Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெளத்த நெறிமுறைகளை பின்பற்றி சமூகத்தை கட்டியயழுப்ப வேண்டும் - நியூயோர்க்கில் ஜனாதிபதி உரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்த நெறிமுறைகளை பின்பற்றி சமூகத்தை கட்டியயழுப்ப வேண்டும் - நியூயோர்க்கில் ஜனாதிபதி உரை

[ வலம்புரி ] - [ Sep 23, 2010 04:00 GMT ]

பெளத்த நெறிமுறைகளைப் பின்பற்றி சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நேற்று நடைபெற்ற ஐ.நாவின் புத்தாயிரமாண்டு அபிவிருத்தி இலக்குகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் பொருளாதார சமூகக் கொள்கைகளில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் வளமான சமூகத்தை கட்டியயழுப்ப முடியும். ஆரம்ப நிலைக் கல்வி, இரண்டாம் நிலைக் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி ஆகிய வற்றில் இலங்கையில் பால்நிலை சமத்துவம் உச்சளவில் பேணப்பட்டு வருகிறது. தொழிற் சந்தையில் போட்டி போடக்கூடிய வகையில் கல்வி முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய சவால்களையே இலங்கை தற் போது எதிர்நோக்கி வருகின்றது. சிசுக்கள் மற்றும் 5 வயதுக் குழந்தைகளின் இறப்பு வீதம் வெகுவாகக் குறைந்துள்ளது.

1990 ஆம் ஆண்டு ஆயிரம் குழந்தை களுக்கு 32 குழந்தைகளாகக் காணப்பட்ட இறப்பு வீதம் 2009 ஆம் ஆண்டு 11.3 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. தொற்றாத நோய்களினால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் குறித்து இலங்கை கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. உதவி வழங் கும் நாடுகளினால் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அளிக்கப்படும் வாக்கு றுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.

உதவி வழங்கும் நாடுகள் யதார்த்தமான முறையில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான உதவிகளை வழங்க வேண் டும். துரதிர்ஷ்டவசமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வெளிச் சக்திகளிடமி ருந்து கிடைக்கப் பெறும் உதவிகள் வரை யறுக்கப்பட்டுள்ளது. நிலையான அபிவிருத்திப் பாதையை நோக்கிச்செல்ல வேண்டுமாயின் இடையறாத ஒத்துழைப்பு அவசியமானது. மிலேனிய இலக்குகளில் கணிசமான அளவு இலக் குகளை இலங்கை எட்டியுள்ளது.

3 தசாப்த யுத்தம் மற்றும் சுனாமி அனர்த் தம் போன்ற அழிவுகளைச் சந்தித்த போதிலும் இலங்கை அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய பயணத்தைக் கைவிடவில்லை. மிலேனிய அபிவிருத்தி இலக்குகளைக் கருத்தில் கொண்டே இலங்கையில் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மகிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தின் மூலம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெ டுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

" பெளத்த நெறிமுறைகளை பின்பற்றி சமூகத்தை கட்டியயழுப்ப வேண்டும்" - ......

அறுபத்தி இரண்டு வருடங்களுக்கு மேலாக பெளத்த நெறிமுறைகளை பின்பற்றி இருந்தால் சமூகத்தை கட்டியயழுப்ப வேண்டிய தேவை இருந்திருக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.