Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் அதிரடி: தெற்கு சீனாவுக்கு வடக்கு இந்தியாவுக்கு

Featured Replies

இந்து சமுத்தியரப் பிராந்தியத்தில் சீனா காட்டும் அதீத அக்கறை தொடர்பாக இந்தியா உன்னிப்பாக அவதானிதது வருகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்தியப் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார். குறிப்பாக இலங்கையில் சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியாவுக்குள்ள சந்தேகத்தையும் அவரது கருத்துக்கள் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. சீனா ஒரு தெற்காசிய நாடாக இல்லாது விட்டாலும் கூட, தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு மேலோங்கிவரும் பின்னணியிலேயே இந்தியாவின் சந்தேகங்கள் வெளிப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்தப் பிராந்திய வல்லாதிக்கப் போட்டிக் களமாக இலங்கை மாற்றமடைந்திருக்கும் நிலையில், புதிய பிரச்சினை ஒன்று உருவாகியிருக்கின்றது. இரு நாடுகளுமே போட்டி போட்டுக்கொண்டு இலங்கையின் பாரிய அபிவிருத்தி முயற்சிகளுக்கு உதவிகளை வழங்குவதுடன், மேலதிகமாக தமது நாடுகளிலிருந்து கணிசமான தொழிலாளர்களையும் இலங்கைக்குள் அனுப்பிவைக்கத் தொடங்கியுள்ளனர். அபிவிருத்தி மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு உதவுவதற்கு என அனுப்பப்படும் இந்தத் தொழிலாளர் பட்டாளம் இப்போது ஒரு புதிய நெருக்கடியை உருவாக்கத் தொடங்கியிருக்கின்றது.

அம்பாந்தோட்டை துறைதுமகத் திட்டம், தென்பகுதிக்கான விரைவு நெடுஞ்சாலைத் திட்டம், புத்தளம் பகுதியிலுள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையத் திட்டம் என பல பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் சீனா தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. இவற்றில் பணிபுரிவதற்கென ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும் இலங்கைக்குள் சீனா அனுப்பிவைத்திருக்கின்றது. சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படாத போதிலும் கூட சுமார் 25,000 க்கும் அதிகமான சீனத் தொழிலாளர்கள் இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் பணிபுரிவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களில் சிறைக்கைதிகளும் கணிசமானளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை உத்தியோகபூர்வ வட்டாரங்கள் எதுவும் மறுக்கவில்லை. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று தனது ஆசிரியர் தலையங்கத்திலேயே இது தொடர்பாகக் குறிப்பிட்டிருப்பது இந்தச் செய்தியை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. இவர்களுடன் சம்பந்தப்பட்ட சமூகப் பிரச்சினைகள் பல ஏற்கனவே உருவாகத் தொடங்கிவிட்டன. நுரைச்சோலையில் பணிபுரியும் சீனத் தொழிலாளர்கள் மூவர் 14 வயதான பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைவிட மேலும் சில குற்றச்சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சீனாவிலிருந்து குவியும் இந்தத் தொழிலாளர்களால் கொழும்பு, சிலாபம் மற்றும் அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் மினி சைனா ரவுண்கள் பல உருவாகியிருக்கின்றன. இவற்றிலிருந்து மேலும் புதிய சமூகப் பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

சீனாவின் ஆக்கிரமிப்புக்குப் போட்டியாக இந்தியாவும் இப்போது தனது ஆக்கிரமிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கின்றது. பலாலி விமானத்தள விஸ்தரிப்பு, சம்பூர் அனல் மின் நிலையப் பணி, வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50,000 வீடுகளை அமைக்கும் பணி, புகையிரதப் பாதை செப்பனிடும் பணி என இந்தியாவும் தமிழ்ப் பகுதிகளில் தனது கால்களை மீண்டும் பதித்திருக்கின்றது. இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவின் வருகையுடன் இந்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரமடையப்போகின்றது. சீனா தென்பகுதியில் தமது கால்களைப் பதிக்கும் அதேவேளையில், இந்தியா வடக்கு கிழக்கில் தமது கால்களைப் பதிப்பதற்கான வியூகங்களுடன் களத்தில் இறங்கியிருக்கின்றது.

வன்னியில் இந்தியா மேற்கொள்ளும் வீடமைப்புத் திட்டம் உட்பட ஏனைய திட்டங்களுக்காக இந்தியாவிலிருந்து 20,000 தொழிலாளர்கள் கொண்டுவரப்படவுள்ளார்கள். இவர்கள் வடக்கில் பணிபுரிவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சீனா கொண்டுவந்து குவித்துள்ள தொழிலாளர் படைக்குப் போட்டியாகவே இந்தியா இதனைச் செய்கின்றது என்பதை புரிந்துகொள்வது அவ்வளவு கடினமானதல்ல. சனத்தொகை அடர்தி குறைவாக உள்ள வன்னியில் இவ்வளவு பெருந்தொகையான இந்தியர்கள் குவிக்கப்படுவது இப்பகுதியின் சனத்தொகை விகிதாசாரத்தைப் பெருமளவுக்குப் பாதிப்பதாக அமையும். அத்துடன் இதனால் உருவாகக்கூடிய சமூகப் பிரச்சினைகளும் மோசமானதாகவே இருக்கும்.

இந்தியப் படை வடக்கு கிழக்கை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் சுமார் 70,000 இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்தது. குறிப்பிட்ட காலப்பகுதியில் அது 80,000 வரையிலும் அதிகரித்திருந்தது. அந்த எண்ணிக்கையில் சுமார் கால் பகுதி எண்ணிக்கையிலான தொழிலாளர்களை இப்போது அனுப்பிவைப்பதற்கு இந்தியா மேற்கொண்டுள்ள திட்டத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பது புரியவில்லை.

இப்போது கிழக்கு மாகாணத்திலும் 10,000 வீடுகளை அமைக்கப்போவதாக இந்தியா தெரிவித்திருக்கின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் சிவநேசத்துரையுடனான பேச்சுக்களின் போது இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் இதனைத் தெரிவித்திருக்கின்றார். ஆக, இந்தியா அனுப்பிவைக்கப்போகும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். கிழக்கு மாகாணத்துக்கும் அவர்கள் அனுப்பிவைக்கப்படப் போகின்றார்கள்.

இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றத்துக்காக 50,000 வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு இந்தியா முன்வந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். தமது உடமைகள், வாழ்வாதாராங்கள், உறவுகள் என அனைத்தையும் இழந்த மக்களுக்கான மீள்குடியேற்றத்துக்காக இலங்கை அரசாங்கம் கொடுப்பது வெறும் எட்டு தடிகளும், பத்து கூரைத் தகடுகளும்தான். இதனைவிட 5,000 ரூபா பணமாகவும் வழங்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதனைக் கொண்டு தமது இருப்பிடங்களையோ, வாழ்வாதாரங்களையோ மீளப்பெற முடியாது துடிக்கும் மக்களுக்கு இந்தியாவின் உதவிகள் ஒரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், தொழிவாய்ப்புக்களையும் இழந்துள்ள இந்த மக்களையே வீடமைப்புப் பணியிலும் ஈடுபடுத்தாமல் தமது நாட்டிலிருந்து அதற்கான தொழிலாளர்களையும் கொண்டுவர வேண்டும் என இந்தியா கருதுவதன் நோக்கம் என்ன என்பதுதான் புரியவில்லை. வெறுமனே சீனாவுடனான போட்டிக்காகச் செய்யப்படும் ஒரு செயற்பாடாகவே இது அமைந்திருக்கின்றது.

அதேவேளையில், வீடமைப்பபு, மற்றும் அபிவிருத்தித் திட்டப் பணிகள் பூர்தியானதும் இவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்ற கேள்வியையும் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலத் தினசரி ஒன்று எழுப்பியிருக்கின்றது.

இலங்கையின் இலகுவான விசா நடைமுறையைப் பின்பற்றி பெருவாரியான இந்தியத் தொழிலாளர்கள் ஏற்கனவே இலங்கைக்குள் குவிந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக ஹொட்டல்கள், உணவகங்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவும் பெருமளவு இந்தியத் தொழிலாளர்கள் இலங்கைக்குள் வந்திருக்கின்றார்கள். உல்லாசப் பயணிகளுக்கான விசா வழங்கும் நடைமுறையை இலங்கை இலகுபடுத்தியிருப்பதைப் பயன்படுத்தி வரும் இவர்கள், இங்கு தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது சட்டவிரோதமாகும்.

இவ்வாறு இந்தியத் தொழிலாளர்களின் வருகையால் பெருமளவு உள்ளுர் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கும் நிலையில் வடக்கு கிழக்கு மீள் கட்டுமாணப் பணிகளுக்கென ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் கொண்டுவரப்படுவது - வடக்குக் கிழக்குப் பகுதிகளில் காணப்படும் வேலையில்லாப் பிரச்சினையை நிச்சயமாக மேலும் தீவிரப்படுத்தும்.

போரினால் பாதிக்கப்பட்ட அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமாணப் பணிகளில் உள்ளுர்வாசிகளுக்கு எந்தவிதமான பங்களிப்பும் இருக்கப்போவதில்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே இந்திய - சீன தொழிலாளர்களின் வருகை உள்ளது. இது அடிப்படையான கோட்பாடுகளுக்கு முரணானதாகும். இவ்வாறான பணிகளில் உள்ளுர் வாசிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே பொருளாதாரக் கோட்பாடு.

ஆனால் இந்தச் செயற்பாடுகள் வேறு ஒரு நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றது என்பதைத்தான் இவ்விடயத்தில் இந்தியா மற்றும் சீனாவின் அணுகுமுறை உணர்த்துகின்றது. இவ்வளவு காலமும் போரினால் அவதிப்பட்ட மக்கள் இப்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிராந்திய வல்லாதிக்கப்போட்டியின் இடையில் சிக்கி...

படங்கள் பார்க்க இங்கே சொடுக்கவும்

பூராயத்துக்காக

கொழும்பிலிருந்து சத்தியன்.

Edited by ஊர்பூராயம்

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலை சீனாக்காரன் நின்றால் தான் தமிழ் பகுதிகள் அபிவிருத்தி அடையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கிலை சீனாக்காரன் நின்றால் தான் தமிழ் பகுதிகள் அபிவிருத்தி அடையும்.

வடக்கில மலைகள் இல்லை, தெற்கில மலைகள் இருக்குது, இதனால தெற்கில சீனாகார்னை நெட்டையாகவும் வடக்கில இந்தியாகாரனை குட்டையாகவும் காட்டும், இது இந்தியாவுக்கு அவமானம் அதனால இந்தியா தெற்கில நிக்கட்டும் சீனாகாறன் வடக்கில நிக்கட்டும் இதால இயல்பு நிலையில் மாற்றமும் ஏற்படாது :lol::wub::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.