Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முறைப்படி வேண்டுகோள் விடுத்தால் பொன்சேகாவுக்கு மன்னிப்பு -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முறைப்படி வேண்டுகோள் விடுத்தால் பொன்சேகாவுக்கு மன்னிப்பு - மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு

திகதி:03.10.2010

பொலன்னறுவையில் நேற்று முன்தினம் பெளத்த மதத் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வொன்றில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச,

“சரத் பொன்சேகாவுக்கு இராணுவ நிதீமன்றம் வழங்கிய தீர்ப்பை நான் ஏற்றுக் கொண்டது தனிப்பட்ட பழிவாங்கல் அல்ல.

நானே நியமித்த இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை நானே ஏற்கா விட்டால் அந்த நீதிமன்றக் கட்டமைப்புக்கே அவமானத்தை ஏற்படுத்தியதாக அமையும்.

சரத் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்குதல் சம்பந்தமாக முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டால் கவனம் செலுத்தப்படும்.

இது நிதி மோசடி சம்பந்தமான குற்றமாகும்.

அவர் என்னைக் கொலை செய்யப் போவதாகக் கூறிய போதும் நான் அது சம்பந்தமாக ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.

சிறிலங்கா அதிபர் என்ற வகையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டால் மன்னிப்பு அளிக்க முடியும் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கேற்ப முறைப்படி செயற்பட்டால் அது தொடர்பாக கவனத்தில் கொள்ள முடியும்.

இராணுவ நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு ஒன்றும் புதியதல்ல. இந்த நீதிமன்றத்தின் மூலம் சுமார் 8000 பேர் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்“ என்று மேலும் தெரிவித்தார்.

sankathi

Power grab in Sri Lanka ( Editorial, Japan Times) ( Wednesday, Sept. 22, 2010 )

சிங்களத்துக்கு அதிக பண உதவி செய்யும் ஜப்பான் கூட மகிந்தரின் போக்கை விரும்பவில்லை என இந்த ஜப்பானின் முன்னணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் சொல்லுகின்றது.

One year ago, Gen. Sarath Fonseka was a hero in Sri Lanka. As head of the army, he played a key role in crushing the Tamil insurgency that had waged civil war against the government in Colombo for decades.

Last week, Mr. Fonseka — he had already been dishonorably discharged for politicking while in uniform — was found guilty of fraud by a military court and faced the prospect of jail time.

Mr. Fonseka was charged with bypassing official procurement procedures and involving his son-in-law in those deals. Most observers believe his real crime was running against President Mahinda Rajapaska in the presidential election earlier this year.

His conviction appears to be part of a broader campaign to silence administration critics. The signs are troubling.

The Parliament recently agreed to remove presidential term limits from the constitution, allowing Mr. Rajapaska to run for a third term. That vote followed a Supreme Court ruling that a referendum was not required to make the change. The constitutional amendment also eliminates several checks on the president's power to appoint members of key posts such as Supreme Court judges and electoral commissions. With the virtual collapse of the opposition, the president is now unchallenged.

Supporters say Mr. Rajapaska's popularity provides a compelling reason to eliminate checks on his authority. They also claim those institutions slow government down at a time when Sri Lanka needs to rebuild after a horrific civil war.

Sri Lanka's needs are dire, but efficiency should not be a justification for the shredding of the constitution, even if a majority backs those steps — and especially in a society as deeply divided as Sri Lanka.

Now, more than ever, there needs to be sensitivity to the concerns of the minority and resistance to the consolidation of power and the stripping of checks on an administration that has been thin skinned about challenges and criticism.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் சீனாவுடன் அதீத நட்பை வளர்த்துக்கொள்ளும்போது ஜப்பானுக்கு இடிக்கும்தானே..! :unsure:

மன்னிப்புக்கோரி ஜனாதிபதியிடம் மேன்முறையீடு செய்யும் திட்டங்கள் எம்மிடம் இல்லை. அவர் (பொன்சேகா) எந்தவொரு குற்றத்தையும் இழைத்திருக்கவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.

கேள்வி மனு நடைமுறைகளை மீறிய குற்றத்திற்காக 30 மாதங்கள் கடூழியச் சிறைத்தண்டனையைப் பெற்றிருக்கும் சரத் பொன்சேகா வியாழன் மாலை கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார். பொன்சேகா மன்னிப்புக்கோரி வேண்டுகோள் விடுத்தால் தீர்ப்பை மீளாய்வு செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாராக இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக ஐலன்ட் பத்திரிகை மேற்கோள்காட்டியிருந்தது. இந்நிலையிலேயே திருமதி பொன்சேகாவிடமிருந்து இக்கருத்து வெளிப்பட்டிருக்கிறது.

இதேவேளை, பொன்சேகாவின்விவகாரம் அரசியல் விவகாரம் அல்ல. ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மூன்றாம் தரப்பின் தலையீடுகளால் இதற்கு தீர்வுகாண முடியாது என்று கோதாபய ராஜபக்ஷ கூறியதாக ஐலன்ட் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. ஆனால், தனது கணவருக்குத் தண்டனை வழங்கும் தீர்மானம் அரசியல் ரீதியானது என்றும் ஜனாதிபதியின் விருப்பங்களுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டதென்றும் அனோமா கூறியிருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.