Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் உதயமாகிறது சர்வாதிகாரங்களும் நிறைந்த ராஜபக்ச சாம்ராட்சியம் - அச்சத்தில் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் உதயமாகிறது சர்வாதிகாரங்களும் நிறைந்த ராஜபக்ச சாம்ராட்சியம் - அச்சத்தில் மக்கள்

18 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தமானது மகிந்த ராஜபக்சவிற்கு சர்வ அதிகாரங்களையும் வழங்கிவிட்டது, இது சிறிலங்காவில் உருவாகப்போகும் ராஜபக்ச சாம்ராட்சியத்துக்கான ஒரு சமிக்கையாகவும் உள்ளது என நாட்டு மக்களால் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்காவினது கடிவாளத்தை தனது கைகளில் வைத்திருக்கும் மகிந்த ராஜபக்சவினால் தான் நினைத்தது எதையும் சாதிக்க முடியும்.

இது உள்நாட்டில் மட்டுமன்றி அனைத்துலக உறவுகளிலும் செல்வாக்கு செலுத்துகிறது.

225 நடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்காவினது நடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருப்பான்மையினைப் பெறுவதன் ஊடாக குடியரசு அதிபர் ஒருவர் இரண்டுமுறைதான் பதவியில் இருக்கலாம் என்ற கட்டுப்பாட்டினை இல்லாதுசெய்வதற்காக கடந்த செப்ரெம்பர் எட்டாம் நாள் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

18ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதானது அரசியலமைப்புசார் தடைகளை இல்லாதுசெய்திருப்பதோடு அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வழியினை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.

144 ஆசனங்களைக் கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசியலமைப்புச் சீர்திருத்தத்தினைக் கொண்டுவருவதற்கு ஏதுவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெறுவதற்கு மேலுமதிக ஆரசங்களைத் தனதாக்கவேண்டியிருந்தது. இருப்பினும் அதிபர் மகிந்த ராஜபக்சவினது சாதுரியமான அரசியல் தந்திரோபாயத்தின் விளைவாக இந்தச் சீர்திருத்தத்திற்கு ஆதரவாக 161 பேர் வாக்களித்திருந்தனர். 17 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்தார்கள்.

விட்டுக்கொடுப்புகள் எதுவுமற்ற அதிபர் ராஜபக்சவினது தளராத அரசியல் முன்னெடுப்புக்களைக் கையாளுவதில் எதிர்க்கட்சிகள் எவ்வளவு பிளவுபட்டிருக்கின்றன என்பதை அரசியலமைப்புச் சீர்திருத்த வாக்கெடுப்பு முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதனையுமே செய்யமுடியாத நாதியற்றவர்களாகக் காணப்படுகிறார்கள்.

"என்ன செய்யமுடியும், வரும் 12 ஆண்டுகளுக்கு ராஜபக்ச ஆட்சியில் இருக்கத்தான் போகிறார்" என எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுகிறார்.

உட்கட்சிப் பூசலினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் நாட்டினது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தினைப் புறக்கணித்ததோடு வாக்களிப்பிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்தது.

பதிலாக, பாராளுமன்றுக்கு வெளியே அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களை அது முன்னெடுத்திருந்தது. தனது ஆறு உறுப்பினர்கள் எதிர்க்கட்சியின் பக்கம் தாவி அரசியலமைப்புச் சீர்திருத்திற்கு ஆதரவாக வாக்களித்து தன்னை அவமானப்படுத்துவதைப் பார்ப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லைப் போலும்.

அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக வாக்களிப்பு இடம்பெறுவதற்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியும் துண்டு துண்டாக உடைந்ததோடு கூட்டணியில் அங்கம் வகித்த சில கட்சிகள் மகிந்த ராஜபக்சவிற்குத் தமது ஆதரவினை வழங்குவதாக அறிவித்தன.

இதன் விளைவாக 43 உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் தற்போது வெறும் 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இருக்கிறார்கள்.

அரசியலமைப்புச் சீர்திருத்தம் வாக்கெடுப்புக்காக விடப்படுவதற்கு முன்னரே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியிலிருந்த விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அறிவித்திருந்தது. ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரேயோரு சிங்கள இனத்தினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான சி.எச் பியசேனவும் அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.

1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் கீழ் சிறிலங்காவினது நிறைவேற்று அதிகாரங்கங்களைக் கொண்ட குடியரசு அதிபர் அதிகளவிலான அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறார். பாராளுமன்றினைக் கலைத்துவிட்டு அவசரகால நிலைமையினைப் பிரகடனப்படுத்துவதற்கு அவரால் முடியும். அதுமட்டுமன்றி ஏற்கனவே பாராளுமன்ற நடைமுறைகளின் ஊடாகச் சட்டமாகப்பட்ட சட்டத்தினைக் கூட நிறைவேற்று அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் குடியரசு அதிபரால் இல்லாது செய்முடியும்.

2009ஆம் ஆண்டினது நடுப்பகுதியில் சிறிலங்காவில் போர் முடிவுக்குவந்துவிட்ட பின்னரும் இன்னமும் அங்கு அவசரகாலச் சட்டம் தொடர்கிறது. நீதிபதிகள், முப்படைகளின் தளபதிகள், காவல்துறை, தேர்தல் ஆணையாளர் மற்றும் அரசாங்கத்தினது செயலாளர்களையும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட அதிபரே நியமித்துவருகிறார்.

அரசியலமைப்புச் சீர்திருத்தத்தினைக் கொண்டுவருவதன் ஊடாக ஏகபோக அதிகாரங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் குடியரசு அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும் என அண்மைய நாட்களில் எதிர்க்கட்சியினரும் மக்களமைப்புக்களும் வலியுறுத்தி வருகின்றன. அரசியலமைப்புச் சீர்திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்ற இவர்களது அவாவினை மகிந்த ராஜபக்ச பயன்படுத்தியிருக்கிறார்.

ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் உள்ளடக்கம் மற்றும் அதன் தன்மை தொடர்பாக மாத்திரம் எதிர்க்கட்சிகளும் மக்களமைப்புக்களும் தங்களது கடுமையான கரிசனைகளை வெளியிடவில்லை. மாறாக உண்மையில் இந்தச் சீர்திருத்தத்தினது சாதக பாதகங்கள் என்ன என்ற விவாதத்தில் ஈடுபடுவதன் ஊடாக மக்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கான கால அவகாசம் எதுவும் வழங்கப்படாது துரிதகதியில் அரசியலமைப்புச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

புதிய அரசியலமைப்புச்ச திருத்தமானது குறிப்பிட்ட ஒருவர் மூன்றாவது முறையாகவும் ஆட்சியில் இருப்பதற்கு வழிசெய்வதோடு ஏற்கனவே கொண்டுவரப்பட்ட 17ஆவது சீர்திருத்தத்தினைப் பாதிப்பதாகவும் அமைகிறது. மக்களமைப்புக்களும் எதிர்க்கட்சியினரும் குறிப்பாக இந்த இரண்டு விடயங்கள் தொடர்பாகவுமே அதிக கரிசனை கொள்கிறார்கள். நாட்டினது அரச நிர்வாகத்தில் உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கும் விடயத்தில் குடியரசு அதிபர் அதிக அதிகாரங்களைக் கொண்டிருப்பதற்கும் இந்தச் சீர்திருத்தம் வழிசெய்கிறது.

குறித்த ஒருவர் இரண்டு முறைதான் அதிபாராக இருக்கலாம் என்ற அரசியலமைப்புசார் கட்டுப்பாடுகள் இல்லாது செய்யப்பட்டிருப்பது அதிபர் ராஜபக்ச தனது அதிகாரத்தினை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான கால அவகாசத்தினை வழங்கும். அத்துடன் ராஜபக்சக்களே தொடர்ந்தும் ஆட்சிபீடம் ஏறுவதற்கும் இது வழிவகுக்கும். தென்னாசியப் பிராந்தியத்தினைப் பொறுத்தவரையில் இதுவொன்றும் புதிதல்ல. சிறிலங்காவில் மாத்திரமின்றி இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளிலும் இதுபோல குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஆட்சிபீடம் ஏறியிருக்கிறார்கள்.

ஆனால் நீண்ட பல ஆண்டுகளாகத் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், இன நல்லிணக்கம் மற்றும் அதனது சனநாயகக் கட்டமைப்புக்கள் மீளமைக்கப்படும் செயற்பாடுகள் இன்னமும் முழுமைபெறாத நிலையில் சிறிலங்கா இக்கட்டானதொரு காலகட்டத்தில் இருக்கிறது. இந்த நிலைமையில் ஏகபோக அதிகாரங்களுடன் அதிபர் ராஜபக்ச 16 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக ஆட்சியிலிருப்பதானது (அடுத்த அதிபர் தேர்தலிலும் தேர்ந்தெடுக்கப்பட்டால்) சனநாயக ஆட்சிமுறைக்கு இருக்கவேண்டிய அடிப்படைப் பண்புகள் அனைத்தும் சிறிலங்காவில் இல்லாதுபோகும் நிலைகூடத் தோன்றலாம்.

புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தமானது ஏற்கனவே கொண்டுவரப்பட்ட 17ஆவது சிர்திருத்தத்தினை இல்லதாது செய்தமை அரசியலமைப்புச் சபை செயலற்றுப் போவதற்கு வழிசெய்கிறது. 17ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் பிரகாரம் அரச உயர் பதவிகளை நியமிக்கும் போது அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைக்கு அமையவே குடியரசு அதிபரால் செயற்படமுடியும். ஆனால் சிறிலங்காவினது அரசியல் வரலாற்றில் 17ஆவது சீர்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த விடயம் செயற்படுத்தப்படவில்லை.

புதிய அரசியலமைப்புச்ச சீர்திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்புச் சபைக்குப் பதிலாக ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட புதிய சபை ஒன்று உருவாக்கப்படும். பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் பிரதமரும் தனித்தனியாக நியமிக்கும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் என ஐவர் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பார்கள். குழுவின் அங்கத்வர்களை நியமிக்கும் முறையினை அவதானிக்கும் போது இது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. முன்னர் நடைமுறையிலிருந்த அரசியலமைப்புச் சபையில் நாட்டினது அரசியலில் எந்தவகையிலும் தொடர்புபடாத வல்லுநர்களும் அங்கத்தவர்களாக இருப்பதற்கு வழிசெய்யப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், சபாநாயகர், தேர்தல் ஆணைக்குழு, பொதுச்சேவைகள் ஆணைக்குழு, தேசிய காவல்துறை ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, ஊழல் மற்றும் இலஞ்சத்திற்கு எதிரான நிரந்தர ஆணைக்குழு மற்றும் நிதி ஆணைக்குழு ஆகியவற்றின் உறுப்பினர்களை நியமிக்கும்போது பாராளுமன்ற சபையினது அங்கத்தவர்களின் அவதானிப்புக்களையும் உள்வாங்கி அதிபர் ராஜபக்ச செயற்படவேண்டும்.

பிரதம நீதியரசர், உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றினது நீதியாளர் மற்றும் சட்ட சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், தலைவரை நியமிக்கும் விடயத்திலும் அதிபர் பாராளுமன்றக் குழுவினது ஆலோசனையின் அடிப்படையிலேயே செயற்படவேண்டும்.

18ஆவது அரசியலமைப்புச் சீத்திருத்தமானது சர்வாதிகார ஆட்சி தலைதூக்குவதற்கே வழிவகுக்கும் எனக்கூறி எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்தச் சீர்திருத்தத்தினைக் கண்டித்திருந்தார்கள். அரசியலமைப்புசார் சர்வாதிகாரம் இந்த நாட்டில் உருவாவதற்கே புதிய இந்தச் சீர்திருத்தம் வழிசெய்திருக்கிறது என்றும் இதற்கு எதிரான புரட்சிகள் இடம்பெறுவதையா அரசாங்கம் விரும்புகிறது என சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியிருந்தார். பேரு நாட்டின் அதிபர் புஜிமீரோவினது எழுச்சியினையும் வீழ்ச்சியினையும் மனதிற்கொண்டா சரத் பொன்சேகா இந்தக் கருத்தினை வெளியிட்டிருக்கிறார்?

1990 தொடக்கம் 2000 வரையிலான காலப்பகுதியில் பேரு நாட்டினது குடியரசு அதிபராக அல்பேற்ரோ புஜிமீரோ மூன்றுமுறை ஆட்சியிலிருந்திருக்கிறார். சர்ச்சைகள் நிறைந்த இவரது ஆட்சிக்காலத்தின் போது இடதுசாரி கெரில்லாக்களை இல்லாதொழித்ததோடு நாட்டில் பொருளாதார உறுதிப்பாடு ஏற்படுவதற்கும் இவர் வழிசெய்திருந்தார்.

தனது ஆட்சிக்காலத்தில் கடுமையான அதிகாரங்களின் கீழ் மக்களை அடக்கியாண்டதாகவும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு வழிசெய்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் அதிபர் அல்பேற்ரோ புஜிமீரோ மக்கள் மத்தியில் செல்வாக்கு நிறைந்தவராகவே காணப்பட்டார். ஏப்பில் 1995ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெற்ற இவர் மீண்டும் ஆட்சிபீடம் ஏறினார்.

நாட்டினது அரசியலமைப்பின் பிரகாரம் பேரு நாட்டிலும் ஒருவர் இரண்டு முறைதான் ஆட்சியில் இருக்கலாம் என்ற கட்டுப்பாடுகள் இருக்கின்றபோதும் மூன்றாவது முறையாகவும் அல்பேற்ரோ புஜிமீரோ அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். எவ்வாறிருப்பும் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததைத் தொடர்ந்து 2000ஆம் ஆண்டு புஜிமீரோ யப்பானுக்குத் தப்பிச்சென்றார். ஐந்து ஆண்டுகள் நாடுகடந்து வாழ்ந்த அல்பேற்ரோ புஜிமீரோ 2005ஆம் ஆண்டு சிலிக்கு விஜயம் செய்தார். ஆனால் பிஜியில் ஏற்கனவே இவருக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் புஜிமீரோ கைதுசெய்யப்பட்டு பேரு நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.

ஆட்சியிலிருந்தபோது இலஞ்சம், ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டநிலையில் இவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அல்பேற்ரோ புஜிமீரோவினது உத்தரவின் பெயரில் இவரது கொலை அணி புரிந்த கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்காகவே இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட இந்த நிலைமைகள் சிறிலங்காவினது நிலைமைகளுடன் ஒத்துப்போகும் அதேநேரம், குறிப்பிட்ட ஒருவரிடம் பொதிந்துகிடக்கும் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும்போது மக்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதற்கான சிறந்த உதாரணம்தான் இது.

அரசியலமைப்புச் சீர்திருத்தம் - இந்தியா

நேர்மையாகக் கூறுவதானால் இந்தியாவினைப் பொறுத்தவரையில் அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்பது சிறிலங்காவினது உள்ளக கட்டமைப்பு மாற்றத்தில் கொண்டுவரப்படும் மாற்றமேயன்றி வேறெதுவுமில்லை. எவ்வாறிருப்பினும், சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவினது அதிகாரங்கள் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி அதிகரித்துச்செல்வது மற்றும் கால ஓட்டத்தில் மகிந்தவினது அதிகாரங்கள் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமிருப்பது என்பன இந்தியாவினைக் கரிசனையில் ஆழ்த்தியிருக்கிறது.

சிறிலங்காவினது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு நாட்டினது எதிர்க்கட்சிகள் பலமிழந்து நலிவடைந்து பிளவுபட்டுப்போயுள்ள நிலையில் அதிகாரத்தின் மீதுள்ள அதிபர் ராஜபக்சவினது பிடி உறுதியாகவுள்ளது. வரும் நாட்களில் தனது ஆட்சிப்போக்கினை அவர் மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்புக்களும் அரிதாகவே உள்ளது. தனது வெளிநாட்டுக்கொள்கை எதுவென்பதை ஆற அமர்ந்து முடிவெடுப்பதற்காக சுதந்திரமும் கால அவகாசமும் அதிபர் ராஜபக்சவிற்கு உள்ளது.

அதிபர் ராஜபக்சவிடமுள்ள இதுபோன்ற ஆடம்பரமான வசதிவாய்ப்புக்கள் இந்தியப் பிரதமரிடம்கூட இல்லை. இந்த நிலையில் சிறிலங்கா தொடர்பான தனது புதிய வெளிநாட்டுக்கொள்கையினை வடிவமைக்கவேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. தென்னாசியப் பிராந்தியத்திலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் சீனர்களின் பிரசன்னம் நாளுக்குநாள் அதிகரித்துச்செல்லும் நிலையில் சிறிலங்கா தொடர்பான புதிய வெளியுறவுக் கொள்கையினை வடிமைப்பது இந்தியாவினைப் பொறுத்தவரையில் மிகவும் அவசியமானதொன்றே.

இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தகத்திற்குத் தடையாக இருக்கும் அம்சங்கள் அனைத்தையும் களையும் வகையிலான உறவினைச் சிறிலங்காவுடன் ஏற்படுத்துவதற்கும் இந்தியா விரும்புறது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பில் முடிவுகளை எடுக்கக்கூடியவர் அதிபர் ராஜபக்ச மாத்திரம்தான் என்பதனால் சிறிலங்காவினது சிறுபான்மைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு அவர் எப்போது முடிவெடுக்கிறாரோ அப்போதுதான் சாத்தியமாகும். இந்தப் பிரச்சினையினைக் கூடியவிரைவில் முடித்துவிடுவதற்கு அவர் விரும்புவதாகத் தெரிகிறது. சிறுபான்மைத் தமிழர்களது பிரச்சினைக்கு அவசர அவசரமாக அரைகுறைத் தீர்வு முன்வைக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை. இந்த மாதத்தின் முதற்பகுதியில் சிறிலங்காவிற்கான இந்தியாவின் சிறப்புத் தூதுவர் நிருபாமா கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தின் போது இந்தியாவின் இந்த எண்ணம் வெளிப்பட்டிருந்தது.

"இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தான் கவனம் செலுத்திவருவதாக ராஜபக்ச கூறுகிறார். ஏற்கனவே அவரிடமுள்ள எண்ணத்தின் படி தீர்வினை முன்வைக்கப்போகிறாராம். வெறுமனே பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியுடன் தொடர்புடைய விடயங்களில் மாத்திரம் கவனத்தினைச் செலுத்தாது அதற்கு அப்பாலும் சென்று நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமானது. இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என இந்தியா கருதுகிறது என்பதை அவர்கள் அறிவார்கள் என நான் நம்புகிறேன்" என சிறிலங்காவிற்கான பயணத்தின் போது நிருபாமா கூறுயிருந்தார்.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இந்தியாவினது வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா சிறிலங்காவிற்கான பயணத்தினை மேற்கொள்ளும்போது இந்த விடயம் தொடர்பான விரிவான பேச்சுக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டினது ஆட்சி முறையிலுள்ள சனநாயகப் பண்புகளை அரசியலமைப்புச் சீர்திருத்தமானது சீர்குலைத்துவிட்டது என ஐக்கிய அமெரிக்கா கண்டித்திருக்கிறது.

ஏனைய மேற்கு நாடுகளும் இதுபோன்ற கருத்தையே கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், போரின் இறுதி நாட்களில் மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் இடம்பெற்றதாகக் கூறும் சர்வதேசத்தினது புதிய குற்றச்சாட்டுக்கள் மீண்டுமொரு முறை தலைதூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் இடைவிடாத கோரிக்கைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் தனது நிலைப்பாட்டினை மாற்றுவதற்கு விரும்பவில்லை என்பதையே சிறிலங்காவினது வெளிவிவகார அமைச்சரது அண்மைய கூற்று எடுத்துக்காட்டுகிறது.

இந்தப் புறநிலையில் சர்வதேச அரங்கில் இந்தியாவினது ஆதரவு சிறிலங்காவிற்கு மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. மேற்கில் பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், சிறிலங்காவிற்கு இந்தியாவிடமிருந்து மேலுமதிக பொருளாதார உதவிகள், முதலீடுகள், உட்கட்டுமான மேம்பாடு மற்றும் புனர்வாழ்வுக்கான உதவிகள் கிடைப்பது அவசியமானதாகலாம்.

ஆதலினால் அதிபர் ராஜபக்சவிடம் அதிக அதிகாரங்கள் வந்து குவியும் இந்தச் சூழமைவுக்கு ஏற்றவாறு இந்திய புதியதொரு மூலோபாயத்தினை வகுப்பது அவசியமாகிறது.

http://www.sankathi.com/index.php/news/010810/51/main36_fullarticl.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜபக்ஷ சர்வாதிகாரியாக மாறவேண்டுமென்பதே வெளியுலத்தினதும் இந்தியாவினதும் அவா. அப்ஆபாது தான் தமிழனும் சிங்களவனும் இவனைக்கொல்லவேணடும் என்று விரும்புவார்கள். ஆனால் அவர்களால் இயலாமல் இருக்கும். அப்போது ராஜபக்ஷ மீது அபாண்டமான பழியைச்சுமத்தி கிடலர் என்று வெளியுலகம் சொல்ல வைத்து அந்நாட்டு மக்களின் அனுசரணையுடன் அங்கு சென்று கூடாரம் அமைக்கலாம் என்பது தான் மேற்குலகமும், இந்தியாவும் சீனாவிற்கு எதிரான சாடல்களின் திட்டமிடல் ஆகும். சர்வாதிகாரத்தை எதிர்hபார்த்து ஓடு மீனோட ஊறுமீன் வருமளவும் வாடிஇருக்குமாம் கொக்கு (கொக்கு என்பது இந்தியாவும், மேற்குலகமும்) சிங்களவன் இப்போது புத்திசாலியாகத்தெரியலாம். ஆனால் முட்டாள் ராஜபக்ஷ அன் கொம்பனி முள்ளிவாய்க்கால் அவலக்குரல்கள் சும்மவிடுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷ சர்வாதிகாரியாக மாறவேண்டுமென்பதே வெளியுலத்தினதும் இந்தியாவினதும் அவா. அப்ஆபாது தான் தமிழனும் சிங்களவனும் இவனைக்கொல்லவேணடும் என்று விரும்புவார்கள். ஆனால் அவர்களால் இயலாமல் இருக்கும். அப்போது ராஜபக்ஷ மீது அபாண்டமான பழியைச்சுமத்தி கிடலர் என்று வெளியுலகம் சொல்ல வைத்து அந்நாட்டு மக்களின் அனுசரணையுடன் அங்கு சென்று கூடாரம் அமைக்கலாம் என்பது தான் மேற்குலகமும், இந்தியாவும் சீனாவிற்கு எதிரான சாடல்களின் திட்டமிடல் ஆகும். சர்வாதிகாரத்தை எதிர்hபார்த்து ஓடு மீனோட ஊறுமீன் வருமளவும் வாடிஇருக்குமாம் கொக்கு (கொக்கு என்பது இந்தியாவும், மேற்குலகமும்) சிங்களவன் இப்போது புத்திசாலியாகத்தெரியலாம். ஆனால் முட்டாள் ராஜபக்ஷ அன் கொம்பனி முள்ளிவாய்க்கால் அவலக்குரல்கள் சும்மவிடுமா?

இந்தியா உள்ளே போக வழிதேடுது என்பது உண்மைதான்..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.