Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை ஏன்? கி. வீரமணி கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை, 7, அக்டோபர் 2010 (16:5 IST)

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை ஏன்? கி. வீரமணி கேள்வி

விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக ராஜபக்சேவே கூறிவிட்ட நிலையில், இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை ஏன்? என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்பதே மனிதநேயம் உள்ள அனைத்து மக்களின் தலையாயக் கடமையாகும். இன்னமும் அங்குள்ள நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள், தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் உள்பட முள்வேலிக்குள் பல முகாம்களில் சிறைபிடிக்கப்பட்டு இருக்கும் நிலையிலிருந்து அவர்களுக்கு விடிவு ஏற்படவில்லை.

சிங்கள ராஜபக்சே ஆட்சியின் மனித உரிமை பறிப்புகள் பற்றி, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், வெளிப்படையாகவே கூறியுள்ளார். உலகப் போர் நெறிமுறைகளை மீறி தவறாக ராஜபக்சே நடந்துகொண்ட குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும், விடுதலைப்புலிகள் என்றும் இலங்கை சிறையில் மனித உரிமைகளைப் புறந்தள்ளிவிட்டு, கொடுமைக்கு ஆளாகியுள்ள பல்லாயிரவர்பற்றி ஐய்க்கிய நாட்டு அமைப்புகளின் 60 சட்ட வல்லுநர்கள் கண்டனம் உள்பட சில நாள்களுக்குமுன் உலக ஏடுகளில் செய்தியாக வந்தது.

இந்நிலையில், அவதிப்படும் ஈழத் தமிழர்களுக்கென பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இந்திய அரசு (தமிழக அரசின் உதவியும் இணைத்து) இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அந்நிதி உரிய முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பயன்பட்டதாகவோ, படுவதாகவோ தெரியவில்லை.

தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை சிங்களக் குடியேற்றங்களாக்கிடும் கொடுமை தொடர்கதையாகி வருகின்றது!

இந்நிலையில், கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்னும் பழமொழிக்கொப்ப, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இங்குள்ள தடையை மீண்டும் இந்திய அரசு நீடிப்பது, உலகத் தமிழர்களின் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாக்கிவிடும்!

இலங்கை அரசே இங்கே விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், நம் நாட்டில் மீண்டும் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தடை நீடிக்கும் சடங்கு சம்பிரதாய சட்டத்தைத் தொடருவது எந்த நியாயத்தின் அடிப்படையிலோ என்று நமக்குப் புரியவில்லை.

காஷ்மீரிலும் சரி, மற்ற நக்சல்கள் பெருகிய பல வட மாநிலங்களிலும் சரி, அவர்களை மத்திய அரசும், நம் பிரதமரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பேசி சுமுகத் தீர்வு காணும் நல்லெண்ண முயற்சிகளை மேற்கொள்வது அறிவிப்பது நல்ல அணுகுமுறையே!

அதே அரசு, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் மீண்டும் தடையை நீடித்துக் கொண்டே போவது சரிதானா? ஈழ அகதிகளாகி, அகதியாக, வாழ்க்கையை தமிழ்நாட்டிலும், வேறு சில இடங்களிலும் வாழும் ஈழத் தமிழர்கள் இளைஞர்கள் மீது பொய்க் குற்றச்சாற்றின் அடிப்படையில் நிம்மதியற்ற வாழ்வினை (அவர்களுக்கு) தரத்தான் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, மத்திய அரசு இதுபற்றி மனிதநேய அடிப்படையில் பிரச்சினையை ஈர மனதுடன் அணுகவேண்டும். நிர்ப்பந்தப்படுத்தப்பட வேண்டிய இலங்கை அரசை நிர்பந்தப்படுத்தி, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உதவிடவேண்டும் முன்னுரிமை அதற்குத்தான் தரப்படவேண்டும். இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

nakkheran

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

bathroom-deluxe-city-view-room-loews-miami-beach-hotel-v79064-912.jpg

நல்ல தரமான "டிஸ்யு பேப்பர்" வாங்க அனுகவேண்டிய முகவரி... :blink:

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை யாரும் விடலாம். ஆனால் வீரமணி தமிழினப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த காங்கிரசுக்கூட்டணியில் உள்ள திமுகவைத்தான் சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் ஆதரித்தார். இப்பொழுதும் ஆதரிக்கிறார். கருணாநிதி, காங்கிரசு நினைத்தால் தடையே இல்லாமல் செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.