Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளைக்கொடி விவகாரம் சரத்பொன்சேகா சொன்னவை உண்மை - சண்டே ரைம்ஸ் ஆசிரியர் சாட்சியம்

Featured Replies

வியாழக்கிழமை, அக்டோபர் 7, 2010

சரத்பொன்சேகா அளித்த பேட்டியில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்குப் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதன் பேரிலேயே வெள்ளைக்கொடி ஏந்திவந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியான சவீந்திர சில்வா தொடர்பில் தெரிவிக்கப்படும் கூற்றுகள் ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றிக்குரிய வாய்ப்பை இழக்க நேரிடலாமென சரத்பொன்சேகா தன்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மறுவாரம் அவரது தெளிவுபடுத்தும் அறிக்கையை பிரசுரிக்க தான் இணங்கியதாகவும் சண்டேலீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரட்ரிகா ஜான்ஸ் தெரிவித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை இரண்டாவது நாளாக இடம்பெற்ற வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் முதலாவது சாட்சியான பிரட்ரிகா ஜான்ஸ் சாட்சியமளித்தார்.ட்ரயல் அட்பார் விசாரணையை நீதிபதிகள் தீபாலி விஜேசுந்தர, எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.

அரச தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிஸ்ற்றர் ஜெனரல் வசந்த பண்டார நேற்றைய தினமும் முதலாவது சாட்சியை நெறிப்படுத்தினார். இதன்போது இடம்பெற்ற குறுக்கு விசாரணையில்;

கேள்வி: நேற்று முன்தினம் உங்களிடம் கேள்வி எழுப்பியபோது 2009 டிசம்பர் 8 ஆம் திகதி பிரதிவாதியிடம் மேற்கொண்ட நேர்காணலில் பாவித்த குறிப்பேடு பற்றிக் கூறினீர்கள். அந்தக் குறிப்பேட்டை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா?

பதில்: ஆம். முடியும்.

அப்போது "சீல்" வைக்கப்பட்ட குறிப்பேட்டு உறை நீதிபதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு உடைத்துக்காண்பிக்கப்பட்டது.

கேள்வி: இது தானா அந்தக் குறிப்பேடு?

பதில்: ஆம்.

கேள்வி: இந்தக் குறிப்பேட்டைப் பயன்படுத்தித்தானா நேர்காணலை மேற்கொண்டீர்கள்?

பதில்: ஆம், முக்கியமான நேர்காணல்களுக்குப் போகும் போது புதிதாக குறிப்பேட்டுப் புத்தகத்தைக் கொண்டு செல்வது வழக்கம்.

கேள்வி: இந்தக் குறிப்பேட்டை குற்றத்தடுப்புப் பிரிவு கேட்டபோது அதனைக் கையளிக்க மறுத்தீர்களா?

பதில்: ஆம்.

கேள்வி: ஏன் அவ்வாறு செய்தீர்கள்.

பதில்: குறிப்பேட்டில் காணப்படும் தகவல்களைப் பாதுகாக்கவும் தவறவிடாது இருப்பதற்காகவுமே மறுத்தேன். எனினும் அதன் பின்னர் குறிப்பேட்டை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்தேன்.

கேள்வி: பிரதிவாதி சரத்பொன்சேகாவிடம் 2009 டிசம்பர் 8 ஆம் திகதி நேர்காணலை நடத்தியதை உறுதிப்படுத்துகிறீர்களா?

பதில்: ஆம்.

கேள்வி: சண்டே லீடர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட நேர்காணல் முற்றுமுழுதாக பிரதிவாதியிடம் பெறப்பட்டவை என்பதை உறுதிப்படுத்துகிறீர்களா?

பதில்: ஆம். அனைத்துக் கேள்விகளுக்கும் அவரே பதிலளித்தார்.

கேள்வி: உங்கள் நேர்காணலில் கடைசியாகக் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் குறிப்பேட்டில் எந்தப் பக்கத்தில் பதிவுசெய்து கொண்டீர்கள் என்பதை நீதிமன்றத்துக்கு காட்டமுடியுமா?

பதில்: ஆம். முடியும்.

(அதன் பின்னர் குறிப்பேட்டை சாட்சியிடம் கையளிக்கப்பட்ட போது உரிய பக்கங்களைக் காண்பித்தார்)

கேள்வி: உங்களுடைய குறிப்பேடு கையளிக்கப்பட்டபோது இதேபோன்று தான் இருந்ததா?

பதில்: இல்லை. ஒரே புத்தகமாகவே ஒப்படைத்தேன். இப்போது அது இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் காணுகின்றேன்.

கேள்வி: குறிப்பேட்டில் பதிவுசெய்து தான் எந்த நேர்காணலையும் மேற்கொள்வீர்களா?

பதில்: ஆம்.

கேள்வி: ஒலி நாடாக்களில் பதிவு செய்யும் வழக்கம் உண்டா?

பதில்: தேவைக்கேற்ப அவ்வாறு செய்து கொள்வோம்.

கேள்வி: அப்படியானால் இந்த நேர்காணலை ஏன் ஒலிநாடாவில் பதியவில்லை.

பதில்: நேர்காணல் டிசம்பர் 9 ஆம் திகதி இரவு பெறப்பட்டது. அதற்கு முன்னர் எனது ஒலிப்பதிவு நாடாவை சகோதரப் பத்திரிகையாளரான விக்ரமதுங்க, அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடனான நேர்காணலுக்காக வாங்கிச் சென்று விட்டார்.

கேள்வி: பிரதிவாதியிடம் நேர்காணல் பெறப்பட்ட நேரம் ஏற்கனவே உறுதிப்படுத்தப்படாமை காரணத்தினாலா ஒலிநாடாவைக் கொண்டு வரமுடியாது போனது?

பதில்: ஆம்.

கேள்வி: உங்களது கேள்விகளுக்கு பிரதிவாதியான சரத்பொன்சேகா பொறுப்புடன் பதிலளித்ததாகத் கருதுனீர்களா?

பதில்: ஆம்.

கேள்வி: நீங்கள் இறுதியாகக் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் எவ்வாறாக அமைந்தது.

பதில்: இறுதிக் கேள்விக்குப் பதிலளித்த சரத்பொன்சேகா ஜனாதிபதி ஜோர்தானிலிருந்து வரவிருந்த நேரத்தில் யுத்தம் இறுதிக் கட்டத்தில் காணப்பட்டது. அப்போது மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா யுத்த நிலைமை தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவித்ததாக அறிய வந்தேன்.

யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் ஜனாதிபதிக்குத் தெரிவித்ததாக அவரே கூறினார். ஆனால் அந்த நேரத்தில் யுத்தம் முற்றுப்பெற்றிருக்கவில்லை. இந்த நிலையிலேயே ஜனாதிபதி யுத்தம் வெற்றிகொள்ளப்பட்ட களிப்பில் விமான நிலையத்தில் வந்திறங்கி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டார். சவீந்திர சில்வா அறிவித்திருந்த வேளையில் பிரபாகரன் கொல்லப்பட்டிருக்கவில்லை எனவும் பிரதிவாதி நேர்காணலில் தெரிவித்தார்.

அதேபோன்று வெள்ளைக்கொடியுடன் சரணடைய வரும் எவரையும் சரணடைய வாய்ப்பளிக்க வேண்டாமென பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டதாகவும் சரத்பொன்சேகா நேர்காணலில் தெரிவித்தார். அதனையே பிரதான தலைப்பைக் கொடுத்து பத்திரிகையில் பிரசுரித்தேன்.

கேள்வி: உங்களது குறிப்பேட்டில் நேர்காணல் முழுமையாக இருக்கின்றதா?.

பதில்: ஆம். ஆனால் குறிப்பேட்டை நான் முழுமையாக ஒப்படைத்திருந்தேன். தற்போது இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் சில பக்கங்களைக் காணவில்லை. முக்கியமாக வெள்ளைக்கொடியுடன் வரும் புலித்தேவன், ரமேஷ், நடேசன் போன்ற புலிகளின் முக்கியஸ்தர்களை சரணடைய விடவேண்டாமென பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டதாகவும் பின்னர் அறியவந்ததாகவும் பிரதிவாதி நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

கேள்வி: நேர்காணல் வெளியான பின்னர் எத்தகைய நிலை உருவானது?

பதில்: 13 ஆம் திகதி பத்திரிகை வெளியானதும் பலர் என்னுடன் தொடர்பு கொண்டனர். மங்கள சமரவீர,அநுரகுமார திசாநாயக்க, விஜித ஹேரத், சரத்பொன்சேகா ஆகியோர் தொடர்பு கொண்டு நேர்காணல் தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டனர். அதன்பின்னர் என்னைச் சந்தித்த அவர்கள் மறுப்புபோட வேண்டுமென வலியுறுத்தினர். அதனை நான் முற்றாக நிராகரித்தேன்.

அதனையடுத்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வரலாம் என்றனர். அது எப்படியானது எனக் கேட்டேன். அப்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சரத்பொன்சேகாவுக்கு நேர்காணலில் காணப்படும் சில விடயங்கள் பாதகமான நிலையை ஏற்படுத்தலாமென்பதால் தெளிவுபடுத்தும் அறிக்கையொன்றை வெளியிடலாம் என்பதே அந்த இணக்கப்பாடாகும்.

அதற்கு நான் இணக்கம் தெரிவித்தேன். அதன்படியே மறுவாரம் டிசம்பர் 20 ஆம் திகதி சண்டே லீடரில் தெளிவுபடுத்தும் அறிக்கையை வெளியிட்டேன்.

கேள்வி: நேர்காணலில் பிரதிவாதி சொன்னவற்றை அப்படியே வழங்கினீர்களா?

பதில்: ஆம். அவரது வார்த்தைகளையே எழுதியுள்ளேன். எந்தவொரு விடயமும் திரிபுபடுத்தியோ, மேலதிகமாகவோ நான் அந்த நேர்காணலில் குறிப்பிடவில்லை.

கேள்வி: பத்திரிகை வெளிவந்த பின்னர் என்ன நடந்தது?

பதில்: 14 ஆம் திகதி திங்கட்கிழமை லால் விக்ரமதுங்கவின் அவசர அழைப்பில் அவரைச் சந்தித்தேன். அவரது யோசனைக்கமையவே சரத்பொன்சேகா உட்பட எதிர்க்கட்சியை சார்ந்த குழுவினரைச் சந்தித்தேன். அவர்களுடன் நீண்டநேரம் கலந்துரையாடிய பின்னரே மேற்குறிப்பிட்ட இணக்கப்பாட்டுக்கு வந்தேன்.

கேள்வி: நேர்காணலில் தெரிவித்த கருத்துகளை மீண்டும் மறுக்கும் விதத்தில் அறிக்கை வெளியிட ஏன் இணங்கினீர்கள்?

பதில்: அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் அவரது வெற்றி எதிர்பார்ப்பை சிதறடிக்க விரும்பவில்லை. எனினும் மறுப்புப்போட நாம் இணங்கவில்லை. அவரது தெளிவுபடுத்தும் அறிக்கையையே நான் வெளியிட இணக்கம் தெரிவித்தேன். இதனை நான் தவறாகக் கருதவில்லை.

கேள்வி: இதனால் வாசகர்களுக்கு அல்லது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் என்று கருதவில்லையா?

பதில்: அப்படி எதுவும் கிடையாது. அவரின் நேர்காணல் முழுமையான அதுவும் பிரதான செய்தியாக பிரசுரிக்கப்பட்டது. பின்னர் அவரது தெளிவுபடுத்தும் அறிக்கை வெளியிடப்பட்டது. இது பத்திரிகை தர்மத்தை மீறியதாகத் நான் கருதவில்லை. வாசகர் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் என்ற நம்பிக்கையில் அதனைப் பிரசுரித்தேன்.

கேள்வி: பத்திரிகையை எப்போது அச்சுக்கு அனுப்புவீர்கள்?

பதில்: வெள்ளிக்கிழமை பக்கங்களைத் தயாரித்து முடித்து சனிக்கிழமை மாலை முதலாவது பதிப்பை அச்சுக்கு அனுப்புவோம். அன்றிரவு இறுதிப் பதிப்பு, நகரப்பதிப்பு அச்சாகும்.

ஈழ நாதம்

  • கருத்துக்கள உறவுகள்

இவரது குறிப்பேட்டில் இருந்து வில்லங்கமான பக்கங்களை மட்டும் கிழிச்சு எடுத்துப் போட்டினம் (என்ன நீதிமன்றமோ :blink: ). இனிமேல் இவர் பொய்ச் செய்தி பரப்பினார் எண்டு தீர்ப்புச் சொல்லி பொன்னருக்குப் பக்கத்து அறையிலயே களி தின்ன வச்சிடுவான்கள்..! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.