை உதாரணம் காட்டுவார்கள்.. எனது சித்தப்பவும் யாழ்பாணம் வீழ்ந்த போது அன்று வானோலியில் கேள்விபட்டு கவலையோடு உண்ணாமல் உறங்காமல் இருந்தார்...

போகட்டும்.... இவ்வளவு சீர்கெட்டுக்கும் காரணம்... இந்திய கைத்தடிகளின்... சண்... ஜெயா முதலான தொல்லைகாட்சிகளின்... மிட் நைட் மசாலா காட்சிகள்......அஜால்.. குஜால் ..காட்சிகள்... ... ரொம்ப தெளிவாக தெரிகிறதா?? இதுதான் என் கணிப்பு...

215.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.