Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசு சீனாவை நம்பி இந்தியாவை கைகழுவுகிறது

Featured Replies

இந்தியாவும் சீனாவும் பரம வைரிகள்.அதே நேரம் இரண்டு நாடுகளும் உலகின் சர்வவல்லமை பொருந்திய நாடுகளாக நிலைமாற்றம் பெற்று வருகின்றன.

மூன்றாவது உலகப் போர் இடம்பெறுமாக இருந்தால்,அது இந்தியாவுக்கும் சீனாவுக்கு மானபோரில் இருந்து ஆரம்பிப்பதாக அமையும்.அந்தளவிற்கு இரண்டு நாடுகளினதும் எதிர்த்தன்மை அதிகரித்த வண்ணமுள்ளதுடன் உலகமும் அந்த இரண்டு நாடுகளின்பால் பிளவு பட்டிருப்பதைக் காணமுடியும். இந் நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசு முற்பட்டது.

விடுதலைப் புலிகள் மீதான யுத்தத்தில் இந்தியாவிடம் முழுமையான உதவிகளைப் பெற்று போரில் வெற்றி கொண்ட இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு, இந்தியாவின் வற்புறுத்தலில் இருந்து விடுபடுவதற்கும்,இந்தியாவின் அச்சுறுத்தலை வெற்றி கொள்வதற்குமாக சீனாவை அதீதமாக ஆதரிக்கத் தொடங்கியது.

சீனாவை நாட்டிற்குள் ஊடுருவ விடுவதன் மூலம் இந்தியாவின் தடிப்பை மட்டுப்படுத்தவும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குமாறு இந்திய அரசு அழுத்தம் தருவதை எதிர்கொள்ளவும் சீனாவை உறவாக்குவதே ஒரே வழியயன இலங்கை அரசு முடிபு செய்தது. இத்தகையதொரு நிலைமையை இந்தியா உணர்வதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றே கூறவேண்டும். இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப் பிற்கு முடிபு கட்டவேண்டும் என்பது, காலஞ் சென்ற ராஜீவ் காந்தியின் மனைவி சோனியாவின் நிலைப்பாடாக இருந்தது.

மத்தியில் பலம் பெற்றிருக்கும்போது-தமிழகத்தில் தனது கூட்டணிக் கட்சியான தி.மு.க. ஆட்சி இருக்கும்போது விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட வேண்டும் என்ற சிந்தனையைத் தவிர இலங்கை அரசு பற்றி எந்தவித சந்தேகமும் இந்தியாவிடம் இருக்கவில்லை.

இதன் காரணமாகவே யுத்தம் முடிந்த கையோடு இலங்கைக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு “ எல்லாம் யாம் அறிவோம்” என்ற கர்ச்சிப்போடு கூறியிருந்தார். ஆனால் இப்போதுதான் இலங்கை அரசு சீனாவைத் தனக்கு துணையாக்கி தன்னை ஏமாற்றி விட்டது என்ற உண்மையை இந்தியா உணர்ந்து கொண்டது.

இதன் காரணமாகவே மக்களவையில் அமைச்சர் டி.ஆர்.பாலு இலங்கை அரசுக்கு எதிராக உரையாற்றியதும், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவின் இலங்கை விஜயமும் அமைந்தது எனலாம். எதுவாயினும் அண்டை நாடான இந்தியாவை ஏமாற்றுவதற்கு இலங்கை அரசு எடுக்கும் முயற்சியானது ஆபத்தானது என்பது மட்டுமல்ல-இலங்கைக்கு அடி கொடுக்க இந்தியா நினைத்தால் அவ்விடத்தில் சீனா தலையிட்டு இலங்கையைக் காப்பாற்ற முற்படாதென்பதும் தெரிந்த உண்மை.

அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் மிகச் சிறிய நாடான இலங்கைக்காக ,அந்த இரண்டு நாடுகளும் பகையை வேகப்படுத்த மாட்டா என்பதே உலக அனுபவமாகும்.

[ வலம்புரி ] - [ Sep 09, 2010 04:00 GMT ]

  • கருத்துக்கள உறவுகள்

இதன் காரணமாகவே யுத்தம் முடிந்த கையோடு இலங்கைக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு “ எல்லாம் யாம் அறிவோம்” என்ற கர்ச்சிப்போடு கூறியிருந்தார். ஆனால் இப்போதுதான் இலங்கை அரசு சீனாவைத் தனக்கு துணையாக்கி தன்னை ஏமாற்றி விட்டது என்ற உண்மையை இந்தியா உணர்ந்து கொண்டது.

இதன் காரணமாகவே மக்களவையில் அமைச்சர் டி.ஆர்.பாலு இலங்கை அரசுக்கு எதிராக உரையாற்றியதும், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவின் இலங்கை விஜயமும் அமைந்தது எனலாம்.

http://www.youtube.com/watch?v=o5MmvM2amAs

இப்படியே பேசிகிட்டேஏஏஏஏஏஏஏ இருந்தா எப்படி பாலு அவர்களே ... சட்டு புட்டு எதாவது செய்யுங்கோ

Unknown-8.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

இலங்கை நிலைகுறித்து அறியத் தருமாறு இந்தியாவிடம் அமெ. கோரிக்கை

நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட 18ஆவது திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பான தகவல்களை அறியத் தரும்படி இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளது.

இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் அரசியல் நிலைமைகள், பிராந்தியத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதனைத் தெளிவுபடுத்துமாறும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம், இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகள், வெளிவிவகாரம், அரசியல் சாசனத் திருத்தங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்தியாவிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி கோரிக்கையை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் மூன்று தினங்களுக்கு முன் விடுத்துள்ளதாகவும், இந்திய அரசாங்கம் அந்த அறிக்கையைத் தயாரித்து வருவதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=26952

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.