Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் 200 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவொன்று நேற்று இலங்கை வந்துள்ளது

Featured Replies

நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சீனக்குழுவினரை, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையிலான குழுவினர் வரவேற்றனர் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். வழமையாக இந்திய அதிகாரிகள் இலங்கை வரும்போது சீன குழுவும் இலங்கையில் இருக்கும் இந்த முறை சீனர்களை காணவில்லையே என்றால் நேற்றைய தினம் ஒன்று இரண்டு அல்ல 200 பேர் வந்து இறங்கி விட்டார்கள்.

சீன யுவான் மாகாணத்தின் ஆளுநர் கிவின் குவான் ரொன்னும் இந்த குழுவில் இடம்பிடித்துள்ளார். சீனாவுக்குக் கடந்த மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீன உயர்மட்டக் குழுவினர் பிரதமர் டி.எம்.ஜயரத்னவை இன்று மாலை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழ நாதம்

மவோயிஸ்ட்கள் வாழ்க .......காந்தியம் ஒழிக....சிறிலங்கா ஒரு சிவப்பு சிந்தனையுடைய நாடாக மலரட்டும்

மவோயிஸ்ட்கள் வாழ்க .......காந்தியம் ஒழிக....

மிக அவசியமான கோஷம்.

மவோயிஸ்ட்கள் வாழ்க....... போலிக் காந்தியம் ஒழிக.... போலி ஜனநாயகம் ஒழிக .... என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

சீனர்களின் வரவு, இந்திய, சிங்கள கூட்டுப் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருந்தால் இன்னும் நல்லது.

மேலும், போலி இந்திய மாயைகள் தகர்ந்து, முன்னர் தனித்தனி இராஜியங்களாக இருந்த மாதிரி பல நாடுகள் உருவானால் மிக மிக நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியம்...தமிழக விடுதலை.. ஒர் ஆய்வு...

tamil_nadu_map_s.jpg

ஆங்கிலேயர்கள் தமது வசதிக்காக ஒருங்கிணைத்ததன் நிர்வாக செயல்வடிவே இந்தியா என்பதாகும். ஆங்கிலேயருக்கு முன்பு இந்த பெயர் ..இல்லை..வெள்ளைகாரனால் ஒட்டவைக்க பட்டு பிச்சைகாரன் வாந்தி எடுத்தாதாற் போல் உள்ளதெல்லாம தேசியம் எனும் கணக்கில் வருமா?

தேசியம் ஒர் வரையறை

தேசியம் என்று ஒரு வாதத்தை சமூக நெறிகள் பற்றிய ஆய்வாளர் “பால் கோம்பெர்க்” வைக்கிறார். ஆதி காலம் தொட்டு மனிதர்களுக்குள் நிலவும் பல்வேறு முரண்பாடுகள், வேறுபாடுகளாக மருவிப் போராகவும், ஆட்சி மாற்றமாகவும், ஆதிக்கமாகவும் வரலாற்றின் பக்கங்களில் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்லாவிதமான கருத்தாக்கங்களையும் போலவே தேசியம் என்பதும் தனி மனிதனின் அல்லது ஒரே சிந்தனையுள்ள மனிதக் குழுக்களின் தன்னியல்பான வாழ்க்கை முறைகளில் இருந்தே கட்டமைக்கப்படுகிறது.

வாழிட ஆதாரங்களை, மொழியை, பழக்கவழக்கங்களை, வழிபாடுகளை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு குறிப்பிட்ட மரபுசார் மனிதக் குழு, நீண்ட காலமாகத் தொடர்ந்து செயல்படுகிற போது தேசியம் என்கிற கருத்தாக்கம் தோற்ற மடைகிறது, அடுத்தவர் மீது ஆதிக்கம் செலுத்தும் வலிமையைப் பொறுத்து வடிவம் பெறுகிறது அல்லது வெற்றி பெறுகிறது என்று நம்மால் தேசியத்தைப் புரிந்து கொள்ள இயலும்.இது உண்மையாகத் தான் இருக்க வேண்டும்,

இந்திய தேசிய வடிவமும் அதன் ஆளுமை மையங்களும் இடைவிடாது ஒரு இனகுழுமத்தின் மீது வளர்க்கும் காழ்ப்புணர்வு இதற்குச் சான்றாகத் தோன்றுகிறது, நம் மீதான காழ்ப்புணர்வைக் கொட்டித் தீர்க்க ஆரிய இந்தி காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் தொடர்ந்து ஈடுபடுகின்றன. நாமும் அதனைப் உண்மையென நம்பி நம்முடைய மக்கள் மீதே நாம் வெறுப்பு கொள்கிறோம்

தற்போது உள்ள உலக இயங்கியலில் தேசியத்தின் நன்கு அறியப்பட்ட பிரிவுகளாக கீழ்க்கண்டவற்றை நம்மால் பட்டியலிட முடியும்.

1) மரபு வழியான தேசியம்.

2) அரசியல் வழியான தேசியம்.

3) கொள்கை வழியான தேசியம்.

4) பண்பாட்டு வழியான தேசியம் .

5) காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய தேசியம்.

6) உரிமைகள் வழியான தேசியம்.

7) இடதுசாரி விடுதலை வழியான தேசியம்.

8) மத வழியான தேசியம்.

9) தனிமனித வழிகாட்டுதல் வழியான கொடுங்கோன்மை தேசியம்.

10) இலக்கு வழியான தேசியம்.

1) மரபு வழியான தேசியம்.

ஒரே மொழியை, பழக்க வழக்கங்களைக். குடும்ப அமைப்புகளைக் கொண்டு நீண்ட காலமாக வாழிட ஆதாரங்களை மையமாகக் கொண்டு செயல்படும் தேசிய வடிவத்தை மரபு வழியிலான தேசியம் என்று பொருள் கொள்ளலாம்.

2) அரசியல் வழியான தேசியம்.

வெவ்வேறு மொழிகளையும், பழக்க வழக்கங்களையும் கொண்டிருந்தாலும், ஒரே மாதிரியான அரசியல் வடிவங்களைப் பெற்று ஆட்சி முறைகளில் ஒருங்கிணையும், நில எல்லைகளை மாற்றி அமைக்கும் நெகிழ்வு கொண்ட ஒரு தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ளலாம்.

3) கொள்கை வழியான தேசியம்

அரசியல், மொழி மற்றும் கலாசார மதிப்பீடுகளை விடுத்துக் கொள்கைகள் அடிப்படையில் இணைகிற அல்லது உருப்பெருகிற தேசியமாக இதனை நாம் பொருள் கொள்ள இயலும்.

4) பண்பாட்டு வழியான தேசியம்.

மரபு வழி தேசிய வடிவிற்கும், பண்பாட்டு வழியான தேசிய வடிவிற்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை என்றாலும், மொழி மற்றும் நிலப்பரப்பு எல்லைகளில் நெகிழ்வுத் தன்மை கொண்ட ஒத்த பண்பாட்டில் ஒருங்கிணையும் ஒரு தேசிய வடிவமாக இதனை நாம் பொருள் கொள்ள இயலும்.

5) காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய தேசியம்.

பல்வேறு பண்பாட்டு, மொழி மற்றும் அரசியல், குடும்ப அமைப்பு, வழிபாட்டு முறைகள், கலை வேறுபாடுகளைக் கொண்ட வெவ்வேறு தேசியமாகச் செயல்பட்டு வந்த குழுக்கள், மற்றொரு குழுவின் ஆளுமைக்குப் பிறகு வலிந்து ஒரே மாதிரியான அரசியல் அளவீடுகளில், தனது நிலப்பரப்பை வரையறுத்துக் கொள்கிற தேசிய வடிவமாகவும், ஏற்கனவே உருவாகித் தழைத்திருந்த மரபு வழி மற்றும் அரசியல் வழியிலான தேசிய அடையாளங்களை விழுங்கி ஒரு புதிய தோற்றம் தரக்கூடிய தேசியமாக இதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

6) உரிமைகள் வழியான தேசியம்.

ஒரு குறிப்பிட்ட தேசிய வடிவில் இருந்து இழந்த தங்கள் உரிமைகளை மீட்டு மீண்டும் நிறுவுவதற்குப் போராடித் தங்கள் தேசிய வடிவத்தை உள்ளிருந்து மாற்றி அமைக்கிற தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ள முடியும்.

7) இடதுசாரி விடுதலை வழியான தேசியம்.

குறிப்பிட்ட தேசிய வடிவினால் ஒடுக்குமுறைக்கு உட்பட்ட அல்லது உரிமைகளை இழந்த மனிதக் குழுக்கள் ஒருங்கிணைந்து போராடிப் பொது மக்களுக்கு நன்மை தருகிற அரசியல் வழியிலான தேசிய வடிவத்திற்கு மாற்றம் பெறுகிற தேசிய வடிவம் என்று இதனைப் பொருள் கொள்ளலாம்.

8) மத வழியான தேசியம்

ஒரே வழிபாட்டு முறைகளைக் கொண்ட, மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்து உருவாக்கம் பெறுகிற தேசிய வடிவமாக இதனைப் பொருள் கொள்ள இயலும்.

9) தனி மனித வழிகாட்டுதல் வழியான கொடுங்கோன்மை தேசியம்.

ஒரு தனி மனிதனின் சிந்தனைகளின் அடிப்படையிலும், மாற்றுச் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காத மக்களுக்கு எதிரான கொடுங்கோன்மை வழியாக உருப்பெருகிற தேசியமாக இதனைப் பொருள் கொள்ள இயலும்.

10) இலக்கு வழியிலான தேசியம்.

india_map.gif

இந்தியா என நம்மால் உள்வாங்கப்பட்ட இந்த தேசியம் என்கிற கருத்துரு உண்மையில் நமக்கானது அல்ல என்பதை அரசியல் சார்ந்த, இனம் சார்ந்த அல்லது மொழி சார்ந்த சில அண்மைய நிகழ்வுகள் உறுதி செய்தது மட்டுமன்றி என்னைப் போன்று எண்ணற்ற இளம் தலைமுறைத் தமிழர்களை இந்திய தேசியம் என்கிற கோட்பாட்டில் இருந்து திசை திருப்பி இருக்கிறது. இதன் தாக்கம் வரும் காலங்களில் இந்திய தேசிய அரசியல் கட்டமைப்பு மாற்றத்தினை (அல்லது) தமிழ் தேசியம் குறித்த நகர்வையோ விரைவுபடுத்த வைக்கும்..

யுத்த வகைகள்..

இதுவரை நடைபெற்ற யுத்தங்கள் பின்வருபவற்றில் ஒன்றில் அடக்கலாம்...

1. பல்தேசிய இன நாடுகளுக்குள் ஒடுக்கப்படும் தனது இனத்திற்கான அரசைக் கோரி நடக்கும் தேச விடுதலைப் போராட்டம்.

2. ஏகாதிபத்தியம் மற்றும் மூன்றாம் உலக நாடுகளை ஆக்கிரமிக்கும் போது நடக்கும் சொந்த தேசத்தைப் பாதுகாக்கும் யுத்தம்.

3. ஏகாதிபத்திய, மற்றும் முதலாளித்துவ நாடுகளுக்கு இடையில் நடக்கும் யுத்தங்களும் அதன் தேசியமும்.

4. ஒரு பாட்டாளி வர்க்கத் தலைமையைக் கொண்ட ஒரு நாட்டில் இன்னும் ஒரு ஆக்கிரமிப்பு நாட்டுக்கும் இடையில் நடக்கும் யுத்தங்களும் அதன் தேசியமும்.

5. ஒரு நாட்டுக்குள் நடக்கும் உள் நாட்டு யுத்தமும் அதன் வழி கைப்பற்ற இருக்கும் தேசியமும்

இதில் நாம் நடத்த இருக்கும் யுத்தமும் அடக்கம்...

மாவோஸ்ட்களின் முழக்கம் என்ன?

வீரஞ்செறிந்த போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் மாவோயிஸ்ட்டுகள். ஈகம் புரிகின்றனர். மாவோயிஸ்ட்டுகள் மீதும் பழங்குடி மக்கள் மீதும் அரசு நடத்தும் போரை எதிர்த்து... மாவோயிஸ்ட்டுகளின் அரசியல் முழக்கமென்ன? இந்திய அரசு எந்திரத்தைக் கைப்பற்றுவது! மலைவாழ் பழங்குடி மக்களுக்கு வெளியே சமவெளிப் பகுதிகளில் அரசு எந்திரத்தோடு மோதும் வலுப்பெற்றுள்ளார்களா மாவோயிஸ்ட்டுகள்? இல்லை. பிறகு எப்படி தலைநகர் தில்லியை அவர்களால் கைப்பற்ற முடியும்? இங்கே அடிப்படை சிக்கல்கள் உள்ளன.. மாவோஸ்ட்கள் ஆயுதப் போராட்டம் நடத்தலாம். ஆனால் பழங்குடி மக்களிடம் பெற்ற அளவு செல்வாக்கைச் சமவெளிகளில் பெற முடியாது. முதலாளித்துவ கோட்பாடுகளின் கீழும் சுகமமாக எப்படியாவது வாழுந்துவிடலாம் என என்னும் நகர்புற நடுத்தர வர்க்கத்திடம் எடுபடாது.. எனவே அனைத்திந்தியப் புரட்சி என்பதற்கு வாய்ப்பில்லை.

கம்யுச கோட்பாடும் நம்ம ஊரு கம்னுயுசர்களும்..

இங்கு கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது.ஆனால் அதன் அரசியல், பொருளியல், பண்பியல் தேவை வெவ்வேறாக இருக்கின்றன. இந்தியாவை ஒற்றைத் தேசமாகப் பார்ப்பது மார்க்சிய - லெனினிய வரையறுப்புகளுக்கு எதிரானது. சாதாரண சமூக அரசியல் அறிவுக்கும் எதிரானது. ஏகாதிபத்தியப் பெருமுதலாளிய, பார்ப்பனியப் பார்வை அது. இந்தியா பல்தேசிய நாடு. பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை ஒவ்வொருதேசிய இனத்திற்கும் பிறப்புரிமை என்பது லெனினியம். இந்தியாவில் இந்த லெனினியப் பார்வையை ஏற்க மறுப்பது மட்டுமல்ல, எதிர்க்கின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள். எனவே அக்கட்சிகளுக்கென புரட்சிகர அரசியல் முழக்கமில்லை.

இந்திய ஏகாதிபத்தியப் பெருமுதலாளிகளின் ஒற்றை அரசியல் முழக்கமான “இந்திய ஒருமைப்பாடு” என்பதே இங்கே கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளின் அரசியல் முழக்கம். இந்த “இந்திய தேசிய ஒருமைப்பாட்டு” முழக்கம் புரட்சிகரமானது அன்று. எதிர்ப்புரட்சித் தன்மையது. ஓர் எதிர்ப்புரட்சி முழக்கத்தைத் தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் தொழிலாளி மக்களிடம் பரப்புகின்றன.

ஒன்றுபட்ட விடுதலை போராட்டம் சாத்தியமா?

இந்தியா முழுமைக்கும் புரட்சி நடத்தி இவ்வரசை மாற்ற முடியுமா என்றால் முடியாது.

இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள பல்வேறு தனித்த தேசிய இனங்களும் உலகமயத்திடமிருந்து தற்காத்துக் கொள்ள தனது சொந்த தேசிய இனத்தின் அடையாளத்தை மீட்டுக் கொள்ள போராட்டம் நடத்தத் தொடங்கி அந்த போராட்டம் ஒருவேளை ஒருங்கிணைக்கப்பட்டால் தான் இந்தியப் புரட்சி என்பது சாத்தியமாகும். இது நடக்கும் செயலா? ஒரே இந்தியா என்று பேச்சில் இருக்கிறதே தவிர செயலில் எங்காவது இருக்கிறதா.? கர்நாடகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வேறு நாடாகத் தானே பார்க்கின்றன? தமிழகத்துக்குரிய உரிமைகளை மறுக்கின்றன. இப்படி இருக்கையில் அவர்களை இணைத்துக் கொண்டு புரட்சி நடத்துவது சாத்தியமா..?

அண்டை தேசிய இனங்கள் நம்மிடம் சண்டையிட்டு வந்த போது அதனை தடுக்க வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது தானே வாடிக்கை. சுருக்கமாக சொன்னால் தமிழினத்திற்கு யார் யார் பகைவர்களாக மாறுகிறர்களோ அவர்கள் எல்லாம் டெல்லிக்கு நட்பாக மாறி விடுகிறார்கள்... இதை நாம் பழைய வரலாறுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஜனநாய் க வழி போராட்டம் சாத்தியமா?

ஜனநாய்க வழி போராட்டம் இங்கு சாத்தியமற்றா ஓன்று. ஈழ சிக்கலின் போது. உண்ணாவிரதம் இருந்த அன்னை பூபதி தோழர் திலீபன் ஆகியோருக்கு நடந்தது அனைவரும் அறிந்தததே..60 வயது மூதாட்டியை பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்கவே பாதுகாப்பாக உண்ணாவிரதம் இருக்கிறார் என மகனை விட்டே எழுதிய வாங்கிய பெருமைக்கு உரியது இந்த நாடு.. அத்தோடு தோழர் முத்துகுமார் போன்று தன்னுயிர் நீத்தலும் இங்கு சரிவராது.. ஒழிந்தான் ஒருவன் என கை தட்டி சிரிக்கவே பயன்படும்.அரசியல் வழி போராட்டமும் சாத்தியமில்லை...40 எம்பி சீட்டுகளை வைத்து கொண்டு வெட்டுவோம் புடுங்குவோம் என கூச்சலிடுவதும்... கண்டிக்கிறோம்... வருந்துகிறோம் என அறிக்கைவிட்டு அரசியல் நடத்துவதும் கோரிக்கைகள் தீர்ப்பதற்கு உகந்த வழி அல்ல... தன்னெழுச்சியான மக்கள் புரட்சியெ சரியான பாதையாகும்..

ஏன் தமிழகம் விடுதலை பெற கூடாது?

பல்தேசக் கூட்டமைப்புகள் இப்பொழுது இந்தியாவில் ஏற்பட வாய்ப்பில்லை. உலக அளவிலும் அதற்கான வாய்ப்பில்லை. சேர்ந்திருந்த பல்வேறு பல்தேசக் கூட்டமைப்புகள் பிரிந்துவிட்டன.

1. சோவியத் ஒன்றியம்

2. யூகோஸ்லாவியா

3. செக்கஸ்லோவாக்கியா

போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள். எரித்திரியா, கிழக்குத் திமோர் போன்ற புதிய தேசங்கள் பிறந்துள்ளன. ஸ்பெயினில் கட்டலான், பார்சிலோனா ஆகியவை விடுதலை கோருகின்றன. பிரிட்டனில், ஸ்காட்லாந்து தனிநாடு கேட்கிறது. கனடாவில் கியூபெக் தனிநாடு கோருகிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றில் தனிநாட்டுப் போராட்டங்கள் நடக்கின்றன. ஈழவிடுதலைப் போர் நாம் அறிந்ததே. எனவே உலகப் போக்கை உணர்ந்து கொள்ள வேண்டும்.ஜே.வி.ஸ்டாலின் வரையறுப்பின்படி ஒரு தேசிய இனமாக வளர்ச்சிப் பெற்றுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமக்குள்ள சுயநிர்ணய உரிமைப்படி, தமக்கென ஒரு தேசத்தை, குடியரசை நிறுவிக்கிக் கொள்ள வேண்டும். இதனை ”தமிழ்த் தேசியப் புரட்சி” என்று அழைக்கலாம்..

நாம் சுட்டிக்காட்டிய உலகமயக் கூட்டணி இந்தியத் தேசியம் வழியாகத்தான் செயல்படுகிறது.இதற்கு ஈழ விடுதலை போராட்டம் நசுக்கப்பட்டது சிறந்த உதாரணமாகும். உலகமயத்தால் நசுக்கப்படும், உழவர்கள், தொழிலாளர்கள், ஒடுக்குண்ட சாதியினர், ஒதுக்கப்படும் சிறுபான்மையினர், சிறு, நடுத்தர தொழில் முனைவோர் முதலிய புரட்சிகர சக்திகளை உலகமய எதிர்ப்பில் ஒன்றிணைக்கிற மகத்தான புரட்சிகர ஆற்றல் தமிழ்த் தேசியம் தான்.

சூழல் பாதுகாப்பு, மரபான தொழில் நுட்பப் பாதுகாப்பு, மனித உரிமைப் பாதுகாப்பு ஆகிய தளங்களில் உலகமயத்திற்கு எதிராகக் களம் அமைப்போர் ஒன்றிணைய வேண்டிய தளமும் தமிழ்த் தேசியம் தான். தமிழ்த் தேசியப் புரட்சிதான் உலகமயத்தை முறியடிக்கும் ஆற்றல் கொண்டது.

இந்தியத் தேசியக் கருத்திலை ஏற்றுக் கொண்ட கட்சிகள், அமைப்புகள், முதலாளிகள் உள்ளிட்டோர் இப்புரட்சிக்கான எதிரிகள். மனித விடுதலைக்கான தத்துவமான மார்க்சியம், சாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்ட பெரியாரியம், அம்பேத்கரியம், உள்ளிட்டவற்றோடு சங்க காலம் தொட்டு நம் தமிழ்ச் சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு வந்த அறநெறிக் கருத்துகள் ஆகியவையே இந்த லட்சியத்தை அடைந்திட உதவும்.

எனவே அத்தத்துவங்களை தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்ப உபயோகித்து அவற்றைக் கொண்டு நமக்கான ஒரு சுயநிர்ணயமுள்ள ஒரு தனித் தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனவே ”தமிழ்த் தேசியம்” என்ற இக்கருதாக்கம் படைக்கப்பட்டுள்ளது.

-தமிழ்தேசிய தமிழர்கண்ணோட்டம்...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ இக்களத்தில் இந்தியன் செத்தால் மகிழ்ச்சி என்ற அளவிலே மகிழ்ச்சி அடைகிறார்களே ஒழிய.... இதில் தவறு இல்லை எனினும்.....தரை பகுதியில் இந்திய அரசு இயந்திரத்தோடு மோதும் அளவுக்கு மாவோஸ்ட்டுகள் இன்னும் பலம் பெறவில்லை... இதில் அவர்களை குறைத்து மதிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை.. அவர்களின் பலம் அவ்வளவுதான்... சிலர் ஏனோ வீண் கனவு காண்கின்றனர்... தரை வழி பகுதில் இந்திய அரசு இயந்திரத்தோடு போராட சாத்தியமானால் மட்டுமே அனைதிந்திய விடுதலை சாத்தியம்... ஆனால் உண்மை இங்கு பன்னி குட்டி போட்டது போல ராணுவத்தில் சேர ஆள் உள்ளார்கள்.. இவன் பெங்களூர் IAF அலுவலகத்திலே இதை நான் கண்டிருக்கிறேன்...

P6032702.JPG

தரை வழியில் சமவெளியில் மாவோ தோழர்கள் ... இந்திய ராணுவத்தோடு மோதுவது சாத்தியமென்றால் தான் இது சாத்தியமாகும்... அதற்காக ஈடுபாடு உள்ளவர்கள் வெறும் கமென்டு எழுதுவதோடு நில்லாமல் உதவ முயற்சிக்க வேண்டும்... :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.