Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விண்ணியல் விநோதங்கள்...

Featured Replies

விண்வெளி விந்தைகளில் ஏப்ரல் மாதம்

இரவில் புறப்பட்ட மனித விண்வெளி பயணம் இருளிலேயே

முடிந்தது!முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன், 1961 ஏப்ரல் 12 அன்று யூரிஅலெக்ஸியெவிச் கஹாரின் எனும் ரஷ்யப் போர் விமானி விண்வெளிச் சாதனை படைத்த நாள்.

தொடர்ச்சியாக பல `ஸ்புட்னிக்' செயற்கை கோளை ஏவி வெற்றிப் பதக்கம் பெற்ற `வாஸ்டாக் - 1' விண்கலத்தில் பயணம். ரஷ்ய மொழியில் வாஸ்டாக் என்றால் கிழக்கு என்று பொருள்.

அன்று மொஸ்கோ நேரப்படி காலை 9.07 மணி. புவியை விட்டுப் புறப்பட்டார் கஹாரின். விண்வெளியில் இருந்தவாறு அவர் பேசிய முதல் விஞ்ஞான வசனம் - `ஆகாயம் கன்னங்கரேலென இருட்டாகத் தெரிகிறது. பூமியோ நீல நிறத்தில் அழகாய் இருக்கிறது" என்பதாகும்.

விண்ணில் 108 நிமிடங்கள் பறப்பதென்றால் சும்மாவா? நீங்கள் சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்வதற்குள் கஹாரின் பூமியை ஒரு முறை சுற்றி வந்து விட்டார். ஒரே நாளில் இரண்டு முறை சூரியோதயம் பார்த்த முதல் அதிசய மனிதரும் அவரே, ஏனென்றால் விண்கலங்கள் புவியை சுற்ற வெறும் ஒன்றரை மணி நேரங்களையே எடுத்துக் கொள்கின்றன.

இதில் இன்னொரு செய்தி என்ன தெரியுமா? அந்த விண்வெளி சாகசத்தின் போது அவருக்கு வயது வெறும் 27 தான். ஸ்மோலென்ஸ் நகர் அருகே குளூஷினே என்கிற கிராமத்தில் 1934 மார்ச் 9 அன்று பிறந்தவர் இவர் சாதாரண மரவேலை செய்பவரின் மகன்.

புவியை சுற்றித் திரும்பும் போது 13 ஆயிரம் அடி உயரத்தில் `பரசூட்' குடை விரிந்தது. முதன்மைக் குடை 8 ஆயிரம் அடி உயரத்தில் தான் விரிந்தது. சரதோவ் எனும் இடத்தருகே ஸ்மெலோவ்கா கிராமத்தில் தரையிறங்கினார் கஹாரின். அதைக் கவனித்த ஆயர் குலப் பெண்ணொருத்தி `என்னவோ ஆகாயத்திலிருந்து வர்றபோல இருக்கே?' என்றாள்.

உண்மையும் அதுதான். பிற்காலத்தில் கஹாரினுக்கு மேஜர் பதவி. ஆனால் 1968 மார்ச் 28 அன்று ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். விண்வெளி வரலாற்றில் புது யுகம் படைத்த பெருமை இவரது முதல் பயணத்திற்கு உண்டு. சாதனை நாட்களையும் ஆட்களையும் அவ்வப்போது நினைத்துப் பார்க்க எமக்கு எங்கே நேரம்? `ஹலோ நான் பேசுகிறேன்' என்று `கால்' போட்டு பாட்டு கேட்கவே நேரம் போதவில்லை என்று யாரோ அங்கலாய்க்கிறார்கள்.

சரி போகட்டும், ஏப்ரல் 12 மட்டும் 1968 ஆம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேச விமான விண்வெளிப் பயணவியல் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இன்று விண்வெளி ஆராய்ச்சிகள் உலகெங்கும் முடுக்கி விடப்பட்டுள்ளன. 2003 ஆம் ஆண்டு நத்தார் நாளில் ஐரோப்பிய `பீக்கிள்-2' விண்கலத்தின் செவ்வாய்ப் பயணம் தோல்வி. ஆயினும் அதன் திட்ட இயக்குநர் பேராசிரியர் கனன் பில்லங்கர் மனம் தளரவில்லை. அடுத்த `பீக்கிள்-3' தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் ஐரோப்பா அனுப்பிய `ஸ்மாட்' எனும் சந்திர விண்கலம் உள்ளபடியே சமர்த்துதான். `தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஆய்வுக்கான சிறிய பணி இலக்குகள்' (குட்ச்டூடூ –டிண்ண்டிணிணண் ஞூணிணூ அஞீதிச்ணஞிஞுஞீ கீஞுண்ஞுச்ணூஞிட டிண கூஞுஞிடணணிடூணிஞ்தூ கு–அகீகூ) என்பதன் ஆங்கிலச் சுருக்கமே ஸ்மாட்.

2004 நவம்பர் 15 அன்று சந்திரனுக்கு 5,000 கிலோ மீற்றர் தூரத்திற்கு அது பறந்து சென்றது. ஜனவரி மாதத்தில் சந்திரனின் தென்துருவப் பக்கமாக 300 கிலோ மீற்றரிலும், வடதுருவத்திற்கு அருகே 3,000 கிலோ மீற்றரிலும் நீள்வட்டப் பாதையில் சுற்றியது. இதில் முதன் முறையாக மின்சக்தியால் இயங்கும் உந்து பொறியொன்று கையாளப்பட்டது. அந்த பொறியில் செனன் எனும் சடத்துவ வாயுவே எரிபொருள்.

சீனாவின் சந்திர ஆய்வுத் திட்ட விஞ்ஞானி ஒயுயாங் சியுயான் கருத்துப்படி, 2007 ஆம் ஆண்டு செங்கே என்னும் சந்திரச் சுற்றுகலன் தயார் ஆகுமாம். அத்துடன், 2010 ஆம் ஆண்டில் சந்திரனில் இறங்கவும், 2017 ஆம் ஆண்டில் நிலாவில் மண்ணெடுத்து வரவும் மீண்டும் திட்டங்கள்.

100 தொன் எடையைத் தாழ்புவி சுற்றுப் பாதையில் கொண்டு சேர்க்கும் பளுதூக்கி ஏவுகலம், ரஷ்யா வசமுள்ளது. சந்திரனுக்குச் செல்ல அமெரிக்கா அதனை வாடகைக்கு வாங்கலாமே என்று இங்கிலாந்து நாட்டு மைக் ரிச்சட்சன் மற்றும் அன்டர்சன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தென் அமெரிக்காவின் கயான பிராந்தியத்தில் பிரெஞ்சு நாட்டிற்குச் சொந்தமாகக் கூரு எனும் ஏவுதளமுள்ளது. அங்கு ரஷ்யா தனது `சோயுஸ்-2' விண்கல ஏவு நிலையம் ஒன்றை உருவாக்கி வருகிறது.

எது எப்படியாயினும், ஏப்ரல் மாதத்திற்கு உலக விண்வெளி ஏட்டிலும் மகத்தான முத்திரை நாட்கள் ஏராளமுள்ளன.

முதன் முதலாக இந்தியாவின் ஆரியபட்டா விண்ணகம் 1975 ஏப்ரல் 19 இல் விண் புகுந்தது.

இந்திய விண்வெளிப் படிகளில் டொக்டர் அப்துல் கலாம் தொடங்கி வைத்த எஸ்.எல்.வி-3 திட்டத்தின் இறுதிப் பயணம் (17-04-1983) `இன்சட் -1 ஏ' என்னும் முதல் தலைமுறை தகவல் தொடர்புச் செயற்கைக்கோள் அமெரிக்க நாட்டு டெல்டா ஏவுகலனால் 36 ஆயிரம் கிலோ மீற்றர் உயரத்தில் செலுத்தப் பெற்றது. (10-04-1982), ஐரோப்பிய ஏரியன் ஏவுகலனால் `இன்சட் -3 ஏ' விண்ணில் பறந்தது.(22-04-2003) இந்தியாவின் முதலாவது ஜி.எஸ்.எல்.வி ஏவுகலன் வெற்றி. (18-04-2001) இப்படிப் பல.

அவ்வளவு ஏன்? இந்திய நாட்டு ராகேஷ் சர்மா, ரஷ்யாவின் சோயுஸ் -டி 11 விண்கலத்தில் புவிசுற்றுப் புறப்பட்டதும் 1984 ஏப்ரல் மூன்றாம் திகதி தானே!

உலக சரித்திரம் இன்னும் விரிவானது. உலகின் முதலாவது விண்கப்பல் `சல்யுத்-1' விண்ணில் செலுத்தப்பட்டதும் 1971 ஏப்ரல் 19 இல் தான். அமெரிக்காவின் முதலாவது விண்வெளி ஓடம் எஸ்.டி.எஸ் - 1 அடுத்த பத்தாண்டுகளில் 1981 ஏப்ரல் 12 அன்று ஏவூர்தியாகக் கிளம்பி விமானமாகத் தரை இறங்கிற்று.

விண்வெளியில் 50 மைல்களுக்கு உயர பறந்த நூறாவது வீரர் பல்கேரிய நாட்டு கியார்கி இயனொவ், 10.04.1979 அன்று சோயுஸ் - 3 ஏவுகலனில் புவியைச் சுற்றித் திரும்பினார்.

நாம் இன்று இரு நாடுகளுக்கிடையே நல்லிணக்கப் பேரூந்து ஓடுவதைப் பெரிதாகப் பேசுகிறோம். ஆனால், ரஷ்ய நாட்டு சோயுஸ் ஏவுகலனில் கட்டணம் செலுத்தி முதன் முதலில் 2001 ஏப்ரல் 28 அன்று டெனிஸ் டிட்டோவ் எனும் அமெரிக்கக் கோடீஸ்வரர் செய்த விண்வெளிச் சுற்றுலாவை நினைத்துப் பார்க்கலாம்.

அவ்வாறே விண்வெளி சென்ற உலகின் முதல் அரசியல்வாதி கேக்கார்ன் என்னும் அமெரிக்க செனட் சபை உறுப்பினர் டிஸ்கவரி விண்வெளி ஓடத்தில் 1975 ஏப்ரல் 12 அன்று பயணம் செய்தார்.

நம் நாட்டிலிருந்து எந்த அரசியல்வாதியையும் விண்வெளிக்கு அனுப்ப இயலாது. காரணம், இடப்பற்றாக்குறை. அத்தனைக் கறுப்பு, வெள்ளைப் பூனைப் படைகள் பரிவாரத்திற்கு எல்லாம் விண்கலத்தில் இடம்போதாது.

ஏப்ரல் விண்வெளி அத்தியாயங்களில் துன்பியல் நிகழ்வுகளுமுண்டு. 1967 ஏப்ரல் 23 அன்று சோயுஸ் கண்டது துக்கப் பயணம். விண்வெளியில் சுற்றியபடியே 18 சூரியோதயங்களைக் கண்டு திரும்பிய விளாடிமிர் கொமரொவ் வழியில் பரசூட் குடை சரிவர இயங்காமல் தரையில் மோதி உயிர் இழந்தார்.

முதல் முதலாக இரவில் புறப்பட்ட மனித விண்வெளிப் பயணம் இப்படி இருளாகவே முடிந்தது.

விண்வெளியில் முதலாவது இறந்த நாள் மட்டுமா?

முதிர்ந்த வயதில் 1994 ஏப்ரல் 27 அன்று தனது 52 ஆம் பிறந்த நாளை விண்வெளியில் கொண்டாடினார் அரைத் தாத்தா வாலெரி பாறயகொவ். இவர் ஏற்கனவே 1989 ஆம் ஆண்டு தன் 47 ஆவது பிறந்த நாளை அலெக்சாண்டர் வால்கொவ் என்னும் வீரருடன் இணைந்து விண்வெளியிலேயே கொண்டாடினாராம்.

இப்படியே பல்வேறு ஏப்ரல் விண்வெளி தினங்கள் இருக்கும் போது, முதலில் முட்டாள்கள் தினம் மட்டும் நினைவுக்கு வருவானேன்? எங்கட சனம் முட்டாளாவது ஏப்ரலில் மட்டும்தானா.

- தினமணி -

  • Replies 419
  • Views 70.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

russiaiss5hd.jpg

ரஷ்சியாவின் Russian Soyuz TMA-6 எனும் உந்துவாகனம் மூலம் Sergei Krikalyov எனும் ரஷ்சிய விண்வெளி வீரரும் John Phillips எனும் அமெரிக்க விண்வெளி வீரரும் Roberto Vittori எனும் இத்தாலிய விண்வெளி வீரரும் நேற்றைய தினம் (15-04-2005) கசகஸ்தானில் உள்ள Baikonur ஏவுதளத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்...! இவர்கள் நாளைய தினம் (17-4-2005) ஐ எஸ் எஸ் யை அடைந்து ஏற்கனவே கடந்த ஆறு மாதமாக ஐ எஸ் எஸ் யுடன் விண்ணில் சஞ்சரிக்கும் விண்வெளி வீரர்களை பிரதியீடு செய்ய... பழைய வீரர்கள் ரஷ்சியக் கலம் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள்...!

செய்தித் தமிழ் வடிவம் மற்றும் தகவல் மூலத்துக்கு - http://kuruvikal.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மதன் , குருவிகள்.

  • தொடங்கியவர்

_41054637_gas_bn_203.jpg

பரிசோதனையின் வாயிலாகப் பெறப்பட்ட quark-gluon plasma நிலையில் கூறுகளின் திரவ நிலைக்கு ஒத்ததான ஒழுங்கமைப்பு....!

அகிலம் உருவாக நிகழ்ந்ததாக கருத்தப்படும் Big Bang இன் மில்லியன் செக்கன்கள் பின்னான அகிலத்தின் நிலை திரவ நிலைக்கு ஒப்ப இருந்திருக்கவே வாய்ப்பதிகம் என்று அமெரிக்க பெளதீகவியல் விஞ்ஞானிகள் ஆய்வுசாலையில் பொன் அணுக்களில் இருந்து பெறப்பட்ட அயன்களை 3.8 கிலோமீற்றர்கள் நீளமான Relativistic Heavy Ion Collider ற்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் செலுத்தி மோத வைத்து பெறப்பட்ட ultra-hot, ultra-dense நிலையின் வாயிலாகக் கண்டறிந்துள்ளனர்...! இந்த quark-gluon plasma நிலை ஐதான வாயு நிலை ஒத்த நிலை என்றே இதுவரை விஞ்ஞானிகளால் கருத்தப்பட்டு வந்தது...!

இந்தப் பரிசோதனையின் போது அணுக்கருவுள் உள்ள நியுத்திரன்களை புரோத்தன்களை "உருக்கக்" கூடிய அளவிலான சக்தியையும் சூரியனின் மையத்தில் உள்ளதை விட மேலான வெப்பநிலையை ( கிட்டத்தட்ட 150,000 மடங்குகள் சூரியனின் மையத்தில் உள்ள வெப்பநிலையை விட அதிகமாக) விஞ்ஞானிகள் அடைந்தனர் என்பதும் இம் மோதல் மிகச் சிறிய அளவுக் கனவளவுப் பகுதிலையே நிகழ்த்தப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்..! இக்கண்டு பிடிப்பு பெளதீகவியலில் முக்கியமான ஒன்றாக பலராலும் கருதப்படுகிறது...!

தமிழ் வடிவம்...மற்றும் மேலதிக தகவலுக்கு... http://kuruvikal.blogspot.com/

  • தொடங்கியவர்

_41066233_dustdev_nasa_203.jpg

பேய்கள் செவ்வாய்க் கிரகத்தையும் விட்டு வைக்கவில்லைப் போலும்....செவ்வாயின் மேற்பரப்புச் சார்ந்து சுழற்காற்றுக் கொண்டெழுந்த தூசிப் பேய் ஒன்றை கடந்த ஆண்டு செவ்வாயில் தரையிறங்கி அக்கோள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுப் படங்கள் பிடித்த ஸ்பிரிட் ரோவர் படம் பிடித்துள்ளது...!

தமிழ் வடிவம்...மற்றும் செய்தி ஆதாரங்களுக்கு... http://kuruvikal.blogspot.com/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வால் நட்சத்திரங்கள் உருவானது எப்படி?

வால் நட்சத்திரங்கள் மிகப்பழமையான காலத்தில் உருவாகிய பொருட்களாகும். சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியன் உருவான காலத்தில் அதனிடமிருந்து வீசப்பட்ட தூசுக்களும் வாயுக்களும் ஒன்று கூடி பூமிஇ செவ்வாய்இ சனி முதலான ஒன்பது கிரகங்கள் உருவாகின. அதே சமயம் தூசுகள்இ வாயுக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சில சிறிய பொருட்கள் இன்று வரையும் சூரியனை வெகு தொலைவிலிருந்து சுற்றி வருகின்றன. இவையே வால் நட்சத்திரங்களாகும். சூரியன் உருவான காலகட்டத்தில் உருவானதால் வால் நட்சத்திரங்களை ஆராய்ந்தால் சூரியனின் தோற்றத்தை பற்றிய பல தகவல்களை அறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

வால் நட்சத்திரங்கள் எங்கிருந்து வருகின்றன?

பூமியிலிருந்து 600 கோடி கிலோமீட்டர் தொலைவில் புளுட்டோ கிரகத்தை தாண்டி இருக்கும் குயிப்பர் பெல்ட் என்ற பகுதியிலிருந்தும்இ பூமியிலிருந்து 7 இலட்சம் கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்ட் மேகம் எனப்படும் பகுதியிலிருந்தும் வால் நட்சத்திரங்கள் பெரும்பாலும் வருகின்றன.

வால் நட்சத்திரத்தின் உள்ளே என்ன உள்ளது?

பாறைஇ பனிக்கட்டிஇ தூசிஇ வாயுக்கள் இவை அனைத்தும் சேர்ந்து தான் வால் நட்சத்திரங்கள் உருவாகின்றன. பெயர்தான் வால் நட்சத்திரமே தவிர உண்மையில் வால் நட்சத்திரம் நட்சத்திர வகையை சார்ந்தது அல்ல. வால் நட்சத்திரத்தின் மையப்பகுதியில் பாறை போன்ற பொருளினால் உருவாக்கப்பட்ட திடப்பகுதி உள்ளது. இதன் விட்டம் சராசரியாக ஒரு கிலோமீட்டர் நீளத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் நீளம் வரை இருக்கும். சில சமயங்களில் 100 கிலோ மீட்டர் அளவில் கூட மையப்பகுதி இருப்பதுண்டு. இந்த மையப்பகுதியை சுற்றி வெப்ப வாயுக்களைக் கொண்ட கோமா என்ற பகுதி உள்ளது. இந்த கோமா பகுதி பாறையை விட 1000 மடங்கு வரை பெரிதாக இருக்கும். இதுவே வால் நட்சத்திரத்தின் தலைப் பகுதியாக நமக்கு தெரிகிறது. இதனை தொடர்ந்து வாயுக் களாலும்இ பனிக்கட்டிகளாலும்இ தூசு மேகங்களாலும் உருவான வால்பகுதி உள்ளது. இது சில சமயம் லட்சக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் வரை கூட நீண்டிருக்கும். சூரியனை நெருங்க நெருங்க வால் நட்சத்திரத்தின் வெப்பம் கூடி அதன் ஒளிரும் வால்பகுதியின் நீளம் நீண்டுகொண்டே செல்லும். வால்பகுதி எப்போதும் சூரியனின் எதிர் திசையை நோக்கியே இருக்கும்.

வால் நட்சத்திரங்களின் அழிவு

வியாழன் (ஜூபிடர்) போன்ற பெரிய கிர கங்களின் அருகில் செல்கையில்இ அந்த கிரகங் களின் மிதமிஞ்சிய ஈர்ப்பு சக்தியால் வால் நட்சத்திரங்கள் பல சிறிய துண்டுகளாக பிரிந்து பின்னர் அந்த கிரகத்திலேயே விழுந்து அழிகின் றன. சமீபத்தில் கூட ஷூமேக்கர் லெவி-9 என்ற வால் நட்சத்திரம் ஜூபிடர் கிரகத்தில் விழுந்து அழிந்தது.

நன்றி: தினகரன்

வால் எப்போதும் பின்னால்தான் இருக்கும். "வால்" நட்சத்திரத்தின் வால் நிலையானது இல்லை. வால் நட்சத்திரம் போகும் வேகத்திற்கு விண்வெளியில் உள்ள பிற வாயுக்கள் திண்மங்களுடன் உராய்வு ஏற்பட்டு அதனால் ஏற்படும் வெப்பநிலையே வால்போல் தெரிவதாக எங்கோ படித்த நினைவு. இன்னும் சொல்லப்போனால் விண்வெளியில் உள்ள விண்கற்கள் இடம்மாறும்போது இப்படி எரிந்து கொண்டு செல்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மழலை.

கருத்து நகர்த்தப்படுக்கிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடச்சே...என்ன கவிதன் அண்ணா இப்படிப் பண்ணிட்டிங்க....சும்மா சொன்னன்..நன்றி அண்ணா.... :P :P :P :P

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

_41180941_voyager_nasa_203.jpg

மனிதனால் உருவாக்கப்பட்டு விண்ணில் ஆழ ஊடுருவிப் பயணித்த சோடிக்கலங்களான Voyager 1 மற்றும் Voyager 2 இல் Voyager 1 ஆனது எமது சூரியத் தொகுதியின் இறுதி எல்லை அதிர்ச்சி வலயத்தையும் ( termination shock) தாண்டி விண்ணில ஆழ செல்லும் நிலையை எட்டியுள்ளதாக நாசா அறியத்தந்துள்ளது...!இவ்விண்கல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் குருவிகளே..

டைட்டான் உலகம்

tita.jpg

சூரியக் குடும்பத்திலுள்ள கோள்களில் மிகவும் அழகான வளையங்களைக் கொண்டுள்ளது சனிக்கோள்.அதுமட்டுமல்லாமல்,ப

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மதன் ..

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

_40630465_di_nasa_203.jpg

நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விண்ணில் ஆள ஊடுருவி ஆய்வு நடத்தும் விண்கலம் ஒன்று... அமெரிக்க சுதந்திர தினமான யூலை 4ம் திகதி... வால்நட்சத்திரம் ஒன்றின் தூசிகளையும் பனித்துகள்களையும் விசிறும் திண்மப் பாறை நோக்கி... துப்பாக்கிச்சன்னம் போன்று 100 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கத்தக்க விண்கலச் சன்னங்களை(a small copper probe) விண்வெளி ஏவுகணைப் (missile) பொறிமுறை மூலம் செலுத்தி மோதவிட்டு ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்படுகிறது...! இந்த மொத்துகை பூமியில் இருந்து 431 மில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் நிகழ்த்தப்பட இருக்கிறது...!

மேலதிக விளக்கப்படங்களுடன் செய்திக்கும்... தகவல் ஆதாரத்துக்கும் இங்கு அழுத்தவும்.. http://kuruvikal.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குருவிகளே

  • தொடங்கியவர்

கவிதன் உந்தத் தமிழரும் அவையின்ர மொழியும் சமயத்தையும் விட்டுட்டு..நாங்க விண்வெளிக்குப் போவமா...இல்ல இந்த வால்நடச்த்திர ஆராய்ச்சி... 1998 இல் எடுக்கப்பட்ட பூமியைத் தாக்கவரும் வால்நட்சத்திரத்தை அழிப்பதான கதையம்சம் கொண்ட கொலிவூட் படம் (பெயர் தெரியவில்லை) ஒன்றைச் சார்ந்து அமைவதாகவும் அறியக் கிடைக்கிரது...அதைப்பற்றி..ஆங்க

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

_41228947_moon416.jpg

கடந்த சில தினங்களாக சந்திரன் வானில் வழமையை விடப் பெரிதாகத் தென்படுவதாக உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் கூறுகின்றனராம்...! இது ஏன்...மாயத் தோற்ற (illusion) விளைவா..??! அப்படித்தான் சொல்கிறது பிபிசி... ஆனால் இந்த விளைவை நாசாவால் கூட விளக்க முடியவில்லையாம்...!

For the past few nights the moon has appeared larger than many people have seen it for almost 20 years. It is the world's largest optical illusion, and one of its most enduring mysteries.

It can put a man in space, land a probe on Mars, but Nasa can't explain why the moon appears bigger when it's on the horizon than when it's high in the night sky

இணைப்பைப் பாருங்கள்... http://news.bbc.co.uk/1/hi/magazine/4619063.stm

தகவலுக்கு நன்றிகள் குருவி

தகவலுக்கு நன்றிகள் குருவி. நான் நிலவு பார்த்து களகாலம். :(

தகவலுக்கு நன்றியண்ணா

இளைஞன் அண்ணா உங்களுக்காக நிலா படம் சரியா? பார்த்திட்டீங்களா?

moon7le.jpg

moonnn4oe.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

_41228947_moon416.jpg

கடந்த சில தினங்களாக சந்திரன் வானில் வழமையை விடப் பெரிதாகத் தென்படுவதாக உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் கூறுகின்றனராம்...! இது ஏன்...மாயத் தோற்ற (illusion) விளைவா..??! அப்படித்தான் சொல்கிறது பிபிசி... ஆனால் இந்த விளைவை நாசாவால் கூட விளக்க முடியவில்லையாம்...!

For the past few nights the moon has appeared larger than many people have seen it for almost 20 years. It is the world's largest optical illusion, and one of its most enduring mysteries.

It can put a man in space, land a probe on Mars, but Nasa can't explain why the moon appears bigger when it's on the horizon than when it's high in the night sky

இணைப்பைப் பாருங்கள்...http://news.bbc.co.uk/1/hi/magazine/4619063.stm

Perception இல் என்றும் இல்லாத மாற்றம் ஏனாம் இப்ப :roll: :roll: :(:lol: :P :wink: :shock:

கிரகங்கள் உருவானதை கண்டறிய முயற்சி: வால்நட்சத்திரத்தைப் பிளக்கும் விண்கலம் புறப்பட்டுச் சென்றது

_41257297_deepimp_nasa_203.jpg_40630465_di_nasa_203.jpg

பாஸதீனா, ஜூலை 4: விண்வெளியில் பயணம் செய்துகொண்டிருக்கும் "டெம்பெல்~1' என்னும் வால்நட்சத்திரத்தின் மீது மோதிப் பிளக்கவுள்ள விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ""நாஸô'' ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தியது.

வால்நட்சத்திரத்தின் மையப் பகுதி எவ்வகைப் பொருளால் ஆனது என்பதை ஆராய்வதே இதன் நோக்கம். அதன் மூலம், சூரியனும் சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களும் எவ்வாறு தோன்றின என்பதற்கான விடையைக் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஏனென்றால், சூரியக் குடும்பம் தோன்றுவதற்கு ஆதாரமாக இருந்த பொருள்கள், வால்நட்சத்திரத்தின் மையப் பகுதியில் உறைந்து கிடக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வால்நட்சத்திரத்தின் மையப் பகுதியைப் பிளந்து ஆராய்வதற்காக விண்கலத்தை அனுப்பி மோதுவது இதுவே முதல் முறையாகும். ரூ.1500 கோடி செலவில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பாஸதீனாவிலிருந்து இந்திய நேரப்படி பகல் 11.37-க்குப் புறப்பட்ட அவ் விண்கலம், 24 மணி நேரத்தில் அந்த வால்நட்சத்திரத்தின் மீது மோதும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் ஒரு சில மணி நேரத்தில் அந்த மோதல் நடைபெறும் என விஞ்ஞானிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பீப்பாய் அளவுக்குள்ள அந்த விண்கலத்தின் பெயர் ""இம்பேக்டர்''. அதை ""டீப் இம்பேக்ட்'' என்னும் ராக்கெட் விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து 13 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் சென்றுகொண்டிருக்கும் ""டெம்பெல்~1'' வால்நட்சத்திரம், மும்பை நகரைவிட கொஞ்சம் பெரிதாக இருக்கும். அதன் மீது 372 கிலோ எடையுள்ள அவ் விண்கலம் மோதும்போது, ஒரு பெரிய விளையாட்டு மைதானம் அளவுக்கு ஓட்டை ஏற்படும்.

அந்த மோதலின் வேகம், 5000 கிலோ டிஎன்டி வெடிமருந்தை வெடிக்கச் செய்வதற்கு இணையான சக்தியை வெளிப்படுத்தும்.

அந்த மோதலை பூமியிலிருந்து வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

13 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் அந்த மோதல் நிகழ்வதால் பூமிக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படாது; வால்நட்சத்திரத்தின் பாதையிலும் பெரிதாக மாற்றம் ஏதும் நடக்காது என்றும் அவர்கள் கூறினர்.

செய்தி நன்றி - தினமணி

படம் நன்றி - பிபிசி இணையம்

இந்த விண்கலம் பயணம் செய்யும் முறை

_40708759_deep_impact2_inf416.gif

படம் நன்றி - பிபிசி இணையம்

இது குறித்த அனிமேட்டட் விளக்க படத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4088316.stm

நாளை காலை நடைபெறவுள்ள இந்த மோதல் குறித்த அனைத்து தகவல்களையும் நாசா இணையத்தளத்தில் இதற்கென உள்ள பிரிவில் பெற்றுகொள்ளலாம். இணைப்பு இதோ ....

http://www.nasa.gov/mission_pages/deepimpa...main/index.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.