Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுவெறியனை மாற்றும் மந்திரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுவெறியனை மாற்றும் மந்திரம்

young-dionysus-4thc-bce.jpg

மனிதன் மதுவை குடிக்கிறான் என்றாலும் உண்மையில் குடிக்கப்படுவது மதுவல்ல. மனிதனின் வாழ்க்கைதான், மதுவில் கிடைக்கும் சுகங்களைப் பற்றி பகிரங்கமாக குடிகார்கள் பேசுவதை காதுபட கேட்கிறோம், சில திரைப்படங்களில் மது அருந்துவது சாதாரண மனிதனை கூட ராயல் சொசைட்டி வாசிகளாக மாற்றி விடுவதாக மாயப்பிரச்சாரம் செய்யப்படுகிறது,

உண்மையில் மது மனிதனின் மனிதத்தன்மையை கெடுத்து மிருக நிலைக்கு தள்ளிவிடுகிறது, இன்னும் எத்தனையோ கொடுமைகளையும். கஷ்டங்களையும். கேவலங்களையும் அடுக்கி கொண்டே போகலாம், மதுப் பழகத்தின் கொடுமை. மது அருந்துபவர்களுக்கு தெரியாதா என்றால் நிச்சயமாக அவர்கள் அதன் கொடுமையை நன்கு உணர்ந்தே தொடர்ந்து அந்த பழக்கததில் ஊறிக்கிடக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும், கொடுமையை தெரிந்தும் அதை ஏன் மீண்டும் செய்கிôறர்கள் என்ற வினா எழும்புவது இயற்கையே

Brass-Wine-Pot_t.jpg

ஒரு காலத்தில் குடிகாரர்களை நான் ஆத்திரத்தோடும் அருவருப்போடும் தான் அணுகி வந்தேன், வேண்டுமென்றே அவர்கள் இந்த தீய பழக்கத்தை சிறிதும் பொறுப்பு இல்லாமல் செய்து வருகிறார்கள் என்றே நம்பி இருந்தேன், ஆனால் “சிக்மெண்ட் பிராய்டு ” ‘ஜான் லாக்’ போன்ற மனோதத்துவ அறிஞர்களின் கருத்துக்களை படித்தும் அனுபவ ரீதியாக பார்த்தும் எனது முந்தைய ஆத்திரமும். அருவறுப்பும் தேவையற்றது என்பதை உணர்ந்தேன், அவர்களின் கருத்துக்கள் குடிகாரர்களின் பேரில் ஒருவித அனுதாபத்தையும். கழிவிரக்கத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது,

குடிப்பழக்கத்தை பற்றிய வரலாற்றை தேடி எடுத்தோம் என்றால் நமக்கு பெரும் அதிர்ச்சியும். வியப்பும் ஏற்படுகிறது, புறநானூற்றுப் பாடல்கள் பலவற்றில் அக்கால தமிழ் அரசர்கள் தமது நண்பர்களுக்கு கொடுத்த பெரும் விருந்துகளில் தாராளமாக மதுவகைகள் பரிமாறப்பட்டதை பற்றிய குறிப்பிகள் விரிந்து கிடக்கின்றன, வேத காலத்திலும் பலவிதமான யாகங்கள் செய்து முடித்த பின் யாகங்களில் கலந்து கொண்டவர்களுக்கு ஃசோமபாணம். ஃசுறாபாணம்ஃ போன்ற மது வகைகள் அளிக்கப்பட்டதற்கான விவரங்கள் மண்கலசங்களில் சீலிடப்பட்ட நாள்பட்ட திராட்சைளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு விதமான மது காந்தார தேசம் அதாவது இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து பரத வருஷம் முழுக்க கொண்டு வரப்பட்டது பற்றிய விவரங்கள் ஆதாரபூர்வமாக இன்று நமக்கு கிடைத்துள்ளது,

drinking-ap.gif

எகிப்திய பிரமிடுகளின் சுவர்களில் அக்காலத்தில் மது எவ்வாறு தயாரிக்கப்பட்டது, அது மன்னர்களையும். மக்களையும் எப்படியெல்லாம் ஆட்டுவித்தன என்பது பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளன, ரோமானிய சாம்ராஜ்யம் அதீதமான மது பழக்கத்தினாலேயே அழிந்து போனதாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்,

ஆதிகாலம் தொட்டே மனித சமுதாயத்தை மதுவின் மோகம் பிடித்து ஆட்டுவதற்கு என்ன காரணம்? என்று நாம் சிந்தித்தோம் என்றால் மனோவியல். உடலியல். சமூவியல் ஆகிய முப்பரிமாண கோணத்தில் அணுகினால் தான் முழுமையான விடை நமக்கு கிடைக்கும்,

தாய்ப்பால் அருந்துகின்ற குழந்தை பிராயத்தில் ஏற்படும் பலவிதமான ஏக்க உணர்வுகளும் ஏமாற்றங்களும் ஆழ்மனதில் பதிந்து வாலிப பருவத்தில் குடிப்பழக்கமா உருவெடுக்கிறது, மனோதத்துவ அறிஞர்கள் கூறும் இக்கருத்து குடிகாரர்களின் மனதை பகுந்து ஆராய்கின்றபோது முழுக்க முழுக்க உண்மையானதென்பதை நான் அறிந்திருக்கிறேன்,

வாழ்க்கையில் ஏற்படுகின்ற கசப்பான அனுபவங்கள் திடீர் இழப்புகள். நண்பர்களின் கூட்டமைப்புகள் போன்ற காரணிகளும் மது அருந்தினால் சமுதாய அந்தஸ்து உயரும் என்ற போலியான நம்பிக்கையும் மது உடலுக்கு அளப்பறிய சக்தியை தரும், மூளையை சுறுசுறுப்பு அடைசெய்யும் என்ற ரீதியலான கருத்துக்களும் மது அருந்துதலுக்கு வேறு சில காரணங்களாக அமைகிறது

எந்தக் காரணம் எப்படி இருந்தாலும் மது அருந்துபவர்கள் அதனால் கிடைக்கும் சில மணிநேர சந்தோஷத்திற்காகவே குடிக்கிறார்கள், அந்த சந்தோஷ தேடுதல் அதிகமாகும்போது தொடர்ந்து குடித்து மது அடிமைகளாகி விடுகிறார்கள், இவர்களிடம் கேட்டால் மது மகிழ்ச்சி தருவது என்ற இந்த காரணத்தை கூறுகிறார்கள்,

உண்மையிலேயே மது சந்தோஷாத்தை தருமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூற வேண்டும், காரணம் மனிதர்களை அடிமைப்படுத்தும் மது. மாது. சூது போன்ற எந்த தீயப்பழகத்திலும் உண்மையான இன்பம் இல்லை, மாறாக நமக்குள்ளேயே தான் இன்பம் நிசப்தமாக உறங்கி கிடக்கிறது,

சூரியனில் வெளிச்சம் இருக்கிறது, சூரியனுக்கு எதிரே கண்ணாடியை பிடித்தால் கண்ணாடியில் இருந்து வெளிச்சம் வேறு இடத்துக்கு பிரதிபலிக்கும், இதைப் பார்த்து வெளிச்சம் கண்ணாடியில் இருந்துதான் வருகிறது என்று வாதிடுவது எவ்வளவு தவறோ அவ்வளவு தவறானது மதுபான லாகிரியில் இருந்து இன்பம் கிடைக்கிறது என்று சொல்வதாகும்,

அதாவது மகிழ்ச்சி என்பது நமது ஆழ்மனதிற்குள் வருங்கால சிந்தனை. கடந்த கால சிந்தனை போன்ற திரைகளால் மறைக்கப்பட்டு இருக்கிறது, எதிர்கால. வருங்கால. நினைவுகளை. வீழ்óத்தி நிகழ்காலத்தில் நம் புலன்கள் ஐந்தையும் நிலை நிறுத்தும் போது சாஸ்வதமான சந்தோஷம் நம்மை சூழ்ந்து கொள்கிறது,

மதுபோன்ற லாகிரி வஸ்துக்களை பிரயோகப்படுத்தும் போது சில வினாடி நேரம் மட்டும் நம் மனம் தற்கால சிந்தனையில் நின்று ஒரு நிரந்தமற்ற மகிழ்வை தருகிறது, மீண்டும் மீண்டும் அந்த மகிழ்வை சுவைக்கவே தேனுக்குள் விழும் ஈக்கள் போல் மதுவை நாடி மதியை இழக்கிறார்கள் குடிகாரர்கள்,

தொடர்ச்சியான மதுப்பழக்கம் மனித உடலின் சில உறுப்புகளை நாளா வட்டத்தில் கரையான் அரிப்பதை போல் அரித்து சீரழித்து விடுகிறது, குடல்புண் ஏற்பட்டு ரத்த கசிவினாலும் குடல் நாளங்கள் வெடித்து இரத்த ஒழுக்கினாலும் மரணம் சம்பவிக்கவும். கல்லீரல் கரணை (இண்ழ்ற்ட்ர்ள்ண்ள்) நோய் இருதயம் நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் திறன் இழப்பதும். வாய். தொண்டை. உணவு குழாய்களில் புற்று நோய்கள் ஏற்படவும் மூளையும் நரம்பு மண்டலம் தாக்கபடவும் மது பழக்கம் மூல காரணமாக அமைகிறது, அருந்திய சிறிது நேரத்தில் மனிதனின் மூளையை மது பாதிப்படைய வைக்கிறது, இதனால் அவன் மனநோயால் பாதிக்கப்பட்டவன் போல் நடந்து கொள்கிறான், இரத்தத்தில் சேரும் ஆல்கஹாலின் (அப்ஸ்ரீட்ர்ஸ்ரீப்ர்) அளவுக்கு ஏற்றபடி குடிகாரனின் மனதில் ஒரு வித கேளிக்கை மனப்பான்மையும். போலியான மன எழுச்சியும். அதிகமான பேச்சும் ஏற்படுகிறது, நேரம் செல்ல செல்ல மனகுழப்பம் ஏற்பட்டு மேலெழுந்த வாரியாக பேச்சும் உண்மை குறைந்து பொருளற்றதாக உள்ள வார்த்தைகளும் வெளிப்படும், தான் மிக்க சக்தி வாய்ந்தவன் என்றும் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்றும் அளவுக்கு அதிகமான தற்பெருமையும் மற்றவர்களின் மீது பொருளற்ற எரிச்சலும் கூச்சமின்மையும் ஏற்பட்டு சுற்றுப்புறச்சூழலுக்கு இடைஞ்சலான பல காரியங்களை அவன் செய்ய முற்படுகிறான்.

மதுபழக்கம் முற்றிப்போன காலத்தில் தனது செயல்கள் எதையுமே கட்டுப்படுத்தும் திறன் குடிகாரனுக்கு இல்லாது போவதோடு அல்லாமல் உணர்ச்சி அற்றவனாகவும் புலன் திறன்கள் குறைந்தவனாகவும் ஆகிறான், நாள் செல்ல செல்ல எலிகள். பாம்புகள். நாய் மற்றும் பூனைகள் இன்னும் ஏதேதோ விசித்திர விலங்குகள் தன்னை தாக்க வருவதாகவும் தனது காதுகளில் பயமுறுத்தும் பல ஒலிகள் கேட்பதாகவும். தன்னை யாரோ சதாசர்வகாலமும் கண்காணிப்பதாகவும் பல அமானுஷ்ய சக்திகள் தனக்கு வந்துவிட்டதாகவும் கூறுவார்கள், விஸ்கி சாப்பிட்டவுடன் தன்னிடம் மாரியம்மன் வந்து பேசுவதாக கூறிய பரிதாபகரமான ஒரு குடிகாரரை நான் சந்தித்து இருக்கிறேன்.

மேலும் குடிகாரர்களுக்கு உடல். கை. கால்களில் நடுக்கம் பரபரப்பான மனநிலை. அதிகமான இரத்த அழுத்தம் இதயதுடிப்பு. குமட்டல் அளவுக்கு அதிகமான வியர்வை போன்றவைகளும் ஏற்படும, இந்த நிலையில் பிறரைத் தாக்கவும் வேறு சிலர் வன்முறை செயல்களில் ஈடுபடவும் கூடும், இவர்களுக்கு தயமின். நியாசின் முதலிய வைட்டமின்கள். குறைந்து மூளை நரம்பணுக்கள் சிறிது சிறிதாக சிதைவடைந்து காலநேர சூழ்நிலையை முற்றிலுமாக கருத்தில் கொள்ளாத நிலை ஏற்படும்,

scan0001.jpg

மது ஒரு மனிதனை தனிப்பட்ட ரீதியில் பாதிப்பதோடு அல்லாது மூளை மற்றும் பாலுறுப்புகளில் பெரும் கேடு ஏற்படுத்துவதால் அவனது இல்லத்தையும் குடும்ப அங்கத்தினர்களின் அமைதியான வாழ்க்கையையும் கெடுத்து சமூக சீர்கேட்டிற்கு வழி வகுத்துவிடுகிறது,

இன்று நாட்டில் நடக்கும் பல குற்ற செயல்களுக்கு மதுவே மூலகாரணமாக அமைந்து இருக்கிறது என்பதை எல்லோரும் அறிவார்கள், பாலியல் வல்லுறவுகள். சூறையாடல்கள். தெருச்சண்டைகள் மற்றும் பெருவாரியான வன்முறை கலகங்கள் அனைத்தையும் மதுவிற்கு அடிமையானவர்களே நிகழ்த்துகிறார்கள், இப்படிப்பட்ட இந்த கொடிய அரக்கனை ஒழித்துவிட முடியாதா? என்றால் நிச்சயமாக பொருள் முதல் வாத சிந்தனை அரசும். வணிகர்களும் இருக்கும் வரை மது அரக்கனை ஒழிக்க முடியாது என்றே சொல்லலாம், மேலும் சட்ட திட்டங்களால் மட்டும் மதுபழக்கத்தை ஒழித்து விடலாம் என்று அறுதியிட்டு கூற இயலாது, மதுவுக்கு எதிரான சிந்தனையை குழந்தை பருவத்தில் இருந்தே ஏற்படுத்த வேண்டும், இதற்கான மனோதத்துவ அடிப்படையில் அமைந்த தனிப்பிரிவை ஏற்படுத்தி மக்களை அதன் வழியில் செலுத்த வேண்டும், மதுவால் உடலுக்கு. மனதுக்கு சமூகத்திற்கு ஏற்படும் தீங்குகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த கொடுமையால் அவதியுறுகிறவர்கள் வாழ்க்கையை தொலைத்தவர்கள், அதிலிருந்து எப்படி வெளிவருவது முற்றிலுமாக விடுதலை அடைந்து அதற்கான வழிவகைகள் என்ன என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது, அந்த வழிவகைகளை கீழே கூறுகிறேன்.

முதலில் மதுவுக்கு அடிமையானவர்கள் உடம்பிலிருந்து நச்சுத்தன்மையை முற்றிலுமாக நீக்க அவர்களுக்கு அகத்திக்கீரையை தொடர்ந்து கொடுக்க வேண்டும், அகத்திகீரையில் உள்ள சில விசேஷ அமிலங்கள் ஆல்கஹாலின் வீரியத்தை கட்டுப்படுத்திவிடும், அதன்பின் மது பழக்கத்தில் இருந்து வெளிவருவதற்கான விசேஷ மூலிகை கூட்டு வைத்தியம் உள்ளது. அதை பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் தனது வாழ்நாளில் அந்திம காலம் வரையில் மதுவின் பக்கமே செல்ல மாட்டார்கள்,

இது குடிகாரர்கள் ஒத்துழைப்போடு செய்யும் வைத்தியம் ஆகும், ஒத்துழைக்காதவர்களுக்கு என்ன செய்வது? அவர்களுக்காக அவர்கள் மீது தீவிர அன்பு வைத்திருக்கும் வேறொருவர் பிரத்யேகமான ஒரு வழியை பின்பற்றலாம், அப்படி பின்பற்றும் போது குடிகாரர்கள் தானாக குடியை நிறுத்திவிடுவார்கள், இதை படிக்கும் போது உங்களுக்கு ஆச்சர்யம் ஏற்படும்,

அவ நம்பிக்கையும் ஏற்படலாம், ஆனால். இப்படியொரு விசித்திர சிகிச்சை முறை சித்தர்கள் வைத்து இருக்கிறார்கள், ராமனுக்கு தலைவலித்தால் ராபர்ட் மருந்து சாப்பிடும் விந்தை வைத்தியத்தை வேறொரு கட்டுரையில் சொல்கிறேன், இப்போது விஷயத்திற்கு வருகிறேன், குடிகாரர்களை குடிக்காமல் செய்ய ஒரு இரகசிய மந்திரம் உள்ளது, அதை வாசகர்களின் நலன் கருதியும் மக்களின் முன்னேற்றம் கருதியும் வெளியிடுகிறேன்,

ஓம் யங் சங் ரங் மங் க்லீம் கும்பட் நசி நசி ஸ்வாஹா

meditation.jpg

இந்த மந்திரத்தை குடிகாரர்களின் பெயரை சொல்லி அவர்களின் குடிபழக்கத்தை கைவிட ஸ்ரீராமசந்திர மூர்த்தியை மனதில் நினைத்து தினசரி 108 முறை சூரிய உதயத்திற்கு முன் 91 நாட்கள் தொடர்ச்சியாக குடிகாரரின் தாய். தந்தை.. மனைவி அல்லது மகன் (இரத்தம் சம்பந்தப்பட்ட உறவு) இப்படி யார் வேண்டுமானாலும் சொல்லி வந்தால் குடிமகன் திருமகனாகி விடுவான்,

இந்த மந்திரத்தை பயன்படுத்தி பலர் நல்வாழ்க்கை பெற்றுள்ளார்கள், நீங்களும் உங்களை சார்ந்த குடிகாரர்களை திருத்த இந்த மந்திரத்தை பயன்படுத்தி பாருங்களேன்,

sri+ramananda+guruji.JPG

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் :

http://ruthra-varma.blogspot.com/2010/08/blog-post_22.html

.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் யங் சங் ரங் மங் க்லீம் கும்பட் நசி நசி ஸ்வாஹா :unsure::):D

நெற்றியைப் பார்த்தாலே தெரிகின்றது

ராமானந்தா எங்களுக்கும் நாமம் போட வந்திருக்கின்றார்.

வாத்தியார்

*********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.